உரைகல்லில் “வார உரைகல்”

-ஏ.எல். முஹம்மது நியாஸ் – பிரதம துணை ஆசிரியர், ‘வார உரைகல்’-

(காத்தான்குடி தாருல் அதர் அமைப்பின் முக்கிய செயற்குழு உறுப்பினரான சகோதரர் AB.. யாகூப் என்பவரும், அவரோடு இணைந்து இன்னும் சிலரும் ‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி றஹ்மதுழ்ழாஹ் மற்றும் பிரதம துணை ஆசிரியர் முஹம்மது நியாஸ் ஆகியோர் குறித்தும், இப்பத்திரிகையின் ஊடக செயற்பாடுகள் தொடர்பிலும் மின்னஞ்சல் வழியாக முன் வைத்த விமர்சனங்கள், குற்றச்சாட்டுகளுக்கு பிரதம துணை ஆசிரியர் முஹம்மது நியாஸ் அவர்கள் சகோதரர் AB. யாகூப் அவர்களுக்கு எழுதிய காத்திரமான பதில் அறிக்கை)

???????????????????????????????Mohamed Niyas Zajil nதாருல் அதர் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் யாக்கூப் அவர்களின் முதலாவது மின்னஞ்சல் கடிதம்:

அஸ்ஸலாமு அலைக்கும்

நியாஸ்! நீங்கள் அத்வைதம் சம்மந்தமாகவும் இறை நிராகரிப்பு தொடர்பாகவும் தொடர்ச்சியாக உங்கள் பணியைச் செய்து வருகின்றீர்கள். அல்ஹம்துலில்லாஹ். அது போல் ஊரில் யார் நல்லது செய்தாலும், கெட்டது செய்தாலும் பாரபட்சமின்றி உங்கள் கருத்தைச் சொல்கின்றீர்கள். எந்த ஊடகம் தவறு செய்தாலும் அதைத் தோலுரிப்பது உங்கள் வழமை. Continue reading

காத்தான்குடி இன்போ செய்திக்கு மறுப்பும், அழிவுச் சத்தியத்துக்கு அழைப்பும்

Lafir-sirகடந்த 18.11.2014 அன்று www. kattankudi. info என்னும் இணையத் தளத்தில் ‘காத்தான்குடியில் ஷீஆ சலசலப்பும் பின்னணியில் அரசியல் பிரமுகர்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்த செய்தி தொடர்பாக PMGG சூராசபை உறுப்பினர் MLM. லாபீர் ஆசிரியர் (காத்தான்குடி) அவர்களால் எமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கை)

இன்போவினால் இருட்டடிப்புச் செய்யப்பட்ட அறிக்கை:

கடந்த 13.11.2013 அன்று காத்தான்குடி.இன்போவில் ‘காத்தான்குடியில் ஷீயா சலசலப்பும் பின்னணியில் அரசியல் பிரமுகர்’ என்ற தலைப்பில் PMGGயின் சூறாசபை உறுப்பினர் MLM. லாபீர் ஆசிரியர் ஆகிய என் மீதும் PMGGயின் மீதும் அபாண்டங்களைச் சுமத்தி எனக்கும் PMGGக்கும் ஷீயா சாயம் பூசும் நோக்கத்திலான செய்தியொன்று வெளியிடப்பட்டிருந்தது. Continue reading

தாய் நாட்டின் எதிர்பார்ப்பு… மைத்திரிபால சிறிசேன: அரசியல் வாழ்க்கையும் பின்னணியும்

mytபெலவத்த கமராலகே மைத்ரிபால யாப்பா சிறிசேன 1951-ம் ஆண்டு செப்டெம்பர் 3-ம் திகதி வடமத்திய மாகாணத்திலுள்ள பொலன்னறுவையில் சாதாரண விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தார்.

உள்ளூர் பள்ளிக்கூடமொன்றில் ஆரம்பக் கல்வியை பயின்ற மைத்திரிபால சிறிசேன, 1973ம் ஆண்டில் கண்டி குண்டசாலை விவசாயக் கல்லூரியில் விவசாயப் பாடநெறி ஒன்றைப் பயின்றார். Continue reading

“ஐயோ சிறிசேன” -சேறு பூசும் சுவரொட்டிகள் தயாராகின்றன! நாளைக்குள் ஒட்டப்படுமாம்!!

Mithripalaஐயோ சிறிசேன என்ற தலைப்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சேறு பூசும் வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகள் தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.

நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி திணைக்களத்தின் செலவில் இந்த சுவரொட்டிகள் தற்போது கொழும்பில் அதிபாதுகாப்பு வலயமொன்றின் அருகாமையிலுள்ள அச்சகமொன்றில் அச்சிடப்படுகின்றது. Continue reading

களுத்துறையில் ஐ.தே.க. கொண்டாட்டம்! ஆளுங்கட்சி தலைமறைவு!!

unpppஎதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் களுத்துறையில் பெரும் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

களுத்துறை போதி மர சந்தி தொடக்கம் நகரம் வரை நிறைந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தியும், ஜயவேவா கோசம் எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். Continue reading

ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜதுரை கட்சி தாவினார்!

upfa-unpஆளுங்கட்சியின் முக்கிய சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பெருமாள் இராஜதுரை சற்று முன்னர் கட்சி தாவியுள்ளார்.

இது தொடர்பான தகவல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அலுவலக வட்டாரங்களில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளது.

Continue reading

பொது வேட்பாளர் மைத்திரிபால தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவசரமாக முடிவெடுக்காது!- இரா. சம்பந்தன்

stஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேன அவர்கள் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிலைமைகளை ஆராய்ந்தே முடிவெடுக்கும் என்று அந்த அமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். Continue reading

Follow

Get every new post delivered to your Inbox.

Join 37 other followers