அப்துர்றவூப் மௌலவியின் அரசியல் ஞானம் நமதூருக்கு உதவுமா? – பகுதி: 2

மார்க்கட் சதுக்க மீலாத் விழாவில் அப்துர் றவூப் மௌலவி அவர்கள் ஆற்றிய உரை ஊரிலுள்ள சகல தரப்பினர் மத்தியிலும் பரவ லான வாதப் பிரதிவாதங்களைத் தோற்று வித்தது. எல்லா இடங்களிலும் அவரது மீலாத் விழா உரை பற்றி சாதகமாகவும் பாதகமாகவும் விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்த போதிலும் பாதகமான கருத்துடையவர்களே அதிகமாகக் காணப்பட்டனர்.

இவ்விடயம் தொடர்பில் காத்தான்குடி ஜம்இய்ய துல் உலமா சபை, அப்துர்றவூப் மௌலவி அவர்களிடம் கடித மூலம் விளக்கத்தைக் கோரி இருந்தது. அதற்கான பதிலை அவரும் ஜம்இய் யதுல் உலமாசபைக்கு அனுப்பியிருந்தார்.

இவ்வாறு அப்துர் றவூப் மௌலவி அவர்க ளுக்கும், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைக்கும் இடையில் மேற்படி மீலாத் விழா கருத்துக்கள் தொடர்பாக கருத்துப் பரிமாறல்கள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் மற்று மொரு மீலாத் விழா நிகழ்வு காத்தான்குடி மௌலானா கபுறடி மைதானத்தில் நடை பெற்றது.

அதில் உரையாற்றிய அஷ்ஷஹீத் அஹமது லெப்பை அவர்கள் மார்க்கட் சதுக்க மீலாத் விழாவில் அப்துர் றவூப் மௌலவி ஆற்றிய உரை தொடர்பில் அவரது பலமான ஆட்சேப னைகளைப் பகிரங்கமாகத் தெரிவித்தார். அத்து டன் உலமாக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இவ்வாறான கருத்துக்களைப் பேசிய அவருக்கு மார்க்கத் தீர்ப்பு ‘பத்வா’ ஒன்றை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விட்டார்.

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவுக்கும், அப்துர் றவூப் மௌலவி அவர்களுக்கும் இடை யில் இவ்விவகாரம் தொடர்பில் கடிதத் தொடர் புகள் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை யில் சேர்மன் அஹமது லெப்பை அவர்கள் முதன் முதலாக மௌலானா கபுறடி மீலாத் விழாவில் இவ்விடயத்தை பிரஸ்தாபித்து அவரது ஆட்சேபனையைத் தெரிவித்ததுடன் உலமாக் கள் ஒன்று சேர்ந்து ‘பத்வா’ வழங்க முன்வர வேண்டும் எனவும் அறைகூவல் விடுத்தது அப்துர் றவூப் மௌலவி அவர்களுக்கு பெரும் ஆக்ரோஷத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் மறு வாரமும் அதே மௌலானா கபுறடி மைதானத்தில் மற்றுமொரு மீலாத் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் அப்துர் றவூப் மௌலவி பிரதம பேச்சாளராகக் கலந்து கொள் வார் என பிரச்சார வாகனம் மூலம் ஊரெங்கும் அறிவிக்கப்பட்டது.

அன்று மாலை குறிப்பிட்டபடி மீலாத் விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. தொடக்கத்தில் ஆரம்பப் பேச்சாளர்கள் பலர் அங்கு உரை யாற்றினர். சனத்திரள் மெல்ல மெல்ல கபுறடி மைதான இடைவெளியை மறைத்து பிரதான வீதியையும் பெருமளவில் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

இஷாவுக்கான அதான் சொல்லப்பட்ட சற்று நேரத்தில் அப்துர் றவூப் மௌலவி அவர்கள் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங் கப்பட்டது. அவர் ஒலிவாங்கிக்கு முன்னால் வந்து நின்று உரையாற்றத் தொடங்கினார். மக்கள் மிக்க அவதானத்துடன் அவரது உரை யைச் செவியேற்றுக் கொண்டிருந்தனர்.
அவர் மார்க்கட் சதுக்க மீலாத் விழாவில் கூறிய கருத்துக்களுக்கு மேலதிகமான விளக்கங்கள் பலவற்றையும் குர்ஆன் வசனங்களில் இருந் தும், ஹதீஸ்களில் இருந்தும், இமாம்களின் கிரந்தங்களிலிருந்தும் விபரமாக எடுத்துரைத்து தான் தெரிவித்த கருத்துக்கள் இஸ்லாத்தின் மூலாதாரக் கொள்கைக்கு எந்த வகையிலும் விரோதமானவையல்ல என்பதை நிறுவினார்.

அவரது பேச்சின் இறுதிக் கட்டத்தில் ‘மார்க்கம் படித்தவனான எனது கருத்துக்கள் தொடர்பில் சர்ச்சைகள், சந்தேகங்கள் இருந்தால் அவற்றை உலமாக்களான நாம் கலந்துரையாடி தெளிவு பெறுவோம். அவ்வாறான நடவடிக்கைகள் தற் போது எனக்கும் காத்தான்குடி உலமாக்களுக் கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின் றன. இந்த நிலையில் எனது கருத்துக்களை ஆட்சேபிக்கவும், அதற்கு ‘பத்வா’ வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடவும் அரசியல் வாதியான அஹமது லெப்பை அவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?’ என அவர் வினவியது சேர்மன் அஹமது லெப்பையை இன்னும் சூடாக்கி விட்டது.

அப்துர் றவூப் மௌலவி அவர்களினால் சேர்மன் அஹமது லெப்பை அவர்களை விழித்து விடுக் கப்பட்ட இந்தக் காரமான கேள்வியால் அன்று தொடக்கம் இவ்வூர் இரண்டாகப் பிளவு பட்டது. ‘றவூப் மௌலவி தரப்பு’ என்றும், ‘சேர்மன் தரப்பு’ என்றும் பொதுமக்களும், பிரமுகர்களும் இரு பிரிவாகினர்.

சேர்மன் அஹமது லெப்பை அவர்களின் தரப்பி லேயே ஊரின் பெரும்பாலான பிரமுகர்களும், உலமாக்களும் காணப்பட்டனர். அப்துர் றவூப் மௌலவி அவர்களின் தரப்பில் மௌலவி எம். எஸ்.எம். பாறூக் பலாஹீ, மௌலவி எச்.எம். எம். இப்றாஹீம் நத்வி, மௌலவி.எம்.சீ. கச்சி முஹம்மது பஹ்ஜீ (பெரிய சமது மௌலவி), மௌலவி ஏ.எல்.எம். இஸ்மாயில் பலாஹீ (சின்ன சமது மௌலவி), மௌலவி எம்.எம்.எம். சுப்யான் பலாஹீ, போன்ற இளம் உலமாக்க ளும், மர்ஹும் மௌலவி ஆதம்பாவா ஜமாலீ (தாஹீர் மௌலவி), ஓய்வு பெற்ற அதிபர்க ளான எம்.எம். ஆதம்லெப்பை, ஏ.எல்.எம். மீரா சாஹிபு போன்ற முக்கியஸ்தர்களுடன்  பொது மக்களும் கணிசமாகக் காணப்பட்டனர்.

மௌலானா கபுறடி மைதான மீலாத் விழாவில் அப்துர் றவூப் மௌலவியின் விளித்தலினால் உஷாரடைந்த சேர்மன் அகமது லெப்பை மறு நாளில் இருந்து துரிதமாகச் செயற்படத் தொடங் கினார். அக்காலப்பகுதியில் நானும் சேர்மன் அகமது லெப்பை அவர்களின் பக்கமே துடிப் புள்ள ஒருவனாகச் செயற்பட்டுக் கொண்டிருந் தேன். அதனால் அவரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் பெரும்பாலானவற்றை நன்க றியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

காத்தான்குடியையும், அதையடுத்துள்ள பால முனை, காங்கேயகேனாடை, ஒல்லிக்குளம், கீச்சான்பள்ளம், மட்டக்களப்பு, கோட்டைமுனை போன்ற பள்ளிவாசல்களில் கடமையாற்றும் கதீப்மார்கள் பேஷ் இமாம்களான உலமாக் கள், ஜாமிஅதுல் பலாஹ்விலுள்ள உலமாக் கள், அரச பாடசாலைகளில் மௌலவி ஆசிரி யர்களாகக் கடமையாற்றிய உலமாக்கள் என உலமாக்கள் அனைவரையும் அவர் ஜம்இய் யதுல் உலமாவின் தலைமையில் ஒன்று திரட்டி மாபெரும் உலமாக்கள் கூட்டமொன்றை மின் சார நிலைய வீதியில் அமைந்திருந்த சிக்கந்தர் ஆலிம் குர்ஆன் மத்ரஸாவில் நடாத்தினார்.

அப்துர்றவூப் மௌலவி அவர்களால் மார்க்கட் சதுக்க மீலூத் விழாவில் ஆற்றப்பட்ட கருத்துக் களை அக்கூட்டத்தில் கடுமையாகக் கண்டித் துப் பேசிய அவர், இன்றே உலமாக்கள் அனை வரும் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்து உங்க ளின் மானம், மரியாதைகளைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார். அவ்வாறு நீங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் என்னைக் கேட் டது போலவே நாளை உங்களையும் அவர் விமர்சித்து மக்கள் மத்தியில் உங்களுக்குள்ள மதிப்பு மரியாதையைப் போக்கி விடுவார் என உசுப்பேத்தினார்.

இப்பிரச்சினையை அகில இலங்கை ஜம்இய்ய துல் உலமா கையேற்று அவரது கருத்துக்க ளுக்கு எதிரான ‘பத்வா’வை உடனடியாக வழங்க வேண்டும் என்று  இன்றே நாம் எல்லோ ரும் தீர்மானம் எடுத்துக்கொண்டு கொழும் புக்குச் செல்ல ஆயத்தமாக வேண்டும் என்றும் அவசரப்படுத்தினார்.

அவரது இக்கருத்துக்கு மாற்றுக் கருத்துடைய பல உலமாக்களும் அச்சபையில் இருந்தனர். உள்ளுரில் உருவாகியுள்ள இப்பிரச்சினையை நாம் இப்போதே கொழும்புக்கு எடுத்துச் செல் லாமல் அப்துர் றவூப் மௌலவியுடன் கலந்து ரையாடி அவரது விளக்கங்களையும் கேட்டு அதன் பின் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்ற கருத்தும் அச்சபையில் முணுமுணுப்பாக முன்வைக்கப்பட்டன.

எனினும் சேர்மன் அகமது லெப்பை அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிடம் இருந்து ‘பத்வா’ ஒன்றைப் பெற வேண்டும் என்பதில் விடாப்பிடியாக நின்றதால் அங்கு சமூகமளித்திருந்தவர்கள் அனைவரும் அச்சபை யில் உலாவந்த கையொப்பமிடும் புத்தகத்தில் தமது பெயர்களையும், பதவிகளையும் எழுதி கையொப்பம் வைத்தனர்.

அதுவரை நேரமும் பூட்டப்பட்டிருந்த சிக்கந்தர் மத்ரஸாவின் கதவுகள் திறக்கப்பட்டன. மறுநாள் அனைவரும் கொழும்புக்குச் செல்ல ஆயத்த மாக வர வேண்டுமென்ற தீர்மானத்துடன் அக் கூட்டம் முடிவுற்றது.

1977ம் ஆண்டுப் பொதுத் தேர்தல் தோல்வியால் துவண்டு போயிருந்த அஷ்ஷஹீத் அஹமத் லெப்பை அவர்களுக்கும் அவர் தரப்பு பிரமுகர் களுக்கும் இந்த அப்துர் றவூப் மௌலவியின் விவகாரம் எதிர்பாராத திருப்பு முனையாக அமைந்ததுடன் அவர்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தையும் அளித்திருந்தது.

அப்துர்றவூப் மௌலவி அவர்களுக்கோ மார்க் கட் சதுக்க மீலாத் விழாவில் பிரதியமைச்சர் பரீட் மீராலெப்பை அவர்களால் முன் வைக்கப் பட்ட ‘பெருமானார் (ஸல்) அவர்களும் நம் மைப் போன்ற ஒரு மனிதரே’ என்ற அடிப்படை யிலான வாதத்தை மறுத்துப் பேசியிருந்ததால் அப்போது அரசியல் அதிகாரத்துடன் இருந்த அவருடன் இது விடயமாகத் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

சேர்மன் அஹமது லெப்பை அவர்களின் தலை மையில் நமதூர் உலமாக்கள் மேற்கொண்ட இக்கொழும்புப் பயணம் நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. தேசியப் பத்திரிகைகள் எல்லாம் முன்பக்கத்தில் இப்பய ணம் பற்றிய செய்திகளை முக்கியத்துவமளித்து வெளியிட்டிருந்தன.

காத்தான்குடி உலமாக்களின் இக்கொழும்புப் பயணம் பற்றி அறிந்த அப்துர்றவூப் மௌலவி அவர்களும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அன்றையப் பொதுச் செயலாளர் மௌலவி அல்ஹாஜ் எம்.ஜே.எம். றியால் அவர்களுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். தனது மீலாத் உரையில் உள்ளுர் உலமாக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தே கங்கள் குறித்து தனக்கும் அவர்களுக்கும் இடையில் தொடர்பாடல்கள் இன்னமும் இருந்து வருவதாகவும், எனவே இவ்விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தற்போதைக்கு தலையிடுவது உசிதமானதல்ல எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

எனினும் அ.இ.ஜ. உலமா சபை இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கென திட்டமிட்டபடி கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி கபூர் மண்ட பத்தில் அதன் கூட்டத்தை நடாத்தியது. காத் தான்குடி மார்க்கட் சதுக்க மீலாத் விழாவில்  அப்துர் றவூப் மௌலவி ஆற்றிய உரையின் ஒலிப்பதிவு நாடா அங்கு சமூகமளித்திருந்த உலமாக்களுக்கு ஒலிபரப்புச் செய்யப்பட்டது.

மார்க்கட் சதுக்க மீலாத் விழாவில் மௌலவி அப்துர்றவூப் அவர்கள் ஆற்றிய உரை கிட்டத் தட்ட ஒன்றரை மணி நேரமுடையதாகும். பிற் காலத்தில் நான் அன்னாருடன் இணைந்திருந்து செயற்பட்ட காலத்தில் அவ்வுரையை ‘ஆரம்ப அமுது’ எனும் தலைப்பில் இரண்டு 45 நிமிட ஒலிப்பதிவு நாடாக்களில் பதிவு செய்துள்ளேன்.

ஸாஹிராக் கல்லூரி மண்டபத்தில் அந்த நீண்ட மீலாத் உரையை அவ்வாறே முழுவதுமாக நமது உலமாக்கள் ஒலிபரப்பாமல் அதில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்களை மாத்தி ரம் ஒலிபரப்பிக் காட்டினார்கள். இதனால் அப் பேச்சில் இடையிடையே வரும் சர்ச்சைக்குரிய பகுதிகளையே அங்கிருந்த உலமாக்கள் செவி மடுத்தனர்.

இதுகுறித்து அப்துர்றவூப் மௌலவி அவர்க ளுடன் அ.இ.ஜ.உ. சபை தொடர்பு கொண்டு அவரது விளக்கத்தைப் பெற வேண்டும் எனவும் சில உலமாக்கள் அங்கு கருத்துத் தெரிவித் தனர். என்றாலும் சேர்மன் அகமது லெப்பை அவர்களின் தலைமையிலான நமது உலமாக் கள், இத்தகைய பேச்சுக்களால் எமது மக்க ளின் ஈமான் வினாடிக்கு வினாடி பறிபோய்க் கொண்டிருக்கிறது. நீங்கள் இன்னமும் தாமதித் தால் அவர் அழ்ழாஹ்வின் உருவத்தையே செய்து கொடுத்து அதனையே வழிபடுமாறும் மக்களைத் தூண்டி விடுவார். எனவே நீங்கள் இன்று இதற்கு ஒரு முடிவெடுத்து ஒரு ‘பத்வா’ தராவிட்டால் எங்களால் காத்தான்குடிக்குத் திரும்பிச் செல்ல முடியாது என ஒரே பிடியில் நின்று அழுத்தம் கொடுத்ததால் அக்கூட்டத்தில் அப்துர்றவூப் மௌலவி அவர்களுக்கும், அவரு டைய கருத்துக்களைச் சரிகண்டவர்களுக்கும்  ‘முர்தத்’ என்ற பத்வாவை அ.இ.ஜ.உ. சபை உத்தியோகபூர்வமாக வழங்கியது.

இந்த ‘பத்வா’வின் காரணமாக நமது காத் தான்குடி இரண்டாகியது. ‘பத்வா’ வழங்கப் பட்டதிலிருந்து ‘சேர்மன் தரப்பு’ என்பது இல்லா மல் போய் ‘உலமா சபைத் தரப்பு’இ ‘றவூப் மௌலவி தரப்பு’ என்று இரு பிரிவானது. இரு தரப்பினரும் பல நூறு பிரசுரங்கள், பொதுக் கூட்டங்கள் மூலமாக தத்தமது கொள்கைகளை யும், கோட்பாடுகளையும் விளக்கி பிரச்சாரம் செய்தனர். அதனால் பல சமூகத் தாக்கங்கள் விளைந்தன. ‘தனித்துவமான முஸ்லிம் பிரதே சம்’ என்ற நமதூரின் சிறப்பும் கேள்விக்குள் ளாகி அப்துர்றவூப் மௌலவியின் அரசியல் பிரவேசமும் ஆரம்பமாகியது. (தொடரும்)

“Vaarauraikal” Vol: 206 Date: 06.01.2012

  1. No trackbacks yet.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.