‘வார உரைகல்’ பிரதம ஆசிரியருக்கு எதிரான காத்தான்குடி சமூகத் தலைமைகளின் வழக்குகள்: சம்மேளனத் தலைவரும் பிலால் ஹாஜியாரும் பிரதம ஆசிரியருடன் சமாதானம்! சம்மேளனப் பிரதிச் செயலாளருக்கு பெப்.22ல் மறு தவணை! பொலீசாருக்கும் நீதிபதி அறிவுறுத்தல்!!
-ஊடக சுதந்திரத்தையும், ஊடகவியலாளர்களின் கடப்பாடுகளையும் வலியுறுத்தி நீதிபதி அப்துழ்ழாஹ் மன்றில் அறிவுரை-
‘வார உரைகல்’ பத்திரிகையில் தங்களைபபற்றி அவதூறாகச் செய்திகள் வெளியிட்டதாகக் கூறி காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எம்.ஐ. எம். சுபைர், அதன் பிரதிச் செயலாளர் ஏ.பி.எம் சாதிக்கீன் மற்றும் மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸ லாம் நகர ஜும்ஆப்பள்ளிவாசலின் முன்னாள் தலைவர் கே.எம். கலீல் ஆகிய சமூகத் தலைவர்களால் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மூலம் இப்பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வுக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்று தனித்தனி வழக்குகளில் இரண்டு வழக்குகள் கடந்த 18ம் திகதி புதன்கிழமை சமாதானமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றம் அன்றைய தினம் நீதிபதி அல்ஹாபிழ் என்.எம். அப்துழ்ழாஹ் அவர்களின் பிரசன்னத்துடன் ஆரம்பமாகி இவ்வழக்குகள் அழைக்கப்பட்ட போது பிரதிவாதியான பிரதம ஆசிரியர் மன்றில் ஆஜரானார்.
கே.எம். கலீல் என்பவரின் முறைப்பாடு தொடர் பான வழக்கு முதலில் அழைக்கப்பட்டபோது அவர் சாட்சியாக ஆஜரானார். ஏ.பி.எம். சாதிக் கீன் என்பவர் செய்த முறைப்பாடு தொடர்பான வழக்கு இரண்டாவதாக அழைக்கப்பட்டபோது அவர் சாட்சியாக மன்றில் ஆஜராகவில்லை. எம்.ஐ.எம். சுபைர் என்பவரின் முறைப்பாட்டின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மூன்றாவதாக அழைக்கப்பட்டபோது அவர் சாட்சியாக ஆஜரானார்.
இந்த வழக்கில் கவனம் செலுத்திய நீதிபதி அவர்கள் இருதரப்பினருக்கும், பொலீசாருக்கும் மன்றில் அறிவுறுத்திய கருத்துக்கள் ஊடக சுதந்திரத்திற்கு மேலும் வலுவூட்டுவதாகவும், வழி காட்டுவதாகவும் அமைந்திருந்தன. இத னால் இந்நாட்டில் ஊடக சுதந்திரம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூகத்தில் பொதுப்பணிகளில் ஈடுபட முன் வரும்போது பாராட்டுக்களும், விமர்சனங்களும் ஊடகங்கள் மூலம் வெளி வரவே செய்யும். அதனைப் பொருட்படுத்தலாகாது. உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை ரீதியாக ஊடகமொன்று விமர்சித்தால் அதற்கெதிராக நீங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். அதையும் இந்நீதிமன் றத்தில் நீங்கள் முன்னெடுக்க முடியாது என சாட்சிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
ஊடக சுதந்திரம் அரசியலமைப்பு ரீதியாக இந் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது மென் மேலும் பாதுகாக்கப்படும். ஊடக சுதந்திரம் இருக்கின்றது என்பதற்காக தனிப்பட்ட வகையில் ஊடகவியலாளர்களும் சமூகச் செயற்பாட்டா ளர்களை விமர்சிக்கக் கூடாது. நாசூக்காகச் சுட்டிக் காட்டுவது சிறப்பையும், நல்ல பயனை யும் தரும் என அவர் மேலும் தெரிவித்தார்.
சாட்சி தரப்பிலிருந்து முதலில் கே.எம். கலீல் மன்றில் தெரிவிக்கும்போது, தான் மட்டக்களப் பில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இப்தார் நிகழ் வொன்றைச் செய்தபோது ‘வார உரைகல்’ பத்திரிகை மிக மோசமாக விமர்சித்து தமிழ் முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தக்கூடியவாறு எழுதியதாகத் தெரிவித்தார்.
பொது வைபவமொன்றறில் அவதானிக்கப்படும் குறைகளைச் சுட்டிக்காட்டும் ஊடக விமர்சனங் களை பொறுப்புள்ள ஏற்பாட்டாளர்கள் அவ்வா றெல்லாம் நோக்கக்கூடாது. சுட்டிக்காட்டப்படும் தவறுகள் திருத்தப்படுவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென நீதிபதி அதன் போது தெளிவு படுத்தினார்.
பிரதிவாதி தரப்பில் அவரது சட்டத்தரணி மன் றில் ஆஜராகி இருக்காத காரணத்தால் எதிரியே தன்னிலை விளக்கம் அளித்தார். அவர் மன்றில் தெரிவித்ததாவது:
நான் இச்சமூகத் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கவில்லை. இவர்களின் பொதுப்பணிகளிலுள்ள குறைபாடுகளையும், மக்கள் தெரிவிக்கும் கேள்விகளையுமே எனது ஊடகத்தில் சுட்டிக்காட்டி வருகிறேன். இவர் களின் அமைப்புக்களில் இடம்பெறும் நிகழ்வு களுக்கு நான் அழைக்கப்படுவதில்லை. அத னால் வெளியில் தெரிவிக்கப்படும் தகவல்களை அடிப்படையாகவும், ஆதாரமாகவும் வைத்தே பாராட்டியும், விமர்சித்தும் எழுதி வருகிறேன்.
இவர்கள் செய்கின்ற முறைப்பாடுகளுக்கு காத் தான்குடி பொலீசார் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தும் அவற்றை வழக்குகளாக்கியும் நீதி மன்றுக்குக் கொண்டு வருகின்றனர். சாட்சி கலீல் என்னைக் கொலை செய்வதாக அச்சுறுத் தியதற்காக நான் தெரிவித்த முறைப்பாட்டிற்கு காத்தான்குடி பொலீசார் ஒரு வருடம் வயதாகி கியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இச்சமூகத் தலைவர்களது தனிப்பட்ட வாழ்க் கையை நான் விமர்சிக்கவில்லை. எதிர்காலத் திலும் இம்மன்றின் மேலான அறிவுறுத்தலுக் கமைய நான் விமர்சிக்கவும் மாட்டேன் என உத்தரவாதமளிக்கின்றேன். எனினும் இவர்களின் நிர்வாகங்களிலுள்ள குறைகளை, அது தொடர் பிலான மக்களின் கருத்துக்களை நான் வெளி யிட வேண்டியது எனது ஊடகப் பணியாகும்.
சம்மேளனத்தின் நடவடிக்கைகளை நான் நேரில் பார்வையிட்டு செய்திகள் எழுத எனக்கு வாய்ப் பளிக்கப்படுவதில்லை. நான் ஊடக ரீதியாக விண்ணப்பித்தும் அவர்கள் தனி நபர் ஊடகம் என்று என்னை ஓரங்கட்டியுள்ளனர். சம்மேள னத்தின் செய்றபாடுகளில் இதுவரை முப்பதுக் கும் மேற்பட்ட மோசடிக் குற்றச்சாட்டுக்களை நான் வெளிப்படுத்தியுள்ளேன். அவையெவற் றுக்கும் அவர்கள் பதிலளிக்கவில்லை. அவர்கள் பதிலளித்தால் அவற்றையும் பிரசுரிப்பேன்.
இவ்விளக்கத்தைச் செவியேற்ற நீதிபதி, சமூக அமைப்புக்களில் அவதானிக்கப்படும் குறை நிறைகளைச் சுட்டிக்காட்டுவதில் எந்தத் தடை யுமில்லை. அவ்வாறு ஊடகங்கள் தெரிவிப்ப தால்தான் சில வேளைகளில் மக்களுக்கு நன் மைகளும் விளைகின்றன. சில குறைபாடுகள் இருக்கின்றது என்பதற்காக ஊடகச் சுதந்தி ரத்தை இம்மன்றில் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. இவ்வாறான முறையீடுகளை பொலீ சார் எதிர்கொள்ளும்போது அவற்றை உரிய இடங்களில் கொண்டு சென்று தீர்வு காணுமாறு ஆலோசனை கூற வேண்டும். இந்த நீதிமன்றம் குற்றவியல் சம்பவங்கள் சம்பந்தமான வழக்கு களையே விசாரிக்கும் நீதிமன்றம் என்பதை பொலீசார் தெரிந்து கொள்ள வேண்டும் என பொலீசாருக்கும் அறிவுறுத்தினார்.
சாட்சிகள் எதிரியுடன் சமாதானமாகிச் செல்லுங் கள் அல்லது நான் மத்தியஸ்த சபைக்கு இந்த வழக்குகளை அனுப்புகின்றேன். அங்கே நீங்கள் தீர்வு பெற்றுக் கொள்ளுங்கள். எது உங்களுக்கு விருப்பம்? என சாட்சிகளிடம் நீதிபதி வனவினார். சமாதானமாகச் செல்வதற்கு இரு சாட்சிகளா லும் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படை யில் இவ்விருவரும் சமாதானத்திற்கான கையெ ழுத்துக்களை வழக்கேடுகளில் இட்டனர். பிரதி வாதியும் அவர்களைத் தொடர்ந்து ஒப்பமிட்டார்.
சம்மௌனப் பிரதிச் செயலாளர் செய்த முறைப் பாடு தொடர்பான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ம் திகதியில் மீண்டும் இம்மன்றில் அழைக்கப்படும்.
“Vaarauraikal” Vol: 208 Date: 20.01.2012

No trackbacks yet.