‘வரலாற்றில் ஒரு கேடு’! 6.5 Kg. போதைப் பொருள் கடத்திய சம்மாந்துறை மௌலவி சென்னை விமான நிலையத்தில் கைது!!
இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் சென்னை விமான நிலையத்தினூடாக மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூருக்கு 1.5 கோடி இந்திய ரூபா பெறுமதியான 6.5 கிலோ நிறையுடைய போதைப் பொருளைக் கடத்திச் செல்ல முற்பட்டபோது இந்தியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவருடன் மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினது அறிவுறுத்தலின் பேரில் நீதிமன்ற ஆணையுடன் சம்மாந்துறையிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற சம்மாந்துறைப் பொலீஸார் அவ்வீட்டைச் சோதனையிட்டனர்.
சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் தஹாநாயக்க, குற்றப் பிரிவுக்கான பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் இப்றாஹீம் ஆகியோரால் வழிநடாத்தப்பட்ட பொலிஸ் சோதனைக் குழுவொன்றே இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக ‘Daily Mirror’ பத்திரிகை கடந்த மாதம் 24ம் திகதி பொலிஸ் அத்தியட்சகர் அஜித ரோஹன அவர்களை மேற்கோள்காட்டி இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகி வரும் ‘வரலாற்றில் ஓர் ஏடு’ நிகழ்ச்சி மூலம் நன்கறியப்பட்ட சம்மாந்துறையைச் சேர்ந்த மௌலவி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ‘வார உரைகல்‘லுக்கு அப்பிரதேசவாசிகளால் தகவல் தெரிவிக்கப்பட்டது.

No trackbacks yet.