இஸ்லாத்தில் வெறுக்கப்பட்ட அனாச்சாரங்கள் எல்லாம் இஸ்லாமிய கலாச்சார மண்டபத்தில் அரங்கேற்றம்!
காத்தான்குடி உலமாக்கள் கண்குளிரக் கண்டு மகிழ்ந்ததை அனாச்சாரங்களுக்கான அங்கீகாரமாக எடுத்துக் கொள்ளலாமா?
இவ்வருட தேசிய பாதுகாப்புத் தினம் தொடர் பாக கடந்த 26.12.2011ம் திகதி காத்தான்குடியில் நடை பெற்ற நிகழ்வுகளின்போது முஸ்லிம் சமூகத்தின் தனித்துவமான சமய, சமூக, கலாசார விழுமி யங்கள் புறக்கணிக்கப்பட்டதுடன், குழிதோண் டிப் புதைக்கப்பட்டதாகவும் பரவலாகக் குற்றஞ் சாட்டப்படுகின்றது.
இதுவொரு தேசிய விழாவாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த அதேவேளையில், இத்தகைய விழாக்கள் நடைபெறும் பிரதேசங்களில் வாழுகின்ற மக்களின் தனித்துவமான சமய, சமூக, கலாச்சாரப் பண்பாடுகளையும் கவனத்திற்கெடுத்து அவற்றுக்கு மதிப்பளித்திருக்க வேண்டுமெனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
இலங்கை பல்லின சமூக மக்கள் வாழும் ஒரு நாடு என்ற அடிப்படையில் பல்சமய, சமூக, கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களுக்கு அனைவரும் மதிப்பளித்து ஐக்கிய இலங்கையர்களாக வாழ வேண்டுமென்றும், இந்த ஒற்றுமையின் அடிப்படையிலேயே எமது நாட்டை ஆசியாவின் அதிசயமாக உயர்த்த வேண்டும் எனவும் திடசங்கற்பம் பூண்டு அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
பிரதான வீதியில் ஈச்சை மரங்களை நாட்டி, வீதிகளுக்கெல்லாம் இமாம்களினதும், கலீபாக் களினதும் பெயர்களைச் சூட்டி, வீதிப் பெயர்ப் பலகைகளில் அறபு எழுத்துக்களை இடம்பெறச் செய்து, வீதியெங்கும் பொருத் தப்பட்டுள்ள தொடர் ஒலிபெருக்கிகள் மூலம் ஐவேளை பாங்கொலியும், கிறாஅத் ஓதலுமாக ஒலிக்கச் செய்து இந்நாட்டின் தனித்துவமிக்க இஸ்லாமிய நகரமாக எமது காத்தான்குடி மண்ணைப் பிரகாசிக்கச் செய்வதற்கு அல்லும் பகலுமாகப் பாடுபட்டுவரும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவினால் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இத்தேசிய பாதுகாப்புத் தின மேடை நிகழ்வுகளில் ஒரு சில நிமிடங்களுக் கேனும் குர்ஆன் வசனங்களை பாராயணம் செய்ய (கிறாஅத் ஓத)வைப்பதற்கு இயலாமற் போனது அவரது பிரதியமைச்சர் பதவி அதிகா ரத்தைச் செல்லாக்காசாக்கி பகிரங்கப்படுத்தி இருப்பதுடன், எமது முஸ்லிம் சமூகத்தின் இஸ் லாமிய உணர்வுள்ள உள்ளங்களை வெகுவாகப் புண்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக் காட்டப் படுகின்றது.
இவ்விழாவை முன்னிட்டு காத்தான்குடி இஸ்லா மிய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சிகளிலும் அலங்கார ஆடைகளுடன் கல்லூரி மாணவிகளின் அங்க அசைவுகள் பொங்கிக் குலுங்க இசையுடன் கூடிய நடன நாட்டியங்கள் நடைபெற்றன.
இதில் முஸ்லிம் சமூகப் பெண்கள் நடனமாடுவதாகவும் நான்கு பெண்கள் மேடைக்கு வந்து தலை திறந்த நிலையில் பச்சை நிறத்திலான உடலொட்டிய உள்ளாடையணிந்து பகிரங்கத்தில் துள்ளிக் குதித்து ஆடிய கண்றாவி ஆட்டத்தையும் நாம் விஷேடமாகக் குறிப்பிட வேண்டும்.
இந்நடன, நாட்டிய, ஆடல் பாடல்களையெல்லாம் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அல்ஹாஜ் ஏ.எம். அப்துல் காதர் மௌலவி, ஜாமிஅதுல்பலாஹ் அறபுக் கல்லூரி உதவி அதிபர் அல்ஹாஜ் எஸ்.எம். அலியார் மௌலவி, அவ்வறபுக் கல்லூரியின் விரிவுரையாளர் அல்ஹாஜ் ஏ.ஜீ.எம். அமீன் மௌலவி, புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலின் பேஷ் இமாம் ஏ.எல். ஆதம் லெப்பை (முஸ்தபா) மௌலவி, பிரபல இஸ்லா மிய தாஈ மௌலவி அல்ஹாஜ் அப்துல் கபூர் மதனீ, அல்ஹாஜ் அப்துல் றஸ்ஸாக் மௌலவி, ஆத்மீக உலமாக்களான மௌலவி எச்.எம்.எம். இபுறாகீம் நத்வி, மௌலவி ஏ.எல்.எம். இஸ்மா யில் (சின்ன சமது மௌலவி) காதிரீ, வரலாற் றில் ஓர் ஏடு புகழ் கவிமணி கலாபூஷணம் அல்ஹாஜ் மௌலவி எம்.எச்.எம். புகாரி பலாஹீ ஆகியோர் உள்ளிட்ட உலமாக்கள் பலரும் இஸ்லாமிய கலாச்சார மண்டபத்தில் அலுப்புச் சலிப்பின்றி அமர்ந்திருந்து இவ்வனாச்சார ஆட்டங்களை எல்லாம் கண் குளிரக் கண்டு களித்தனர்.
இதுகாலவரை நமதூர் உலமாக்களின் உபதே சங்களில் அனாச்சாரங்கள் என்றும், இஸ்லாத்தில் ஹறாமானவை என்றும் சொல்லப்பட்டு வந்த இசை, நடனம், நாடகம், நாட்டியம், ஆண்களும், பெண்களும் ஒன்று கலத்தல் போன்ற நடவடிக்கைகளை எல்லாம் இத்தேசிய பாதுகாப்புத் தின விழாவில் நமது உலமாக்களே பங்குபற்றியும், அந்நிகழ்வுகள் முடியும் வரை அங்கேயே தமது விழிகளை அகல விரித்தவாறு வீற்றிருந்தும் அவர்களின் கண்களும் கல்புக ளு(உள்ளங்களு)ம் குளிரும் வகையில் மெய் மறந்து மெய்ஞ்ஞானமும் துறந்து முழுத் தேச மக்களும் தொலைக்காட்சியில் சாட்சிகளாகத் தங்களையெல்லாம் பார்க்கக்கூடிய வகையில் கண்டு களித்து பரவசமடைந்திருப்பதன் மூலம் எமது உலமாக்களே இத்தகைய அனாச்சாரங் கள் எல்லாம் இம்மண்ணில் எதிர்காலத்திலும் நடைபெற அங்கீகாரம் அளித்திருப்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாமா? எனவும் கேள்வி எழுப்பப்படுகின்றது.
இவ்விழாவுக்கு மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வருகை தருவார் என்று திருட்டு இணையதளமொன்று முதலில் செய்தி வெளியிட்டிருந்த போதிலும் ஜனாதிபதி வருகை தர மாட்டார் என்பதை தனது புலனாய்வில் உறுதிப்படுத்திக்கொண்ட ‘வார உரைகல்’ கடந்த வாரம் வெளியான அதன் 204வது பதி வின் முன் பக்கத்தில் ‘தேசிய பாதுகாப்புத் தினத்தில் பிரதம அதிதியாக யார் வரு வார்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தது.
இதன் பின்னரும் உண்மையை மறைக்க முடியாத சில காத்தான்குடி ஊடகவியலாளர்கள் கடந்த 25ம் திகதி வெளிவந்த பத்திரிகைகளில் பிரதமர் தலைமையிலேயே இந்நிகழ்வு நடைபெறும் எனச் செய்தி வெளியிட்டிருந்தனர்.
என்றாலும் பிரபல கொழும்புத் தமிழ்த் தினசரி யொன்றின் உண்மை விபரமறியாத கிணற்றுத் தவளையான காங்கேயனோடை நிருபர் மாத்திரம் இத்தேசிய நிகழ்வு நடைபெற்ற 26ம் திகதி யும் ‘தேசிய பாதுகாப்புத் தினம் இன்று காத்தான்குடியில் ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு’ என்ற தலைப்பில் செய்தியொன் றினை வெளியிட்டு காங்கேயனோடை மக்க ளுடன் அப்பத்திரிகையின் வாசகர்கள் அனைவ ரையுமே ஜனாதிபதியும் காத்தான்குடிக்கு வரு கிறார் என்று ஏமாற்ற முனைந்திருந்தார் என்ப தும் இங்கே கவனிக்கத்தக்கது.
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தான் முன்னின்று ஏற்பாடு செய்கின்ற இவ்வாறான தேசிய நிகழ்வு களின் போதெல்லாம் ஜனாதிபதி வருகிறார்.. ஜனாதிபதியின் பாரியார் வருகிறார்.. அந்த அமைச்சர் வருகிறார்.. இந்தப் பிரதானி வருகி றார் என்றெல்லாம் புருடா விட்டு இப்பிரதேச மக்களை ஏமாற்றி அவர்களை ஒன்று கூடச் செய்வதானது அவரின் அரசியல் தந்திரமாகும்.
முன்னரும் ஒரு முறை அவர் இவ்வாறே ஜனாதி பதியின் பாரியார் காத்தான்குடிக்கு வருகிறார் என்று அவரது துதிபாடும் உடகங்கள் வாயிலா கவும் வாகனப் பிரச்சாரம் மூலமாகவும் ஊரெங் கும் அறிவித்து ஆயிரக்கணக்கான பெண்களை இக்கலாச்சார மண்டபத்திற்கும், கடற்கரைக்கும் வரவழைத்து ஏமாற்றியதையும் இவ்விடத்தில் ‘வார உரைகல்’ சுட்டிக்காட்ட விரும்புகிறது.
இத்தேசிய விழா பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா வின் வேண்டுகோளின் பேரிலும், அவரது ஏற் பாட்டிலுமே நமதூரில் நடைபெற்றதாக அவரது அரசியல் ஆதரவாளர்கள், அபிமானிகள் பலரா லும் பிரஸ்தாபிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்நிகழ்வை இடர் முகாமைத்துவ அமைச்சே ஏற்பாடு செய்ததாக நம்பகமான வட்டாரங் களில் இருந்து அறியக் கிடைத்துள்ளது.
அதற்கு ஆதாரமாக இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எஸ்.எம். மொஹமட் அவர்களால் விநியோகிக்கப்பட்ட இத்தேசிய விழாவுக்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழை அந்த நம்பகமான வட்டாரங்கள் எமது கவனத் திற்கு கையளித்திருந்தது.
அதில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் திருநாமத்தை ஒரு மூலையிலேனும் காணக்கிடைக்கவில்லை.
பிரதிய மைச்சர் என்ற வகையில் இடர் முகாமைத்துவ பிரதியமைச்சத் கௌரவ டுலீப் விஜேசேகர அவர்களின் பெயர் மாத்திரமே இவ்வழைப்பித ழில் உத்தியோகபூர்வமாக அச்சிடப்பட்டுள்ள தும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு உத்தியோகபூர்வ அழைப்பிதழில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் பெயர் அச்சி டப்படாததன் காரணமாகவே பரவலாக இந்த அழைப்பிதழ் நமதூரிலுள்ள முக்கிய நிறுவ னங்களுக்கும், பிரமுகர்களுக்கும் விநியோ கிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின் றது.
குறிப்பாக முகைதீன் மெத்தைப்பெரிய ஜும்ஆப்பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இவ்விழா வுக்கு அழைக்கப்படவில்லை என அப்பள்ளி வாசல் பிரமுகர் ஒருவர் ‘வார உரைகல்’ லிடம் தெரிவித்தார்.
(தொழில்நுட்பக் கோளாறு காரணமாக காலங்கடந்து பதிவேற்றப்படுகிறது)
“Vaarauraikal” Vol: 205 Date: 30.12.2011

No trackbacks yet.