பெப்ரவரி, 2012 க்கான தொகுப்பு

சம்மேளனப் பிரதிச் செயலாளர் சாதிகீன் நீதிமன்றத்தில் பிரதம ஆசிரியருடன் சமாதானமானார்!

-காத்தான்குடி சம்மேளனத்தின் செயற்பாடுகள் நேர்மையானவைதான் என்றால் இவ்வூடகத்தை அது உள்வாங்க மறுப்பதேன்? நான் என்ன பயங்கரவாதியா? அல்லது பிரபாகரனா? என பிரதம ஆசிரியர் கேள்வி- காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறு வனங்கள் சம்மேளனத்தின் பிரதிச் செயலாளர் ஏ.எம். சாதிகீன், ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியருடன் நீதிமன்றத்தில் சமாதானமானதையடுத்து காத்தான்குடி பொலிஸாரினால் தாக்கல்  செய்யப்பட்டிருந்த ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர் மீதான மற்றொரு வழக்கும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது[ READ MORE ]

கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் முன்னாள் அமைச்சர் அமீரலிதான் என சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி பகிரங்க அறிவிப்பு!

கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் உங்களின் முன்னாள் அமைச்சர் அமீரலி ஹாஜியார்தான். அவரை ஓட்டமாவடி மக்களான நீங்கள் கைவிட்டாலும் நாங்கள் கைவிடவில்லை. அவரை நாம் உரிய இடத்தில்தான் இப்போது வைத்திருக்கின்றோம். எதிர்காலத்திலும் அவருக்குரிய அந்தஸ்தில்தான் நாம் வைப்போம் என சிரேஷ்ட அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். பௌஸி அவர்கள் ஓட்டமாவடியில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் பேசும்போது தெரிவித்தார்[ READ MORE ]

காத்தான்குடியில் பெண் பசு கொலை! கன்றின் பாகங்கள் பள்ளிவாசலின் முன்னால்..!

காத்தான்குடி முதலாம் குறிச்சியில் ஆற்றங்கரையோரமாக அமைந்துள்ள ஈமான் பள்ளிவாசலுக்கு எதிரில் கொல்லப்பட்ட பசு மாடு ஒன்றினது கர்ப்பப்பையிலிருந்த சினைக் கன்று ஒன்று வெட்டிக் குதறப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக அப்பள்ளிவாசலின் தலைவரும், காத்தான்குடியின் மூத்த கல்விமானுமாகிய ஜாமிஅதுஸ் ஸித்தீக்கிய்யா மகளிர் அரபுக்கல்லூரின் தலைவர் அல்ஹாஜ் எஸ்.எம்.பி. முகைதீன் இன்று காலையில் ‘வார உரைகல்’ லுக்குத் தகவல் தெரிவித்தார்[ READ MORE ]

வரலாற்றிலிருந்து பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பாடம் படிக்க வேண்டும்!

-கேர்ணல் கதாபி – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பற்றி ஒரு கல்லூரி மாணவன் எழுதிய ஒப்பீட்டுக் கட்டுரை- சமகாலத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வரலாறு என்பது ஒரு கசப்பான பாடமாக இருப் பினும் அதனை அரசு ஒரு கட்டாய பாடமாக ஆக்கியுள்ளதற்கு மிக முக்கியமான அடிப்படை நோக்கம் ஒன்றிருக்கின்றது. கடந்த கால வரலாறுகளை அறிவதன் மூலமே தனது நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் தேவையான சிறந்த படிப்பினைகளைப் பெற்று தன்னை நன்கு வளப்படுத்திக் கொள்ள வேண்டு மென்பதே அந்நோக்கமாகும்[ READ MORE ]

பொய்யை எதிர்த்துக் கண்டித்தோர் கடைந்தெடுத்த மற்றுமொரு பெரும் பொய்!

-அப்துர் றஹ்மானின் சொந்தப்புத்தி பற்றிக் கேட்பவர்களிடம் அந்தப்புத்தி அனுவளவேனும் இருக்கிறதா?- கடந்த 10ம் திகதி வெள்ளிக்கிழமை முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்ற புனித ஜும்ஆத் தொழுகைக்காகச் சென்றிருந்த பொதுமக்களிடம் ‘PMGG இன் கடத்தல் நாடகம்’ என்ற தலைப்பில் காத்தான்குடி மண்ணின் மானம் காக்கப் புறப்பட்டிருந்த முகவரி குறிப்பிடாத ஆர்ப்பாட்டக்காரர்களால் மொட்டைத் துண்டுப்பிரசுரமொன்று விநியோகம் செய்யப்பட்டிருந்தது[ READ MORE ]

‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர் மீதான தாக்குதல் மற்றும் விமர்சனங்களுக்கு ஐக்கிய மக்கள் ஒன்றியத் தலைவர் அல்பா நஸார் கண்டனம்!

-பிரித்தானிய தூதுவராலய அதிகாரிகளும் பிரதம ஆசிரியரின் சேமநலன்களைக் கேட்டறிந்தனர்– கடந்த 10ம் திகதி வெள்ளிக்கிழமை காலையில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ‘வார உரைகல்’  பிரதம ஆசிரியர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கும், அன்றைய தினம் ஜும்ஆத் தொழுகைக்குப் பின் பிரதான வீதியில் இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் ‘வார உரைகல்’ ஆசிரியரையும் சம்பந்தப்படுத்தி விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டிருந்ததற்கும் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் சார்பில் அதன் தலைவர் ஜனாப். எம்.எஸ்.எம். நஸார் (அல்பா) வன்மையான கண்டனத்தைத் [ READ MORE ]

PMGGயின் “புதிய நாளை” பத்திரிகை விநியோகத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தரப்பினர் அச்சுறுத்தல்

-பத்திரிகைப் பிரதியை கிழித்து வீசியதாகவும் பொலிஸில் புகார்- நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினரால் இன்று வெளியிடப்பட்ட ‘புதிய நாளை’ விஷேட பத்திரிகை விநியோகத்தின்போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தரப்பினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று (17.02.2012) மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காத்தான்குடி 06ம் குறிச்சி தாருஸ்ஸலாம் வீதியைச் சேர்ந்த அவ்வியக்கத்தின் சூறாசபை உறுப்பினர் ஜனாப். எம்.எஸ்.எம். சரீப் என்பவர் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்[ READ MORE ]

Follow

Get every new post delivered to your Inbox.