Archive for the ‘ ஆசிரியர் எழுத்து ’ Category
கடந்த 10ம் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஜும்ஆப் பள்ளிவாசலொன்றில் குத்பாப் பிரசங்கம் செய்த மௌலவி ஒருவர், அடுத்தவரின் குற்றங்களையும், குறைகளையும் அறிவதில் பொதுமக்கள் ஆர்வங்காட்டக் கூடாது என்றும், ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றங் குறைகளையிட்டு அலட்டிக் கொள்ளக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன[ READ MORE ]
கடந்த மூன்று வாரங்களாக எவ்வித முன்னறிவித்தலுமின்றி உங்களின் அபிமான ‘வார உரைகல்’ வெளியிடப்படாததற்காக முதலில் அன்பு வாசகப் பெருமக்களிடம் மன்னிப்புக் கோருகின்றேன். இம்மூன்று வாரங்களிலும் ‘வார உரைகல்’ லைப் பெறுவதற்காக விற்பனையாளர்களை நாடிச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய உள்ளுர் வாசகர்களுக்கும், இணையதளத்தில் புதிய செய்திகளைத் தேடி அலுத்துக்கொண்ட இணையதள வாசகர்களுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்காக எனது வருத்தைத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இக்காலப் பகுதியில் பலவிதமான வதந்திகள் தந்திகளை விடவும் வேகமாக ‘வார உரைகல்’ லுக்கு எதிராக சில விஷமிகளால் [ READ MORE ]
கடந்த 01ம் திகதி வெளியான ‘வார உரைகல்’ 156வது பதிவில், காத்தான்குடி முதியோர் இல்லத்தின் வருடாந்தக் கணக்கறிக்கை தொடர்பான ஆய்வு வெளியிடப்பட்டிருந்ததை வாசகர்கள் அறவீர்கள். அதுதொடர்பிலான மறுப்பறிக்கைப் பிரசுரம் ஒன்று கடந்த 08.10.2010 வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகைக்காகச் சென்ற நமது பிரதேசப் பொதுமக்களுக்கு அவ்வில்லத்தின் தலைவர், செயலாளர், நிருவாக சபை உறுப்பினர்களால் விநியோகிக்கப்பட்டிருந்தது. அப்பிரசுரத்தில், ’01.10.2010 இல் வெளிவந்த வார உரைகல்லிற்கு மறுப்பறிக்கை எம்மால் உடன் தயாரித்து வழங்கியபோது வார உரைகல் ஆசிரியர் அதனை அடுத்த வெளியீட்டில் [ READ MORE ]
ஆசிரியர் எழுத்து: 23.07.2010 – பதிவு: 147 கடந்த 09.07.2010ல் வெளியான ‘வார உரைகல்’ 145வது பதிவில் காத்தான்குடி ப.நோ.கூ.சங்க விவகாரம் தொடர்பிலும், கடந்த வாரம் வெளியான ‘வார உரைகல்’ 146வது பதிவில் மஞ்சந்தொடுவாய் குவைத் சிட்டி வீட்டுத் திட்ட விவகாரம் தொடர்பிலும் செய்திகளை வெளியிட்டிருந்தேன். இதற்கு முன்னரும் சம்மேளன ஹஜ் குழுவின் கணக்குகள் மறைக்கப்பட்டது தொடர்பாகவும், 10 ரூபா விலை குறிக்கப்பட்ட புகைத்தல் – மது எதிர்ப்புக் கொடிகளை 100 ரூபாவுக்கும் அதற்கு மேலான தொகைகளுக்கும் [ READ MORE ]
(ஆசிரியர் எழுத்து – பதிவு: 146 – 16.07.2010) ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தில் அச்சமூகம் கொண்டிருக்கும் சிவில் சமூக நிறுவனங்களின் இயங்கு தன்மையானது இன்றியமையாதது. ஒரு சிவில் நிறுவனமானது அது கொண்டிருக்கும் இலக்குகள், கொள்கைகள், செயற்பாட்டு ஒழுங்குகள் என்பவற்றினைப் பொறுத்தே முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகின்றது. அந்த வகையில்தான் காத்தான்குடியின் சிவில் சமூகக் கட்டமைப்பு நிறுவனமான பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமானது, காத்தான்குடியைப் பொறுத்த வரையில் பலமிக்கதோர் சிவில் சமூகக் கட்டமைப்பாகும். இந்நிறுவனத்தின் தொடரான இயக்கத்தில் ஊரின் பள்ளிவாயல்கள், [ READ MORE ]
காத்தான்குடியின் ஆற்றங்கரையேரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சாக்கடைக் கழிவுகளை அகற்றி அதன்மூலம் சூழலைச் சுத்திகரிக்கும் UNDP யின் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக UNDP நிறுவனத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மூன்று நாள் வெளிக்களப் பயணத்தில் காத்தான்குடி நகரசபையின் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு அவ்வெளிக்களப் பயணத்திலும் அவர்கள் கலந்து கொண்டு ஊர் திரும்பியுள்ளனர். எனினும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் நகரசபை பிரதிநிதியான பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் மாத்திரம் இவ்வெளிக்களப் பயணத்தில் கலந்து கொள்ளாமல் நகரசபை ஆளுந்தரப்பினரால் [ READ MORE ]
ஆசிரியர் எழுத்து: பதிவு – 142 (18.06.2010) இலங்கையைச் சின்னாபின்னப்படுத்திச் சீரழித்துக் கொண்டிருந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஓராண்டுகள் கடந்துள்ள நிலையில், யுத்தத்தின் கோரத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள்குடியேற்ற விடயங்களில் இலங்கை அரசும், சர்வதேசமும் கூடுதலான கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றது. அதற்கான பல்வேறு வகையான திட்டமிடல்களையும், வேலைத் திட்டங்களையும் ஆளும் ஐ.ம.சு. கூட்டமைப்பு அரசாங்கம் கொண்டிருப்பதாகவும் தெரிகின்றது. இருந்தபோதிலும் அது எந்தளவுக்கு பாதிக்கப்பட்ட அனைத்து இனங்களையும் உள்ளடக்கியதாகவும், இதய [ READ MORE ]
காத்தான்குடி பெரும்பான்மையான முஸ்லீம்களைக் கொண்டதோர் தனித்துவமான நகரம். இந்நகர மக்களின் இஸ்லாமிய விவகாரங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய முதன்மை நிறுவனம் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவாகும். காத்தன்குடி ஜம்இய்யதுல் உலமா ஆரம்பிக்கப்பட்ட நாள் தொடக்கம் அது பல்வேறு சவால்களையும், பிரச்சினைகளையும் எதிர்நோக்கி தாக்குப்பிடித்து செயற்பட்டு வந்துள்ளது. ஒரு சமய நிறுவனம் என்ற வகையில் மார்க்க ரீதியாக எழுகின்ற எவ்வாறான நிலைமைகளையும் கையாள வேண் டிய பொறுப்பும், கடமையும் ஜம்இய்ய துல் உலமாவுக்கே உள்ளது என்ற வகையில் 1978 மற்றும் 2004ம் [ READ MORE ]
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் 2010ம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபைத் தெரிவு கடந்த மாதம் 30ம் திகதி இடம்பெற்று முடிவடைந்துள்ளது. நடப்பாண்டிற்கான சம்மேளனத்தின் தலைவர் பதவியானது, பதவி வழியாக காத்தான்குடி 5ம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆப் பள்ளிவாயலின் தலைவரான அல்ஹாஜ் எஸ்.எச்.எம். இஸ்மாயில் அவர்களுக்குச் சென்றுள்ளது. அந்த வகையில் புதிய தலைவருக்கு ‘வார உரைகல்’ தனது வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில் புதிய தலைமைத்துவத்திற்கும், நிருவாக சபைக்கும் முன்னாலுள்ள பொறுப்புக்களையும், கடமைகளையும் சுட்டிக்காட்டவும் [ READ MORE ]
நாடு முழுவதும் தற்போது காணப்படும் எல்லைகளை மறுசீரமைப்புச் செய்ய வேண்டியிருப்பின் அதுதொடர்பான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. அதுகுறித்து நமது பிரதேசம் தொடர்பாகவும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் சமீபத்தில் ஒரு ஆரம்ப அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளதுடன் அதுபற்றி நேரில் கருத்துக்களைத் தெரிவிக்கவும் பொருத்தமான நேரமொன்றைத் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. நமது சமூகத்தின் தாய் நிறுவனமான சம்மேளனம் மிக்க பொறுப்புணர்வுடன் நமது சமூகப் பரம்பலுக்கேற்ற நில வளம் இல்லாததைக் கருத்திற் கொண்டு [ READ MORE ]
Get every new post delivered to your Inbox.