Archive for the ‘ ஆன்மீக மேடை ’ Category

மெய்யறிவின் ஒளிச்சுடராக எம்முடன் வாழ்ந்த ஆத்மீகப் பெரியார் அஷ்ஷெய்க் அப்துர் றஸீத் தங்கள் மௌலானா (கத்தஸல்லாஹு..) அவர்கள்

-அன்னவர்களின் 13வது நினைவு தினக் கட்டுரை- காதிரிய்யா வர்ரிபாஇய்யா தரீக்காக்களின் ஷெய்ஹு நாயகமாகவும், நபி (ஸல்) அவர்களின் 34வது தலை முறையிலும், ‘குத்புல் அக்தாப்’ முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (கத்தஸல்லாஹு..) அவர்களின் 17வது தலைமுறையிலுமாக நம்மத்தியில் வாழ்ந்து மறைந்த ஆத்மீகப் பெரியார் அஷ்ஷெய்யிதுஷ் ஷெய்ஹ் அப்துர்றஸீத்  PPSS கோயாத் தங்கள் மௌலானா வாப்பா நாயகம் (கத்தஸல்லாஹு..) அவர்களின் 13வது நினைவு தினம் கடந்த 26.06.2010ம் திகதி காத்தான்குடி உட்பட இலங்கையெங்கும் பரந்து வாழுகின்ற அன்னாரின் முரிதீன்களாலும், [ READ MORE ]

காத்தான்குடியில் ரிபாய் ராத்தீப்

நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் காத்தான்குடியில் புனித ரிபாய் ராத்தீப் நிகழ்வொன்று கடந்த 21ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி 6ம் குறிச்சி அமானுல்லாஹ் வீதியிலுள்ள அல்ஹாஜ் பீ. நூஹீலெப்பை அவர்களின் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. காதிரிய்யா வர்ரிபாஇய்யா தரீக்காக்களின் ஷெய்ஹு நாயகம் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்ஹ் மௌலானா மௌலவி அல்ஹாஜ் முஹம்மத் புஹாரீ நல்ல கோயாத் தங்கள் நாயகம் அவர்களின் தலைமையில் ராத்தீப் நிகழ்வுகள் நடைபெறுவதையும், அங்கு சமூகமளித்திருந்த தாய்மார்கள், சகோதரிகளில் ஒரு [ READ MORE ]

வாழ்வையே வணக்கமாக்கியது இஸ்லாம் மார்க்கம்! அதற்காக உழைக்க வேண்டியது நம் கடமையாகும்!! -காத்தான்குடி பிராந்திய இஜ்திமாவில் அப்துல் ஹாலிக் ஹஸ்ரத் பிரசங்கம்-

‘உலகில் பல்வேறு சமயங்கள் காணப்படுகின்றன. அவற்றின் வணக்க வழிபாடுகளும் ஒவ்வொரு வகையாக அமைந்துள்ளன. ஒரு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட அமைப்பில் அவர்கள் வணக்கம் செய்து விட்டால் அவர்களுடைய சமயங்களில் சொல்லப்பட்ட வணக்கம் முடிவடைந்து விட்டதாக அவர்கள் கருதுகின்றனர். அதன் பின்னர் அவர்களின் மார்க்கத்திற்கும், வாழ்க்கைக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதில்லை. ஆனால், மனிதர்களுடைய  வாழ்க்கை முழுவதையும்  வணக்கமாக்கிய உலகின் ஒரேயொரு மார்க்கம் எமது இஸ்லாமிய மார்க்கம் மாத்திரமேயாகும்’ -என கடந்த 07ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை [ READ MORE ]

இறை நெருக்கத்திற்கு வழிகாட்டும் இரசவாதம் – அங்கம் :5

அருமையானவனே! கடந்த நான்கு வார காலமாக இத்தொடரைப் படித்துவரும் நீ கல்பு எனும் ரூஹினுடைய தத்துவங்களை ஓரளவுக்கேனும் புரிந்து கொண்டிருப்பாய். அதனால் உன் மனதில் பல சந்தேகங்கள் எழுந்திருக் கக்கூடும். அதாவது, மனிதனில் மிருகங்கள், துஷ்ட மிருகங்கள், ஷைத்தான்கள், மலக்குகள் முதலானவர்களுடைய குணங்கள் எல்லாம் சேர்ந்திருக்க மலக்குகளின் குணம்தான் மனிதனில் நிலைத்திருக்க வேண்டிய குணமென்றும், மற்றவையெல்லாம் மனிதனுக்கு அந்நியமாக இருக்க வேண்டுமென்றும், மலக்குகளின் குணத்தை அடைவதற்காகவே மனிதன் படைக்கப்பட்டான் என்றும், ஏனைய குணங்களைக் கொள்வதற்காக இவனைப் படைக்கவில்லை [ READ MORE ]

இறை நெருக்கத்திற்கு வழிகாட்டும் இரசவாதம் : அங்கம்: 4

அருமையானவனே! மனிதனுக்குள் இந்த நான்கு காரியகர்த்தாக்கள் இருக்கிறார்கள் என்பது உனக்குத் தெரிந்து விட்டதனால், இனி உன்னுடைய ஆட்டம், அசைவுகளின்மீது நோட்டம் செலுத்தி இந்நான்கில் நீ எதற்கு வழிப்பட்டுள்ளாய் என்கிற சுயவிசாரணையை செய்துகொள். நீ எச்செயலைச் செய்தாலும் அதனால் ஒரு குணம் வெளியாகி உன்னில் தங்கியிருப்பதுடன், அது உன் பட்டோலையில் எழுதப்படும் என்பதையும் உறுதியாக எண்ணிக்கொள்.  இத்தகைய குணங்களுக்கே ‘அக்லாகு’ என்று சொல்லப்படும். இந்த நான்கு காரியகர்த்தாக்களாலேயே எல்லா விதமான குணங்களும் உண்டாகின்றன. நீ ஆசையாகிய பன்றியின் ஏவலுக்கு [ READ MORE ]

இறை நெருக்கத்திற்கு வழி காட்டும் இரசவாதம் – அங்கம்: 3

அருமையானவனே! கல்புடைய சேனைகளை விபரித்துச் சொல்வதானால் அது மிகவும் நீளமாகும். எனினும் ஒரு அழகான உதாரணம் மூலம் அதை உனக்கு விவரிக்கலாம். ஏனெனில் ‘அழ்ழாஹுத்தஆலாவுக்கு அழகான உதாரணங்கள் இருக்கின்றன. அவனுக்கு நிகர்தான் இல்லை’ என்பதை இத்தொடரைப் படிக்கும் போதெல்லாம் நீ எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மனிதனின் சரீரமானது ஒரு பட்டணமாகும். அல்லது ஒரு இராச்சியமாகும். இதில் கை, கால் போன்ற உறுப்புக்கள் எல்லாம் அப்பட்டணத்தின் தொழிலாளிகளாவர். ஆசையானது வரிவசூலிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் தாசீல்தார் (வட்டாட்சியர்) [ READ MORE ]

இறைநெருக்கத்திற்கு வழி காட்டும் இரசவாதம் – அங்கம்: 2

அருமையானவனே! ‘கல்பு’ என்னும் ஒரு பொருள் உண்டென்பதை நீ உணர்ந்து கொள்ளாத வரையில் அதன் தன்மைகளையும் நீ அறிய மாட்டாய். ஆகையால் அது என்ன பொருள் என்பதையும், அதன் சேனைகளையும், அச்சேனைகளுடன் அதற்குள்ள தொடர்புகளையும், அதன் இயற்கைக் குணமான அழ்ழாஹ்வுக்கு வழிப்படும் உயர் தன்மை அதற்கு எவ்வாறு உண்டாகின்றது என்பதையும் இவ்வாரத்தில் கவனிப்போம். ஒவ்வொரு மனிதனிடத்திலும் கல்பு எனும் ‘ரூஹ்‘ உண்டாகி இருக்கின்றது. ஏனெனில் மனிதனுக்கு தனது இருப்பில் எத்தகைய சந்தேகமும் இல்லை. அவனுடைய இருப்பு என்பது [ READ MORE ]

இறை நெருக்கத்திற்கு வழிகாட்டும் இரசவாதம்-அங்கம்:1

அழ்ழாஹுத்தஆலா மனிதனை விளையாட்டுக்காகப் படைக்கவில்லை. அவனுக்கு இவ்வுலகில் மிகவும் முக்கியமான ஒரு வேலை இருக்கிறது. அவனின் சரீரம் மண்ணால் படைக்கப்பட்டுள்ளதாயினும் அவனது உயிர் அழ்ழாஹ்வின் உண்மையைச் சேர்ந்ததாக உள்ளது. மனிதனின் தேகக்கூறில் மேயும் மிருகங்களின் குணமும், துஷ்ட மிருகங்களின் குணமும், ஷைத்தானுடைய குணமும் கலந்துள்ள போதிலும் இத்தீய குணங்களை விட்டும் தூய்மையடைய மனிதன் முயற்சிப்பானாகில் அவற்றை விட்டும் சுத்தமாகி அழ்ழாஹுத் தஆலாவின் திருச்சமூகத்திற்கு அருகதை உடையவனாகும் தகுதியை அடைந்து கொள்வான். பிரபஞ்சப் படைப்புக்களில் மிக உன்னதமான படைப்பாகப் [ READ MORE ]

Follow

Get every new post delivered to your Inbox.