Archive for the ‘ கவிதைகள் ’ Category
மியாவ் மியாவ் பூனையாம் மிடுக்காய் ஆண்ட பூனையாம் நாண மில்லா பூனையாம் நாதி யில்லா பூனையாம்! ஊழலைக் கண்டால் மோருமாம் நல்லதைக் கண்டால்; சீறுமாம் கொமிஷன் என்றால் சிரிக்குமாம் கணக்குக் கேட்டால் பாயுமாம்! சாக்கடை மண்ணில் விருப்பமாம் சபையில் அது டம்மியாம் அறிவு கொஞ்சம் கம்மியாம் இன்னும் ஆளக் கேட்குதாம்! காலைக் கையைப் பிடிக்குதாம் கட்டித் தழுவி நடக்குதாம் வாயைப் பல்லைக் காட்டியே வாக்குக் கேட்டுத் திரியுதாம்! தெருத் தெருவாய்ப் போகுதாம் திருகு தாளம் பண்ணுதாம் நாசம் [ READ MORE ]
காத்தநகரின் கண்ணியவான்களே..! தூக்கத்திலிருந்து துடித்தெழுவீர்!! நேற்று வரைக்கும் நீங்களெல்லாம் நினைவிழந்து தூங்கியதால் ஊத்தைகளும், உடைசல்களும் ஊராளத் தொடங்கி விட்டார்! பொய்யர்களும் புளுகர்களும் புடம்போட்ட கள்ளர்களும் நையாண்டிப் பசங்களும்தான் நமையாளத் தொடங்கி விட்டார்!! உங்களது தூக்கத்தால் உதவாக் கரைகளும்தான் உஷாராகி விட்டார்கள்![ READ MORE ]
வாருங்கள்..! வருங்காலத்தை எண்ணி லட்சியக்கனவு காணும் யதார்த்தவாதிகளின் தூக்கத்தை கலைக்கும் துஷ்டர்களே..!! வாருங்கள்..! வந்தமர்ந்து இந்த வரிகளைப் படியுங்கள்..! என்ன நினைத்தீர்கள் ‘வார உரைகல்’ லை..? அன்றாடம் வந்தடையும் அச்சேடுகள் வரிசையிலே வாழ்க்கைப் பிழைப்புக்காக முளைவிட்ட மரமென்றா[ READ MORE ]
-நடுவோடை முஸ்தபா- ஆதியோடந்தமும் தானாகி நிற்போனே! அனைத்துயிர் தன்னதற்கும் ஆகாரம் அளிப்போனே! எள்ளுக்குள் எண்ணெயதாய் என்னிதயம் வாழ்வோனே! எங்கும் நிறைந்தோனே பொங்கு பேரொளியே! ‘குன்’ என்ற உனதேவல் அனைத்துயிரும் ஆகினவே குளிர் வெப்பக் காலநிலை கோமானே உனதன்றோ வான் பூமி விண்மீனும் சந்திரனும் சூரியனும் வல்லோனே உனையறியும் படைப்பாக உளதலவோ![ READ MORE ]
- இளைய புத்திரி - அழைப்பொன்றை விடுக்கின்றேன் அண்ணலார் உம்மத்தே அநீதிக்கு எதிரான களமொன்றைத் தாபிக்க..! ஊழல்கள் மோசடிகள் உச்சத்தை எட்டுமுன்னே உரிமைக் குரலொன்று உரைகல்லாய் வியாபிக்க..! கறையற்ற வாழ்வும் குறையற்ற நெறியும் முறையென்று சுமந்த மனிதர்கள் நம்முன் இலை மறையாய் இருந்து இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள் கூட்டத்தின் கொட்டத்தை அடக்க..! ஏழைகள் வாழ்வில் இன்பங்கள் பெருக்கும் ஏற்றமிகு மார்க்கத்தில் இழிவுகள் சேர்க்கும் வஞ்சகர் கூட்டத்தின் அஞ்சாத மோசடியை நெஞ்சில் உரத்தோடு நிர்மூலம் செய்வோம்![ READ MORE ]
கல்வியெனும் தலைப்பினிலே கவிதையிதை நானெழுத கல்வியெனும் செல்வமதை கருணைநிறை இறையோனே முழுஞானம் நிறைந்தோனே முதலவனே அல்லாஹ்வே முழுமனதாய் வேண்டுகிறேன் நிறைவாக அருள்புரிவாய்! வற்றாத கடலதனின் ஆழமதைக் கண்டாலும் வளமான கல்வியதன் கரைகாணல் முடியாதே! எத்துறை தன்னதிலும் நாம் பட்டங்கள் பெற்றாலும் எல்லாக் கல்வியும் நாம் பெற்றவராய் முடியாதே![ READ MORE ]
கண்ணூரில் பள்ளிகொள்ளும் எங்கள் கண்ணுக்குள் வாழுகின்ற தங்கள்! மண்ணுக்குள் மறைந்தாலும் எங்கள் மனதுக்குள் உறைந்துள்ள திங்கள்! இகத்தினில் கரந்தாங்கி ஏற்று இறைபாதை காட்டிய நீங்கள் பரத்திலும் எம்கரம் தாங்கி பரிந்துரை அருள்வீரே நாதா! அண்ணலின் பேரராம் உங்கள் ஆற்றலை அறிந்தோமே நாங்கள்! திண்ணமாய் உங்களின் வழியில் தினந்தினம் அடியொற்றி வாழ்வோம்! அந்துரூ தோட்டத்தில் மலர்ந்த ஆன்மீக மலரேதான் தாங்கள்! ஏந்தலர் வழியினை இயம்ப எம் நாட்டில் கால் பதித்தீரே! ஷரீஅத்தை உடலாய் அமைத்து தரீக்கத்தை உணர்வாய் வடித்து [ READ MORE ]
இயற்கைத் தாயின் ஏட்டிலில்லா புதிய காலம். மக்கள் விரும்பும்போது வராத காலம். அது வரும்போது மக்கள் விரும்பாக் காலம் சபலபுத்திக்காரருக்கும் சண்டைக்காரருக்கும் அதுதான் மாரி காலம். சமாதானவாதிகளுக்கும் சத்தியசீலர்களுக்கும் தலைகள் வியர்க்கும் கடுங் கோடை காலம்[ READ MORE ]
ஓ என் ஈமானியச் சமூகமே! நீ அறியாமையில்தான் இன்னமும் மூழ்கிக்கிடக்கின்றாயோ? எத்தனை வைத்தியர்கள் நீ ஈன்றெடுத்தும் எத்தனை எஞ்சினியர்கள் உன்னுள்ளிருந்தும் அளவேயில்லாமல் ஆலிம்களிருந்தும் அடிக்கொருவனிங்கே அறிஞனாகயிருந்தும் ஓ.. என் ஈமானியச் சமூகமே..! நீ அறியாமையில்தான் இன்னமும் மூழ்கிக்கிடக்கின்றாயோ? என்னே பரிதாபம்!!![ READ MORE ]
நான் வானத்தைப் பார்த்து எச்சிலைத் துப்புவதும் அது காற்றோடு கலந்து என் மூஞ்சில் விழுவதும் சுவரில் பந்தை எறிவதும் என்னை நோக்கி வருவதும் நினைத்து நினைத்து நான்கு சுவருக்குள் சிரித்துக் கொள்வேன்! உண்மையைப் பிடுங்கியெறிவேன்! பொய்யை நாட்டித் தழைக்கச் செய்வேன்! அப்போதும் கூட தோழர்கள் தண்ணீர் ஊற்றுவார்கள்! நான்கு சுவருக்குள் சிரிப்பேன் கதவைத் தட்டினால் கவலையோடு அழுவேன் பாவமென்று மனச்சாட்சி சொல்லும்தான்! என் பிழைப்பை நினைத்தால் எல்லாம் மரத்துப் போகும் என்ன மனிதர்கள் இவர்கள்? செத்துப்போன வாக்குறுதிகளுக்கும் [ READ MORE ]
Get every new post delivered to your Inbox.