Archive for the ‘ கௌரவம் ’ Category

‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர்மீது சம்மேளனப் பிரதிச் செயலாளர் சாதிக்கீன் மேற்கொண்ட ‘புதுமைத் தாக்குதல்’

-’இந்தப் படிக்கட்டிலும் கால் வைக்கக்கூடாது பறையா..! உன்னை செருப்பால் அடிப்பேன்டா.. நாயே..!- கடந்த 11ம் திகதி வியாழக்கிழமை இரவு இவ்வாரத்திற்கான 192வது ‘வார உரைகல்’ பத்திரிகையை விநியோகிப்பதற்காகச் சென்றிருந்த பிரதம ஆசிரியர் புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வைப் பாhத்து ‘ படிக்கட்டில் கால் வைக்கக்கூடாது பறையா! நாயே.. உன்னைச் செருப்பால அடிப்பேன்டா..!’ என்று ஆவேசமாக எச்சரித்தார் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதிச் செயலாளரும், காத்தான்குடியில் இடம்பெறும் புனித குத்பாப் பிரசங்கங்களை ‘காத்தான்குடி இன்போ’ எனும் இணையதளத்திற்கு [ READ MORE ]

டாக்டர் றிபாஸ் அவர்களுக்கு IFCEC கௌரவம்

மருத்துவ முகாமைத்துவப் பரீட்சையில் சித்தியடைந்துள்ள டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த வாரம் காத்தான்குடி IFCEC இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகத்தினரால் இக்ரஃ அலுவலக கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது. அதன்போது நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய கழகத்தின் அமீர் சகோதரர் MSM. நுஸைர், விடிவெள்ளி ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த சகோதரர் MBM. பைரூஸ், ஜனாப்ALM. ஹஸீன், காத்தான்குடி நகரசபையின் எதிர்ககட்சித் தலைவரும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்க உறுப்பினருமான பொறியியலாளர் அல்ஹாஜ் MM. அப்துர் றஹ்மான் ஆகியோர் உரையாற்றுவதையும், [ READ MORE ]

காத்தான்குடி வைத்திய சாலைத் திறப்புவிழா நிகழ்வு ஒரு வரலாற்றுப் பதிவு!

சுனாமியால் பாதிக்கப்பட்டு முற்றாக அழிவடைந்த எமது காத்தான்குடி வைத்தியசாலையை பல்வேறு வசதிகளுடன் விரிவாக்கி நவீனமயப்படுத்தி முற்றிலும் புதிதாகக் கட்டியெழுப்ப அயராது முயற்சித்த, ஒத்துழைத்த, பங்களிப்புச் செய்த, அனுமதியளித்த…  சுகாதார அமைச்சு, நோர்வே நாட்டு மக்கள், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு மாவட்டக் கிளை, இலங்கை செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடிப் பிரிவு, நமது மாகாண, மாவட்ட, பிரதேச அரசியல் பிரமுகர்கள், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், நகர சபை, கிழக்கு மகாண சுகாதார [ READ MORE ]

மௌலவி அப்துர்றவூப் மிஸ்பாஹி கௌரவிக்கப்பட்டார்

அகில இனநல்லுறவு ஒன்றியம் கடந்த 20ம் திகதி சனிக்கிழமை இரத்தினபுரி நகர மண்டபத்தில் தேசிய ரீதியில் நடாத்திய தனது 14வது வருட பாராட்டு விழாவின்போது காத்தான்குடியைச் சேர்ந்த மூத்த அறிஞர்களில் ஒருவரான ‘ஷம்சுல் உலமா – காதிமுல் கவ்மி’ மௌலவி அல்ஹாஜ் ஏ. அப்துர்றவூப் (மிஸ்பாஹி – பஹ்ஜி) அவர்களுக்கும் ‘டாக்டர். சாமஸ்ரீ ஜௌஹருல் அமல்’ என்னும் சிறப்புப் பட்டமளித்து கௌரவித்தது. அமைச்சர் கௌரவ பிரேம்லால் ஜயசேகர அவர்களால் இச்சிறப்புப் பட்டம் அன்னாருக்கு கையளிக்கப்பட்டது. (படமும் தகவலும்: [ READ MORE ]

இரட்டைப்பட்டம் பெறும் அஷ்ஷெய்க் ஹனீபா மதனீ

கிழக்கு மாகாண அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவரும், பிரபல சமூக சேவையாளருமான அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம். ஹனிபா மதனீ அவர்கள், அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் இரட்டைப்பட்டம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளார். அகில இன நல்லுறவு ஒன்றியம் தேசிய ரீதியில் நடத்தும் 14வது சாமஸ்ரீ பாராட்டு விழாவின்போது அஷ்ஷெய்க் ஹனிபா மதனீ அவர்கள் சமூகத்திற்கும் மக்களுக்கும் ஆற்றிய அளப்பரிய சேவைகளுக்காகவும், பொதுப்பணிகளுக்காகவும் இரட்டைப்பட்டம் வழங்கி பெரும் கௌரவம் அளிக்கவிருக்கின்றது. இரத்தினபுரி நகர சபை மண்டபத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி [ READ MORE ]

‘வார உரைகல்’ பிரதம ஆசிரியருக்கு அட்டாளைச்சேனையில் கௌரவம்

‘வார உரைகல்’   நூறாவது பதிவின் அம்பாறை மாவட்ட அறிமுகவிழா, அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்டலில் கடந்த 03ம் திகதி சனிக்கிழமை மாலை நடைபெற்றபோது அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஜனாப் எம்.ஏ. அன்ஸில், இறக்காமம் உதவிப் பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எஸ்.எல்.எம். ஹனீபா ஆகியோர் ‘வார உரைகல்’   பிரதம ஆசிரியருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதை படத்தில் காணலாம். இந்நிகழ்வில் பிரதம ஆசிரியரிடமிருந்து முதலாவது பிரதியை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொருளாளரும், அம்பாறை மாவட்ட கரையோர பத்திரிகையாளர் சங்கத்தின் [ READ MORE ]

மூத்த இலக்கியவாதிக்கு கிழக்கு முதலமைச்சர் கௌரவம்

மண்முனைப்பற்று பிரதேசத்தில் வாழும் கலை இலக்கியவாதிகளை கௌரவிக்கும் சிறப்பு நிகழ்வொன்று கடந்த 03ம் திகதி சனிக்கிழமை காலை ஆரையம்பதி மஹா வித்தியலய மண்டபத்தில் நடைபெற்றபோது பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பிரதேசத்தின் மூத்த இலக்கியவாதிகளுள் ஒருவரான பாலமுனை கவிஞர் எம்.எம். முஸ்தபா அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சுந்தரம் அருமைநாயகம், முதலமைச்சரின் இணைப்புச் செயலாளரும் ஆரையம்பதி பிரதேசத்தின் இளம் சமூக [ READ MORE ]

முதன்மைப் பெண் அதிபருக்கு ‘வார உரைகல்’ கௌரவம்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலிருந்து இலங்கை அதிபர் சேவை தரம் 2-IIக்குத் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு முஸ்லிம் பெண் அதிபரான காத்தான்குடி ஜாமிஅதுஸ் ஸித்தீக்கிய்யா முஸ்லிம் மகளிர் அரபிக் கல்லூரியின் அதிபர் ஜனாபா. இஸ்ஸதுன் நயீமா அப்துஸ்ஸலாம் அவர்களை பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான (WEDF) அமைப்பின் பணிப்பாளரும், கல்வி அமைச்சின் கிழக்கு மாகாண ஆலோசகருமான ஹாஜியானி சல்மா அமீர் ஹம்ஸா அவர்கள் ‘வார உரைகல்’ பத்திரிகை சார்பாக பொன்னாடை போர்த்தியும் நினைவுப் பரிசு வழங்கியும் கௌரவித்தார். விழாவுக்கு பிரதம [ READ MORE ]

Follow

Get every new post delivered to your Inbox.