Archive for the ‘ துணுக்குகள் ’ Category
கடந்த 25ம் திகதி செவ்வாய்க்கிழமை மட்டு. மாவட்ட நீதவான் நீதிமன்ற பொது மக்கள் கலரி நிரம்பி வழிந்தது. மாநகர உறுப்பினர் ஒருவரும், நகரசபைத் தவிசாளர் ஒருவரும் மன்றில் அன்று சமூகம் அளித்திருந்தனர். மாநகர உறுப்பினர் எங்குமே அமராமல் அங்கிங்கு உலாவியவாறு நேரத்தைக் கடத்தினார். அவரது வழக்கு அழைக்கப்பட்டதும் ஆஜராகி மறு தவணை வழங்கப்பட்டதும் அவர் சென்றுவிட்டார். நகரசபைத் தவிசாளரோ அரச தரப்பு சாட்சிகள் அமரும் ஆசனமொன்றில் அமர்ந்திருந்தார்[ READ MORE ]
மார்ச் மாதம் நடைபெற்ற நகரசபைத் தேர்தலில் தோல்வியடைந்த மாஜித் தவிசாளர் நீண்ட காலமாக கொழும்பில் அஞ்ஞாதவாசம் இருந்து விட்டு அண்மையில் ஊருக்கு வந்திருந்தார். வீட்டுக்கு வந்த அவரைக் காண்பதற்கு யாருமே வராததால் தனது ஆதரவாளர்கள் பலருக்கும் கைப்பேசியில் குறுஞ்செய்தி மூலமாக தான் வந்திருப்பதைத் தெரிவித்தாராம். அவரது செய்தி கிடைத்து ஒன்பது ஆதரவாளர்கள் மாத்திரம் அல்அமீன் வாசஸ்தலத்திற்குச் சென்றனராம். அவர்களுடன் தனது அரசியல் எதிர்காலம் குறித்து நீண்ட நேரம் விவாதித்த மாஜி, இறுதியாக பிரதியமைச்சரைச் சந்தித்து தனது நிலைமை [ READ MORE ]
‘உம்முல்குரா’ அறபுப் பல்கலைக் கழகம் தொடர்பாக மத்திய கல்லூரி பரீத் மண்டபத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு விளக்கமளித்த கூட்டம் வெகு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரதியமைச்சருடன் நகரசபையின் ஆளுமையுள்ள (?) சர்வாதிகாரம் கொண்ட தவிசாளர், உறுப்பினர் சியாத், அதிபர் முபாறக், எதிர்க்கட்சித் தலைவர் அப்துர் றஹ்மான் ஆகியோர் சபையோரை முகம் நோக்கியவர்களாக அமர்ந்திருந்தனர். பிரதியமைச்சர் விளக்கமளித்துக் கொண்டிருக்கையில் உறுப்பினர் சியாத் அவர்களின் கைப்பேசியில் முக்கிய செய்தியொன்று பிரதியமைச்சருக்கு வந்திருக்க வேண்டும். அவர் தவிசாளருக்கு அப்பால் அமர்ந்திருந்த [ READ MORE ]
காத்தான்குடி நகரசபையில் ஆளுமைமிக்க (?) சர்வாதிகாரத் தவிசாளரினால் கிராம மட்ட அபிவிருத்திக்கான கூட்டமொன்று காலை 09:00 மணிக்கு ஏற்பாடாகி இருந்தது. குறிப்பிட்ட நேரத்திற்கு தவிசாளரும், எதிர்க்கட்சி வரிசையிலுள்ள நல்லாட்சி உறுப்பினர் ஒருவருமே சமூகமளித்திருந்தனர். எதிர்பார்த்தபடி கிராம மக்கள் அக்கூட்டத்திற்கு பெருமளவில் சமூகமளிக்கவில்லை. 11:00 மணிக்கு அழகை ஆராதித்து அபிவிருத்தியைப் புறந்தள்ளும் “ஒளி”மயமான ஊடகவியலாளர் ஒருவர் அங்கு வந்தார். அவரது வருகையைத் தொடர்ந்து தவிசாளர் தனதுரையை ஆரம்பித்தார். அப்போது இடை மறித்த அந்த ஊடகவியலாளர், ‘நேரம் மிகப் [ READ MORE ]
தனித்துவக்கட்சிச் செயலாளர் நாயகத்தின் மகனுடைய திருமண நிகழ்வுகள் கொழும்பிலுள்ள ‘றமதான்’ நட்சத்திர ஹோட்டலில் அண்மையில் அதிவிமரிசையாக நடந்தது. பல அதியுயர் வி.ஐ.பி. முக்கியஸ்தர்களும் கலந்து கொண்ட இத்திருமண நிகழ்வுக்கு நமது பிரதியமைச்சரும் சென்றிருந்தார். அங்கே செலிங்கோ நிறுவனத்தில் கடமையாற்றும் கண் பார்வையற்ற ‘நண்பர்’ ஒருவரும் வந்திருப்பதைக் கண்ட நமது பிரதியமைச்சர் மெதுவாக வேறுபக்கமாக மாறிச் செல்வதற்கு முற்பட்டார். அப்போது அவரை இடைமறித்த ஒருவர் சப்தமாக அவரைப் பெயர் கூறி அழைத்து சலாம் சொன்னார். அவருக்கு அவசரமாகவும், மெதுவாகவும் [ READ MORE ]
அன்மையில் புதிய காத்தான்குடிப் பகுதியில் புகைத்தல் எதிர்ப்புத் தினம் தொடர்பான நிகழ்வு, அழ்ழாஹ்வின் அடியாரான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தொடர்ச்சியாகப் புகை பிடிக்கும் பழக்கமுள்ள தவிசாளரும், பொருளாதாரம் போதிக்கும் ஆளுந்தரப்பு மாஸ்டரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு நடைபெற்ற அந்த நன்னாளுடன் Chain Smokersகளான அவ்விருவரும் உண்மையாகவே புகைப்பதைக் கைவிட்டு விட்டுத்தான் இப்புகைத்தல் எதிர்ப்புத் தின நிகழ்வுக்கு அதிதிகளாக வந்திருக்கிறார்கள் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனாலும் கைசேதமே..! இம்மக்களுக்கு அதிலும்கூட ஏமாற்றம்தான்! ‘ஊருக்குத்தான் [ READ MORE ]
1. ‘தேசிய பாதுகாப்பு நிதியாகத் திரட்டப்பட்ட நிதி எங்கே?’ என்று கேள்வி எழுப்பிய ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியருக்கு எதிராக ஒன்றரைக் கோடி ரூபாவை நஷ்ட ஈடாகக் கோரி வழக்குத் தாக்கல் செய்வதற்காக ஆலோசனை கேட்டு உள்ளுர் வழக்கறிஞர் ஒருவரிடம் கைசுத்தமானவர் ஆலோசனை கேட்கச் சென்றாராம். அதற்கவர், ‘புவி ஆதாரமில்லாமல் எழுதி இருக்க மாட்டார். அவருடன் வழக்குப் பேசி நீங்கள் வெல்ல மாட்டீர்கள்’ என ஒரே வார்த்தையில் மறுப்புச் சொன்னவருக்கு இரு வார்த்தைகளில் பதிலளித்து மெல்ல அனுப்பி [ READ MORE ]
அனர்த்த அமைச்சு வழங்கிய நிதியில் தோணா தோண்டி மண் ஏற்றும் வேலையொன்று நகரத்தில் ஆரம்பித்து மாநகரம் வரை ஊடுருவியதாம். அங்கும் தோணாவைக் கிண்டி ஒன்றன்பின்னொன்றாக 19 ட்ரெயிலர் மண்ணை அள்ளியெடுத்து எங்கோ அதைக் கொண்டோடினராம். விஷயமறிந்து விரைந்து வந்த மாநகர அம்மணி, ‘கொண்டோடிய மண்ணை உடனே கொண்டு வந்து உரிய இடத்தில் கொட்டு! இல்லே.. அமைச்சரைத் தவிர அத்தனை பேரையும் உள்ளே தள்ளுவேன்’ எனச் சீறினாராம். நடுங்கிப்போன அபே விருத்திகள் அடுத்த சில மணித்தியாலங்களில் 19 ட்ரெயிலர் [ READ MORE ]
காத்தான்குடி புதிய ஆஸ்பத்திரிக் கட்டிடத்தின் நுழைவாசல் பகுதியில் சுவருடன் சேர்த்துப் பொறிக்கப்பட்டிருந்த நினைவுப் படிகக்கல், ஒரு தடவைக்கு இரு தடவை வைக்கப்பட்டும் கடைசியில் அதில் வெறுமனே KATTANKUDY DIVISIONAL HOSPITAL என்றுதான் ஸ்டீக்கரில் வெட்டி ஒட்ட வேண்டியேற்பட்டதுடன் கடைசி வரை அதைத் திறந்து உள்ளே என்னதான் இருக்கின்றது என்பதைக் காட்டாமல் திறப்பு விழாவுக்குள்ளும் ஒரு மூடு விழா செய்தார்கள்[ READ MORE ]
கடந்த வாரம் (09.07.2010) நடைபெற்ற சம்மேளனக் கூட்டத்திற்கு அதற்கு முன்னைய வாரம் சமூகமளிக்காத சில உறுப்பினர்கள் சமூகம் அளித்ததாகவும், அவர்களையும் சத்தியப் பிரமாணம் செய்யுமாறு ஆரம்பத்தில் நிர்வாகம் கோரியதாகவும், அதன்போது இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழக சார்பில் கலந்து கொண்ட சம்மேளனப் பிரதிநிதியான வித்தியாகீர்த்தி அமீர்அலி ஆசிரியர் அவர்கள் தான் ஒரு அமைப்பின் சார்பாகவே இங்கு பிரதிநிதியாகச் சமூகமளித்துள்ளதால் எமது அமைப்பின் அனுமதியைப் பெறாமல் இங்கே சத்தியப் பிரமாணம் எதுவும் செய்ய முடியாது என மறுத்ததாகவும் [ READ MORE ]
Get every new post delivered to your Inbox.