Archive for the ‘ படங்கள் ’ Category

இளந்தளிர் நற்பணி கல்வியகத்தின் விஞ்ஞானப் பிரிவு மாணவர், பெற்றோர்களுக்கான கருத்தரங்கு

காத்தான்குடிப் பிரதேசத்தில் விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கு அதிசிறந்த போதனாசிரியர்களைக் கொண்டு தனித்துவமான பிரத்தியேகக் கல்விச் சேவையை ஆற்றிவருகின்ற இளந்தளிர் நற்பணி கல்வியகத்தினர், எதிர்வரும் 2013ம் ஆண்டில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு விஞ்ஞானப் பிரிவில் தோற்றுவதற்குத் தயாராகும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்குமான விஷேட கருத்தரங்கு ஒன்றினை கடந்த 25ம் திகதி சனிக்கிழமை மாலை மெத்தைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள அவர்களது கல்வியகத்தில் நடாத்தினர். அதன்போது அங்கு  சமூகமளித்திருந்த பெற்றார் மற்றும் மாணவர்கள் மத்தியில் இக்கல்வியகத்தின் முகாமைத்துவக் குழுவைச் சேர்ந்த ஜனாப். [ READ MORE ]

முபீன் பௌண்டேஷன் ஏற்பாட்டில் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் யூ.எல்.எம். முபீன் அவர்களின் நிதியொதுக்கீட்டில் சுயதொழில் புரிவேர் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கான பொருட்களைக் கையளிக்கும் நிகழ்வு முபீன் பௌண்டேஷன் ஏற்பாட்டில் கடந்த 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றபோது அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் எம்.ஐ. அப்துல் லத்தீப் அவர்கள் தலைமையுரையாற்றுவதையும், சமுர்த்தி முகாமையாளர் எம்.ஐ.ஏ. சுல்மி, மாகாண சபை உறுப்பினரின் ஏறாவூர் பிரதேச இணைப்பாளர் எம். அசனார், புதிய காத்தான்குடி பிர்தௌஸ் வித்தியாலய பா.அ.சங்கச் [ READ MORE ]

கரடியனாறில் பாதிக்கப்பட்ட பொலீஸாருக்கு காத்தான்குடி வர்த்தக சமூகத்தின் உதவி

கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான வெடி விபத்தையடுத்து அங்கு நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ள 38 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு காத்தான்குடி வர்த்தக சமூகம் அத்தியாவசிய உடுதுணிகளடங்கிய பொதிகளை கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு. விஜே குணவர்தன அவர்களிடம் நேரில் கையளித்தது. அதன்போது வர்த்தகப் பிரமுகர்கள் உடுதுணிகள் கொண்ட பொதிகளை மாகாணப் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் கையளிப்பதையும், கையளிக்கப்பட்ட உடுதுணிகள் கொண்ட பொதிகளையும் மேலேயுள்ள படங்களில் காணலாம்[ READ MORE ]

மீரா பாலிகாவுக்கு மலசலகூடம் கையளிப்பு

மட்/மீராபாலிகா மகளிர் தேசியப் பாடசாலைக்கு நான்கு மலசல கூடங்களையும், ஒரு குளியலறையையும் கடந்த 2009ம் ஆண்டில் தமது பிள்ளைகளை தரம் 1க்குச் சேர்த்த பெற்றோர்கள் தமது நிதிப் பங்களிப்பில் கட்டிக் கொடுத்துள்ளனர். இம்மலசலகூட மற்றும் குளியலறைத் தொகுதியை பாடசாலை அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த 09ம் திகதி காலை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.  இதற்காக 6,11,427 ரூபா செலவிடப் பட்டுள்ளதாகவும் நிர்மானிப்புக்குழு தெரிவித்துள்ளது. இந்நிர்மானிப்புக் குழுவில் ஹாஜிகளான எம்.ஐ.எம். ஐயூப்கான், கே.எல்.கமர்தீன், எம்.ஐ.எம். மாஹிர், எம்.ஏ. நிஹால் [ READ MORE ]

மாகாண சபை உறுப்பினரின் கோழிக்குஞ்சு விநியோகம்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் யூ.எல்.எம்.என். முபீன் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘உழைப்போம் உயர்வோம்’ என்னும் செயற்திட்டத்தின் கீழ் மாகாண சபை உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஓதுக்கீட்டின் மூலம் ஓட்டமாவடி, காவத்தமுனை, நாவலடி கேணி நகர் போன்ற பிரதேசங்களிலுள்ள வறிய மக்களுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய வகையில் சுயதொழிலாக கோழி வளர்ப்பை மேற்கொள்ளக்கூடிய வகையில் அங்குள்ள 46 குடும்பத்தினருக்கு உயர்ரகக் கோழிக் குஞ்சுகளை மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் முபீன் அவர்கள் வழங்கி வைப்பதையும், இவ்வாழ்வாதார [ READ MORE ]

மாதன முத்தா பாணியில் காத்தான்குடியில் நடந்ததோர் விபத்து!

காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்திருந்த நகர வரவேற்பு அலங்கார வளைவை, பிரதான வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகள் கடந்த செவ்வாய்க்கிழமை (13.07.2010) இரவு மேற்கொள்ளப்பட்டது. அவ்வரவேற்புக் கோபுரத்தை முழுமையாக அப்படியே தூக்கி அப்புறப்படுத்திக் கொண்டு செல்ல முயன்றபோது அதைத் தூக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட ‘கிரேன்’ கனரக வாகனம் 90 பாகை லெவலில் தலைகீழாக – செங்குத்தாக பிரதான வீதியில் புரண்டிருப்பதை படங்களில் காணலாம். இதனைப் படம் பிடித்துக் கொண்டிருக்கையில் அருகில் நின்ற முதியவர் ஒருவர், இது [ READ MORE ]

கடற்கரை வீதி வடிகான்கள் சுத்திகரிப்பு

காத்தான்குடி கடற்கரை வீதியின் அவல நிலை குறித்து கடந்த 25.06.2010ல் வெளிவந்த 143வது ‘வார உரைகல்’ பதிவில் சுட்டிக்காட்டியதையடுத்து அவ்வீதியில் வெள்ளைத் தமபி ஹோட்டலுக்கு முன்னாலிருந்து அபாயாக் குளம் வரை வடிந்தோடிய கழிவு நீர் தற்போது தடுக்கப்பட்டு வடிகான் வழியாக ஓட விடப்பட்டுள்ளதுடன் அவ்வீதியின் இரு புறங்களிலுமுள்ள வடிகான்களும் முழுமையாகச் சுத்திகரிக்கப்பட்டு வருகின்றன.  வடிகான் களில் நிறைந்துள்ள மணல் உள்ளிட்ட கழிவுகள் சுத்திகரிப்பாளர்களால் அப்புறப்படுத்தப்பட்டு குவியல் குவியல்களாகக் குவிக்கப்பட்டுள்ளதைப் படத்தில் காணலாம்[ READ MORE ]

Follow

Get every new post delivered to your Inbox.