Archive for the ‘ மாணவர் பகுதி ’ Category
எதிர்வரும் புனித றமழான் மாத விடுமுறை காலத்தில் காத்தான்குடியிலுள்ள வளரும் மாணவ சமூகத்தினருக்கான விஷேட பயிற்சிக் கற்கை நெறியொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. 9ம், 10ம் ஆண்டுகளில் கல்வி கற்கும் மாணவ மாணவியர்களுக்காக இவ்விஷேட கற்கை நெறி நடாத்தப்படும். இக்கற்கை நெறியில் இஸ்லாமிய கலாசார ஒழுக்க விழுமியங்களை மாணவர்கள் கற்பதுடன் அவர்களிடையே காணப்படும் ஆளுமைகளை விருத்தி செய்வதற்கான பயிற்சிகளும் வழங்கப்படும். ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ள இவ்விஷேட கற்கை நெறி இம்மாதம் 26ம் திகதி வரை 20 [ READ MORE ]
மீன்பாடும் தேனகமாம் மட்டக்களப்பு மாநகரில் சிறுவர்களின் உள்ளங்களை மகிழ்வித்து அவர்களின் உளவளத்தையும், தன்னம்பிக்கையையும் ஊக்குவிக்கும் ஒரே தளமாகத் திகழும் வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவானது, 1996ம் ஆண்டு மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு முறைசாராக் கல்வி நிலையமாகும். கனேடிய மக்களின் நிதியுதவியில் ஆரம்பிக்கப்பட்ட பட்டாம்பூச்சிகளான நமது சிறுவர்களின் இப்பூங்கா, இன்று தனது 14வது வருடத்தையும் தாண்டி பல்வேறுபட்ட நிதி வழங்குனர்களின் பேராதரவோடு இயங்கிக் கொண்டிருப்பதற்குக் காரணம்; நமது சிறார்களின் கல்வி வளர்ச்சிக்கு இதன் செயற்பாடுகள் ஒரு பக்க உதவியாய் இருந்து [ READ MORE ]
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மாணவர்களின் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளில் அதிகூடிய கவனம் செலுத்தி வரும் தாருல் கைர் இளைஞர் முன்னணியானது, கடந்த வருடங்களைப் போன்று இவ்வருடமும் (2010ல்) க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் கணித, உயிரியல் பிரிவு மாணவர்களுக்கென விஷேட பரீட்சைத் தொடர்களையும், அதன் இறுதியில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய மட்டத்திலான மாபெரும் இறுதிக் கருத்தரங்கொன்றையும் கடந்த மாதம் 23, 24 ம் திகதிகளில் நடாத்தியது. இதன் முதலாம் நாள் அமர்வு இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட [ READ MORE ]
Get every new post delivered to your Inbox.