Archive for the ‘ வாசகர் விமர்சனங்கள் ’ Category
மட்டக்களப்பில் நடைபெற்ற சர்வமதத் தலைவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் நூர்தீன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக கடந்த 10.12.2010ல் ‘காத்தான்குடி.இன்போ’ என்னும் இணைய தளம் செய்தியொன்றை வெளியிட்டது. அதுதொடர்பான விளக்கமொன்றை எமது வாசகர் அப்துல் மனாப் மேற்படி இணையதளத்திற்கு அனுப்பியிருந்த போதும் அதனை அவர்கள் பிரசுரிக்கவில்லை எனத் தெரிவித்து அவரது விளக்கத்தை ‘வார உரைகல்’ லில் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அது இங்கே பிரசுரிக்கப்படுகின்றது. -பிரதம ஆசிரியர் Kattankudi info இணையத்தள செய்தியாளர் நூர்தீன் அவர்கள் கடந்த [ READ MORE ]
‘வார உரைகல்’ பத்திரிகையின் 152வது பதிவில் வெளியிடப்பட்டிருந்த செய்தியில் காத்தான்குடி நகர சபையின் 2010ம் ஆண்டு ஜூலை மாதத்திறகான வரவு செலவு கணக்கறிக்கையின்படி துண்டு விழும் தொகை ஏழு இலட்சத்து 91 ஆயிரத்து 766 ரூபா 80 சதம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கையில் வேறு எந்தவொரு பிரதேசத்திலும் இல்லாதவாறு, எமது பிரதேசச் சிறுவர்கள் சில மணி நேரங்கள் விளையாடி தமது பொழுதைக் கழிப்பதென்றால்கூட, அமெரிக்க மக்களினால் அன்பளிப்பாக நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட நமதூர் சிறுவர் பூங்காவுக்குள் பத்து ரூபாவைச் [ READ MORE ]
எஸ்.எம். முகம்மது பஷீர் B.A – உதவி அதிபர், மட்/ அல்ஹிறா மகா வித்தியாலயம் – காத்தான்குடி ஆசிரியர்கள் தொழில் சார் கடமையை விடுத்து சேவை மனப்பாங்குடனேயே செயற்பட்டு வருகின்றனர். இதனை வெளிப்படுத்தும் முகமாகவே சர்வதேச தேசிய ரீதியாக ‘ஆசிரியர் தினம்’ நினைவு கூறப்படுவதோடு ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டும் வருகின்றனர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அன்றைய தினம் ‘ஆசிரியர் கீதம்’ இசைக் கலப்பில்லாது ஆசிரியர்களாலேயே இசைக்கப்படுகிறது. ஆசிரியர் கீதத்தில் ஆசிரியர் பணி, செயற்பாடு, அர்ப்பணிப்பு, மகத்துவம், சேவை நலன் போன்றன [ READ MORE ]
-நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இயக்கம் வெளியிட்டுள்ள நான்கு பக்க வண்ணச் சிற்றேடு- நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், PMGG ‘மக்கள் பணி’ என்ற பெயரிலான பலவண்ணச் சிற்றேடு ஒன்றினைக் கடந்த வாரம் ஜூம்ஆத் தொழுகைக்காகச் சென்றிருந்த பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகித்திருந்தது. இச்சிற்றேட்டில், அவ்வமைப்பின் சமூக, அபிவிருத்தி, வாழ்வாதார வேலைத்திட்டங்கள் தொர்பான ஆரம்ப நிகழ்வுகளின் காட்சிகளும், அதுதொடர்பான சிறு முன்விளக்கக் குறிப்பும் முன்பக்கத்தில் இடம் பெற்றிருக்கின்றன. ஒரு சமூகத்தின் அர்த்தமுள்ள மேம்பாடும், அபிவிருத்தியும் அதன் ஆரோக்கியத்திலும், அறிவுத் தரத்திலுமே தங்கியுள்ளது [ READ MORE ]
‘அல்-குர்ஆனின் அறிவியல் அற்புதமும், உலக நாகரீகத்திற்கு முஸ்லீம்களின் அறிவியல் பங்களிப்பும்’ எனும் கருப்பொருளில் அமைந்த பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவின் மாபெரும் இஸ்லாமியக் கண்காட்சி கடந்த வாரத்தில் நளீமிய்யா வளாகத்தில் வெகு சிறப்பாகவும், நேர்த்தியாகவும் இடம்பெற்றது. கண்காட்சி என்பது ஒரு புறமிருக்க, இலங்கை மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் குறிப்பாக ஒவ்வொரு முஸ்லிமும் அந்த அறிவியல் வளாகத்தை நேரில் சென்று கண்டு திரும்புவது என்பது ஒரு பெறற்கரிய பாக்கியமே என்பதை முதலில் குறிப்பிட்டாக வேண்டும். இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பேணிப் [ READ MORE ]
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் உப தலைவராக 33 வயதேயுடைய இளவல் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். அப்துல்லாஹ் அவர்கள் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டிருப்பதானது எமது மண்ணுக்குக் கிடைத்த பெருமையும் பேறுமாகும். அல்அமீன் வித்தகத்தில் ஆரம்பக் கல்வியை முன்னெடுத்து அதன் பின் மத்திய கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்த இவர், துள்ளித் திரியும் பள்ளிப் பருவத்திலேயே விஸ்டம் இளைஞர் கழகம், கலை மாணவர் ஒன்றியம் என்று தனது சமூகப் பணியில் தத்து நடை பயின்றவர். அதன் பின் [ READ MORE ]
எமது காத்த மாநகர், உலமாப் பெருந்தகைகளினால் நிரம்பிய ஊர் என்ற பெருமையுடனும், எம்மை வழி நடாத்தும் ஊரின் இரு கண்களான ஜம்இய்யதுல் உலமாவும், சம்மேளனமும் இருந்து மிகச் சிறப்பான முறையில் வழி நடாத்தப்பட்டு வந்த எமதூரில் அண்மைக் காலமாக வெள்ளிக்கிழமை குத்பாக்களின் சில சீர் கேட்டினால் நாம் கட்டிக்காத்து வந்த எமது ஒற்றுமை குலைந்து நிற்பதனைக் காணும்போது மனதுக்குச் சங்கடமாக இருக்கின்றது[ READ MORE ]
புனித ‘ஹறம்‘ ஷரீபைச் சார்ந்த, அன்றைய ஹிஜாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் காரணமாகப் பல உயர்மட்டத் தலைவர்கள் அங்கிருந்து புலம் பெயரத் தொடங்கினர். யெமன், இந்தோனேஷியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் கால்பதித்த அவர்கள் அங்கு தமது வாழ்வியலைத் தொடர்ந்தார்கள். இவ்வாறான கனவான்களின் பரம்பரையின் வாரிசாக விளங்குபவர்தான் சங்கைக்குரிய அஸ்ஸெய்யித் அலிஸாஹிர் மௌலானா அவர்களாகும். இவரின் உதிர உறவினர்கள் தற்போதுகூடப் புனித மக்க மா நகரில் வாழ்ந்து வருகின்றமை சிறப்பு அம்சமாகும்[ READ MORE ]
‘வார உரைகல்’லின் 107வது பதிவில் வெளியிடப்பட்டிருந்த எனது ஆக்கம் தொடர்பாக 108வது பதிவில் சகோதரர் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி தனது கருத்தினை வெளியிட்டிருந்தார். இதனை நான் மிகவும் வரவேற்கின்றேன். தான் உரையாற்றியது பற்றிய ஞாபகமும், அதற்கான பொறுப்புக்கூறும் திராணியும் அவரிடமிருந்ததையிட்டு மகிழ்ச்சியடைகின் றேன். ஆயினும் அவர் எனது கருத்தினை உள்வாங்கியதைவிடவும், தனது கருத்து கட்டுரையில் இழுத்துவிடப்பட்டிருந்ததையே மிகவும் உன்னிப்பாகக் கவனித்து பதிலளித்திருந்தார் என்பதுதான் இங்கு கவனிக்கற்பாலது. ஏனெனில் எனது கட்டுரையின் இறுதியில் நான் குறிப்பிட்டிருந்ததைப்போல அதன் உள்ளடக்கத்தின் [ READ MORE ]
‘வார உரைகல்’லின் பதிவு 107ல் ‘சொல்லத்தான் நினைக்கிறோம்! உள்ளத்தால் வெறுக்கிறோம்!!’ என்ற தலைப்பில் வெளியான விமர்சனக் கட்டுரையின் ஐந்தாவது பந்தியின் இறுதியில் ‘பச்சிளம் சிறார்கள் மாறுவேடப் போட்டியில் அழகு ராணியாகத் தோற்றமளித்ததற்காக மிம்பர் மேடைகளில் கலாசார சீரழிவுகள் தலை தூக்குகின்றன என முழங்கினோம்’ என தனது பெயரைக் குறிப்பிட தைரியமற்ற ஒரு விமர்சகர் தனது விமர்சனத்தை முன்வைத்திருந்தார். மேற்படி விமர்சனத்தில் குறிப்பிட்ட அக்கருத்தானது, கடந்த வருடம் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று கடற்கரை மைதானத்தில் இடம்பெற்ற ஜும்ஆப் பிரசங்கத்தின்போது [ READ MORE ]
Get every new post delivered to your Inbox.