Archive for the ‘ வேண்டுகோள்கள் ’ Category

ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் றமழான் வேண்டுகோள் பிரசுரம்

எதிர்வரும் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி ஐக்கிய மக்கள் ஒன்றியம் ‘ஈகைத் திருநாளில் உதவும் கரங்களாவோம்’ என்ற மகுடத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக அவ்வொன்றியத்தின் தலைவர் ஜனாப் எம்.எஸ்.எம். நஸார் (அல்பா) ‘வார உரைகல்’லுக்குத் தெரிவித்தார். அதுதொடர்பில் காத்தான்குடிப் பிரதேசத்தில் சமூகப்பணிகளிலும், சுஹதாக்களின் குடும்ப நலன்களிலும் அக்கறை காட்டிவரும் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனவந்தர்களுக்கும், நலன் விரும்பிகளுக்குமான ‘றமழான் வேண்டுகோள்’ பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வேண்டுகோள் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அருள்மிக்க இந்த [ READ MORE ]

இளம் சாதனையாளருக்கு வாக்களிப்போம்!

காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவர் ஒருவர் இவ்வாண்டு நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் தேசிய ரீதியான சாதனையொன்றை நிலை நாட்டியுள்ளார். கல்லூரியின் உயர் தர கணிதப் பிரிவு மாணவர் செல்வன் எம்.எச்.எம் மஸி இவ்வருடம் நடைபெற்ற மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான முப்பாய்ச்சல் நிகழ்ச்சியில் 13.73 மீட்டர்கள் பாய்ந்து ஏற்கனவே நிலைநாட்டப்பட்டிருந்த தேசிய மட்ட சாதனையை முறியடித்து புதிய சாதனையை நிலை நாட்டியுள்ளார். இச்சாதனையைப் புரிந்ததன் காரணமாக கல்வியமைச்சு [ READ MORE ]

‘வார உரைகல்’ வளர்ச்சிக்கான புனித றமழான் மாத ஸகாத் மற்றும் ஸதகா வேண்டுகோள்

அன்பினிய வாசகப் பெருமக்களே..! வர்த்தகர்களே..!! சமூக ஆர்வலர்களே…!!! அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ அல்ஹம்துலில்லாஹ்! எண்ணற்ற இடர்பாடுகளுக்கு மத்தியிலும், இரத்தத்தைச் சிந்தி மரணத்தின் எல்லை வரை சென்றும் அல்லாஹ்வின் அருளாலும், உங்களின் பேராதரவினாலும் நமது மக்களின் குரலான ‘வார உரைகல்’ பத்திரிகையானது (03.09.2010)இன்றுடன் ஐந்தாண்டுகளைப் பூர்த்தி செய்து ஆறாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது.  இந்நாளில் இப்பத்திரிகையின் எதிர்கால வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்குமாகப் பிரார்த்திக்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகின்றேன். மேலும், சமூக நீதி நியாயங்களுக்காகவும், நமது பொது [ READ MORE ]

தாருல் கைர் இளைஞர் முன்னணி: ஓர் அறிமுகமும் றமழான் வேண்டுகோளும்

காத்தான்குடியின் சமூக மற்றும் கல்வித் துறைகளில் நமது மாணவர்களுக்கு ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஸ்திரப்படுத்தும் முயற்சியாக 2007ம் வருடம் தொடக்கம் தாருல் கைர் இளைஞர் முன்னணியானது, தேசிய இளைஞர் சேவைகள் அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இயங்கி வருகின்றது. இவ்வாறு ஒரு அமைப்பாகப் பதிவு செய்யப்படுவதற்கு முன்னதாகவே சமூக மாற்றங்களைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வந்த பலதரப்பட்ட இளைஞர்களின் ஒன்றுபட்ட முயற்சியாலும் அல்லாஹ்வின் உதவியாலும் நமது பிரதேசத்தில் மிக முக்கிய தேவையாக உணரப்பட்ட சுயகற்றல் முறையைத் [ READ MORE ]

ஓர் அவலத்தாய் உதவி கோருகின்றார்

உயிருடன் போராடும் 16 வயதையுடைய அன்வர் முஹம்மது ரிஸான் எனும் இளைஞனின் தாயார் தன் மகனின் பழுதடைந்து விட்ட குடலை முழுமையாக அகற்றும் மாற்று சத்திரசிகிச்சை செய்வதற்காக தனவந்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் நன்நோக்குடையவர்களிடமிருந்து தன் மகனைக் காப்பதற்காக உதவிகோருகிறார். புதிய காத்தான்குடி-03, இல.227, பிர்தௌஸ் நகரைச் சேர்ந்த சுல்தான் றபீக்கா எனும் தாயாரே அவரது மகனின் உயிரைக் காக்கும் சத்திர சிகிச்சைக்காக உதவிகளை கீழ்காணும் தனது வங்கி கணக்கிற்கு அனுப்பிவைக்குமாறு மிகத் தாழ்மையாக வேண்டுகோள் விடுக்கின்றார். இவரது [ READ MORE ]

தபால் வாசகர் பதிவுக்காக பிரதம ஆசிரியர் சுற்றுப் பயணம்! இருவாரங்களுக்கு ‘வார உரைகல்’ வெளிவராது!!

நாட்டின் பல்வேறிடங்களிலும் தொழில் நிமித்தம் தங்கியிருக்கும் காத்தான்குடி சகோதரர்களின் வேண்டுகோளுக்கமைய அவர்களை நேரில் சந்தித்து தபால் வழி வாசகர்களாக இணைத்துக் கொள்ளும் நோக்கில் 15.03.2009ம் திகதியிலிருந்து சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்கிறேன். இதன் காரணமாக எதிர்வரும் 20ம், 27ம் திகதிகளில் பத்திரிகை வெளிவராது என்பதனை வாசகர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் முன்கூட்டியே தெரிவித்துக் கொள்வதுடன் இப்பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தற்போதுதான் முதன்முறையாக தபால் வாசகர்களை இணைப்பதற்கான முயற்சி என்னால் மேற்கொள்ளப்படுவதால் அனைவரது ஆதரவையும் இம்முயற்சியில் எதிர்பார்க்கிறேன். இத்தகவலையறிந்து கொள்ளும் உள்ளுர் வாசகர்களும், [ READ MORE ]

இணையதள வாசகர்களே…!

அன்பினிய ‘வார உரைகல்’ இணையதள வாசகர்களே! இந்த இணையதளத்தைப் பார்வையிட்டபின் உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தயவுசெய்து எனக்குத் தெரிவியுங்கள். அவற்றை கருத்துடன் நான் கவனத்திற்கெடுத்து மேலும் சிறப்பாக இப்பணியில் ஈடுபடுவேன். எனது தொலைபேசி இலக்கம்: 0777-004774, மின்னஞ்சல் முகவரி: vaarauraikal@gmail.com இதன்வழியாக உங்கள் செய்திகளையும், படங்களையும் எனது பத்திரிகையிலும், இணையதளத்திலும் பிரசுரிக்க நீங்களும் அனுப்பி வைக்கலாம். பலதரப்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில்தான் இப்பணியை நான் மேற்கொண்டு வருகின்றேன். என்பணிக்கு நீங்கள் பொருளாதார ரீதியாக உதவ விரும்பினால் [ READ MORE ]

Follow

Get every new post delivered to your Inbox.