புவியை வீடு தேடிச் சென்று சந்தித்தார் ஹிஸ்புழ்ழாஹ்! சந்திப்பின் முழு விவரம்

Rauff-Moulavi-&-Hizbullah-2Mumthas-Mathaniமட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐ.ம.சு. முன்னணியின் தலைமை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ், ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரான புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வை கடந்த 04.08.2015 செவ்வாய்க்கிழமை இரவு அவரது இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது, அல்மனார் அறிவியற்கல்லூரியின் அதிபர் மௌலவி ஏ.எல். மும்தாஸ் மதனி, ஹிரா பௌன்டேஷன் அமைப்பின் திட்டமிடல் உத்தியோகத்தரும், ஊடகவியலாளருமான ஏ.எம். நௌஷாத், காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பொதுச்சந்தையின் குத்தகையாளர் எம்.சீ.எம். காலிதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர். Continue reading

சமூகப் பணியாளர் வசந்தராஜாவுக்கு த.தே.கூ. இடமளிக்காதது மட்டு. மாவட்ட மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகும்!

Mr.-T.Vasanthrajaபிரபல சமூக சேவையாளரும், இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மட்டக்களப்புப் பிராந்தியக் கிளையின் தலைவருமான திரு. த. வசந்தராஜா அவர்களின் பெயர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்படாமையானது, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் – முஸ்லிம் – கிறிஸ்தவ மக்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

திரு. வசந்தராஜா அவர்கள் தமது சிறுவயதிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு சத்தியாக்கிரக, உண்ணாவிரதப் போராட்டங்களில் ஆர்வத்துடன் பங்குபற்றி வந்த வரலாற்றைக் கொண்டவர். Continue reading

மாற்றத்துக்கு பின்னரான தடுமாற்றம்

Muslims_politico-மொஹமட் பாதுஷா

முன்னாள் ஆட்சியாளரான மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியை நோக்கி நடந்து வருவதற்கான தடைகளை அகற்றுவதன் மூலம், நல்லாட்சிக்கான மக்கள் போராட்டத்தை மீண்டும் பூச்சியத்திலிருந்து ஆரம்பிப்பதற்கு வழிவகுக்கின்றாரா? என்ற நியாயமான அச்சம் குறிப்பாக சிறுபான்மையினரை இன்றைய நாட்களில் வாட்டி வதைக்கின்றது.

மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை சரித்திரத்தில் மிக மோசமான அரச தலைவர் அல்ல. என்றாலும் அவருடைய அதிகார தோரணையிலான அரசியலையும் இனவாதத்தை வளர விட்ட போக்கையும் மக்கள் பெரிதும் விரும்பவில்லை. இதனாலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நல்லாட்சி உருவாகிய பின்னர் மக்களுக்கு ஓர் ஆறுதல் கிடைத்தது. Continue reading

தேர்தல் வன்முறையாளர்களுக்கு வாக்களிப்பு முடியும் வரை பிணை கிடையாது!

ilanseliyan_001நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறுகின்ற சூழலில், தேர்தல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தல் காலம் முடியும் வரை பிணை கிடையாது. ஒழுக்கமில்லாத வேட்பாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் சில வேளை வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்படும் என்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். Continue reading

‘ஃபீஸஃபீலில்லாஹ்’ – அழ்ழாஹ்வின் பாதையில் ஒன்றுபடுவோம் – 02

IMO--1(வெளியீடு: ஐக்கிய மக்கள் ஒன்றியம், ஊர் வீதி, காத்தான்குடி 01 – 29.05.2015)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அழ்ழாஹ்வின் திருப்பெயரால் தொடங்குகின்றோம்.

அன்புக்கும், மதிப்புக்கும் உரிய காத்தான்குடி வாழ் உலமாக்களே, கல்விமான்களே, பெரியார்களே, நண்பர்களே.. அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுழ்ழாஹி வபறகாதுஹு. Continue reading

உருவச்சிலைகள் பற்றிய உண்மையான விளக்கம்: இன்று காத்தான்குடியில் NTJயின் மாபெரும் மாநாடு!

mesum_1_-_Copy

நூதனசாலையிலுள்ள உருவச்சிலைகள் தொடர்பான தவறான கருத்துக்களுக்கு நாளை தக்க பதில் வழங்குகின்றது தேசிய தௌஹீத் ஜமாஅத்

MCM. Zahran Masoothiகாத்தான்குடி பூர்வீக நூதனசாலையிலுள்ள உருவச்சிலைகள் குறித்து, இஸ்லாமிய மார்க்க ரீதியான விளக்கங்களை எடுத்தியம்பும் மாபெரும் மக்கள் சந்திப்பொன்று நாளை (20.05.2015) வியாழக்கிழமை மாலை காத்தான்குடியில் நடைபெறவுள்ளது. Continue reading

Follow

Get every new post delivered to your Inbox.

Join 41 other followers