முறைகேடான முறையில் இடம்பெற்ற புதிய காத்தான்குடி பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபைத் தெரிவு – 02

NKKY-G.J.M-1

புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல்

M.S.M.-Abdullah-2-1இவ்வாறு பள்ளிவாசலில் நிர்வாக சபை உறுப்பினர்களின் தெரிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஒருவர் எழுந்து சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரும், இப்பள்ளிவாசலின் முன்னாள் நிர்வாகியுமான அல்ஹாஜ் எம்.எஸ்.எம். அப்துழ்ழாஹ்வின் பெயரையும் பிரேரித்துள்ளார். அதற்கு சபையிலிருந்த பலர் ஆட்சேபனைகளைத் தெரிவித்துள்ளனர்.

‘என்ன காரணத்திற்காக அவரை ஆட்சேபிக்கிறீர்கள்?’ என்று கூட இந்த மேற்பார்வைக்குழுவினர் ஒரு வார்த்தையேனும் ஆட்சேபனை தெரிவித்தவர்களிடம் கேட்காது, ‘சரி. அதனை நாங்கள் விசாரித்து அவரில் பிழையேதும் இல்லையென்றால்தான் அவரை நிர்வாகத்திற்குள் எடுப்போம்’ எனக் கூற, அவரது பெயரையும் அங்கே பெயர்களைப் பதிவு செய்து கொண்டிருந்த பௌமி குறித்துக் கொள்கிறார்.

இதேவேளை, இப்பள்ளிவாசல் மஹல்லாவில் அமைந்துள்ள அமீனா பள்ளிவாசலுக்கும், மினன் பள்ளிவாசலுக்கும் தலா ஐந்து நிர்வாகிகள் வீதம் பத்துப்பேரும் இச்சபையில் வைத்தே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

முன்னர் நடைமுறையில் இருந்தவாறு இப்பள்ளிவாசலுக்கான 29 நிர்வாக சபை உறுப்பினர்களின் மேற்படி இரு சிறிய பள்ளிவாசல்களுக்குமாக 10 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் மேலும் 19 உறுப்பினர்களே தெரிவு செய்யப்பட வேண்டி இருக்கையில் மேலதிகமாக 09 உறுப்பினர்களை சம்மேளன மேற்பார்வைக்குழுவும், மு.ச.க. திணைக்கள முனீர் நளீமியும் சேர்த்து இத்தெரிவின்போது உள்வாங்கியிருப்பதாகவும், இவர்கள் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு விசுவாசமானவர்கள் என்றும் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகிகள் சிலர் ‘வார உரைகல்’லிடம் சுட்டிக்காட்டினர்.

இந்த மேற்பார்வைக்குழுவில் சம்மேளனத்தின் சார்பாகக் கலந்து கொண்டவர்களின் விபரம் இத்தொடரின் முதலாவது பாகம் வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகி ஒருவரினால் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது. அவர்களாவன:

1. எம்.ரி.எம். காலித் 2. ஏ.எல்.எம். சபீல் நளீமி. 3. ஏ.எல்.எம். பௌமி. 4. எம். குறைஸ். 5. பி.ரி.எம். பாறூக்.

இவ்வாறாக  அஸர் தொழுகைக்குப் பின்னர் பெரும் குழப்பத்துடன் தெரிவு செய்யப்பட்ட 38 நிர்வாக சபை உறுப்பினர்களையும் அதே நாள் (27.05.2016) இரவு இஷாத் தொழுகையின் பின்னர் சம்மேளனத்திற்கு வந்து தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற முக்கிய பொறுப்புதாரிகளைத் தெரிவு செய்யுமாறு மேற்பார்வைக் குழுவினர் கேட்டிருந்தனர்.

இதற்கமைய சம்மேளனத்திற்கு குறித்த 38 உறுப்பினர்களும் சென்றனர். அவர்களில் பெயர் பிரேரிப்பின்போது ஆட்சேபிக்கப்பட்ட எம்.எஸ்.எம். அப்துழ்ழாஹ்வும் இருந்துள்ளார்.

“அஸர் தொழுகைக்குப் பின்னர் ஆரம்பித்த நிர்வாகத் தெரிவின்போது அவரை நாம் ஆட்சேபித்திருந்தோம். என்ன காரணத்திற்காக அவரை ஆட்சேபிக்கிறீர்கள்? என சபையில் வைத்து எம்மிடம் கேட்கவில்லை. எமது ஆட்சேபனையைப்பற்றி விசாரித்து அவரில் குற்றமிருந்தால் நாம் நிர்வாக சபையில் அவரைச் சேர்க்க மாட்டோம் என்று உறுதியளித்திருந்த சம்மேளன முக்கியஸ்தர்களும, மு.ச.க.தி. அதிகாரி முனீர் நளீமியும் அவரையும் ஒரு உறுப்பினராகக் கருதி சம்மேளனக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் செய்திருந்தனர்.” – என்றார் தகவல் தெரிவித்த ஒரு நிர்வாக சபை உறுப்பினர்.

இச்சம்மேளனக்கூட்டத்தில் வாக்களிப்பு முறை மூலம் தலைவர், செயலாளர், பொருளாளர் போன்றவர்களை தெரிவு செய்யுமறு சபீல் நளீமி அறிவுறுத்தி, அதற்காக வாக்களிப்புச் சீட்டுக்களையும் வழங்கினார்.

முதலாவதாக தலைவரின் பெயரையும், இரண்டாவதாக செயலாளரின் பெயரையும், மூன்றாவதாக பொருளாளரின் பெயரையும் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவித்திருந்த போதிலும் ஒரு உறுப்பினர் முதலாவதாக தலைவர் என்றும், இரண்டாவதாக செயலாளர் என்றும், மூன்றாவதாக பொருளாளர் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனால் அவரது வாக்கு நிராகரிக்கப்பட்டிருந்தது.

38 தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் இருவர் சமூகமளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனவே 36 வாக்குகள் அங்கே அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

Salusala-Fareed-1இதன்படி தலைவராக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம். பரீதுக்கு 18 வாக்குகளும், முன்னாள் பள்ளிவாசல் தலைவர் கபூர் ஹாஜியாருக்கு 12 வாக்குகளும், BBC பைரூஸுக்கு 2 வாக்குகளும், ஹில்மி அகமட்லெப்பை மற்றும் புகாரி ஆகியோருக்கு தலா ஒரு வாக்கும் கிடைத்திருக்கின்றன.

தலைவர் பதவிக்கு 18 வாக்குகளைப் பெற்ற பரீத், காத்தான்குடி 06ம் குறிச்சியிலுள்ள ஜன்னத் பள்ளிவாசல் மஹல்லாவைச் சேர்ந்தவர் என்றும், இப்பள்ளிவாசலின் பாரம்பரிய வழக்கின்படி இப்பள்ளிவாசல் மஹல்லாவைச் சேர்ந்தவருக்கே தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும், இவ்வாறு மஹல்லாவுக்கு வெளியிலுள்ள ஒருவரைத் தெரிவு செய்வது பள்ளிவாசல் யாப்பிற்கு முரணானது என்றும் நிர்வாக சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட ஏ.எம்.எம். பர்ஸாத் என்பவர் கையில் யாப்பு நூலையும் காண்பித்து ஆட்சேபனை தெரிவித்திருக்கின்றார்.

அதற்கு சம்மேளன சபையினர், “நீங்கள் இந்த யாப்பை அங்கே பள்ளிவாசலுக்கு கொண்டு வந்து காட்டியிருக்க வேண்டும்” என்று சொல்ல, அதற்கு பதிலளித்த பர்ஸாத், “அதனை அப்பள்ளிவாசலில் முன்னாள் தலைவர் அல்லது செயலாளர் அல்லாவா கொண்டு வந்திருக்க வேண்டும்? நான் மஹல்லாவாசி என்ற அடிப்படையில் நிர்வாகத் தெரிவுக் கூட்டத்திற்கே தயாராக வந்தேன். இப்போது இங்கு எடுத்து வந்துள்ளேன். எனவே நீங்கள் இந்த யாப்புக்கமைவாக தலைவர், செயலாளர் மற்றும் பொருளாரைத் தெரிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதனை சம்மேளன நிர்வாகத்தினர் கருத்திற் கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

உப தலைவராக 12 வாக்குகள் பெற்ற கபூர் ஹாஜியாரை இருக்குமாறு சம்மேளன நிர்வாகம் கேட்டுக்கொண்ட போதிலும் அவ்வாறு உப தலைவராக இருப்பதற்கு தான் விரும்பவில்லை எனக் கூறினார்.

இதையடுத்து 2 வாக்குகளைப் பெற்ற BBC பைரூஸை உப தலைவராக இருக்குமாறு கோர, அவரும் அதை மறுதலிக்க இறுதியாக ஒரு வாக்கினைப் பெற்ற புகாரி (வெஸ்டர்ன்) என்பவர் உப தலைவராகப் பொறுப்பேற்றார்.

இதேபோல் செயலாளராக காத்தான்குடி பிரதேச செயலக பணியாளர் இர்பான் என்பவர் 18 வாக்குகளைப் பெற்றுத் தெரிவானார். இவர், புதிய காத்தான்குடி நூறானியா ஜும்ஆப்பள்ளிவாசல் மஹல்லாவில் வசிப்பவர்.

அடுத்த நிலையில் BBC பைரூஸ் 10 வாக்குகளையும், றசூல் மாஸ்டர் 03 வாக்குகளையும், ஹில்மி அகமட் லெப்பை 02 வாக்குகளையும் பெற்றனர்.

உப செயலாளராக BBC பைரூஸை இருக்குமாறு சம்மேளன சபை கேட்டுக்கொண்ட போதிலும் அவர் அதனை விரும்பவில்லை. அடுத்த நிலையில் 03 வாக்குகளைப் பெற்ற றசூல் மாஸ்டரும் அப்பதவியை விரும்பாததால் 02 வாக்குகளைப் பெற்ற ஹில்மி அகமட்லெப்பை உப செயலாளராக இருப்பதற்கு விருப்பம் தெரிவித்து அப்பதவியைப் பொறுப்பேற்றார்.

இதேபோன்று பொருளாளராக பௌமி என்பவருக்கும் அதே 18 வாக்குகள் கிடைத்தன. அவர் பொருளாளரானார்.
(இத்தொடரின் மூன்றாவது பாகம் இன்ஷா அழ்ழாஹ் நாளை வெளியாகும்)

Advertisements
    • Saheeth
    • மே 30th, 2016

    Mahallavittku veliyil iruppavarahai niravaahihala therivu seyvathan ul noakkam enna? Arasiyalai palli niruvaahathitkul puhuththa jamaathar idamalikka koodathu

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements
%d bloggers like this: