இராஜாங்க அமைச்சர்கள் சிலர் இராஜினாமா செய்யும் அறிகுறி!

srilanka_parliament-8

இலங்கை நாடாளுமன்றம்

தங்களுக்கான சரியான பொறுப்புகளை அரசு இன்னும் வழங்கவில்லை என்பதால் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் தங்களது பதவிகளிலிருந்து விலகிக்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக அரசின் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துகொண்ட ஆறு அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்ட துறைகளுக்கான அமைச்சர்களின் பொறுப்புகளில் உள்ள சில பணிகள் இராஜாங்க அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என உறுதி கூறப்பட்டபோதிலும் இதுவரை அவ்வாறு நடக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டியே இவர்கள் பதவி விலகத் தீர்மானித்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளனர்.

தத்தமது அமைச்சுகளுக்கு வரும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எந்த விதமான பொறுப்புகளோ, கடமைகளோ வழங்கப்படாமையின் காரணமாக அவர்கள் அங்கு வெறுமனே காலத்தைக் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது எனவும்இ அமைச்சுகளில் நடக்கும் உத்தியோகபூர்வ வைபவங்களுக்குக்கூட தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை எனவும் அவர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

இந்த நிலைமை காரணமாக சிறுபான்மைக் கட்சிகளைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர்கள் சிலர், அமைச்சுகளுக்கு வருவதை நிறுத்திக்கொண்டுள்ளனர்.

அடுத்த மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வு தொடங்குவதற்கு முன்பு இவர்கள் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்துப் பேசவுள்ளனர் எனவும், அந்தப் கலந்துரையாடல் மூலம் திருப்தியான முடிவு ஒன்று கிடைக்காவிட்டால் ஒருசில இராஜாங்க அமைச்சர்களைத் தவிர ஏனையோர் தமது பதவிகளிலிருந்து விலகிக்கொள்ள முடிவுசெய்துள்ளனர் எனவும் கூறியுள்ளனர்.

Advertisements
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Advertisements
%d bloggers like this: