ஏகத்துவ சமூகத்தை ஏமாற்றிய PMGG – NFGG இரட்டை முக இயக்கம் – (பாகம்: 02)

PLM-Public-Meeting-@-Goodwin-Junction-19.07.2015-9

-ஏ.எல். முஹம்மது நியாஸ்-

PMGG – NFGG என்ற இரட்டை முகம் கொண்ட இயக்கமானது, இஸ்லாமிய வழிகாட்டல்களோடு ஒன்றிணைந்த அரசியல் சித்தாந்தமொன்றை எமது மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியதன் விளைவாகவே ஏகத்துவ சமூகம் கணிசமான அளவு அவ்வியக்கத்தின் செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்டது.

ஆனால் தேர்தல் பிரச்சார மேடைகளில் பிர்தௌஸ் நளீமி மற்றும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் ஆகியோரால் ஓங்கி ஒலிக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தின் மீதான ஈடுபாடுகளும், தனித்துவமான கொள்கைகளும் அவ்வியக்கங்களினது ஷூரா சபைக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தன என்பதை பிந்திய காலங்களில் நடந்தேறிய சம்பவங்கள் எடுத்துரைத்தன.

அதில் மிகவும் பிரதானமான ஒன்றுதான் பிரதான வீதி யில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தர் சிலைக்கு PMGG ஷூரா சபை உறுப்பினர் AGM. ஹாரூன் மலர் மாலை அணிவித்ததாகும்.

இந்நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத் தில் அப்போதைய தலைவராக இருந்த MIM. சுபைர் CC, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் KLM. பரீத் மற்றும் AGM. ஹாரூன் ஆகியோரே குறித்த விபுலானந்தர் சிலைக்கு மாலையிட்டனர்.

A.G.M.-Haroon-1PMGGயின் ஷூரா சபை உறுப்பினர் ஹாரூன் மலர் மாலையணிவித்த செய்தியை கேள்விப்பட்ட மறுகணமே  PMGG – NFGGஇரட்டை முக அமைப்புகளின்மீது ஏகத்துவ சமூகம் அதுவரையில் கொண்டிருந்த நம்பிக்கையும் நல்லபிப்பிராயமும் வெகுவாகவே ஆட்டங்காணத் தொடங்கின.

மலர்மாலை அனைவித்த மார்க்க விரோத நிகழ்வைக் கண்டித்து மௌலவி ஸஹ்றான் தலைமையில் அப்போது இயங்கி வந்த காத்தான்குடி தௌஹீத் ஜமாஅத் பகிரங்கத் துண்டுப்பிரசுரம் ஒன்றையும் வெளியிட்டது.

Sahran Masoothiஇந்தத் துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டதற்காக மௌலவி ஸஹ்றானும் அவரது அமைப்பும் மிகக்கடுமையான அளவுக்கு காவல்துறையின் அழுத்தங்களையும், அச்சுறுத்தல்களையும், மிரட்டல்களையும் சந்திக்கவும் நேரிட்டது.

காத்தான்குடி தௌஹீத் ஜமாஅத் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தை பார்வையிட்ட ஓரிரு மணித்தியாலங்களிலேயே சுபைர் CC, KLM. பரீத் ஆகியோர் இவ்வாறு மாலையிட்டது தவறுதான் என தமது நிலைப்பாடுகளை அறிவித்தார்கள்.

மாத்திரமன்றி மௌலவி ஸஹ்றானுக்கு அப்போது ஏற்பட்டிருந்த பாதுகாப்புத் தரப்பினரின் அழுத்தத்தை கூட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் KLM. பரீத் இராணுவத்தினருடன் பேசி கலந்துரையாடி அது மார்க்க அறிஞர்களின் கடமை என்பதை விளக்கிக் கூறினார்.

ஆனால் விபுலானந்தர் சிலைக்கு பகிரங்கமாக மாலை அணிவித்த AGM. ஹாரூனோ அல்லது அவர் சார்ந்தி ருந்த PMGG – NFGG அமைப்போ அந்நேரத்தில் அது தொடர்பான எந்தவொரு நிலைப்பாட்டையும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை.

சுமார் இரு வாரங்கள் கடந்த தன் பின்னர், ஏகத்துவ சமூகத்தின் பலமான அழுத்தங்களைச் சந்தித்தன் பிற்பாடுதான் PMGG – NFGG இயக்கம் மெல்ல வாய் திறந்தது. அப்போதும் கூட தமது ஷூரா உறுப்பினர் AGM. ஹாரூன் சிலைக்கு மாலையிட்டதை எந்தளவு நியாயப்படுத்த முடியுமோ அந்தளவு நியாயப்படுத்தி பூசி மெழுகிவிட்டே இறுதியில் PMGG – NFGG இயக்கம் ஹாரூனுடைய சார்பில் மன்னிப்புக் கோரியது.

ஆனால் இதுவரையும் ஹாரூன், சிலைக்கு மாலையிட்ட விடயம் தொடர்பாக தன்னுடைய எந்தவொரு நிலைப் பாட்டையும் சமூகத்திற்கு அறிவிக்கவில்லை.

மேலும் இதேபோன்றுதான் லாபிர் ஆசிரியருடைய விவகாரமும் சந்திக்கு வந்து நின்றது.

ஆரம்ப காலங்களில் லாபிர் ஆசிரியர் தொடர்பாக அவர் ஷீஆ கொள்கையைச் சார்ந்தவர் என்ற குற்றச் சாட்டுக்களும், விமர்சனங்களும் மிகவும் கணிசமானளவு முன்வைக்கப்பட்டு வந்த போதிலும் அது தொடர்பான போதியளவு ஆதாரங்கள் கிடைக்காததால் ஏகத்துவ சமூகம் மௌனம் காத்து வந்தது.

ஆனால் காலப்போக்கில் அவருடைய அன்றாட நடவ டிக்கைகளில் சர்ச்சைகள் தென்படவே அதன் வாயிலா கவும் ஏகத்துவ சமூகம் பாரிய அதிருப்திகளை எதிர் நோக்கியது.

காத்தன்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரகர் மௌலவி MCM. ஸஹ்றான் மஸ்ஊதி இந்த விடயத்தை பகிரங்க மேடையில் வைத்து மக்கள் மத்தியில் சுட்டிக்காட்டினார். ஆனாலும் அது தொடர்பா கவும் PMGG – NFGG இயக்கம் தனது நிலைப்பாட்டை வாய் திறந்து அறிவிக்காமல் வாகாகவே பின் வாங்கியது.

லாபிர் ஆசிரியருடைய விவகாரம் தொடர்பாக விமர்சனம் எழத் தொடங்கிய சில மாதங்களிலேயே ஏகத்துவ அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாஅத்திற்கு அதன் உண்மை நிலவரம் தெரிய வந்ததென்றால், அவரை ஷூரா சபை உறுப்பினர்களில் ஒருவராக உள்வாங்கி பல வருடங்கள் அவருடன் ஒன்றாகப் பணியாற்றுகின்ற PMGG – NFGG இயக்கத்தின் தவிசாளரான பொறியியலாளர் அப்துர் ரஹ்மானுக்கோ, இஸ்லாமிய மார்க்கத்தை முன்னிலைப்படுத்திய முன்மாதிரி அரசியல் அமைப்பு என பகிரங்க மேடைகளில் கோஷமெழுப்பிய பிர்தௌஸ் நளீமிக்கோ இந்த விவகாரம் இத்தனை நாட்களாகத் தெரியாமல்தான் இருந்ததா? என்றொரு நியாயமான கேள்வி இங்கே தவிர்க்க முடியாமல் எழுகிறது.

அது மாத்திரமன்றி, நமதூரில் தாய் நிறுவனம் என்ற அடையாளத்துடன் நிலைகொண்டுள்ள காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினுடைய செயற்பாடுகள்பற்றி ஒட்டு மொத்தக் காத்தான்குடி சமூகமுமே நன்கறியும்.

கடந்த காலங்களிலும் நிகழ் காலத்திலும் இந்த சம்மேளனம் என்னும் நிறுவனமானது ஏகத்துவப் பிரச்சாரத்தின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் எந்தளவுக்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது என்பதையும் முழு ஏகத்துவ சமூகமுமே உணர்ந்தறிந்து வைத்துள்ளது.

அது மாத்திரமல்லாது சமூகத்தின் மீதான அக்கறை என்பதை புறந்தள்ளிவிட்டு அரசியல் அதிகாரவாதிகளின் அடிவருடுகின்ற, அதே அதிகாரவாதிகளுடைய பகிரங்க ஆதரவாளர்களை பொறுப்புதாரிகளாகக் கொண்டியங்கு கின்ற, நல்லாட்சிக் கொள்கைக்கு இம்மியளவுதானும் பொருந்திப் போகாத ஒரு எதேச்சாதிகார நிறுவனமே இந்த சம்மேளனமாகும்.

ஆனால் அப்பேர்ப்பட்ட ஏகத்துவ சமூக மற்றும் நல்லாட் சிக்கு விரோதமான கொள்கைகளையுடைய சம்மேளனத்திற்குள்தான் PMGG – NFGG இயக்கத்தின் ஷூரா சபை உறுப்பினரான அஷ்ஷெய்க் ALM. சபீல் நளீமி பொதுச் செயலாளராக உள்வாங்கப்பட்டுள்ளார்.

வெளியரங்கத்தில் தகர்த்தெறியப்பட வேண்டிய சம்மேளனம் என்று பகிரங்கமாகக் கோஷம் எழுப்பிய PMGG – NFGGயின் ஷூரா சபை அமீர்தான், அந்தத் தகர்த்தெறியப்பட வேண்டிய சம்மேளனத்திற்கு தனது இயக்கத்தின் ஷூரா சபை உறுப்பினர் சபீல் நளீமியை செயலாளராக அனுப்பி வைத்து அழகு பார்த்தும் வருகின்றார்.

அப்படியானால் வெளியில் பகிரங்க மேடைகளில், பொது மக்கள் மத்தியில் இந்த சம்மேளனத்தைப் பற்றி PMGG – NFGG இயக்கம் கூறிவரும் நிலைப்பாடுகளின் பெறுமானம்தான் என்ன?

இதே சபீல்நளீமியின் அங்கீகாரத்தோடுதான் சில மாதங்களுக்கு முன்னர் காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமா அத்தை இந்த சமூகத்தில் இருந்து இல்லாதொழிப்பதற்கான முயற்சிகள் சம்மேளனத்தினால் மிகவும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டன.

ஆனாலும் கடந்த நகரசபைத் தேர்தலில் ஏகத்துவ சமூகத்தின் பலமான ஆதரவினால் நகரசபையின் எதிர்க் கட்சி ஆசனங்கள் இரண்டைச் சுவீகரித்துக் கொண்ட PMGG – NFGG இயக்கம், தமது ஷூரா சபை உறுப்பினரைக் கொண்டு ஏகத்துவ சமூகத்திற்கு எதிராக சம்மேளனம் எடுத்த அத்தனை முயற்சிகளையும் கைகட்டி, வாய் பொத்தி நின்று வேடிக்கைதான் பார்த்தது.

தன்னுடைய ஷூரா சபை உறுப்பினரை, சம்மேளனச் செயலாளர் பதவியை இராஜினாமாச் செய்ய வைத்து மீளழைக்கவில்லை. சம்மேளனத்தின் இந்த சர்வாதிகார செயற்பாட்டிற்கு எதிராக PMGG – NFGG இரட்டை முக இயக்கம் குறைந்த பட்சம் வெளியிலிருந்து ஒரு கண்ட னத்தைக்கூட பதிவு செய்யவில்லை.

இவ்வாறு தன்னுடைய எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் பல் வேறுபட்ட அழுத்தங்களையும், அச்சுறுத்தல்களையும் சந்தித்து தன்னலம் பாராது பாடுபட்டு வந்த ஏகத்துவ சமூகத்தை, இந்த ஊரின் நகர சபை நிருவாக அலகிற்குள் ஓர் சிறு அங்கீகாரம் கிடைக்கப் பெற்ற மறுகணமே தூக்கி வீசியது, இந்த PMGG – NFGG.

இப்போதும் கூட ஒரு புறம் சம்மேளனத்தின் செயலாளர் என்கிற பொறுப்புமிக்க ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டும், மறுபுறம் இஸ்லாமிய வழிகாட்டல்களுடனான அரசியல் பயணம் என்கிற கோஷத்தைத் தாங்கிய  PMGG – NFGGஇயக்கத்தின் ஷூரா சபையின் உயர்மட்டத்தில் இருந்துகொண்டும் ஏகத்துவ சமூகத்தின் மீதான தன்னுடைய நீண்ட நாள் குரோதத்தையும், வஞ்சகத்தையும் சமூக வலைத்தளங்களில் ஆங்காங்கே கொப்பளித்து வருகின்ற சபீல் நளீமியின் கீழ்த்தரமான செயற்பாடுகள் மென்மேலும் இந்த  PMGG – NFGGஎன்னும் இரட்டை முக இயக்கங்களின்மீது எமக்கு அதிருப்தியையே ஏற்படுத்தி வருகிறது.

இவையெல்லாவற்றை விடவும் தனித்துவமான அரசியல் என்றும், இஸ்லாமிய வழிகாட்டல்களுடனான அரசியல் பயணம் என்றும் பகிரங்க மேடைகள் தோறும் ஓங்கி ஒலித்த அஷ்ஷெய்க் பிர்தௌஸ் நளீமி, அண்மையில் அரங்கேற்றிய மார்க்க விரோத நிகழ்வுதான்  PMGG – NFGGஇயக்கத்தின் மீதான தமது நம்பிக்கையையும், ஆதரவையும் மீளப்பெற வேண்டும் என்ற எண்ணத்தை ஏகத்துவ சமூகத்தில் மிக ஆழமாக வேரூன்ற வைத்தது.

அதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்னால் PMGG இயக்கத்தின் ஷூரா சபை முன்னாள் அமீரும், NFGG இயக்கத்தின் இந்நாள் தலைமைத்துவ சபை உறுப்பினருமான பிர்தௌஸ் நளீமி, இந்து சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றிய சம்பவமாகும்.

இவ்விவிவகாரம் தொடர்பாக அடுத்து வந்த நாட்களிலேயே ஏகத்துவ அமைப்புக்கள் தங்களின் அதிருப்திகளையும், கண்டனங்களையும் பகிரங்கமாகவே வெளியிட்டன. ஆயினும் இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட பிர்தௌஸ் நளீமியோ, அவர் சார்ந்த PMGG – NFGG இயக் கங்களோ இது தொடர்பாக இன்று வரைக்கும் எந்த வொரு நிலைப்பாட்டையும் பொதுமக்களுக்கு அறிவிக்க வில்லை.

ஷூரா சபை உறுப்பினர் ஹாரூன், விபுலானந்தரின் சிலைக்கு மாலையிட்ட நேரத்தில் அந்த விவகாரத்தில் செலுத்திய கவனத்தையும் அக்கறையையும்கூட இந்த விடயத்தில் PMGG – NFGG துளியளவும் காட்டவில்லை.

ஆரம்ப காலங்களில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு முன் னுரிமை வழங்கும் அரசியல் கட்சி என்றும், இஸ்லாமிய மார்க்கம்தான் எமது முதலாவது குறிக்கோள் என்றும் ஓங்கியொலித்த பிர்தௌஸ் நளீமியே இன்று அந்த இஸ்லாமிய மார்க்கத்தைத் தேடிச் சென்று குழிதோண்டிப் புதைத்துவிட்டு வந்து நிற்கின்றபோது, அதை அங்கீகரிக் கின்ற, அனுசரித்துச் செல்கின்ற மனப்பாங்கில் ஏகத்துவ சமூகம் இல்லை.

காரணம் ஒருவருக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்துவது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது என அறிந்த மறுநாளே பாடசாலையில் ஆசிரியர்களுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்த மாட்டோம் என்று மறுத்து பாடசாலை மட்டத்திலேயே மாற்றத்தையும், புரட்சியை யும் ஏற்படுத்தி, அங்கிருந்தே எதிர்ப்புக்களைச் சம்பாதித்துக் கொண்ட யதார்த்தவாத ஏகத்துவ சமூகமானது, முழுக்க முழுக்க மாற்றுமதக் கலாச்சாரமாகிய குத்து விளகேற்றுவதை மாத்திரம் எவ்வாறு பிர்தௌஸ் நளீமி என்ற ஒருவர் செய்தார் என்பதற்காக அனுசரித்துச் செல்லும்? 

இதில் இன்னும் வேதனை என்னவெனில், கடந்த முறை இலங்கைக்கு வருகை தந்த வாழும் கலை அமைப்பின் ஸ்தாபகரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மட்டக்களப்பு வெபர் மைதானத்திற்கு சமூகமளித்தபோது, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் பிரதேச அரசியல்வாதி என்ற வகையில் முன்னாள் பிரதியமைச் சர் ஹிஸ்புல்லாஹ்வும் சமூகமளித்திருந்தார். அவ்வாறு சமூகமளித்த ஹிஸ்புல்லாஹ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை குனிந்து கும்பிட்டு அவர் வழங்கிய மஞ்சள் நிறச் சால்வையை யும் தோளில் போட்டவாறு மேடையில் இருந்தார்.

இந்த விவகாரத்தை அப்போதிருந்த ஏகத்துவ அமைப்புக்கள் அனைத்துமே கண்டித்தன. சாதாரண பொதுமக் கள் கூட இதன் பாரதூரத்தை அறிந்துணர்ந்து தமது அதிருப்திகளை வெளிக்காட்டினர். அதேநேரம்  PMGG – NFGG இயக்கமும் அக்காலத் தேர்தல் பிரச்சார மேடை களில் ஹிஸ்புல்லாஹ்வின் இந்த இஸ்லாமிய மார்க்க விரோத செயற்பாட்டை மூலதனமாக வைத்தே தனது தேர்தல் பிரச்சாரத்தையும் மேற்கொண்டது.

PMGG – NFGGயினுடைய ஒவ்வொரு தேர்தல் பிரச்சார மேடையிலும் அவ்வியக்கத்தின் உயர்மட்ட உறுப்பினர் கள் தொடக்கம் கடைநிலைத் தொண்டர்கள் வரைக்கும் ஹிஸ்புல்லாஹ்வின் இந்த இழிசெயலை விமர்சிக்காதவர் களே இல்லையென்னும் அளவுக்கு அதை மிகப்பெரும் பேசுபொருளாக மாற்றியமைத்து ஒட்டுமொத்த மக்களையும் தம்வசம் ஈர்ப்பதற்குப் படாதபாடுபட்டார்கள்.

ஆனால் அன்று ஹிஸ்புல்லாஹ் அரங்கேற்றிய அதே மார்க்க விரோத செயற்பாட்டுக்கு ஒப்பான ஒரு செயல் தான் இன்று பிர்தௌஸ் நளீமி குத்து விளக்கேற்றிய செயற்பாடுமாகும். இருப்பினும் அன்று ஹிஸ்புல்லாஹ் வின் மார்க்க விரோதச் செயற்பாட்டைக் கண்டிப்பதற் கும், விமர்சிப்பதற்கும், அந்த விவகாரத்தையே தூக்கிப் பிடித்து அரசியல் இலாபம் தேடுவதற்கும் கொடுக்கப் பட்ட திணிவின் அளவில் ஒரு அணுவளவு கூட, இன்று இந்த பிர்தௌஸ் நளீமி மங்கள விளக்கேற்றிய மார்க்க விரோத செயலுக்கெதிராக PMGG – NFGG இயக்கத்தி னரால் முன்னெடுக்கப்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால் குத்துவிளக்கேற்றுவதானது, தங்களுடைய பார்வையில் சரியா, தவறா என்றொரு வெளிப்படையான நிலைப்பாட்டைக்கூட அறிவிப்பதற்கு திராணியற்ற நிலையில் இவ்வியக்கம் மௌனம் காத்து வருவதை காத்தான்குடி வாழ் ஏகத்துவ சமூகத்தினால் அங்கீகரித்து, அனுசரித்துச் செல்ல முடியவில்லை.

இவைதவிர, PMGG – NFGG இயக்கத்தின் சார்பாக யாரேனும் அரங்கேற்றுகின்றபோது அதை விமர்சிக்கின்ற, அது தொடர்பாக கேள்வி எழுப்புகின்ற பொதுமக்களை, குறிப்பாக ஏகத்துவவாதிகளை நோக்கி  PMGG – NFGG இயக்கத்தின் ஆதரவாளர்கள் என்றும் உயர்மட்ட உறுப் பினர்கள் என்றும் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு சமூக வலைத்தளங்களில் நல்லாட்சி வேதாந்தம் பேசும் சில மேதாவிகளுடைய சாடல்களும், வசை பாடல்க ளும் மிகவுமே ஒரு கீழ்த்தரமான நிலைக்குச் சென்று கொண்டிருப்பதையும் நாம் அண்மைக்காலமாக அவதா னித்துக் கொண்டே வருகிறோம்.

வெளிப்படையான அரசியல் கொள்கை என்று ஆரம்பத் தில் கோஷம் எழுப்பிய இவர்கள் இன்று நியாயமான, யதார்த்தபூர்வமான ஒரு வினாவுக்கு, விமர்சனத்திற்குக் கூட பதிலளிக்க முடியாமல் விழி பிதுங்கிய நிலையில் விமர்சகர்கள் மீதே அம்மணமான இழி சொற்களையும், அவதூறுகளையும் கட்டவிழ்த்து வரும் காட்சிகளையும் நாம் காண்கிறோம்.

ஆரம்பகாலத்தில் தேர்தல் பிரச்சார மேடைகளிலேயே பொதுமக்களுடைய சந்தேகங்களைத் தீர்க்கின்ற வகையில் பகிரங்க கேள்வி – பதில் நிகழ்ச்சிகளை நடாத்திய இந்த முன்மாதிரி இயக்கம், இன்று ஊடகங்கள் வாயிலாக எழுப்பப்படுகின்ற நியாயபூர்வமான விமர்சனங் களை எதிர்கொள்ளத் திராணியற்று சமூக வலைத்தளங் களிலும், ஊதுகுழல் இணையதளங்களிலும் ஊர் பெயர் தெரியாதவர்களைக் கொண்டும், ஆள் அடையாளமற்ற போலியான கணக்குகளை உருவாக்கியும் கேள்வியெழுப்புகின்ற, மாற்றுக்கருத்துக்களை முன்வைக்கின்ற, விமர்சனங்களை தெரிவிக்கின்றவர்கள் மீதும் குறிப்பாக பெண்கள் மீதும் மிகவும் அம்மணமான, அசூசையான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி, அடுத்தவர்களுடைய மானத்தில் அடந்தேறுகின்ற கீழ்த்தரமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதையும் நாம் பார்க்கின்றோம்.

ஒரு நேர்மையான, வெளிப்படைத்தன்மைமிக்க, நாகரீ கமான அரசியல் இயக்கம் என்று ஆரம்ப காலங்களில் பொதுமக்களை குறிப்பாக ஏகத்துவ சமூகத்தை நம்ப வைத்து, அதன் மூலமாக அரசியல் இலாபத்தையும் அடையப்பெற்று, இன்று அந்த இலாபத்தின் பங்குதாரர் களான ஏகத்துவவாதிகளையே அடக்கி ஒடுக்க எத்தனிப்பதும், கேலிக்கூத்தாடுவதும், கீழ்த்தரமான அம்மண அசூசி வார்த்தைகளால் வசைபாடி வருவதும், ஏகத்துவ சமூகத்தையே வேரறுக்க எத்தனிப்பதும் எப்பேர்ப்பட்ட தொரு நயவஞ்சகத்தனமான செயற்பாடென்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு வாக்களித்த உரிமையோடு தமக்கெதிராகக் கருத்துக்கூறுபவர்களையே கருவறுக்க எத்தனிப்பவர்கள், நாளை இவர்கள் கைகளில் இவ்வூருடைய, இம்மாவட்டத்தினுடைய தலைமைத்துவ அதிகாரம் கிடைத்துவிட்டால்; ஒரு நேர்த்தியான கொள்கைக்காக வாழும் எம்மை போன்ற ஏகத்துவவாதிகளின் நிலைமைகள் என்னவாகும் என்பதை நாமனைவருமே மிக ஆழமாகச் சிந்திக்கவும கடமைப்பட்டுள்ளோம்.

எனவே இந்த PMGG – NFGG  என்கிற இரட்டை முகங்களைக் கொண்ட சில படித்த(?)வர்களின் வழிகாட்டலில் செல்லும் இயக்கமானது, ஆரம்ப காலங்களில் ஏதோ ஒரு உள்நோக்கத்திற்காகவே ‘இஸ்லாமிய வழிகாட்டல் கள்’ என்றும், ‘தனித்துவமான அரசியல்’ என்றும் பொது மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வந்திருந்தாலும், அப்பிரச்சாரத்திற்கேற்றவாறு அக்காலப்பகுதியில் அவர் களுடைய செயற்பாடுகள், நடவடிக்கைகள் அமைந் திருந்தாலும் காலப்போக்கில் குறிப்பாக அண்மைக்காலமாக அந்த நேரான வழியிலிருந்து முற்றாகவே அவர்கள் தடம்புரண்டு போய்விட்டார்கள் என்ற உண்மையை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

இதன் மூலம் இவ்வியக்கத்தின் மீது அரசியல் ரீதியாக மிகவும் ஆழமாக நம்பிக்கை கொண்டிருந்த ஏகத்துவ சமூகம் மிகவும் சூட்சுமமான முறையில் எமாற்றப்பட் டுள்ளதென்பதை, ஏகத்துவவாதிகளான நம் ஒவ்வொரு வருடைய உள்ளங்களுமே நமக்கு சாட்சி சொல்வதற்குப் போதுமானவையாகும். (முற்றும்)

Advertisements
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Advertisements
%d bloggers like this: