தலைவர் நலமாக இருக்கிறார். இதில் யாருக்கும் ஐயம் வேண்டாம்.

12718126_474215742766952_8535209817025986287_n

உலகில் உயிருடன் இருந்தும், இவர் இறந்து விட்டார் என தனது மரணச் செய்தியை அதிக முறை கேட்டவர் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மட்டும் தான்..

1984 செப்டம்பர் 5 ல் இலங்கை இராணுவத்தால் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என அறிவிக்கப்பட்டது. இந்திய, இலங்கை நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் மதுரையில் பழ. நெடுமாறன் அவர்களது வீட்டிற்கு தலைவர் வந்திருக்கிறார்.

1989 ஜூலை 25 – விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மாத்தையா பிரபாகரனைச் சுட்டுக் கொன்று விட்டார். உடல் ஆனந்த பெரியகுளத்திற்கு அருகில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை அப்போதைய வடகிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த வரதராஜ பெருமாள் உறுதிப்படுத்தினார்.

இதில் இரண்டு பத்திரிக்கைகள் ‘நாங்கள் தான் செய்தியை முதலில் வெளியிட்டோம்’ என உரிமை கொண்டாடியிருக்கிறது. ஆனால்  இரண்டே நாளில் தலைவரின் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டது. 1990 ல் சாகவச்சேரி நிகழ்ச்சியில் தலைவர் கலந்து கொண்டிருக்கிறார்.

2004 திசம்பர் 26  சுனாமியில் தலைவரும், உளவு பிரிவின் தலைவர் பொட்டு அம்மானும் அடித்துச் செல்லப்பட்டனர் என அறிவிக்கப்பட்டு இலங்கை கடற்படையின் வைஸ் அட்மிரல் தயா சந்தகிரி உறுதிப்படுத்தினார்.

அடுத்த பத்தே நாட்களில் நோர்வே நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பீட்டர்சென் கிளிநொச்சியில் தலைவரைச் சந்தித்தார்.

2007 திசம்பர் 5. – இலங்கை வான்படை நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்தார். இந்நேரம் இறந்திருக்கக்கூடும் என இலங்கை பாதுகாப்புத்துறை அறிவித்தது. ஆனால் விடுதலைப் புலிகளின் பிரிகேடியர். பால்ராஜ் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

2009 மே 17. -இறுதியாக இலங்கை இராணுவத்துடன் இறுதி கட்டப் போரில் ஈடுபட்டிருந்தவரது உடலை நந்திக் கடல் கழிமுகப் பகுதியிலிருந்து கைப்பற்றியுள்ளோம். அவரது உடலிலிருந்து இரத்தம் எடுத்துள்ளோம்.

அவரது உடல்தான் என்பதில் சந்தேகம்  இல்லை. கருணா அவரது உடலை அடையாளம் காட்டினார். டி என் ஏ சோதனை நடத்த வேண்டியதில்லை. உடலை எரித்து விட்டோம், கரைது விட்டோம் என்றார் இலங்கை இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் உதய நாயனக்கார.

2009 மே 18 அன்று இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவோ
‘இராணுவம் ஒரு ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தியதில் அதிலிருந்த பிரபாகரனைக் கொன்றோம்’ என்கிறார்.

2009 மே 19 இல் காலை சண்டை நடந்த பகுதிக்கருகில் இருந்த காட்டிற்குள் பிரபாகரனின் உடலைக் கைப்பற்றினோம். நாங்கள் தான் கொன்றோம். அவருக்கு புலிகளின் சீருடை அணிவித்ததும் நாங்கள் தான்.. நான் தான் சரத் பொன்சேகாவிற்கே தகவல் சொன்னேன்’. – இந்தக் கதையைச் சொன்னவர், இலங்கை இராணுவத்தின் 53 வது டிவிசன் தளபதி கமல் குணரத்னே.

( இப்படி ஒரு சில பொய்யான தகவலையும், சந்தேகத்திற்குரிய படங்களையும், முன்னுக்குப் பின் முரநாக வெளியிட்டது இலங்கை இராணுவம்.
இவ்விடயம் குறித்து பலதரப்பிலும் தொடுக்கப்பட்ட சந்தேகங்களிற்கும், முரண்பாடுகளுக்கும் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை. அது குறித்து பின்னர் விரிவாகப் பார்ப்போம்)

ஆனால் தலைவர் நலமாக இருக்கிறார். இதில் யாருக்கும் ஐயம் வேண்டாம். தக்க தருணத்தில் வருவார்!

இவ்வாறு ஐந்து முறை தான் இருக்கும்போதே தன் மரண செய்தியை இலங்கை அரசும் இராணுவமும் அறிவிப்பதை கேட்டிருக்கிறார். (http://eelamalar.com/)

09f69e2f-d74f-42e7-883d-3b1da356cb32

Advertisements
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Advertisements
%d bloggers like this: