புனித ரமலான்: நோன்புக் கஞ்சிக்காக 3000 பள்ளிவாசல்களுக்கு 4,600 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு!

02-1464855001-jayalalitha745-21-600

புனித ரமலான் நோன்புக்காக தமிழ் நாட்டிலுள்ள மூவாயிரம் பள்ளிவாசல்களுக்கு 4 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

உலக முஸ்லீம்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது வழக்கம். இந்த ஆண்டு வரும் 6 அல்லது 7ம் தேதி ரமலான் நோன்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிறையை பார்த்து தான் நோன்பு துவங்கும் என்பதால் தேதியை குறிப்பிட்டுக் கூற முடியாது. ரமலான் மாதத்தை வரவேற்க உலக முஸ்லீம்கள் தயாராகி விட்டனர்.

நோன்பு நேரத்தில் பள்ளிவாசல்களில் நோன்பு திறக்க கஞ்சி காய்ச்சுவது வழக்கம். தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிக்க பச்சரிசி வழங்க உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ரமலான் நோன்புக்காக மாநிலத்தில் உள்ள 3 ஆயிரம் பள்ளிவாசல்களுக்கு 4 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்கப்படும். ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க பச்சரிசி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: