சந்தித்த இடத்தில் அரசியல் செய்பவர் கிழக்கு முதலமைச்சர் – பிரதியமைச்சர் அமீர் அலி

625.117.560.350.160.300.053.800.210.160.90சந்தித்த இடத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது நீண்ட தூரம் அரசியல் பிரயாணத்திற்கு உகந்ததாக தெரியவில்லை என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் அமைக்கப்படவுள்ள செமட்ட செவண மாதிரிக் கிராம வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கத்திற்கு செய்த உதவிகளின் விளைவுகளை நாங்கள் தற்போது அனுபவிக்க ஆரம்பித்துள்ளோம். யுத்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட உங்களுக்கு இது ஒரு ஆறுதலாக இருக்கும் என நான் நம்புகின்றேன்.

வாழைச்சேனை கண்ணிபுரத்தில் இந்த வீடமைப்பு திட்டத்தை கொண்டு வருவதற்கு அரும்பாடுபட்டவர் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன். அந்த பிரதேசத்தில் இவ்வாறான காணிகளை கண்டால் எதிர்காலத்தில் இன்னும் பல வீட்டுத் திட்டங்களை ஆரம்பிப்பார்.

சிறுபான்மை சமூகத்தினுடைய நிகழ்ச்சி நிரல் தேசியமாக பூரணப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனால் இந்த ஆட்சியாளர்களை நம்பக் கூடிய நிலைமை சிறுபான்மை அரசியல் தலைவர்களிடையே காணப்படுகின்றது.

இந்த விடயத்தை பௌத்த பேரினவாதிகள் இதனை குழப்புவதற்காக திட்டமிடுகின்றார்கள். சில அரசியல்வாதிகள் திட்டமிட்டு செயற்படுகின்றார். தேசியத்தில் திட்டுகிறார்கள். மாவட்டத்தில், மாகாணத்தில் என்று சொல்லக் கூடியதாக உள்ளது.

சந்தித்த இடத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது நீண்ட தூரம் அரசியல் பிரயாணத்திற்கு உகந்ததாக எங்களுக்கு தெரியவில்லை.

கிழக்கு முதலமைச்சரின் அடாவடித்தனமாக பழிவாங்கல்கள் உத்தியோகத்தர்களை, ஊழியர்களை இரவோடு இரவாக இடமாற்றுகின்ற கேவலமாக நிகழ்ச்சி நிரலை செய்து கொண்டிருப்பார் என்று சொன்னால் வருகின்ற மாகாண சபையிலே அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

அரசியல் என்று வருகின்ற பொழுது தாங்கள் எதைப் பேசிக் கொண்டாலும்,  சண்டை பிடித்துக் கொண்டாலும் நியாயம் என்ற வகையிலே உடன்பாடு தேவைப்பட வேண்டிய தேவைப்பாடு அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் இருக்கும் என்று சொன்னால் அது வெற்றி பெற்ற அரசியலாக எதிர்காலத்தில் பதிவு செய்து கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு விடும்.

நாங்கள் பணம் கொடுத்தோ, அரிசி கொடுத்தோ, மின்சார பட்டியல் கட்டியோ அரசியல் செய்பவர்கள் அல்ல. எங்களால் உங்களுக்கு செய்யக் கூடியதைதான் செய்ய முடியும். உங்களது பாதுகாவலனாக, எல்லைக் காவலனாக, உங்கள் கஸ்டத்தை பங்கெடுப்பவனாக இருப்போம் என்ற வேண்டுதலை தான் நாங்கள் தேர்தல் காலங்களின் உங்கள் மத்தியில் வைத்தோம். அது போலவே சொன்னதை செய்கிறோம் என எம்.எஸ்.எஸ். அமீர்அலி குறிப்பிட்டுள்ளார்.

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: