இரண்டு காதி நீதிபதிகள் முன்னிலையில் ஒரே நாளில் தீர்க்கப்பட்ட பஸ்ஹு விவகாரத்து வழக்கு! -காத்தான்குடியில் சம்பவம்

CIG - Aliyaar HazrathQazi-Mahroof-Careem

 

 

 

காத்தான்குடி 04ம் குறிச்சி மத்திய வீதியைச் சேர்ந்த கலந்தர்லெப்பை பர்மிலா பானு என்பவரால் காத்தான்குடி 05ம் குறிச்சி, டாக்டர் அகமட் பரீத் மாவத்தையைச் சேர்ந்த அப்துல் சலாம் முஹம்மது சில்மி என்பவருக்கு எதிராக காத்தான்குடி காதி நீதிமன்றத்தில்; 01644/F எனும் இலக்கத்தில் பஸ்ஹு விவாகரத்து வழக்கொன்று வைக்கப்பட்டுள்ளது.

தனது கணவர் பாலியல் உறவு கொள்வதற்கு ஆண்மையற்றிருப்பதாகக் கூறியே தனக்கு பஸ்ஹு விவாக விடுதலை வேண்டும் எனக்கோரி வாதி, இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

எனினும் வழக்கு விசாரணையின்போது, தான் எந்தவிதமான ஆண்மைக் குறைபாடுகளும் அற்றவராக இருப்பதோடு, கடந்த 3 மாதங்களாக மனைவியுடன் உறவு கொள்வதற்குத் தான் முயற்சித்து அவரை அழைத்து வருவதாகவும், அவர்தான் அதற்கு இணங்கி தன்னுடன் உறவு கொள்ள வருவதாக இல்லை என்றும் கணவரான பிரதிவாதி காழி நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

இந்தத் தம்பதிகளுக்கு 12 வயதிலும், 6 வயதிலுமாக இரண்டு பிள்ளைகள் இருப்பதோடு, சமீபத்தில் 3வது பிள்ளை அபேசனாகிப் போனதாகவும் நீதிமன்றத்தில் பிரதிவாதியால் தெரிவிக்கப்பட்டு, மனைவி கோரியுள்ளபடி பஸ்ஹு விவகாரத்துச் செய்ய வேண்டாம் எனவும் காதி நீதிபதி மௌலவி அல்ஹாஜ் எஸ்.எம். அலியார் (பலாஹி)யிடம் வேண்டப்பட்டுள்ளது.

மேலும், தனது குடும்பத்தைப் பிரித்துச் சீரழிக்க வேண்டாமென்றும், தான் மனைவி மக்களுடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் கணவன் காதி நீதிபதியிடம் பகிரங்கமாகவும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

எனினும், அவரது கோரிக்கைகள் எதனையும் கவனத்திற் கொள்ளாத காதி நீதிபதி அலியார் மௌலவி, அன்றைய தினமே குறித்த பெண் கேட்டுக் கொண்டவாறு பஸ்ஹு விவகாகரத்துச் செய்து தீர்ப்பறிக்கையையும் எழுதி அதில் கையொப்பங்களையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, மத்தியஸ்தர்களாக முன்னாள் காதி நீதிபதி அல்ஹாஜ் எம்.எம்.எம். மஹ்றூப் கரீமும், நிஹாறா, சம்லா, மஃறபின் ஆகியோரும் காதி நீதிமன்றத்தில் பிரசன்னமாகி இருந்துள்ளனர்.

காதி நீதிபதியின் இத்தீர்ப்பில் அதிருப்தியடைந்த பிரதிவாதியான கணவர், இது குறித்து 03.03.2016ம் திகதியன்று காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் திருமண நல்லிணக்க சபைக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.

ABM.-Sadikeen1இவரது முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட கா.ப.மு.நி.ச.வின் திருமண நல்லிணக்க சபைச் செயலாளரான அல்ஹாஜ் ஏ.எம். சாதிக்கீன், இம்முறைப்பாடு தொடர்பாக ஓர் சுமூகமான கலந்துரையாடலை நடாத்துவதென சபை தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்து, 09.04.2016 சனிக்கிழமை காலை 09:30க்கு சம்மேளன கேட்போர் கூடத்தில் நடைபெறும் இக்கலந்துரையாடலுக்கு சமூகமளிக்குமாறு பிரதிவாதியான கணவரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அக்கலந்துரையாடலிலும், கணவரின் ஆண்மைத்தன்மை பற்றிப் பிரஸ்தாபிக்கப்பட்டு, அதனை சபை உறுப்பினர் ஒருவருடன் சென்று தகுதிவாய்ந்த வைத்தியர் ஒருவரைச் சந்தித்து அறிக்கையொன்றைப் பெற்று வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அக்கணவரும், சபை உறுப்பினர் ஒருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற டாக்டர். மார்க்கண்டு திருக்குமார் என்பவரிடம் சென்று ஆண்மைப் பரிசோதனை செய்துள்ளனர். இப்பரிசோதனையின் பின்னர் குறித்த டாக்டர் பரிசோதனை அறிக்கையொன்றையும் வழங்கியுள்ளார். அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

திரு. ஏ.எஸ்.எம். சில்மி (39 வயது) தொடர்பாக: இவர் ஒரு திருமணமான மனிதர் என்பதுடன், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவரின் பாலியல் வீரியம் தொடர்பாக மதிப்பீடு செய்யுமாறு இணக்க சபை கோருவதால் வரவழைக்கப்பட்டார். (இவரின் மனைவியின் வேண்டு கோளின் பிரகாரம்)
அவரின் பாலியல் நிலைமை சாதாரணமாக உள்ளதுடன், அவரின் ஆணுறுப்புக்களும் சாதாரணமாக உள்ளது. இவரின் பாலியல் வீரியம் தொடர்பாக எவ்வித குறைபாடுகளுமில்லை. அவர் சாதாரணமான உறவை மனைவியுடன் வைத்துக் கொள்ளலாம் – என்று உறுதிப் படுத்தியுள்ளார்.

இந்த அறிக்கையைப் பெற்றுக்கொண்டு கா.ப.மு.நி.சவின் திருமண நல்லிணக்க சபையை குறித்த கணவர் அணுகியபோது, அவர்கள் இவரது ஆட்சேபனை முறைப்பாட்டை காதி நீதிபதியிடம் முன்னெடுத்துச் சென்று இவரின் குடும்ப வாழ்க்கையை நல்லிணக்கப்படுத்தி வைக்க முயற்சிக்காமல் பொறுப்பற்றவகையில் புறந்தள்ளியிருப்பதாக விசனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, காதி நீதிபதி மௌலவி அல்ஹாஜ் எஸ்.எம். அலியார் (பலாஹி), முன்னாள் காதி நீதிபதி அல்ஹாஜ் எம்.எம்.எம். மஹ்றூப் கரீம், காதி நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்த பெண்கள் அமைப்பு மத்தியஸ்தர்களான நிஹாறா, சம்லா, மஃறபின் போன்றவர்களிடமும், காத்தான்குடி ப.மு.நி.ச. இன் திருமண நல்லிணக்க சபைச் செயலாளர் அல் ஹாஜ் ஏ.எம். சாதிக்கீன் உள்ளிட்ட அச்சபையிலுள்ள உறுப்பினர்களிடமும், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் இப்பிரதேசத்திலுள்ள இஸ்லாமிய தஃவா அமைப்புக்களிடமும் ‘வார உரைகல்’ எழுப்புகின்ற கேள்விகளாவன:

(1) இஸ்லாம் மார்க்கத்தில் கணவரை பஸ்ஹு விவாக ரத்துச் செய்யும் உரிமை மனைவிக்கு எந்தெந்தக் காரணங்களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது?

(2) குறித்த கணவனுக்கு ஏற்கனவே 12 மற்றும் 6 வயதுகளைக் கொண்ட இரண்டு பிள்ளைகள் உயிருடன் இருக்கும் நிலையிலும், சில மாதங்களுக்கு முன் மூன்றாவது பிள்ளை அபேசன் ஆகியுள்ள நிலையிலும் இந்த மூன்று கர்ப்பங்களும் அந்த மனைவிக்கு யாரால் உண்டானது என்பதை சம்பந்தப்பட்ட நீதிமான்களும், மத்தியஸ்தர்களும் கண்டறிந்தார்களா?

(3) கணவனுக்கு ஆண்மையீனம் இருப்பதாக மனைவி கூறிய கூற்றை மட்டும் அடிப்படையாக வைத்து இந்தத் திருமணத்தை பஸ்ஹு விவாகரத்து செய்வதாக காதி நீதிபதி தீர்ப்புச் செய்ததே சரியென்றிருந்தால், கா.மு.ப. நி.ச. இன் திருமண நல்லிணக்க சபை ஏன் கணவனின் ஆட்சேபனை முறைப்பாட்டைப் பொறுப்பேற்று அவரது ஆண்மையைப் பரிசோதித்து அறிக்கையையும் பெற்று வருமாறு கோர வேண்டும்?

(4) அவ்வாறு கோரிய கா.மு.ப.நி.ச.இன் திருமண நல்லிணக்க சபை, உரியவரால் சமர்ப்பிக்கப்பட்ட பரிசோதனை அறிக்கை தொடர்பில் காதி நீதிபதிக்குரிய அறிவுறுத்தல்களை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்ட பஸ்ஹு விவகாரத்துக் கட்டளையை திரும்பப் பெறச் செய்வதற்கு முயற்சிக்காது புறந்தள்ளியது ஏன்?

(5) முஸ்லிம் விவகா, விவாகரத்துச் சட்ட விவகாரங்களில் போதிய தேர்ச்சியும், அனுபவமும் பெற்றவரான முன்னாள் காதி நீதிபதி அல்ஹாஜ் எம்.எம்.எம். மஹ்றூப் கரீம்; ஒரே நாளில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு தீர்க்கப்பட்டிருக்கும் இந்த வழக்கு விசாரணை, வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு (பஸ்ஹு விவாகரத்துக் கட்டளை), அதன் தொடராக கா.ப.மு.நி.ச.இன் திருமண நல்லிணக்க சபையால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், தகுதிவாய்ந்த வைத்தியரால் வழங்கப்பட்டுள்ள கணவனின் பரிசோதனை அறிக்கை தொடர்பாக தெரிவிக்கும் கருத்தும், நீதியும் என்ன?

இக்கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட சமூகப் பொறுப்புதாரிகள் பதிலளிப்பார்களா? அல்லது மௌனம் சாதிப்பார்களா?CIG - Aliyaar Hazrath

Advertisements
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements
%d bloggers like this: