மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்புத் தமிழகத்தில் 60வது அகவையை நோக்கி வெற்றி நடைபோடும் ‘வேர்ல்ட் பெஷன்’ ஜவுளிக்களஞ்சியம்

w-1

மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மாநகருக்கு வருகை தருவோர், கோட்டைமுனைப் பாலத்தை அடைந்ததும் அவர்களை முகமன் கூறி வரவேற்கும் ஓர் பிரபல்யமான கேந்திர வர்த்தக நிலையமாக அக்காலத்தில் திகழ்ந்த ஒரு வர்த்தக நிறுவனம், ‘பெஷன் ஹவுஸ்’ என்பதை அத்தனை இலகுவாக எவராலும் மறந்து விட முடியாது.

Ramzan-Nots-2016-New

1960களில் மட்டக்களப்புத் தமிழகத்தில் சுமாரான ஜவுளி நிலையமாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனமானது, இன்று அரை நூற்றாண்டைத் தாண்டி 60வது அகவையை நோக்கி வீறு நடைபோட்டு வருவதுடன், தனது நீண்டகால ஜவுளி வர்த்தகத்துறையில் அடையப்பெற்ற ஆழமான அனுபவங்களினதும், விசுவாசமிக்க வாடிக்கையாளர்களினதும் பெறுபேறாக இன்று அதே மட்டக்களப்பு மாநகரில் ‘வேர்ல்ட் பெஷன்’ எனும் பெயரில் மூன்றடுக்குத் தளத்தையும், விசாலமான காட்சியறைகளையும் கொண்ட மாபெரும் ஜவுளிக் களஞ்சியமாக பரிணாமம் பெற்று விளங்குகின்றது.

w-2

முற்றிலும் குளிரூட்டப்பட்ட நிலையில் இதமான சுகந்தம் கமழும் இந்த ‘வேர்ல்ட் பெஷன்’ ஜவுளிக் களஞ்சியத்தில், தொட்டில் குழந்தைகள் தொடக்கம்  வீட்டில் ஓய்வு பெற்றிருக்கும்  முதியோர் வரையிலான ஆண் – பெண் இரு பாலரின் எல்லா வயதினருக்கும் ஏற்றதாக இன்றைய நவீன உலகில் அன்றாடம் அறிமுகமாகி வரும் புதிய புதிய வடிவங்களிலான வகை தொகையற்ற ஆடையணிகள் வெகுசீராகவும், பல்வேறு பிரிவுகளாகவும் வகைப்படுத்தப்பட்டு தமது வாடிக்கையாளர்கள் இலகுவாகத் தெரிவு செய்யும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

w-14

‘நேர்மையான ஒரு வர்த்தக நிறுவனத்திற்கு அதன் வாடிக்கையாளர்களே நிரந்தரமான அடிப்படை மூலதனமாகும்’ எனும் தமிழகப் பேராசான் அப்துர் றஹீம் அவர்களின் மங்காத மணிவாக்கிற்கு அமைய, போட்டிகள் நிறைந்துள்ள இன்றைய வர்த்தகச் சந்தையில் தனக்கென்றே தனியுரித்தான அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய பரந்த விரிந்த நிரந்தரமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஒரே நிறுவனமாக மட்டக்களப்பு ‘வேர்ல்ட் பெஷன்’ ஜவுளிக் களஞ்சியம் திகழ்கின்றது.

w-3

வாடிக்கையாளர்களின் மனமறிந்தும், அவர்களின் பொருளாதார நிலையறிந்தும் பரிவான வரவேற்பு உபசரணைகளுடன் தரமான பருத்தி, பட்டு, நைலோன், காக்கி, சில்க் மற்றும் தங்க – வெள்ளி ஜரிகை வேலைப்பாடுகள் அமைந்த ஆடையணிகளை மங்காத நம்பிக்கையுடன் மனங்கொண்டு வழங்குவதில் மட்டக்களப்புத் தமிழகத்தில் மக்களின் மனமுவர் நிலையமாக ‘வேர்ல்ட் பெஷன்’ ஜவுளிக்களஞ்சியம் உயர்ந்து நிற்கின்றது.

w-15

அன்றாட உழைப்பாளிகள் முதல் அரச உயர் அதிகாரிகள் வரை எல்லாத் தரப்பினரும் ‘எந்த வகையிலும் நாம் ஏமாற்றப்பட மாட்டோம்’ என்கிற உயர்ந்த நம்பிக்கையுடன் தமது பாதங்களை முன்னோக்கி நகர்த்தி வரும் அதீத ஈர்ப்புடைய நிறுவனமாகவும் ‘வேர்ல்ட் பெஷன்’ ஜவுளிக்களஞ்சியம் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளது.

w-4

‘ஆள்பாதி ஆடைபாதி’ எனும் நம் தாய்த்தமிழ் மொழியின் காலத்தால் அழியாத வாசகத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஏராளமான ரகங்களில், வடிவங்களில், பொருத்தமான அளவுகளில் தைக்கப்பட்ட ‘ரெடிமேட்’ ஆடைகளும், தைக்கப்படாத துணி வகைகளும் மட்டக்களப்பு ‘வேர்ல்ட் பெஷன்’ ஜவுளிக் களஞ்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால், வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு, ‘இவற்றில் எவற்றை நாம் தெரிவு செய்வது?’ என்கிற பிரமிப்பு தானாகவே அவர்களுக்குள் ஏற்படுவதை  இவர்களால் தவிர்க்க முடியாதிருக்கின்றது.

w-16

உலக நாகரீகமானது, இன்று வினாடிக்கு வினாடி, மணிக்கு மணி ‘ஜெட்’ வேகத்தில் முன்னேறி வருகிறது. இன்று நம்மிடையே அறிமுகமாகும் புதிய கண்டுபிடிப்புகளும், வடிவமைப்புகளும் நாளை மேலதிக நவீனமயப்படுத்தல்களுடன் புதிய நாகரீகமாக மெருகேற்றப்படுகிறது.

w-5

அந்த வகையில் உலகின் பல்வேறு வளர்முக நாடுகளிலுமுள்ள பிரபல ஜவுளி வர்த்தக – உற்பத்தி நிறுவனங்களுடன் இடைத்தரகர்களற்ற நேரடித் தொடர்புகளைக் கொண்டுள்ள மட்டக்களப்பு ‘வேர்ல்ட் பெஷன்’ நிறுவனத்தினர், மிகத் துரிதமாக புத்தம் புதிய வடிவமைப்புக்களுடன் கூடிய ஆடை அணிகலன்களை மட்டக்களப்புத் தமிழகத்தில் பரந்து வாழும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் பௌத்த சமூக மக்களுக்காக இறக்குமதி செய்து தமது களஞ்சியத்தில் புத்தம் புதிதாகக் காட்சிப்படுத்தி சந்தைப்படுத்தியும் வருகின்றனர்.

w-17

குறிப்பாக ஜவுளி வர்த்தகத் துறையில் ஆசியாவில் புகழபெற்ற இந்தியா, சீனா, தாய்லாந்து, பேங்கொக், சிங்கப்பூர், மலேஷியா முதலான நாடுகளிலிருந்து கண்ணையும், கருத்தையும் கவரத்தக்க பலவகையான ஆடையணிகளை நேரடியாகத் தருவிக்கின்றனர், மட்டக்களப்பு ‘வேர்ல்ட் பெஷன்’ ஜவுளிக்களஞ்சிய நிறுவனத்தினர்.

w-6

நம் நாட்டில் வாழும் நால்வகை மதங்களின் கலசார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில், அவர்களின் பெருநாட்கள், சிறப்புப் பண்டிகைக் காலங்கள் போன்றவற்றுக்கும், அம்மக்களின் திருமண வைபவங்கள், பிறந்த நாள் விழாக்கள், பூப்பு நீராட்டு நிகழ்வுகள், சமயத் திருவிழாக்கள் உள்ளிட்ட அன்றாட நடைமுறை வாழ்க்கைத் தேவைக்குமான கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட மெச்சத்தக்க ஆடை அணிகலன்களை மட்டக்களப்பு ‘வேர்ல்ட் பெஷன்’ ஜவுளிக் களஞ்சியத்தில் பார்வையிடலாம்.

w-20

ஆண்களுக்கான சாரம், வேஷ்டி, ஷேர்ட், பெனியன், ட்ரௌஸர், ‘T’ ஷேர்ட் மற்றும் அவற்றுக்கான துணி வகைகளும், பெண்களுக்கான சாரி, சல்வார் கமீஸ், சோலி கிட், சாரா கிட் மற்றும் அவற்றுக்கான துணி வகைகளும், சிறுவர் சிறுமியருக்கான அளவான, திரளான, நேர்த்தியாகத் தைக்கப்பட்ட ஆடைகளையும் மட்டக்களப்பில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட ‘வேர்ல்ட் பெஷன்’ மூன்றடுக்கு ஆடையகம் தன்னகத்தே நிறைத்திருக்கின்றது.

 

w-7

விஷேடமாக திருமண பந்தத்தில் நுழைகின்ற மணமகன் மற்றும் மணமளுக்கேற்ற வண்ணமயமான பிரமிக்கத்தக்க வேலைப்பாடுகளுடன் கூடிய கூறைச் சாரிகள், பளபளப்பான கலர்களிலான கற்கள் பதிக்கப்பட்ட Stone Work  மற்றும் சீகுயீன்ஸ் ஜரிகைச் சாரிகள், கோட், சூட், குர்த்தாஸ், டை போன்ற வாழ்வின் வசந்தகாலத் தேவைக்கான ஆடையணிகளையும் ஆச்சரியப்படத்தக்க வகையில் ‘வேர்ல்ட் பெஷன்’ தன்னகம் கொண்டுள்ளது.

புதுமணக் கோலம் பூணும் திருமணவாளர்களும், அவர்களின் உறவினர்களும் தமது தேவைகளைத் தெரிவு செய்யும் வகையில் “World Fashion Wedding  Sarees Centre”  எனும் துணை நாமத்தில் ஒரு தனிப்பிரிவையே தனது மூன்றடுக்குகளைக் கொண்ட ஜவுளிக்களஞ்சியத்தில் விஷேடமாக உள்ளடக்கியுள்ளது, இந்நிறுவனம்.

w-8

அனைத்து ஆடை வகைகளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட விற்பனை விலைகளிலிருந்து 10% தொடக்கம் 40% வரையான கழிவுத் தொகைகள் வழங்கப்படுவதுடன், தமது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் விஷேட பரிசுத் திட்டங்களையும், வெகுமதிச் சான்றிதழ் வழங்கலையும் மட்டக்களப்பின் தனித்துவமிக்க ஜவுளிக்களஞ்சியமான ‘வேர்ல்ட் பெஷன்’ நிறுவனம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை, ஓட்டமாவடி, ரிதிதென்ன முதலான முஸ்லிம் பிரதேசங்களிலும், அப்பிரதேசங்களை அடுத்துள்ள முஸ்லிம் கிராமங்களிலும் வாழும் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் புனித றமழான் பெருநாளை முன்னிட்டு தற்போது விஷேட பரிசளிப்பு மற்றும் வெகுமதிச் சான்றிதழ்களை வழங்கும் திட்டமொன்றையும் மட்டக்களப்பு ‘வேர்ல்ட் பெஷன்‘ நிறுவனம் இப்போது அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

w-9

ஒரே தடவையில் 15,000 ரூபாவுக்கு மேற்பட்ட தொகைக்கு ஜவுளிக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிமிக்க அஜந்தா சுவர்க்கடிகாரம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கும் மட்டக்களப்பு ‘வேர்ல்ட் பெஷன்’ நிறுவனம், 10,000/= ரூபா தொகைக்கு மேற்பட்ட கொள்வனவாளர்களுக்கு 1,000/= ரூபா தொகையிடப்பட்ட அன்பளிப்புக் கொடுப்பனவுச் சான்றிதழையும் வழங்கி வருகின்றது.

அதேபோல் 5,000/= ரூபாவுக்கு மேற்பட்ட தொகைக்கு ஆடைகளைக் கொள்வனவு செய்யும் தமது வாடிக்கையாளர்களுக்கு விஷேட சீட்டிழுப்பொன்றில் பங்குபற்றும் சந்தர்ப்பத்தையும் மட்டக்களப்பு ‘வேர்ல்ட் பெஷன்’ நிறுவனத்தினர் வழங்கி வருகின்றனர்.

w-19

இம்மாபெரும் சீட்டிழுப்பில் தெரிவு செய்யப்படும் முதலாவது வாடிக்கையாளருக்கு அழகிய குளிர்சாதனப் பெட்டியும், இரண்டாவதாகத் தெரிவு செய்யப்படும் வாடிக்கையாளருக்கு துவிச்சக்கர வண்டியும், மூன்றாவதாகத் தெரிவு செய்யப்படும் வாடிக்கையாளருக்கு இரட்டை அடுப்புக்களைக் கொண்ட கேஸ் குக்கரும் அன்பளிப்பாக வழங்கப்படும்.

w-10

ஓரே கூரையின் கீழ் உங்களுக்குத் தேவையான அனைத்து வகை ஆடையணிகளையும் மலிவு விலைகளிலும், நம்பகத்தன்மையுடனும் மட்டக்களப்பு ‘வேர்ல்ட் பெஷன்’ ஜவுளிக் களஞ்சியத்தில் நீங்களும் கொள்வனவு செய்ய முடியும் என்பதுடன், விஷேடமாக பெண் வாடிக்கையாளர்களுக்கு பெண் பணியாளர்களைக் கொண்டு சேவை வழங்கவும்,Debit Card,  Visa,  Master,  Amex   அட்டைகள் மூலம் இலகுவாகப் பணம் செலுத்தவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

w-11

வருகை தரும் தமது வாடிக்கையாளர்கள் அவர்களின் வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறுகள் இல்லாத வகையில் நிறுத்துவதற்கு ஏதுவாக வாகனத் தரிப்பிட வசதியும், நிலத்தளத்தில்ருந்து மேல் மாடிகளுக்கு சிரமமில்லாது சாதாரணமாக ஏறிச் செல்லக்கூடியவாறு அகலமான படியமைப்பும் கொண்டதாக மட்டக்களப்பு ‘வேர்ல்ட் பெஷன்’ நிறுவனம் அமைந்திருப்பதும் இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.

w-12

தமது வாடிக்கைப் பெருமக்களை கௌரவமாக வரவேற்கின்றது…

w-18

வேர்ல்ட் பெஷன்
இல: 15,19,21 – திருமலை வீதி, மட்டக்களப்பு.
தொலைபேசி இல: 065 2224200

Advertisements
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Advertisements
%d bloggers like this: