உலகளாவிய தொழில் முனைவோர் மாநாடு 2016இற்கு உறுதியான இலங்கை பிரதிநிதிகள் குழு செல்கின்றது

IMG_9765

ஸ்டன்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள 2016ஆம் ஆண்டு உலகளாவிய தொழில் முனைவோர் மாநாட்டில் பங்குபற்றுவதற்கு அமெரிக்கத் தூதரகத்தால் அனுசரணையளிக்கப்பட்ட யசிசூரி பிறைவேட் லிமிட்டட்டின் ஸ்தாபகர் இலங்கை வடிவமைப்பாளர் யசிசூரி கிரிபண்டாரவை அமெரிக்கத் தூதுவர் அதுல் கேப் சந்தித்தார்.

அடுத்த வாரம் ஸ்டன்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள 2016ஆம் ஆண்டு உலகளாவிய தொழில் முனைவோர் மாநாட்டில் பங்குபற்றுவதற்கு இலங்கையிலிருந்து நான்கு தொழில் முனைவோருடன் இணைந்து யசிசூரி பிறைவேட் லிமிட்டட்டின் ஸ்தாபகர் இலங்கை ஆடை வடிவமைப்பாளர் யசிசூரி கிரிபண்டாரவும் அமெரிக்கத் தூதரகத்தினால் அனுசரணையளிக்கப்படவுள்ளார். 

சிலிக்கன் வெலியைச் சேர்ந்த முன்னணி தொழில் முனைவோர் மற்றும் நிறைவேற்று அதிகாரிகள் தமது அனுபவங்களையும், எண்ணங்களையும், உலகெங்கிலும் உள்ள ஏனைய தொழில் முனைவோருடன் பகிர்ந்து கொள்வதற்கான களமாக இந்த மாநாடு அமையும்.

‘பெண்கள் வெற்றி பெறும்போது, நாடு முழுவதும் வெற்றி பெறும் என நாம் அறிவோம்’ என அமெரிக்கத் தூதுவர் அதுல் கேப் தெரிவித்தார்.

‘இந்த சந்தர்ப்பங்களை பரவலாக்குவதில் பெண் தொழில் முனைவோர் முக்கிய பங்கினை வகிக்கின்றனர்’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஓபாமாவினால் 2010ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 2016ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தொழில் முனைவோர் மாநாடு 170 நாடுகளைச் சேர்ந்த 700 தொழில் முனைவோரினை உள்ளடக்கும்.

கிரிபண்டாரவுடன், ரிலாயன்ஸ் நெட்வேர்க்ஸின் பணிப்பாளர் தோபியஸ் வசந்த்குமார், ஊடக தொழில் முனைவாளர் சுஹைல் ஹிஸாம், பைட்ஸ்ரெக் ஹோஸ்டிங்கின் பணிப்பாளர் மாக்ஸ் ரணவீரகே, மற்றும் டபுள் டீ பப்ளிகேன்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளர் டினுஸ்க சந்திரசேன ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

Advertisements
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Advertisements
%d bloggers like this: