அடுத்த மூன்று தினங்களுக்குள் புதிய அரசாங்கம் அமைக்க ஐ. தே. க முடிவு!

1701285103Ranil-maithriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கூட்டணி அரசாங்கம் ஓராண்டு நிறைவை கொண்டாட இன்னும் ஒரு மாதம் உள்ளது.

ஆனால் மத்திய வங்கிக்கு புதிய ஆளுனரை நியமிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையில் இவ்வாரம் பாரதூரமான பிணக்கு ஏற்பட்டு உள்ளது.

மத்திய வங்கி ஆளுனராக பிரதி ஆளுனர் நந்தலால் வீரசிங்கவை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்து உள்ளார். ஆனால் சரித ரத்வத்தையே இப்பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிடிவாதமாக உள்ளார். சரித ரத்வத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சிரேஷ்ட ஆலோசகர் ஆவார். இதனால் இருவருக்கும் இடையில் பிரச்சினை முற்றி உள்ளது.

கடந்த புதன்கிழமை மாலை ஜனாதிபதி சிறிசேன மத்திய வங்கிக்கு சென்று இருந்தார். ஆளுனராக வீரசிங்கவை அறிவிக்கவே இவர் போயிருந்தார். ஆனால் இதை அறிந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஆளுனர் அர்ச்சுனா மகேந்திரனையும் கூட்டி கொண்டு உடனடியாக மத்திய வங்கிக்கு ஓடோடி வந்தார். இதை அடுத்து ஜனாதிபதியின் திட்டம் முறியடிக்கப்பட்டது.

அன்றைய தினம் காலையில் பொறளையில் ஒரு கூட்டம் இடம்பெற்று இருந்தது. இதில் பேசிய ஜனாதிபதி சில மணித்தியாலங்களில் மத்திய வங்கி ஆளுனர் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்து இருந்தார். ஆனால் 48 மணித்தியாலங்கள் கழிந்து விட்டபோதிலும் இன்னும் ஆளுனர் நியமனம் இடம்பெறவில்லை.

மத்திய வங்கி ஆளுனரை நிதி அமைச்சரின் சம்மதம் இல்லாமல் ஜனாதிபதி நியமிக்க முடியாது என்று பிரதமர் ஒரு குண்டை வீசி இருக்கின்றார். ஜனாதிபதியின் முடிவு தொடர்பாக அதிருப்தி வெளியிட்ட பிரதமர் இப்பதவிக்கு சரித ரத்வத்தையே நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் உண்மையில் ஜனாதிபதிக்கு சகல நிறைவேற்று அதிகாரமும் உள்ளது. ஆனால் இந்நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்துகின்ற பட்சத்தில் கூட்டாட்சி குழம்பி விடும் என்று ஜனாதிபதி யோசித்தார்.

இருவரும் மூடிய அறைக்குள் பேசி உள்ளனர். இவரின் உத்தரவுக்கு இணங்க ஜனாதிபதி நடக்காவிட்டால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மிரட்டி உள்ளார். இதனால் எரிச்சலின் உச்சத்துக்கு போன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிந்தால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுங்கள் என்று பதிலுக்கு சவால் விட்டார்.

இந்நிலையில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முடிவெடுத்து உள்ளார். நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் கொழும்பில் தங்கி இருக்குமாறும் ஐக்கிய தேசிய கட்சி எம். பிகள் அனைவருக்கும் உத்தரவு பிறப்பித்து உள்ளார். மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஒன்றிணைந்த எதிர் கட்சியுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு புதிய அரசாங்கம் அமைக்க இணைக்கம் காணப்பட்டு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 105. இந்நிலையிலேயே ஒன்றிணைந்த எதிர் கட்சி எம். பிகளும் உள்வாங்கப்படுகின்றனர் என்றும் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு இடையில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்றும் இச்செய்திகள் கூறுகின்றன.

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: