இந்தக் கலாநிதி ஏன் இப்படி இருக்கிறார்? பகுதி 01

dr-ul-ahmath-ashraffகாத்தான்குடியைச் சேர்ந்த கலாநிதி அஹ்மத் அஷ்ரப் என்பவரின் அண்மைக்கால செயற்பாடுகள் படு முட்டாள்தனமாக இருப்பதை பொது வாழ்வில் உள்ள அனைவரும் நன்கறிவார்கள்.

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பிரச்சாரம் செய்து வரும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தையும் அதன் பிரச்சாரகர்களையும் அநியாயமாகவும் அர்த்தமற்ற வகையிலும் விமர்சிப்பதில் தனது முழு நேரத்தையும் இவர் செலவிட்டு வருகிறார்.

ஒரு கலாநிதி எப்படி இருக்க வேண்டுமோ அத்தரத்தில் கலாநிதி அஹ்மத் அஷ்ரப் என்பவர் இல்லை. இவர் அண்மைக்காலமாக முகநூலில் உமிழ்ந்து வரும் நாலாந்தர விமர்சங்களையும் கொஞ்சம் கவனத்திற் கொண்டு முடிந்தால் எழுத்து வடிவில் பதில் எழுதுங்கள்’ என சில சகோதரர்கள் கோரிக்கை வைத்ததால் இத்தொடரை நான் எழுத ஆரம்பித்தேன்.

மார்க்கப் பிரச்சாரம் செய்யும் அமைப்பை ‘கம்பனி’ என்று விமர்சித்தல்

ஒரு அமைப்பு தனக்குச் சூட்டியுள்ள பெயரைக் கொண்டு அவ்வமைப்பை அழைப்பதே உலக நியதியாகும்.

இஸ்லாத்தின் விரோதிகளால் நடாத்தப்படும் பொதுபல‌ சேனா எனும் அமைப்பைக் கூட‌ அதன் பெயரைச் சொல்லித்தான் நாமனைவரும் அழைத்து வருகிறோம்.

ஆனால் இந்தக் காலநிதி அஹ்மத் அஷ்ரபோ அல்லாஹ்வின் ஆலயமும்,  அரபிக் கல்லூரியும், குர்ஆன் மத்ரஸாவும் இணைந்துள்ள தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தை ‘கம்பனி’ என்று நையாண்டி செய்து வருகிறார்.

கொள்கை ரீதியாக எம்முடன் முரண்பட்டு நிற்கும் மெளலவி அப்துர் ரவூப் கூட தவ்ஹீத் ஜமாஅத்தை இவ்வாறு விமர்சித்ததில்லை. தவ்ஹீத் ஜமாஅத்தை வசைபாடும் தெருப் பொறுக்கிகள் கூட இப்படி தூசித்ததில்லை. ஆனால் தன்னை மெத்தப் படித்த மேதாவியாகக் காட்டிக் கொண்டு திரியும் இவர் மார்க்கப் பிரச்சாரம் செய்யும் முற்போக்கான இயக்கத்தை அடிக்கடி கம்பனி கம்பனி என்று விமர்சிப்பதிலிருந்து இவரின் தஃவா சாணாக்கியத்தை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.

இவரது விமர்சனங்கள் அறிவார்ந்த வகையில் இல்லாமல் ஏதோ நீண்ட கால வஞ்சகத்தைத் தீர்த்துக் கொள்ள வாய்ப்புத் தேடும் ரவுடியின் விமர்சனத்தைப் போல் அமைந்திருப்பதை நாம் உற்று நோக்கினால் தெரிந்து கொள்ளலாம்.

போதிய விபரமற்ற இந்தக் கலாநிதி தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தை கம்பனி என்று விமர்சிப்பதை விட, இவர் காத்தான்குடியில் துவக்கி வைத்த குல்லிய்யதுல் மனார் எனும் அரபிக் கல்லூரியை கம்பனி என்று விமர்சிப்பதே பொருத்தமானதாகும்.

அன்று தூய நோக்குடன் துவக்கப்பட்ட குல்லிய்யதுல் மனார் இன்று அரசியல்வாதிகளின் புகலிடமாக மாறியிருப்பது ஊரே அறிந்த உண்மையாகும்.

பிரபல அரசியல்வாதி சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வால் காத்தான்குடி நூதனசாலையில் சிலை வைக்கும் கொடுமை நடந்தேறிய போது இவரது அல்மனார் அறிவியற் கல்லூரி எங்கே போனது? ஒற்றை வரியிலேனும் ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டுக் கண்டித்ததா?

அல்மனாரில் உள்ள ராஷித் மண்டபத்தைப் பயன்படுத்தி ‘நூதனசாலையில் சிலை வைக்கும் நடவடிக்கை அல்லாஹ் மன்னிக்காத ஷிர்க்கிற்கு இட்டுச் செல்லும் வன்கொடுமை’ என்று ஒருயொரு கண்டன நிகழ்ச்சியேனும் நடாத்தியதா?

நூதனசாலை சிலை வைப்பைக் கண்டிப்பது ஒரு புறமிருக்க, நூதனசாலையில் சிலைகளை தூக்கி வைக்கும் நிகழ்வில் பங்கேற்ற அல்மானாரின் செயலாளர் நாயகம் மும்தாஸ் மதனியையாவது இந்தக் கலாநிதி கண்டித்தாரா?

தங்களுக்குப் படியளக்கும் அரபிகளை சொகுசாகக் கவனிப்பதிலும், அரசியல்வாதிகளை அடைகாப்பதிலும் அல்லும் பகலும் பாடுபடும் அல்மனாரை வேண்டுமானால் இவர் கம்பனி என்று விமர்சித்துக் கொள்ளட்டும்!

அதை விட்டு விட்டு, இஸ்லாமியப் பிரச்சாரத்தில் யாருக்கும் வளைந்து கொடுக்காமலும், கொள்கையற்ற கோமாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து சுய மரியாதையைத் தொலைத்து விடாமலும் வீரியமாகப் பிரச்சாரம் செய்யும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தைப் பற்றிப் பேச இந்தக் கலாநிதிக்கோ அவரது வகையறாக்களுக்கோ கிஞ்சிற்றும் தகுதி இல்லை.

தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தை ‘அண்ணன் தம்பி கூட்டுக் கம்பனி’ என விமர்சித்தல்.

நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் தஃவாக் களத்தில் குடும்ப சகிதமாகப் பணியாற்றுவது எவ்வளவு இனிமையான அனுபவம் என்பது இஸ்லாம் படித்தவர்களுக்கு நன்கு தெரியும்.

எமது தஃவாப் பயணத்தில் தாய், தந்தை, சகோதரர்கள், சகோதரிகள், மச்சான் மற்றும் அவரது மொத்தக் குடும்பம்; மச்சினன், மாமா, மாமி என பெருந்தொகையான குடும்ப உறுப்பினர்களும் இணைந்து செயலாற்றுகிறார்கள்.

அதிலும் குறிப்பாக எனது சொந்த சகோதரர் மெளலவி ஸைனீ அவர்கள் இஸ்லாமிய அழைப்பாளராகவே பணியாற்றி வருகிறார்.

இது இந்தக் கலாநிதிக்குப் பொறுக்கவில்லை போலும். இவரது விமர்சனத்தில் அடிக்கடி ‘அண்ணன் தம்பி கூட்டுக் கம்பனி’ என்று எழுதி வருகிறார்.

இவ்வாறு எழுதுவதில் இவருக்கு என்ன வக்கிரமோ தெரியாது?! நல்லதை ஏவி தீயதைத் தடுக்கும் தஃவாப் பயணத்தில் மூஸா (அலை) அவர்களும், ஹாரூன் (அலை) அவர்களும் சகோதரர்களாக இருக்கவில்லையா?

அகிலத்தாருக்கு அருட்கொடையாக வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் மாமா மருமகனாக இருக்கவில்லையா?

எழுத்து வடிவிலும், பேச்சு வடிவிலும் இஸ்லாமிய அறிவுப் பொக்கிஷங்களைப் பாதுகாத்த இமாம்களில் தந்தையும் மகனும் இருக்கவில்லையா?

குடும்பமாக தஃவா செய்தால் அதை அல்லாஹ் ஏற்கமாட்டானா? அப்படி இஸ்லாத்தில் எங்காவது சொல்லப்பட்டுள்ளதா?

ஒரு குடும்பத்தில் ஒருவர் ஆலிமாகி அழைப்புப் பணி செய்தால் ஏனையவர்கள் அனைவரும் காபிர்களாக மாற வேண்டுமா?

இன்னும் சொல்லப்போனால் கலாநிதி அஹ்மத் அஷ்ரபுக்கு ‘மாஸின்’ எனும் பெயரில் ஒரு மகன் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் சில வருடங்களில் அவர் காத்தான்குடி தஃவாக் களத்திற்கு வந்து விடுவார் என நினைக்கிறேன்.

அப்போது கலாநிதியும், அவரது மகன் மாஸினும் இணைந்து தஃவா செய்தால் நாம் அதனை ‘அப்பா மகன் கூட்டுக் கம்பனி’ என்று அழைக்கலாமா?

விவரங்கெட்ட கலாநிதியின் விவேகமற்ற விமர்சனத்தை எண்ணி அழுவதா? சிரிப்பதா? எனத் தெரியவில்லை!

வல்ல அல்லாஹ்வின் பேரருளால் நானும் எனது சகோதரனும் இணைந்து தஃவா செய்யும் பாக்கியத்தை பலமுறை எனது தாய் சிலாகித்துச் சொல்லி துஆ செய்ததை இந்த இடத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

குடும்பமாக தஃவா செய்வதில் உள்ள இனிமை அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். மாறாக உள்நாட்டில் தஃவாவின் தேவைப்பாடுகள் நிறைந்திருந்தும் அதையெல்லாம் புறக்கணித்து விட்டு அரபிகளுக்கு பாடம் எடுக்கும் சொகுசு தாயிகளுக்கு ஒரு போதும் அந்த இன்பம் புரியப் போவதில்லை!

புரிந்தாலும் அவர்களின் உள்ளங்களில் குடிகொண்டிருக்கும் காழ்ப்புணர்வானது யதார்த்தத்தை ஒப்புக் கொள்ள விடப் போவதுமில்லை.

தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தமட்டில் அதன் பிரச்சாரகர்களாக‌ மொத்தம் நான்கு உலமாக்கள் செயற்படுகிறார்க‌ள். அவர்களில் ஒருவர் மாத்திரம் தான் எனது சகோதரர். எனையோர் குடும்ப உறவினர்கள் அல்ல.

பலதரப்பட்ட உலமாக்கள் பணியாற்றும் ஒரு ஜமாஅத்தை கண்ணை மூடிக் கொண்டு இந்தக் கலாநிதி ‘அண்ணன் தம்பி கூட்டுக் கம்பனி’ என்று விமர்சிப்பது இவரது அறிவீனத்தையே பறைசாற்றி நிற்கிறது.

அல்லாஹ்வின் மார்க்கத்தை தூய வடிவில் பிரச்சாரம் செய்யும் தஃவாக் களத்தில் ஒருவருக்கு தாழ்வு மனப்பாங்கு வந்தால் அவர் எப்படியான அவஸ்த்தையைச் சந்தித்து எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்வார் என்பதற்கு நிகழ்கால உதாரணமே இந்தக் கலாநிதி அஹ்மத் அஷ்ரப்தான் என்றால் மிகையில்லை (தொடரும் இன்ஷா அல்லாஹ்)

மெளலவி ஸஹ்றான் பின் ஹாஷிம்
அழைப்பாளர், தேசிய தவ்ஹீத் ஜமாஅத் – இலங்கை
04.07.2016

Advertisements
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Advertisements
%d bloggers like this: