கஞ்சிக்கோப்பைக்குள் தலையை கவிழ்த்த பிரபல தௌஹீத்(?) பிரச்சாரகர்

UL Ahmath Asraff & Fasal Jiffry-AL. முஹம்மது நியாஸ்:

கடந்த 02. 07. 2016 அன்று காத்தான்குடி கடாபி ரெஸ்ட் இன்னில் கலாநிதி UL. அஹ்மத் அஷ்ரப் அவர்களினால் இப்தார் நிகழ்வுடன் இணைந்த ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்ட தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் சிரேஷ்ட நிருவாகியும். காத்தான்குடி மீடியா போரத்தினுடைய துணைத்தலைவருமான MFM. பஸால் ஜிப்ரி நடந்து கொண்ட முறை தொடர்பாக; தாருல் அதர் அமைப்பின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் ஏனைய ஏகத்துவ அமைப்புக்கள் சார்ந்த நபர்களிடத்தில் பாரியளவிலான அதிருப்தி நிலையொன்று தோன்றியுள்ளது.

அதாவது, கலாநிதி அஹ்மத் அஷ்ரப் ஏற்பாடு செய்த  இந்த ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது, காத்தான்குடி பிரதேசத்தில் இரண்டு பிரபலமிக்க முன்னணி ஏகத்துவ அமைப்புக்களான தாருல் அதர் அத்தஅவிய்யா மற்றும் தேசிய தௌஹீத் ஜமாஅத் ஆகிய அமைப்புக்களால் பிரச்சாரம் செய்யப்படுகின்ற, நடைமுறைப்படுத்தப்படுகின்ற தலைப்பிறை விவகாரம் பேசுபொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது கலாநிதி அஹ்மத் அஷ்ரப், ”இவ்விரு அமைப்புக்களும் பிரச்சாரம் செய்து நடைமுறைப்படுத்தி வருகின்ற சர்வதேசப்பிறை என்னும் கோட்பாடானது இஸ்லாமிய மார்க்கத்திற்கு முற்றிலும் முரணானது” என்றும், ”அது நபிகளாரின் காலத்திலோ, பிந்தி வந்த ஸஹாபாக்கள், ஸலபுகளின் காலத்திலோ இருக்காத புதுமையான வழிகெட்ட அனுஷ்டானம்” என்றும், ‘இந்த வழிகேட்டை இப்பிரதேசத்திலிருந்து களைவதற்கு ஊடகங்கள் துணை நிற்கவேண்டும், அழுத்தம் கொடுக்க வேண்டும்” எனவும் தன்னுடைய விமர்சனத்தையும் வேண்டுகோளையும் மிகவும் காரசாரமான வார்த்தைகளாலும் கடுமையான சொல்லாடல்களாலும் முன்வைத்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் கலாநிதி அஹ்மத் அஷ்ரபால் வழிகேடு என்று வர்ணிக்கப்பட்ட சர்வதேசப்பிறையை சரி கண்டு அதை பின்பற்றிவருகின்ற; அதேநேரம் அந்த நிலைப்பாட்டை பிரச்சாரம் செய்து வருகின்ற ஏகத்துவ அமைப்பான தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் சிரேஷ்ட நிருவாகியும், குறித்த கலந்துரையாடலுக்கு கலாநிதி அஹ்மத் அஷ்ரபால் அழைப்பு விடுக்கப்பட்ட ஒரு ஊடகவியலாளராகவும் இந்த பஸால் ஜிப்ரி அந்த சபையில் கையில் ஏந்திய கமராவோடு அமர்ந்திருக்கிறார்.

இருந்த போதிலும் கலாநிதி அஹ்மத் அஷ்ரப் ‘சர்வதேசப்பிறை என்பது வழிகேடு’ என்று கடுமையான தொனியிலமைந்த விமர்சனத்தை அந்த சபையில் முன்வைத்தபோது; தான் ஒரு ஊடகவியலாளராக மட்டுமன்றி சர்வதேசப்பிறையை ஏற்று நடைமுறைப்படுத்துகின்ற ஒரு ஏகத்துவவாதியாக, தாருல் அதர் அமைப்பின் சிரேஷ்ட நிருவாகியாக கலாநிதி அஷ்ரபுடைய அந்த விமர்சனத்திற்கு அவ்விடத்தில் எந்தவொரு எதிர்கேள்வியையோ, அதிருப்தியையோ, மாற்றுக்கருத்தையோ சிறிதளவுகூட வெளியிடாமல் இந்த பஸால் ஜிப்ரி இறுதி வரைக்கும் நிரந்தர மௌனம் காத்த செயற்பாடானது மேற்குறித்த இரண்டு முன்னணி தஃவா அமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் மத்தியில் மிகப்பாரியளவிலான அதிருப்தியையும் விசனத்தையும்  தோற்றுவித்துள்ளது.

அதேநேரம் கடந்த காலங்களில் தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் உலமாக்களாக, நிருவாகிகளாக கொள்கைப்பற்றுறுதியுடன் பணியாற்றி வந்த பலரும் சமூக மட்டத்திலான ஏனைய அமைப்புக்களில் உறுப்புரிமை; தலைமைத்துவப்பொறுப்புக்கள் கிடைத்தவுடன் தனக்கு மார்க்க ரீதியான வழிகாட்டல்களை வழங்கிய தாருல் அதர் அமைப்பை நட்டாற்றில் விட்டு விட்டு அப்பதவிகளுக்கும், சமூக அந்தஸ்த்துக்களுக்கும் அடிமைப்பட்டு கொள்கையை துறந்து சோரம்போன துரோகக்கறை படிந்த வரலாறுகளும் இல்லாமல் இல்லை.

அதேபோன்றுதான் சமகாலத்திலும் காத்தான்குடி மீடியா போரத்தில் உபதலைவர் என்ற பதவி கிடைப்பெற்றதும் இந்த பஸால் ஜிப்ரிகூட அந்த பதவி மீதுள்ள மோகத்தினால் இவ்வாறான பகிரங்க களமொன்றில் தான் சரிகண்ட,  தான் நடைமுறைப்படுத்தி வருகின்ற கொள்கையை உறுதியாக நிலைநாட்டுவதற்கு திராணியில்லாமல் மௌனவிரதம் அனுஷ்டித்தாரா? என்றும் ஏகத்துவவாதிகள் மத்தியில் பலமான சந்தேகம் இவர் மீது எழுந்துள்ளது.

மாத்திரமல்லாது, கலாநிதி அஹ்மத் அஷ்ரப் வழங்கிய கஞ்சிக்கோப்பைக்கும் பாலூதா பானத்திற்கும் பல்லை இழித்துக்கொண்டு அந்த கலாநிதியின் கடைந்தெடுத்த வன்மத்தை காதில் வாங்கியும் அதற்காக தன்னுடைய எதிர்ப்பை அல்லது அதிருப்தியை வெளியிடாமல் கனத்த மௌனத்தின் மூலமாக அங்கீகாரமும் கொடுத்துவிட்டு,  ஒட்டுமொத்த ஏகத்துவ சமூகத்தின் சுய கௌரவத்தையும் ஒரு கஞ்சி கோப்பைக்காக அவ்விடத்தில் பேரம் பேசி, தாரைவார்த்து விற்றுவிட்டு நாளை சர்வதேசப்பிறை அடிப்படையில் பெருநாள் தொழுகை நடைபெறவிருக்கின்ற கடற்கரைத்திடலில் புத்தாடையுடன் வந்துநின்று எந்தமுகத்துடன் இவர் கொள்கைவாதிகளுக்கு ஸலாம் கூறுவார்? வாழ்த்துரைப்பார் ??என்ற காட்டமான கேள்வியும் இப்போது ஏகத்துவவாதிகளின் மத்தியில் ஏறுக்கு மாறாக எழ ஆரம்பித்துள்ளது.

அத்தோடு இந்த ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்று முடிந்து முப்பத்தியாறு மணித்தியாலங்கள் முழுமையாக நிறைவுற்று இக்கட்டுரையை எழுதி பதிவேற்றம் செய்கின்ற இறுதி நிமிடம் வரைக்கும் அது தொடர்பான எந்தவொரு செய்திக்குறிப்புக்களோ, துண்டுச்செய்திகளோ அல்லது கலாநிதியின் கருத்துக்கள் மீதான விமர்சனங்களோ பஸால் ஜிப்ரியை இயக்குநராகக் கொண்டு இயங்கிவருகின்ற ‘ஸாஜில் நியூஸ்’ இணையதளத்தில் வெளியிடப்படவில்லை என்பது இவ்விடத்தில் விஷேடமாக குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

அப்படியானால் இந்த பஸால் ஜிப்ரி ஒரு ஊடகவியலாளராக, காத்தான்குடி மீடியா போரத்தின் உபதலைவராக, சர்வதேசப்பிறையை சரிகண்டு நடைமுறைப்படுத்தும் ஒரு ஏகத்துவாதியாக ‘எதனை சாதிப்பதற்காக அந்த நிகழ்வுக்கு கமராவும் கையுமாக நேரகாலத்துடன் சமூகமளித்தார்?’ என்ற நியாயமான கேள்வி இங்கே ஏகத்துவ சமூகத்தின் மத்தியில் பலமாகவே எழுகிறது.

பதவிக்காகவும், சமூக அந்தஸ்த்துகளுக்காகவும் எந்தவொரு இடத்திலும் கொள்கையை களைந்து எறியக்கூடிய இந்த இரட்டைமுக வேடதாரியான பஸால் ஜிப்ரியுடைய யதார்த்தமான சுய ரூபத்தை பற்றி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரே நாம் மிகத்தெளிவான முறையில் ஆதாரபூர்வமாக ஊடகங்கள் வாயிலாக எடுத்துக்கூறியிருந்தோம்.

ஆனாலும் ஏகத்துவ சமூகம் இவருடைய வெளிப்பாவனையை மாத்திரம் கவனத்தில் கொள்வதன் பலனாக தன்னுடைய உண்மை முகத்தை இந்த பஸால் ஜிப்ரி மிகவும் இலாவகமாகவே மறைத்து வந்தார். ஆனாலும் அழ்ழாஹுத்தஆலா புனிதமான இந்த மாதத்தில் இவ்வாறானதொரு பகிரங்கமான சபையில் இந்த இரட்டைமுக வேடதாரியின் உண்மை முகத்தை வெளிச்சமிட்டுக்காட்டிவிட்டான். (அல்ஹம்துலில்லாஹ்)

ஏகத்துவ சமூகத்தை பொறுத்தவரைக்கும் அதற்கு எதிரிகளை விடவும் துரோகிகள், எட்டப்பர்களே அதிகம் என்பதை நாம் கடந்தகால வரலாறுகள் வாயிலாக தெளிவாகவே கண்டு வந்துள்ளோம். அந்த வகையில் இந்த பஸால் ஜிப்ரியை ஊடகக்குழுவின் தலைவராகவும் சிரேஷ்ட நிருவாகியாகவும் கொண்டியங்கி வருகின்ற தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பானது இவருடைய இந்த சந்தர்ப்பவாத செயற்பாடுகளில் ஒரு தீர்க்கமான நிலைபாட்டை மிகவும் துரிதமாகவே எடுக்கவேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு இப்போது தள்ளப்பட்டுள்ளது.

அதேநேரம் ஏகத்துவ பிரச்சார அமைப்பான தாருல் அதர் அத்தவிய்யாவின் அதிகாரபூர்வ செய்திச்சேவை இணையத்தளமான ஸாஜில் நியூஸ் இணையத்தளம் கூட ஏகத்துவ சமூகத்தின் குறைகளை, தேவைகளை, பிரச்சாரங்களை வெளிப்படுத்துவதற்கு பதிலாக ஏகத்துவ சமூகத்திற்கு எதுவித பயனுமில்லாத, ஏகத்துவ சமூகத்தின் எதிரிகளுடைய செய்திகளுக்கும் ஆக்கங்களுக்குமே முக்கியத்துவம் அளித்து வருவதாக மிக நீண்டகாலமாகவே பலராலும் உணரப்பட்டு வருகிறது.

அதற்கு காரணம் இந்த பஸால் ஜிப்ரி காத்தான்குடி மீடியா போரம் என்னும் பலதரப்பட்ட வழிகேட்டுக்கொள்கையாளர்களையும் தன்னகத்தே கொண்டுள்ள அமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட காரணத்தினால் ஏகத்துவக் கொள்கையை இடங்களுக்கேற்றவாறு மறைக்க வேண்டிய அல்லது துறக்க வேண்டிய நிர்ப்பந்தநிலை அவருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் பலராலும் சுட்டிக்காட்டப்படுகிறது.

எனவே சமகாலத்தில் ஏகத்துவவாதிகள் என தங்களை அடையாளப்படுத்திக்கொள்வோரிடமிருந்தே ஏகத்துவ சமூகத்திற்கு பல்வேறுபட்ட இன்னல்களும் அநீதிகளும் இழைக்கப்பட்டு வருகின்ற காரணத்தினால் ஒரு கஞ்சிக்கோப்பையையும், சில புதிய நபர்களையும் சபையில் கண்ட மறுகணமே தன்னுடைய கொள்கையை துறந்து, மறந்து வாயை மூடி, தலையை கவிழ்த்துக்கொள்கின்ற இந்த பஸால் ஜிப்ரி போன்ற இரட்டை முகத்தவர்கள் துல்லியமானமுறையில் அடையாளம் காணப்பட வேண்டும் எனும் நன்னோக்கிலேயே மேற்குறித்த விடயங்கள் விலாவாரியாக முன்வைக்கப்பட்டுள்ளன என்பதை இறுதியாக பதிவு செய்து கொள்கிறேன்.

Advertisements
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Advertisements
%d bloggers like this: