ஐ.தே.கட்சியின் காத்தான்குடி மத்திய செயற்குழுக் கூட்டங்களில் எம்.எஸ்.எம். ஷாபி அவர்களையும் அழைப்பதாகத் தீர்மானம்!

Shafi-&-Kabeer-Hasim-horz-1ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் கபீர் ஹாஷிம் அவர்களினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐ.தே.கட்சியின் வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையில் செயற்பாட்டாளராக நியமனமிக்கப்பட்டுள்ள எம்.எஸ்.எம். ஷாபி அவர்களையும் எதிர்வரும் காலங்களில் தமது மத்திய செயற்குழுக் கூட்டங்களுக்கு சிறப்பு அதிதியாக அழைப்பது என ஐ.தே.கட்சியின் காத்தான்குடி மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

KMM.-Aliyar-JPஐ.தே.கட்சியின் காத்தான்குடி மத்திய செயற்குழு, இன்று (20.07.2016) புதன்கிழமை மாலை அதன் தலைவர் கே.எம்.எம். அலியார் தலைமையில் அவரது இல்லத்தில் கூடியபோதே மேற்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் எம்.பி.ஏ. கையூம் டீயு அவர்களால் சென்ற கூட்டறிக்கை சபையில் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 05.07.2016 அன்று எச்.எம்.எம். முஸ்தபாவின் இல்லத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வுடன் கூடிய மத்திய குழுவின் பொதுச்சபைக் கூட்டம் நிறைவடையும் நேரத்தில் ஒரு தனி நபரால் அங்கு எழுப்பப்பட்ட தகாத வார்த்தைப் பிரயோகம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பகரமான நிலைமைகளுக்கு மத்திய குழு கண்டனம் தெரிவிப்பதாகவும், அக்கூட்டத்திற்கு எச்.எம்.எம். முஸ்தபாவினால் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யைச் சேர்ந்த அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் முறைகேடாக அழைப்புக்கள் விடுக்கப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவிப்பதாகவும் சபையோர் தெரிவித்த கருத்துக்களை உள்வாங்கி அக்கூட்டறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மத்திய குழுவின் பாவனைக்காக அச்சிடப்பட்ட கடிதத் தலைப்புக்கள் முடிவடையும் நிலையிலுள்ளதால் புதிய கடிதத்தலைப்புக்கள் மற்றும் உத்தியோகபூர்வ றபர் முத்திரை என்பவைகளை அச்சிட்டுப் பெறுவதாகவும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

மத்திய செயற்குழுவில் தற்போது ஏழு உறுப்பினர்கள் இருந்து வரும் நிலையில் மேலும் ஆறு சிரேஷ்ட கட்சி உறுப்பினர்களை உள்வாங்கி 13 உறுப்பினர்களாக விஸ்தரிப்பது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

ஜனநாயகக் கட்சியின் தலைவரும், பிரதேச அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்களையும், அவரது கட்சியின் முக்கியஸ்தர்களான மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஜனாப் எம்.எஸ்.எம். ஷாபி உள்ளிட்ட ஏனையோரையும் ஐ.தே.கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைத்துக் கொண்டு கட்சியை மேலும் பலப்படுத்தியமைக்காக கட்சியின் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் கபீர் ஹாஷிம் அவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதாகவும் இக்கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: