‘தன்னம்பிக்கை ஆசான் – மஸாகி’ அவர்கள் பங்கேற்கும் ‘உலக அரங்கில் நீங்கள் யார்?’ (Motivational Program..)

Masagiகாத்தான்குடி பிரதேசத்திலுள்ள இளைஞர், யுவதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் அவர்களின் கல்வி மற்றும் தொழில்சார் துறைகளில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் பிரபல ‘தன்னம்பிக்கை ஆசான் மஸாகி’ அவர்கள் கலந்து கொள்ளும் ‘உலக அரங்கில் நீங்கள் யார்?’ எனும் தலைப்பிலான சிறப்பு நிகழ்வு, எதிர்வரும் 29.07.2016 வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி இஸ்லாமிய கலாச்சார மண்டபத்தில் இரு அமர்வுகளாக நடைபெறவுள்ளது.

மாலை 04:00 மணி முதல் 06:00 மணி வரை இடம்பெறும் பெண்களுக்கான தனி அமர்வில்;

 • பிள்ளை வளர்ப்போம்.. நம்பிக்கை விதைப்போம்,
 • பெண்கள் சுயதொழிலில் சாதிக்க வேண்டுமா?,
 • உணவே நோய்.. உணவே மருந்து,
 • அன்றாட வாழ்வில் ‘இன்டர்நெற்’டின் பயன்பாடு,
 • மொபைலில் கிடைக்கும் பயன்மிகு ‘புரோக்கிராம்’கள் மற்றும்
 • சமையலில் கலக்குவது எப்படி?   ஆகிய தலைப்புக்களில் ஆசான் மஸாகி அவர்களின் தன்னம்பிக்கையளிக்கும் கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.

மாலை 07:00 மணி தொடக்கம் இரவு 10:00 மணி வரை நடைபெறவுள்ள ஆண்களுக்கான தனி அமர்வில்;

 • பாடசாலைக் கல்வியும் அனுபவக் கல்வியும்,
 • வீட்டிலிருந்தே ‘ஒன்லைனில்’ வேலை செய்ய..,
 • பிரச்சினைகளுக்கு தற்கொலை தீர்வாகுமா?,
 • சமூக வலைத்தளங்களை சிறப்பாகப் பயன்படுத்த..,
 • கஞ்சிக்கடை முதல் கம்பனி வரை சாதனை படைக்க..,
 • வியாபாரத்தில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு,
 • மின் வணிகம் (E-Commerce) என்றால் என்ன?,
 • வளர நினைக்கும் வியாபாரியின் ஆளுமைப் பண்புகள் மற்றும்
 • வாய்ப்புக்களை இனங்காண்போம்.. உருவாக்குவோம் ஆகிய தலைப்புக்களில் அன்னாரின் கருத்துக்கள் பகிரப்படும்.

இரு அமர்வுகளின்போதும் ‘தன்னம்பிக்கை ஆசான் – மஸாகி’ அவர்களின் சிறப்புக் கருத்துரைகளுடன் அதற்கேதுவான இன்டர்நெட் மற்றும் வீடியோ காட்சிகள் மூலமும் தன்னம்பிக்கையளிக்கும் விளக்கங்கள் முன்வைக்கப்படும்.

நமது பிரதேசத்தில் முதல் தடவையாக இடம்பெறவிருக்கும் ஒவ்வொருவரினதும் சுய வாழ்வின் முன்னேற்றத்திற்கும் தன்னம்பிக்கையளிக்கும் இந்த வித்தியாசமான அறிவூட்டல் கருத்தரங்கிற்கான நுழைவு அனுமதிக் கட்டணமாக, இன்றைய அன்றாட வாழ்வின் மிகச் சிறிய தொகையான 100/= ரூபா மாத்திரமே நிகழ்வின் ஏற்பாட்டாளர்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்டப நுழைவு அனுமதியை இந்நிகழ்வு இடம்பெறும் 29.07.2017 வெள்ளிக்கிழமையன்று காத்தான்குடி இஸ்லாமிய கலாச்சார மண்டப நுழைவாசலில் பெற்றுக்கொள்ளலாம்.

Advertisements
 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Advertisements
%d bloggers like this: