பொறியியலாளர் அப்துர் றஹ்மான் அடைகாத்த கூழ் முட்டை! NFGGயின் மகளிர் பிரிவு எல்லை தாண்டுகிறதா?

Group‘காத்தான்குடி ஆசிரியையால் முஸ்லிம்களின் இளவயது திருமணங்கள் மற்றும் விவாகரத்துக்கள் NGOக்களுக்கு விற்கப்படுகின்றனவா?’ எனும் தலைப்பில் எனது பிரதம உதவி ஆசிரியர் ஏ.எல். முகம்மது நியாஸ் கடந்த 20.07.2017ல் ஒரு சமூக விழிப்புணர்வு ஆக்கத்தை ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.

அவரது இவ்வாக்கம் வெளியான மறுநாள் 21ம் திகதி காத்தான்குடியில் இயங்கிவரும் ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியம் (IWARE) எனும் அமைப்பானது, குறித்த ஆக்கத்தில் ‘ஆங்கில மொழிப் புலமைவாய்ந்த ஆசிரியை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது எமது அமைப்பின் உறுப்பினரான அனீஸா பிர்தௌஸ் ஆசிரியையா?’ எனக் கேள்வியெழுப்பி இருந்ததுடன், 22.07.2017 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு தங்களுடன் கலந்துரையாட தமது அலுவலகத்திற்கு வருமாறு கேட்டு அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது.

அக்கடிதத்திற்கு பதிலளித்த முகம்மது நியாஸ், ‘நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள சந்தேகங்களை எழுப்பியுள்ள என்னுடைய மேற்படி முகநூல் பதிவானது, எனக்கு நம்பகமான நபர்கள் வழங்கிய உறுதியான தகவல்களின் அடிப்படையில் சமூக விழிப்புணர்வைக் கருதி நான் வெளிப்படுத்தியிருக்கும் ஓர் ஆரம்ப விசாரணை அறிக்கையேயாகும். இதில் சம்பந்தப்பட்ட நபர் மற்றும் அந்நபர் சார்ந்த அமைப்புக்கள் எவையென்பது குறித்து வெளிப்படையாக நான் அறிவிப்பதற்காக, இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக அறியக்கிடைத்துள்ள மேலும் பலரது தகவல்களையும், விபரங்களையும் தற்போது சேகரித்து வருகிறேன். இன்ஷா அழ்ழாஹ், அவை முழமையாகக் கிடைக்கப் பெறுமிடத்து, உரிய நபர் யார்? உதிரியாகச் செயற்படும் நபர்கள் யார்? அவர்கள் பணியாற்றும் அமைப்புக்களின் விபரங்கள் யாவை? என்பவை பற்றி வெளிப்படையாகவே நான் எனது முகநூலில் விபரமாகப் பதிவேற்றுவேன். அப்போது உரிய நபர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு அதனை முறையாக எதிர்கொள்ள முடியும் என்பதையும் தங்களுக்கு அறியத்தருகிறேன்.’ எனத் தெரிவித்து, குறித்த சந்திப்புக்கான அழைப்பை வேறு பல நியாயமான காரணங்களுக்காகவும் நிராகரித்திருந்தார்.

இதேவேளை, குறித்த IWARE அமைப்பின் உறுப்பினரான அனீஸா பிர்தௌஸ் ஆசிரியை, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கிழக்குப்பிராந்திய மகளிர் அணியிலும் உறுப்பினராக இருப்பவர் என்ற அடிப்படையில் அம்முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மானும் 21ம் திகதி  வியாழக்கிழமை மாலையில் முஹம்மது நியாஸுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, குறித்த ஆக்கம் IWARE அமைப்பையும், அனீஸா பிர்தௌஸ் ஆசிரியையும் இலக்கு வைத்து எழுதப்பட்டதா? என வினவியுள்ளார்.

அவருக்கும் மேற்கண்டவாறே பதிலளித்து தொலைபேசி உரையாடலை முடித்துக் கொண்ட முஹம்மது நியாஸ், குறித்த விடயம் தொடர்பான கள ஆய்வில் தனது கவனத்தைச் செலுத்தத்தியிருந்தார்.

இந்நிலையில் 22ம் திகதி இரவு 10:00 மணியளவில் முகநூல் நண்பர்கள் சிலரது பக்கங்களில் ‘நியாஸின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை மாத்திரமன்றி விஸமத்தனமானவையுமாகும் – IWARE பெண்கள் அமைப்பின் பகிரங்க விளக்கம்’ என்னும் தலைப்பில் அவர்களின் மறுப்பறிக்கை வெளியாகியது.

21ம் திகதி வியாழக்கிழமை இரவே மின்னஞ்சல் மூலமாகவும், 22ம் திகதி காலையில் எழுத்து மூலமாகவும் IWARE அமைப்புக்கும், அதைத் தொடர்ந்து NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மானுக்கும் உரிய விளக்கங்களைத் தெரிவித்து விட்டு தனது ஆய்வுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஹம்மது நியாஸுக்கு, அன்றிரவு வெளியான IWARE அமைப்பின் இந்த மறுப்பறிக்கையானது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த மறுப்பறிக்கையை வாசித்த முஹம்மது நியாஸ், மறுதினம் 23ம் திகதி சனிக்கிழமை காலை 08:24க்கு ‘விரைவில் பதிலறிக்கை வெளியிடப்படும்’ எனும் தலைப்பில் அவரது முகநூலில் ஒரு முன்னறிவிப்புச் செய்தியை பதிவேற்றுகின்றார்.

இம்முன்னறிவிப்புச் செய்தி வெளியிடப்பட்ட சற்று நேரத்தில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் மீண்டும் முஹம்மது நியாஸை நேரில் சந்திக்கின்றார். முஹம்மது நியாஸின் மாமனார் அண்மையில் காலஞ்சென்றதைக் காரணமாக வைத்து அவரது வீட்டிற்கு வருகை தந்த பொறியியலாளர் அப்துர் றஹ்மான், முஹம்மது நியாஸின் இந்த ஆக்கம் குறித்து மீண்டும் கலந்துரையாடுகின்றார். இச்சந்திப்பில் முஹம்மது நியாஸின் மைத்துணரும் உடனிருந்துள்ளார்.

இச்சந்திப்பின்போதும் ஏற்கனவே தான் கூறியிருந்த விளக்கத்தையே மீண்டும் அவரிடம் ஒப்புவித்த முஹம்மது நியாஸ், IWARE அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள மறுப்பறிக்கைக்கு தான் பதிலறிக்கையை வெளியிடத் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதையெல்லாம் செவியேற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்படுகின்றார் பொறியியலாளர் அப்துர் றஹ்மான்.

24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அமைதியாகக் கடக்கின்றது. 25ம் திகதி திங்கட்கிழமை 05:57 மணிக்கு தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் IWARE அமைப்பின் மறுப்பறிக்கைக்கான பதிலறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாக தனது முகநூல் பக்கத்தில் தகவல் வெளியிடுகின்றார் முகம்மது நியாஸ்.

இதைத் தொடர்ந்து 28ம் திகதி காலையில் காத்தான்குடி பொலீசார் முஹம்மது நியாஸின் வீட்டிற்குச் சென்று, அனீஸா ஆசிரியை முறைப்பாடு செய்துள்ளதாகவும், 29ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 09:00 மணிக்கு முஹம்மது நியாஸை பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவுக்குச் சமூமளிக்குமாறும் கூறி அதற்கான துண்டு அழைப்பையும் கொடுத்து விட்டுச் செல்கின்றனர்.

ஏற்கனவே IWARE அமைப்பிற்கு எழுத்து மூலமாகவும், NFGG தவிசாளர் அப்துர் றஹ்மானிடம் தொலைபேசியிலும், நேரிலுமாக இரண்டு தடவைகளும் தனது ஆக்கம் தொடர்பில் அவர்களுக்கு எழுந்த சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் கூறிய பின்னரும் தனது ஆக்கத்திற்கு எதிராக அனீஸா ஆசிரியை பொலிஸ் நிலையம் சென்று முறையிட்டிருப்பதானது, பொறியியலாளர் அப்துர் றஹ்மானின் நடவடிக்கைகளில் முஹம்மது நியாஸுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

பொறியியலாளர் அப்துர் றஹ்மானிடம் தான் தொலைபேசியிலும், நேரிலுமாகத் தெரிவித்த விளக்கங்களைக் கேட்டுச் சென்ற அவர், அவரது நல்லாட்சி அரசியல் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டு செயற்பட்டு வரும் அனீஸா ஆசிரியையிடம் அந்த விளக்கங்களைக் கூறி அவரையும், அவர் சார்ந்த IWARE அமைப்பினரையும் அமைதிப்படுத்தி, முஹம்மது நியாஸின் முழுமைப்படுத்தப்பட்ட ஆய்வறிக்கை வெளியிடப்படும் வரை பொறுமை காக்குமாறு அறிவுறுத்தி இருக்க வேண்டும்.

அவ்வாறு பொறியியலாளர் அப்துர் றஹ்மான் அவர்களிடம் அறிவுறுத்தி இருந்தால், அவரது வார்த்தையைத் தாண்டி IWARE அமைப்பின் மறுப்பறிக்கை வெளிவந்திருக்கவும் மாட்டாது. அதற்கு முஹம்மது நியாஸ் பதிலறிக்கை எழுத வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்க மாட்டாது.
அதையும் தாண்டி அனீஸா டீச்சரும், IWARE அமைப்பின் ஐந்து பெண் சாட்சிகளும் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முஹம்மது நியாஸுக்கு எதிராக முறைப்பாடும் செய்திருக்க மாட்டார்கள்.

எனவே, இந்த முஹம்மது நியாஸின் குறித்த ஆக்கம் தொடர்பில் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் அவசர அவசரமாகத் தலையிட்டு தொலைபேசியிலும், பின்னர் நேரிலுமாக முஹம்மது நியாஸுடன் உரையாடியதும், அவரது விளக்கம் கேட்டறியப்பட்ட பின்னரும் இப்பெண்கள் குழு பொலிஸ் நிலையம் சென்று முஹம்மது நியாஸுக்கு எதிராக முறைப்பாடு செய்திருப்பதும் பொறியியலாளர் அப்துர் றஹ்மானின் அங்கீகாரமில்லாமல் நடந்திருக்க முடியாது என உறுதியாக என்னால் கருத முடிகின்றது.

ஏனெனில், பொறியியலாளர் அப்துர் றஹ்மானுடன் நான் நெருங்கிச் சகவாசம் செய்த காலப்பகுதியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியில் இணைந்து கொண்டுள்ள உயர்மட்ட சூறா உறுப்பினர்கள் தொடக்கம், அடிமட்ட ஆதரவாளர்கள் ஈறாக அவரது செல்வாக்குத் திறன் எத்தகையது என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

பொறியியலாளர் அப்துர் றஹ்மானுக்குத் தெரியாமல்தான் இந்தப் பெண்கள் குழாம் பொலிஸ் நிலையத்தில் முஹம்மது நியாஸுக்கு எதிராக முறைப்பாடு செய்தார்கள் என ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும் கூட, 28ம் திகதி பொலிசார் விடுத்த அழைப்பையும், அவர்கள் கொடுத்திருந்த துண்டையும் முஹம்மது நியாஸ் அவரது முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்ததை அறிந்த பின்னராவது அவர், அனீஸா டீச்சரையும், IWARE அமைப்பின் சாட்சிப் பெண்களையும் தொடர்பு கொண்டு குறித்த முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு கேட்டுக் கொண்டிருக்கலாம். அவ்வாறும் நடைபெறவில்லை.

இதிலிருந்து பொறியியலாளர் அப்துர் றஹ்மானின் தலைமைத்துவக் கட்டுப்பாட்டிலிருந்து அவரது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மகளிர் பிரிவினரும் இப்போது எல்லை தாண்டிச் செல்ல ஆரம்பித்துள்ளார்களா? எனும் ஐயம் எனக்கு இது தொடர்பில் எழுந்துள்ளது.

பொலிஸ் நிலையத்தில் அனீஸா டீச்சரின் முறைப்பாட்டிற்கு பதில் வாக்குமூலம் அளித்த முஹம்மது நியாஸ், குறித்த தனது ஆக்கம் தொடர்பில் பொறியியலாளர் அப்துர் றஹ்மானிடம் ஒரு முறைக்கு இரு முறை தெளிவாக விளக்கம் அளித்திருந்த காரணத்திற்காகவே அவரை தனது தரப்பில் ஒரு சாட்சியாளராக சேர்த்துக் கொண்டார்.

இதுபற்றி 29ம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 04:02 மணிக்கு முஹம்மது நியாஸ் அவரது முகநூலில் ‘அனீஸா ஆசிரியையின் முறைப்பாடு: காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நடந்தது என்ன?’ எனும் தலைப்பில் செய்தி வெளியிடுகின்றார்.

இச்செய்தியின் மூலமாக தன்னையும் இவ்வழக்கில் ஒரு சாட்சியாக முஹம்மது நியாஸ் சேர்த்துக் கொண்டுள்ள விடயத்தை அறிந்து கொண்ட பொறியியலாளர் அப்துர் றஹ்மான், அதன் பிற்பாடு முஹம்மது நியாஸின் மைத்துணரிடமும், மௌலவி ஸஹ்ரான் மஸ்ஊதி அவர்களிடமும் தெரிவித்திருக்கின்ற கருத்துக்கள்தான் என்னை மிகவும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி இருக்கின்றது.

‘ஸஹ்ரான் மௌலவிதான் பின்னணியில் இருந்து தகவல்கள் வழங்கி இந்த ஆக்கத்தை எழுதுமாறு தன்னைப் பணித்ததாக முஹம்மது நியாஸ் என்னுடன் பேசியபோது தெரிவித்தார். முஹம்மது நியாஸ் என்னை நீதிமன்றத்திற்கு இழுத்திருப்பதால் நானும் ஸஹ்ரான் மௌலவியை நீதிமன்றத்திற்கு இழுப்பதற்குப் பின்நிற்கப் போவதில்லை’ என பொறியியலாளர் அப்துர் றஹ்மான் இப்போது கூறி வருவதாக முஹம்மது நியாஸின் மைத்துனர் மூலம் இப்போது தெரிய வந்துள்ளது. இதனை முஹம்மது நியாஸும் உறுதிப்படுத்தியுள்ளார்.

பொறியியலாளர் அப்துர் றஹ்மான் இப்போது கூறுவது போன்று, உண்மையிலேயே முஹம்மது நியாஸ் ஸஹ்றான் மௌலவியையும் சம்பந்தப்படுத்தி 21ம் திகதி இடம்பெற்ற தொலைபேசி உரையாடலிலும், 24ம் திகதி வீட்டில் இடம்பெற்ற சந்திப்பிலும் அவரிடம் தெரிவித்திருந்தால், இந்தப் ”பின்புலப் பேருண்மை(?)” விடயத்தினை 29ம் திகதி வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற தகவல்கள் முஹம்மது நியாஸின் முகப்புத்தகத்தில் வெளியாகும் வரைக்கும் அவர் அடைகாத்ததன் மர்மம்தான் என்ன? இப்போது அவசர அவசரமாக அவற்றைக் குஞ்சு பொரித்து கொக்கரிக்க வைத்திருப்பதன் உள்நோக்கம்தான் என்ன?

இன்ஷா அழ்ழாஹ்… இன்றைய நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னால் மேலும் சில தகவல்களை வெளியிடவுள்ளேன்.

Advertisements
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements
%d bloggers like this: