ஐ.தே.கட்சியின் கௌரவ செயலாளர் அல்ஹாஜ் கபீர் ஹாஸீம் அவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

DEntபதவியிலுள்ள பிரதமர் ரணில் கட்சிக்கு ஆள் சேர்க்கிறார்! காலாவதியான அமைப்பாளர்(?) முஸ்தபா கட்சிக்காரர்களை நீக்குகிறார்!!

ஐ.தே.கட்சியின் கௌரவ செயலாளர் அல்ஹாஜ் கபீர் ஹாஸீம் அவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுழ்ழாஹி வபரகாதுஹூ.

தங்களின் மேலான கவனத்திற்கும், துரித நடவடிக்கைக்குமாக பின்வரும் விடயத்தினை இப்பகிரங்கக் கடிதம் மூலம் முன்னிலைப்படுத்துகின்றேன்.

மட்டக்களப்புத் தொகுதியில் ஐ.தே.கட்சிக்கு பலம் சேர்த்த பிரதேசங்களில் காத்தான்குடிப் பிரதேசம் முக்கியத்துவமானதாகும்.

1977ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீ.ல.சு.கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் கல்வியமைச்சர் மர்ஹூம் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களைத் தோற்கடித்து, ஐ.தே.கட்சி சார்பில் முதல் தடவையாகப் போட்டியிட்ட மர்ஹூம் அல்ஹாஜ் டாக்டர் பரீத் மீராலெப்பை அவர்களை வெற்றி பெறச் செய்ததில் ஏறாவூர் பிரதேச முஸ்லிம்களுடன் காத்தான்குடிப் பிரதேசவாசிகளும் ஒன்றிணைந்து செயற்பட்ட வரலாறை ஐ.தே.கட்சித் தலைமைப்பீடம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

மாத்திரமன்றி, மட்டக்களப்பு மாவட்டம் ஐ.தே.கட்சி சார்பாக இரண்டு அமைச்சர்களையும் (கே.டபிள்யூ. தேவநாயகம், செல்லையா இராஜதுரை) ஒரு பிரதியமைச்சரையும் (டாக்டர். பரீத் மீராலெப்பை) கொண்டிருந்த மாவட்டமுமாகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக்காலத்தில் பொதுவாக இம்மாவட்டத்திலும், குறிப்பாக காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி போன்ற முஸ்லிம் பிரதேசங்களிலும் ஐ.தே.கட்சியின் செயற்பாடுகள் முற்றாக முடக்கப்பட்டிருந்த போதிலும், தற்போதைய ஐ.தே.கட்சியின் நல்லாட்சிக் காலத்தில் இப்பிரதேசங்களிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஐ.தே.கட்சியின் பால் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து நாளாந்தம் அணிதிரண்டு வருவதை தாங்களும் அறிந்தே இருப்பீர்கள் என நம்புகின்றேன்.

இந்நிலையில் முன்னாள் இராணுவத் தளபதி ‘பீல்ட் மார்ஷல்’ சரத் பொன்சேகா அவர்களும் தமது அரசியல் செயற்பாடுகளை ஐ.தே.கட்சியுடன் இணைத்துக் கொண்டு கௌரவ பிரதேச அபிவிருத்தி அமைச்சராகவும் இன்றைய அரசாங்கத்தில் பங்கேற்றிருப்பது, இம்மாவட்ட ஐ.தே.கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

‘பீல்ட் மார்ஷல்’ அமைச்சர் சரத் பொன்சேகா அவர்களின் தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராகக் கடமையாற்றிய சகோதரர் எம்.எஸ்.எம். ஷாபி அவர்களையும் ஐ.தே.கட்சியின் தலைமைப்பீடம் உள்வாங்கிக் கொண்டிருப்பதுடன், அவரையும் இம்மாவட்டத்தில் ஐ.தே.கட்சியின் வளர்ச்சிக்காகச் செயற்படுமாறு ஆசீர்வதித்து தங்களால் உத்தியோகபூர்வமான கடிதம் ஒன்றும் வழங்கப்பட்டிருந்தது.

இவ்வாறு அன்னாருக்கு கடிதம் வழங்கப்பட்ட செய்தியை ஊடகங்களின் வாயிலாக அறிந்த ஐ.தே.கட்சியின் காத்தான்குடி மத்திய குழு அங்கத்தவர்களான நாம், இதுபற்றி சகோதரர் ஷாபி அவர்களைத் தொடர்பு கொண்டு பூரண விபரங்களை அறிந்து கொண்டதன் பின், எமது மத்திய குழுக்கூட்டத்தில் ஐ.தே.கட்சியின் செயலாளரான தங்களால் கட்சியில் அங்கத்துவம் வழங்கப்பட்டு இம்மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சிக்காக உழைக்குமாறு ஆசீர்வதிக்கப்பட்ட சகோதரர் ஷாபி அவர்களையும் அரவணைத்துக் கொண்டு செயற்படுவதாக ஏகமனதான தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தோம். இத்தீர்மானம் குறித்து ஊடகங்களிலும் நாம் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தோம்.

எனினும், இத்தீர்மானத்தில் திருப்தியடையாத நமது கட்சியின் காத்தான்குடி கொத்தணி அமைப்பாளர் என இதுகால வரைக்கும் எங்களிடம் கூறி வந்த சகோதரர் எச்.எம்.எம். முஸ்தபா அவர்கள், கடந்த 05.08.2016 வெள்ளிக்கிழமையன்று அவரது இல்லத்தில் ஐ.தே.கட்சியின் மத்திய குழுக் கூட்டம் என்ற பெயரில் ஒரு கூட்டத்தை நடாத்தியுள்ளார்.

அக்கூட்டத்தில் கடந்த 39 வருட காலமாக காத்தான்குடிப் பிரதேசத்தில் ஐ.தே.கட்சியின் மத்திய குழுத் தலைவராகச் செயற்பட்டு வரும் சகோதரர் கே.எம்.எம். அலியார், மத்திய குழுவின் பொதுச் செயலாளராகச் செயற்பட்டு வரும் சகோதரர் ஏ.எல்.ஏ. கையூம் ஆகியோரையும், ஐ.தே.கட்சியின் பிரச்சாரச் செயலாளராக எச்.எம்.எம். முஸ்தபா அவர்களால் நியமிக்கப்பட்டு மத்திய குழுவினாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட என்னையும் ஐ.தே.கட்சியின் காத்தான்குடிப் பிரதேச மத்திய குழுவில் இருந்து நீக்கியுள்ளதாகவும், இந்த நீக்கம் குறித்து கட்சியின் கௌரவ பொதுச் செயலாளரான தங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐ.தே.கட்சியின் மிக நீண்டகால அங்கத்தவர்களான எங்களை, இக்கட்சியின் கௌரவ தலைவரும், பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமைப்பீட நிர்வாகமும் முழுமனதுடன் உறுப்பினராக அங்கீகரித்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சி நடவடிக்கைகளில் அக்கறையுடன் ஈடுபடுமாறு ஆசீர்வதித்து உத்தியோகபூர்வ எழுத்து மூல ஆவணத்தையும் கொண்டிருக்கும் சகோதரர் எம்.எஸ்.எம். ஷாபி அவர்களையும் நாம் அரவணைத்துக் கொண்டு எமது பிரதேசத்தில் ஐ.தே.கட்சியின் வளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவது என நாம் தீர்மானித்தது, எங்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கான காரணத்தைக் கொண்ட ஒரு குற்றச்செயலாகுமா? என நான் தங்களிடம் வினவ விரும்புகின்றேன்.

அவ்வாறு அதுவொரு பாரதூரமானதும், கட்சியின் ஒழுக்கக் கட்டுப்பாட்டை மீறுவதுமான செயல் என தாங்கள் கருதினால் உடனடியாக கட்சியின் தலைமைப்பீடத்தினால் என்னை உறுப்புரிமை நீக்கம் செய்வதாக அறிவித்து கட்சியின் பொதுச் செயலாளரான தங்களின் உறுதிப்படுத்தலுடன் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். எனது தபால் முகவரி:

எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், இல: 43, அப்றார் வீதி, புதிய காத்தான்குடி – 06

மிக்க நன்றியுடன்,

தங்களின் பதிலை எதிர்பார்த்தவனாக,

எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்

10.08.2016

Advertisements
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Advertisements
%d bloggers like this: