காத்தான்குடி எச்.எம்.எம்.முஸ்தபாவின் அமைப்பாளர் பித்தலாட்டம் அம்பலம்!

SLMC Musthafa

ஐக்கிய தேசியக்கட்சியின் காத்தான்குடி மத்திய குழுக்கூட்டம் நேற்று (14.08.2016) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது, கட்நத காலங்களில் தானே கட்சியின் அமைப்பாளர் எனக்கூறி இப்பிரதேச ஐ.தே.கட்சி ஆதரவாளர்களை ஏமாற்றி வந்த எச்.எம்.எம். முஸ்தபாவின் ஏமாற்று நடவடிக்கை பகிரங்கமாக அம்பலமானது.

UNP-Letter-coஇந்த விவகாரம் தொடர்பாக ஐ.தே.கட்சியின் பொதுச்செயலாளர் அல்ஹாஜ் கபீர் ஹாசிம் அவர்களினால் கடந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் பிரச்சாரக் காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஐ.தே.கட்சியின் மாவட்டத்தவிசாளர் மற்றும் 2015ம் ஆண்டைய நாடாளுமன்றத்தேர்தல் வேட்பாளர்கள் அனைவருக்கும் உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதமொன்றினை மத்திய குழுவின் தலைவர் கே.எம்.எம். அலியார் மத்திய குழு அங்கத்தவர்கள் மற்றும் நிர்வாகிகளின் பார்வைக்குக் கையளித்தார்.

2015.07.29ம் திகதியன்று ஐ.தே.கட்சியின் பொதுச்செயலாளர் அல்ஹாஜ் கபீர் ஹாசிம் அவர்களின் உறுதிப்படுத்தலுடன் கட்சியின் தலைமையகமான “சிறிகொத்த இல்லம்” அனுப்பியிருந்த அக்கடிதத்தின் முழுமையான வரி வடிவம் வருமாறு:

காத்தான்குடியில் வசிக்கும் ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள், முஸ்லிம் காங்கிரஸின் சின்னமான மரச்சின்னத்திற்கே வாக்களிக்க வேண்டுமென்று காத்தான்குடியைச்சேர்ந்த எச்.எம்.எம். முஸ்தபா என்பவர் தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் பேசித்திரிவதாக எனக்கு பல்வகையான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

எமது ஐக்கிய தேசியக்கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியின் சின்னமான யானைச்சின்னத்தில் இம்முறை பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடுவதோடு, அங்கு தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களையும் போட்டியிட வைத்துள்ளது.

இவ்வாறான வேளையில், மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த எச்.எம்.எம். முஸ்தபா என்பவர் கூறுவதைப் போன்று கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க அவர்களோ அல்லது கட்சியின் பொதுச்செயலாளரான என்னாலோ இவருக்கு அவர் கூறுவதைப் போன்று எந்தவிதமான அறிவித்தலையும் வழங்கவில்லையென்பதையும், இவர் எமது ஐக்கிய தேசியக்கட்சியின் காத்தான்குடி அல்லது வேறு எந்தப்பிரதேசத்திற்குமான அமைப்பாளராகவோ நியமிக்கப்படவுமில்லையென்பதையும் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற வகையில் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆகவே, அன்புள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்களே! மற்றும் உறுப்பினர்களே!

நீங்கள் இவ்வாறான பொய்ப்பிரச்சாரங்களை நம்பாது எமது ஐக்கிய தேசியக்கட்சினை வெற்றியடையச் செய்வதற்கான செயற்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் – இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SLMC-Rahumanகடந்த 2015ல் நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலின் போது, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான், ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கட்சியில் ஒரு வேட்பாளராகப் போட்டியிட்ட போது, இந்த எச்.எம்.எம். முஸ்தபா என்பவர் அவருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ததுடன், இப்பிரதேசத்திலுள்ள ஐ.தே.கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் மத்தியிலும் தானே ஐ.தே.கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர் என்றும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரான பொறியியலாளர் அப்துர் றஹ்மானை ஐ.தே.கட்சியின் தலைமைப்பீடமே ஸ்ரீ.ல.மு. காங்கிரஸில் ஒரு வேட்பாளராகக் களமிறக்கியுள்ளதாகவும், முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெறுவதைத் தடுக்கும் வகையிலேயே ஐ.தே.கட்சி இவ்வாறு தேர்தல் வியூகத்தை வகுத்துச் செயற்படுவதாவும் கருத்துக்களைப் பரப்பி அவர்களை பிழையாக வழி நடாத்தியிருந்தார்.

 

UNP-1ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி மத்திய குழு நிர்வாகம் நேற்று நடாத்திய கூட்டத்தில் இக்கடிதத்தைக் காட்சிப்படுத்தியதன் மூலம் இப்பிரதேசத்தில் எச்.எம்.எம். முஸ்தபாவின் அமைப்பாளர் பித்தலாட்டம் பகிரங்கமாக அம்பலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: