வைத்திய அறிக்கையாக ஊடகங்களில் காண்பிக்கப்பட்ட நோய் நிருணய அட்டையிலும் கேள்விகள் பல இருக்கின்றன.

Noi Nuranaya Attai News Kattankudyinfo

வைத்திய அறிக்கையாக ஊடகங்களில் காண்பிக்கப்பட்ட நோய் நிருணய அட்டையிலும் கேள்விகள் பல இருக்கின்றன. எத்தகைய பதில் நடவடிக்கைக்கு முகம் கொடுக்கவும் நாம் தயார்!!

கடந்த 02.09.2016 வெள்ளிக்கிழமை காத்தான்குடிஇன்போ, சாஜில் நியூஸ், kkytimes போன்ற இணையதளங்கள் மற்றும் முகநூல் பக்கங்களில் சிறுவன் றிஜான் மீதான எரிகாயங்கள் தொடர்பில் வைத்திய அறிக்கை எனப் பிரசுரிக்கப்பட்ட நோய் நிருணய அட்டையிலும் எமக்கு சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.

சிறுவன் றிஜானை மின்சாரமே தாக்கியது என்பதை நிரூபிக்க முற்பட்ட சாஜில் நியூஸ் இணையதளம், அது தொடர்பாக அந்த வர்த்தக ஸ்தாபனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் CCTV கெமரா பதிவு செய்த காட்சிகளை காணொளி வீடியோவாக வெளியிட்டபோது, மூன்றாம் மாடியில் மின்சார ஒளி வெளியாகி சிறுவன் றிஜான் நிலைதடுமாறி கீழே விழுகின்ற, மீண்டும் எழுகின்ற காட்சிகள் எல்லாம் பதிவாகியுள்ள நேரம் இரவு 07:25:57 வரையிலும் பதிவாகியுள்ளது.

அதன் பின்னரே றிஜான் தட்டுத்தடுமாறியவனாக இரண்டாம் மாடிக்கும், கீழ்த்தளத்திற்கும் இறங்கி வருகின்றான். அதன் பிறகே குறித்த கடையில் கடமையாற்றும் கணக்குப்பிள்ளையும், வேறு பலரும் சேர்ந்து அவனை காத்தான்குடி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்கின்றனர். அங்கிருந்தே றிஜான் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு 10வது விடுதியில் அனுமதிக்கப்படுகின்றான்.

ஆனால், மேற்குறிப்பிட்ட ஊடகங்களில் காண்பக்கப்பிக்கப்பட்ட நோய் நிருணய அட்டையில் றிஜானுக்கு மின்சாரம் தாக்கியதால் எரிகாயமடைந்த நேரமாக 17.08.2016 அன்று பிறபகல் 06.45 மணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஊடகங்களில் காண்பிக்கப்பட்ட குறித்த நோய் நிருணய அட்டையில் எந்தவொரு பொறுப்பு வாய்ந்த வைத்தியருடைய கையெழுத்தோ, அவ்வைத்தியருடைய உத்தியோகபூர்வ றபர் முத்திரையோ காணப்படவில்லை. மாறாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 10வது விடுதிக்குரிய பொதுவான றபர் முத்திரையே பொறிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, இதற்கு முன்னர் ஊடகவியலாளர் நூர்தீன் வெளியிட்ட செய்தியில், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி. வெதகெதர அவர்கள் வைத்திய அறிக்கையைக் கோரியிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

அதன்படி, கடந்த 02ம் திகதி ஊடகங்களில் வெளியிடப்பட்ட இந்த நோய் நிருணய அட்டையைத்தான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி. வெதகெதர அவர்கள் வைத்திய அறிக்கையாக ஏற்றுக் கொண்டு ஊடகங்களுக்கு வெளியிட்டாரா? அல்லது வைத்தியசாலை அதிகாரிகள் இதுதான் வைத்திய அறிக்கை என்று கூறி ஊடகங்களுக்கு கையளித்தார்களா? அல்லது சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சிறுவன் றிஜானுக்கு வழங்கப்பட்ட நோய் நிருணய அட்டையை ஊடகவிலாளர்கள் படம் பிடித்து அதுதான் வைத்திய அறிக்கை என்று மக்களைநம்புமாறு செய்துள்ளார்களா? ? என்பன போன்ற கேள்விகளும் எமக்குள் எழுந்திருக்கின்றன.

எது எவ்வாறாயினும் ஊடகங்களில் காண்பிக்கப்பட்ட இந்த நோய் நிருணய அட்டையை ஒரு முழுமையான வைத்திய அறிக்கையாக எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை இத்தால் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த நோய் நிருணய அட்டையை ஒரு வைத்திய அறிக்கையாக ஏற்றுக் கொள்ள மறுத்துள்ள எமக்கு எதிராக, வைத்தியசாலை அதிகாரிகளோ, காத்தான்குடி பொலிஸ் நிலைய அதிகாரி ஏ.பி. வெதகெதர அவர்களோ அல்லது ஊடகவியலாளர்களோ மாற்று நடவடிக்கைளை மேற்கொள்ளும் பட்சத்தில் அதற்கும் நாம் முகங்கொடுக்கத் தயாராகவே உள்ளோம் என்பதையும் இத்தால் ஊடகங்கள், முகநூல்கள் வாயிலாக பகிரங்கமாகவே தெரிவித்துக் கொள்கின்றோம்.

Advertisements
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Advertisements
%d bloggers like this: