மகாராஜா நிறுவனத்தின் மடமையும் மௌட்டீகமும்

14570500_1020427561402060_878300966890204548_nபுனித வேதத்திற்கே பூஜை செய்து புனஸ்காரம் நடாத்தியுள்ளது மகாராஜா ஊடக நிறுவனம்.

மாற்று சமயமொன்றைப்பற்றிய அடிப்படை அறிவையோ அந்த சமயத்தவர்களின் உணர்வுகளையோ பற்றிய சிந்தனையென்பது சிறிதளவும் இல்லாமல் மகாராஜா நிறுவனம் முட்டாள்தனமாக அரங்கேற்றிய இந்த செயற்பாடானது வன்மையான கண்டனத்திற்குட்பட்டது.

மட்டுமல்லாது இந்த வெகுளித்தனமான நிறுவனத்தில் இஸ்லாமியப்பெயர் தாங்கிய சில கோடாரிக்காம்புகளே இதற்கு உடந்தையாக இருந்து செயற்பட்டிருப்பது சமூகத்தின் வெட்கக்கேடுகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது.

மேலும் அண்மைக்காலமாகவே இலங்கையில் செயற்பட்டு வருகின்ற பல்வேறு ஊடகங்களாலும் இஸ்லாமிய மார்க்கமும் முஸ்லிம் சமூகமும் அவமதிக்கப்பட்டு வருவது எமது சமூகத்தினுடைய ஆழ்துயிலின் அடையாளமேயன்றி வேறில்லை.

மாத்திரமல்லாது இவ்வாறான அவமானங்களுக்கும் அடந்தேறல்களுக்கும் எதிராக ஆவேசக்குரல் குரல் எழுப்பி சமுதாயத்தின் தன்மானத்தை தக்க வைப்பதற்காக எதிர் வினையாற்றக்கூடிய துணிச்சல் மிக்க எந்தவொரு ஊடகமும் இந்த முஸ்லிம் சமூகத்திற்கு இதுகாலவரை கிடையாது.

மாறாக மாதாந்த வருமானம், பிரபல்யம், அதிகாரவாதிகளின் அடிவருடல் போன்ற சுயநலவாத சித்தாந்தத்திற்கு அடிமைப்பட்டுப்போன வீரியமற்ற ஊடகங்களும் ஊடகத்தொழிலாளர்களுமே இன்று இந்த சமூகத்தை நிறைத்து நிற்கின்றனர்.

எனவே ஊடகரீதியாக தொடர்ந்தும் எடுப்பார்கைப்பிள்ளையாகவே இருந்து வருகின்ற இந்த முஸ்லிம் சமூகமானது எதிர்காலத்திலேனும் தனக்கென ஒரு சுயாதீனமான ஊடகப்பலத்தை சுயமாக நிலைநாட்டாத வரைக்கும் புனித மார்க்கமும் வேதமும் இவ்வாறான எதிரிகளாலும் கோடாரிக்காம்புகளாலும் எள்ளி நகையாடப்படுவது தவிர்க்கவோ தடுக்கவோ முடியாத ஒன்றாகவே தொடர்ந்துகொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

14642311_1020427624735387_7902398857669693444_n

14718677_1020427661402050_7701068779834641377_n

Advertisements
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Advertisements
%d bloggers like this: