பிப்ரவரி, 2010 க்கான தொகுப்பு

மனிதா..! உன் மனதுக்குச் சொல்..! – உம்மு ஃபாதிமஹ்-

(மனதுக்கு அதன் அறியாமையையும், மூடத்தனத்தையும் எடுத்துக் காட்டுங்கள். அது, தான் நேர்வழியில் செல்வதாகவும், தனது அறிவு ஒளிவிட்டுப் பிரகாசிப்பதாகவும் எண்ணிக்கொண்டிருக்கின்றது. இந்த எண்ணம் உண்மைக்கு முற்றிலும் மாறுபட்டது என்பதை முதலில் நிரூபித்துக் காட்டுங்கள்!)

ஓ! மனமே..

உன் அறியாமையை நான் என்னென்று உரைப்பேன்?

எத்தனை பெரிய முட்டாளாக நீ இருக்கின்றாய்?

உன்னிடம் நிறைந்த அறிவும், உயர்ந்த பண்பும் இருப்பதாகச் சொல்லிக் கொள்கின்றாய். Continue reading

தேர்தல் காலத்தில் தொலையும் ஆன்மீகம் -ஏ.ஜீ. சாதிகீன் (பலாஹி) –

கடந்த மாதங்களில் வீசிய சூறாவளி ஓய்ந்த கையோடு மீண்டுமொரு சூறாவளி உருவாக ஆரம்பித்துள்ளது.

அரசியல் வட்டாரங்களில் அதிக கவனயீர்ப்பைப் பெற்றிருந்த ஜனாதிபதித் தேர்தல் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியுடன் முடிவுக்கு வந்த கையோடு பொதுத் தேர்தல் பற்றிய பேச்சுக்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.

எதிர்வரும் ஏப்ரல் 08ம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் சகல கட்சிகளும் ஈடுபட்டிருக்கும் இவ்வேளையில் இலங்கை வாழ் சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம் சமூகமும் இது குறித்துச் சிந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. Continue reading

வாசகர்களின் கவனத்திற்கு..

தேர்தல் நெருங்குகின்றது… !

எமது வாசகர்களான வாக்காளர்களையும் வேட்பாளர்கள் இக்காலத்தில் நெருங்கி வருவார்கள்.

சந்திரனில் இருந்து அரிசி கொண்டு வருவோம் என்று ஸ்ரீமாவோ அம்மையார் 1970களில் பொய் வாக்குறுதியளித்து ஆட்சியைக் கைப்பற்றியது போன்ற பல வரலாறுகள் நம்மத்தியிலே இன்னும் பசுமையாக இருக்கின்றன. Continue reading

நாடாளுமன்றில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறையும் ஆபத்து!

ஜனாதிபதித் தேர்தலும், உள்நாட்டு யுத்தமும் முடிவடைந்த நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08ம் திகதி நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலானது முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் தொடர்பாக மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனைக் கருத்தில் கொண்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் என முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் அல்ஹாஜ் என்.எம். அமீன், செயலாளர் அல்ஹாஜ். ஹில்மி சுலைமான் ஆகியோர் விடுத்துள்ள அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:  Continue reading

சிகரம் மையவாடிக் காணி: சுற்றுமதில் சுவருக்கு உதவுக!

காத்தான்குடியை அடுத்துள்ள சிகரம் முஸ்லிம் கிராமத்தின் மையவாடிக் காணியைச் சுற்றி மதிற்சுவர் ஒன்றை அமைக்கும் வேலைத் திட்டத்திற்கு முஸ்லிம் சமூக தனவந்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடமிருந்து நிதி மற்றும் கட்டுமானப் பொருள் உதவிகளை சிகரம் ஜும்ஆப்பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் அதன் தலைவர் ஜனாப் எம்.வை. ஆதம் கோரியுள்ளார். Continue reading

கொலை மிரட்டல் விவகாரம்: நகரசபை உறுப்பினருக்கு பொலீஸ் மூலம் அழைப்பு

‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரைக் கொலை செய்யப்போவதாக தொலைபேசி மூலம் எச்சரித்த காத்தான்குடி நகரசபை உறுப்பினர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம். அஸ்பர் கடந்த 21ம் திகதி நடைபெற்ற மத்தியஸ்தர் குழாமின் விசாரணைக்கும் சமூகமளிக்கத் தவறியதால் அவருக்கான மூன்றாவதும் இறுதியானதுமான அழைப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஊடாக மத்தியஸ்தர் குழாமின் தலைவரால் அனுப்பப்பட்டுள்ளது. Continue reading

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஸ்ரீ.ல.மு.காவுடன் இணையாது! சுயேட்சையாகவும் போட்டியிடாது!!

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும், சுயேட்சையாகவும் தனித்துப் போட்டியிடாமல் இத்தேர்தலில் இருந்து முற்றாக ஒதுங்கிக் கொள்வதென்றும் தீர்மானித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற அதன் சூறா சபைக் கூட்டத்தில் 75 வீதத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் ஸ்ரீ.ல.மு.கா.வுடன் இணைந்து போட்டியிடும் கருத்துக்கு
எதிராக தமது வாக்குகளை அளித்ததாக சூறா சபை உறுப்பினர் பொறியியலாள் அல்ஹாஜ் எம்.எம். அப்துர் றஹ்மான் ‘வார உரைகல்’  லிடம் தெரிவித்தார். Continue reading

ஆரம்பத் தாக்குதல்

நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான காத்தான்குடிப் பிரதேச அரசியல் களத்தில் முதலாவது தேர்தல் வன்முறைச் சம்பவமாக கடற்கரை வீதியில் அமைந்துள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் அலுவலகம் மீது மாற்றுக்கட்சி ஆதரவாளர்களால் கருகிய ஒயில் வீசப்பட்ட சம்பவமொன்று கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக அவ்வியக்கத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல். எம்.சபீல் நளீமி ‘வார உரைகல்’ லுக்குத் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

சம்மேளனத்திற்கு எச்சரிக்கை!

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திற்கும் அச்சுறுத்தல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Continue reading

சத்தியத்தின் சோதனைக்கு எத்தனை பேர் போட்டி…?

எதிர்வரும் ஏப்ரல் 08ம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் ஏழாவது நாடாளுமன்றத் தேர்தல் சிறுபான்மைச் சமூகங்களான தமிழ் – முஸ்லிம் சமூகத்தினருக்கு பெரும் சோதனை நிறைந்த தேர்தலாகவே அமையவுள்ளது.

மக்களின் நலனுக்காக என்றும் உரிமைக்காக என்றும் ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சிகள் மக்கள் நலன்கள் குறித்து அக்கறை கொள்ளாமல் தத்தமது கட்சிகளின் நலன்கள் பற்றியும், தமது நலன்கள் குறித்துமே அதிகம் அக்கறை செலுத்தியிருப்பது இத்தேர்தலில் போட்டியிடும் அதிகரித்த சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் தொகையில் இருந்து பட்டவர்த்தனமாகியுள்ளது. Continue reading