Archive for the ‘ வாசகர் விமர்சனங்கள் ’ Category

இலங்கையில் எந்த தரப்புக்கு சாதகமாக இருப்பார் இந்தியப் பிரதமர் மோடி?

140517174254_narendra_modi_mahinda_rajapakse_304x171_bbc_nocreditsambanthan– மீரா ஸ்ரீனிவாசன்

வெள்ளிக்கிழமை பகல் நேரம். இந்திய தேர்தல் முடிவுகள் முழுவதாகக்கூட அறிவிக்கப்படவில்லை. இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ மகத்தான வெற்றி பெற்று இந்தியப்  பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினார். இலங்கைக்கு வருமாறு நட்புடன் அழைப்பும் விடுத்தார். Continue reading

அஸ்மின் அய்யூபின் நியமனமும், இணைய வாசகர்களின் கூப்பாடும்

Asmin-Aiyoob-300x197ஜனநாயகத் தேர்தலொன்றில் போட்டியிட்டு தெரிவு செய்யப்படாத ஒரு வேட்பாளரை மீண்டும் மக்கள் பிரதிநிதியாக நியமிப்பதற்கு அருகதையில்லை என்ற வாதம், கடந்த வாரம் ‘காத்தான்குடி இன்போ’ இணையதளத்தில் ‘வாசகர் கருத்து’ என்ற தலைப்பில் முன்னெடுக்கப்பட்டதை அவதானித்து இவ்வாக்கம் வரையப்படுகிறது.

ஊடகமொன்றில் ஒரு செய்தி பிரசுரமாகும்போது, அச்செய்தியை வாசித்தறியும் வாசாகர்களுக்கு அது தொடர்பில் தம் கருத்தினைத் தெரிவிக்கின்ற உரிமை உண்டென்பதை நான் மறுக்கவில்லை. Continue reading

முஸ்லிம் சமூகத்தின் உள்ளங்களைக் காயப்படுத்திய முஸ்லிம்களுக்கான மூத்த கொழும்புப் பத்திரிகை

mursi-1‘முடிந்தது முர்சியின் ஆட்டம்’ என்ற தலைப்பில் அதிக முக்கியத்துவத்துடன் கடந்த 05.07.2013ல் வெளியான முஸ்லிம்களுக்கான மூத்த கொழும்புப் பத்திரிகையில் வெளியான எகிப்திய நிலவரங்கள் தொடர்பான சிறப்புக் கட்டுரை அனைத்து முஸ்லிம் சமூகத்தையும் ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் கொள்ளச் செய்திருக்கிறது.

பல தசாப்த தியாகங்களுக்குப் பின்னர் முழுக்க முழுக்க ஜனநாயக வழி ஒன்றின் மூலம் பெரும்பாண்மை மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப இஸ்லாமிய மறுமலர்ச்சி ஆட்சி நிருவாகம் ஒன்று எகிப்து நாட்டில் உருவாகும் என மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த அனைத்து மக்களுக்கும் எகிப்தில் நடந்து வருகின்ற சம்பவங்கள் சொல்லொண்ணாத் துயரங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. Continue reading

மோசடி செய்யப்பட்ட 4000 வாக்குகளும் மாகாண மட்டத்தில் ஏற்படுத்திய மாற்றம்!

கடந்த 08ம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு முடிவுற்ற பின் வாக்கெண்ணும் நிலையத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ‘த.தே. கூட்டமைப்புக்கான 4000 வாக்குகள் ஐ.ம.சு. கூட்டணிக்கு மாற்றப்பட்டது’ என்ற குற்றச்சாட்டை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முதற்கட்ட அறிக்கையினை ‘மட்டு. மாவட்டத்தில் சுயேட்சைக்குழு – 08க்கு கிடைத்திருக்க வேண்டிய பிரதிநிதித்துவம் எப்படி இல்லாமலானது?’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தேன்.

இந்த 4000 வாக்குகளின் மோசடியான கட்சி மாற்றமானது, ஒட்டு மொத்த கிழக்கு மாகாணத் தேர்தல் முடிவையும் எவ்வாறு மாற்றமடையச் செய்துள்ளது என்பதை விளக்குவதே இந்த இரண்டாம் கட்ட அறிக்கையின் நோக்கமாகும். Continue reading

சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் முடிவுகளில் எனது சில அவதானங்கள்.

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் இரத்தினபுரியில் ஏ.எம்.வை.எம்.இப்லார், கேகாலை மாவட்டத்தில் நிஹால் பாரூக், பொலொன்னறுவையில் ஏ.எஃப்.எச்.முஹம்மத், அனுராதபுரத்தில் எஃப்.சஹீது ஆகியோர் வெற்றியீட்டியுள்ளனர்.
 
அரசாங்கக் கட்சி சார்பில் கேகாலை மாவட்டத்தில் இம்தியாஸ் காதர் வெற்றி பெற்றுள்ளார். அனுராதபுரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அரசாங்கக் கட்சியில் போட்டியிட்ட ராவுத்தர் நெய்நார் முஹம்மத் தோல்வியைத் தழுவியுள்ளார். Continue reading

ஊடகவியலாளர் நூர்தீன் வெளியேறினாரா? வெளியேற்றப்பட்டாரா??

மட்டக்களப்பில் நடைபெற்ற சர்வமதத் தலைவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் நூர்தீன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக கடந்த 10.12.2010ல் ‘காத்தான்குடி.இன்போ’ என்னும் இணைய தளம் செய்தியொன்றை வெளியிட்டது. அதுதொடர்பான விளக்கமொன்றை எமது வாசகர் அப்துல் மனாப் மேற்படி இணையதளத்திற்கு அனுப்பியிருந்த போதும் அதனை அவர்கள் பிரசுரிக்கவில்லை எனத் தெரிவித்து அவரது விளக்கத்தை ‘வார உரைகல்’ லில் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அது இங்கே பிரசுரிக்கப்படுகின்றது.  -பிரதம ஆசிரியர்

Kattankudi info இணையத்தள செய்தியாளர் நூர்தீன் அவர்கள் கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற சர்வமதத் தலைவர்களின் ஒன்று கூடல் நிகழ்வில் செய்தி சேகரிக்கச் சென்றபோது வெளியேற்றப்பட்டார் என்ற செய்தி தங்களது இணையத்தளத்தில்  12.10. 2010 அன்று வெளியாகி இருந்ததது.

இந்தத் தகவலினை அபூறப்தான் எனும் செய்தியாளர் சுட்டிக்காட்டியிருந்ததோடு அவரது பெயரிலேயே மேற்குறித்த நிகழ்வு தொடர்பான செய்தியும் படங்களும் வேறாகவும் வெளியாகி இருந்தன.

இந்த செய்தியை நான் முழுமையாக வாசித்தபோது வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் இருந்தது.

காரணம், செய்தியின் தலைப்பில் ஊடகவியலாளர் நூர்தீன் வெளியேற்றப்பட்டார் என்றும், செய்தியின் உள்ளடக்கத்தில் அவரை விசாரித்த நபரின் முறைகேடான அணுகுமுறையினால் ஊடகவியலாளர் நூர்தீன் வெளியேறினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களோடு இன்னும் பல விடயங்களும் சொல்லப்பட்டிருந்தன.

மேற்குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளரும், அங்கு கடமைபுரியும் உத்தியோகத்தருமான குமார் என்பவரால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டதாகவும், தான் அந்த ஒன்றியத்தின் செயலாளர் கணேசிடம் அனுமதி பெற்றே வந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது

அத்தோடு இது தொடர்பாக மாஹிர் என்பவரிடம் விடயத்தைக் கூறிவிட்டு வெளியேறியதாகவும், பின்னர் இந்த நிலையத்தின் மட்டக்களப்பு இணைப்பாளர் பிர்தௌஸ் நழீமியிடம் தொலைபேசியில் விடயத்தைக் கூறியதாகவும் குறிப்பிட்ட அவர், அந்த நிலையத்தின் பணிப்பாளருக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும், அதில் தான், அவ்வமைப்பின் உத்தியோகத்தர்களுக்கு ஒழுக்கம் மற்றும் நாகரீகம் போன்றவற்றை கற்றுக் கொடுப்பதன் அவசியம் பற்றி எழுதியதாகவும் குறிப்பிட்டுள்ளார். Continue reading

பொறுப்பற்ற நிர்வாகிகளே பொறுப்பேற்க வேண்டும்!

‘வார உரைகல்’ பத்திரிகையின் 152வது பதிவில் வெளியிடப்பட்டிருந்த செய்தியில் காத்தான்குடி நகர சபையின் 2010ம் ஆண்டு ஜூலை மாதத்திறகான வரவு செலவு கணக்கறிக்கையின்படி துண்டு விழும் தொகை ஏழு இலட்சத்து 91 ஆயிரத்து 766 ரூபா 80 சதம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கையில் வேறு எந்தவொரு பிரதேசத்திலும் இல்லாதவாறு, எமது பிரதேசச் சிறுவர்கள் சில மணி நேரங்கள் விளையாடி தமது பொழுதைக் கழிப்பதென்றால்கூட, அமெரிக்க மக்களினால் அன்பளிப்பாக நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட நமதூர் சிறுவர் பூங்காவுக்குள் பத்து ரூபாவைச் செலுத்தி விட்டுத்தான் அவர்கள் உட்பிரவேசிக்க வேண்டும்.

இவ்வாறு சின்னஞ் சிறுசுகளிடம் இருந்தும் அறவிடப்படுகின்ற தலைக்குப் பத்து ரூபா என்ற வரிப்பணத்தையும் சேர்த்து எமதூரை ‘குட்டிச் சிங்கப்பூராக’ அபிவிருத்தி செய்யப் போவதாகத் தம்பட்டம் அடிக்கும் நகரசபையின் ஆளுந் தரப்பினர் எமது மக்களின் வரிப்பணமான 700,000 ரூபாவை நகரின் எல்லைகளை அளப்பதாகக் கூறிக்கொண்டு வீண் விரயம் செய்துள்ளனர். Continue reading

காத்தான்குடிச் சமூக ஆசிரியர்கள் அனைவரும் பாடசாலைகளில் இளைப்பாறுகின்றார்களா?

எஸ்.எம். முகம்மது பஷீர் B.A – உதவி அதிபர், மட்/ அல்ஹிறா மகா வித்தியாலயம் – காத்தான்குடி

ஆசிரியர்கள் தொழில் சார் கடமையை விடுத்து சேவை மனப்பாங்குடனேயே செயற்பட்டு வருகின்றனர். இதனை வெளிப்படுத்தும் முகமாகவே சர்வதேச தேசிய ரீதியாக ‘ஆசிரியர் தினம்’ நினைவு கூறப்படுவதோடு ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டும் வருகின்றனர்.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அன்றைய தினம் ‘ஆசிரியர் கீதம்’ இசைக் கலப்பில்லாது ஆசிரியர்களாலேயே இசைக்கப்படுகிறது. ஆசிரியர் கீதத்தில் ஆசிரியர் பணி, செயற்பாடு, அர்ப்பணிப்பு, மகத்துவம், சேவை நலன் போன்றன தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்றன.

ஆனால் நமதூரில் குத்பாக்களில், பிரச்சாரங்களில், சஞ்சிகைகளில், பத்திரிகைகளில் பல்வேறு விதமாக ஆசிரியர்கள் கேவலப்படுத்தப் படுகின்றனர். பெற்றோருக்கு அடுத்ததாக மதிக்கப்படவேண்டிய இச்சேவையாளர்கள் பலரது கண்டனங்களுக்கும் உட்படுத்தப்படுகின்றனர். Continue reading

கடுகு சிறிதாயினும் காரம் பெரிது!

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இயக்கம் வெளியிட்டுள்ள நான்கு பக்க வண்ணச் சிற்றேடு

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், PMGG ‘மக்கள் பணி’ என்ற பெயரிலான பலவண்ணச் சிற்றேடு ஒன்றினைக் கடந்த வாரம் ஜூம்ஆத் தொழுகைக்காகச் சென்றிருந்த பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகித்திருந்தது.

இச்சிற்றேட்டில், அவ்வமைப்பின் சமூக, அபிவிருத்தி, வாழ்வாதார வேலைத்திட்டங்கள் தொர்பான ஆரம்ப நிகழ்வுகளின் காட்சிகளும், அதுதொடர்பான சிறு முன்விளக்கக் குறிப்பும் முன்பக்கத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

ஒரு சமூகத்தின் அர்த்தமுள்ள மேம்பாடும், அபிவிருத்தியும் அதன் ஆரோக்கியத்திலும், அறிவுத் தரத்திலுமே தங்கியுள்ளது என்று முகமன் கூறியுள்ள அவ்விளக்கக் குறிப்பில், அதன் காரணமாகவே காத்தான்குடியில் மிகவும் பின்தங்கிய சில பிரதேசங்களை அடையாளம் கண்டு அப்பிரதேசங்களில் கல்வி, சுகாதாரம் மற்றும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களைத் தாங்கள் தொடக்கி வைத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி வலுவூட்டல், இலவசக் கல்வி மையங்களை அமைத்தல், தெரிவு செய்யபடுகின்ற மாணவர்களுக்கான விஷேட கல்விப் பயிற்சிகள், புலமைப் பரிசில்கள், பாடசாலைகளை வலுவூட்டும் செயற் திட்டங்கள், கல்விச் சாதனையாளர்களுக்கான கௌரவிப்பும் பாராட்டும் என எதிர்காலத்தில் அவ்வமைப்பின் கல்வித்துறை தொடர்பிலான பலவாறான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அம்முன்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. Continue reading

ஜாமிஆ நளீமிய்யாவின் இஸ்லாமியக் கண்காட்சி – 2010 – ஒரு கண்ணோட்டம் –

‘அல்-குர்ஆனின் அறிவியல் அற்புதமும், உலக நாகரீகத்திற்கு முஸ்லீம்களின் அறிவியல் பங்களிப்பும்’ எனும் கருப்பொருளில் அமைந்த பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவின் மாபெரும் இஸ்லாமியக் கண்காட்சி கடந்த வாரத்தில் நளீமிய்யா வளாகத்தில் வெகு சிறப்பாகவும், நேர்த்தியாகவும் இடம்பெற்றது.

கண்காட்சி என்பது ஒரு புறமிருக்க, இலங்கை மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் குறிப்பாக ஒவ்வொரு முஸ்லிமும் அந்த அறிவியல் வளாகத்தை நேரில் சென்று கண்டு திரும்புவது என்பது ஒரு பெறற்கரிய பாக்கியமே என்பதை முதலில் குறிப்பிட்டாக வேண்டும்.

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பேணிப் பாதுகாக்க வேண்டிய, இஸ்லாமிய அறிவியல் சமூகம் உரமூட்டி மென்மேலும் வளர்த்தெடுக்க வேண்டிய, ஈழத்து அறிவியல் கலாகூடங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டாக வேண்டிய ஒரு உயர்ந்த உன்னதமான இடமே அந்த ஜாமிஆ நளீமிய்யா என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமிருக்க முடியாது. Continue reading