செப்ரெம்பர், 2014 க்கான தொகுப்பு

மட்டு. RDA பிரதம பொறியியலாளர் நிஸார்தீன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்னிலையில் தண்ணீரில் தள்ளிவிடப்பட்டார்!

sesaமட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் அப்துல் கரீம் நிஸார்தீன் என்பவரை கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்னிலையில் தண்ணீரில் தள்ளிவிட்டு தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்குள்ளான பிரதம பொறியியலாளரால் இன்று 30ம் திகதி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் CBI-I 58/312  எனும் இலக்கத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. Continue reading

இன்று வெளியான ‘வார உரைகல்’ 310வது பதிவின் முன்பக்கத் தலைப்புச் செய்தி:

VU-310 Continue reading

அசின் விராது தேரரின் இலங்கைக்கான விஜயம் குறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் எச்சரிக்கை அறிக்கை!

viraathu_therrar_001அசின் விராது தேரரின் இலங்கைக்கான விஜயம் இனவாத வன்முறைகளை ஊக்கப்படுத்துவதற்கே உதவும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பில் நடை பெறவுள்ள பொது பல சேனாவின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மியன்மார் நாட்டைச் சேர்ந்த அசின் விராது தேரர் வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

விராது தேரர் என்பவர் கடந்த காலங்களில் மியன்மாரில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான இனப்படுகொலைகள் மற்றும் அனைத்துவித தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் காரணமாக இருந்தவர். Continue reading

பதுளை மாவட்ட முஸ்லிம்கள் தேர்தலில் நல்லிணக்கத்தை வலியுறுத்தியுள்ளதோடு அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்படும் அபாயத்தில் இருந்தும் பாதுகாக்கப்பட்டிருக்கின்றார்கள்!

NFGG-logo.நேற்று வெளியான 2014 ஊவா மாகாணசபை தேர்தல் முடிவுகள் ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பாரிய முன்னேற்றத்தையும் மக்கள் ஆதரவையும் கொடுத்திருக்கிறது. கடந்த மாகாணசபைத் தேர்தலைவிட இம்முறை 1 இலட்சத்து 45 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை ஐ.தே.க பெற்றிருக்கிறது. அந்த வகையில் நல்லாட்சிக்காகன தேசிய முன்னணி பங்காளிக்கட்சியாக இருந்து உழைத்ததில் மகிழ்ச்சி அடைகிறது. Continue reading

குருக்கள்மடம் கொலைக்களத்தில் ஆளுந்தரப்பு அரசியல்வாதிகள் மத்தியில் நடந்தது என்ன?

VU-1இன்றை ‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதான தலைப்புச் செய்தி!

புதைகுழியில் பிரமுகர்கள், அதிகாரிகள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் முன்பாகப் பூசிக் கொண்ட கரியை சம்மேளனத்தில் பெண்களின் முன்னால் ஒப்பாரி வைத்து துடைக்க சிப்லி பாறூக் முயற்சி!

Ku--1குருக்கள்மடம் கடற்கரைப் பிரதேசத்தில் மனித புதைகுழி என களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அல்ஹாஜ் றவூப் ஏ. மஜீத் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டிருந்த இடத்திற்கு சட்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 13ம் திகதி சனிக்கிழமை காலை 08:30க்கு சமூகமளித்தனர். Continue reading

ஊடகங்களை அச்சுறுத்தும் அமைச்சர் றிசாட்டின் நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். -நல்லாட்சிக்கான தேசியமுன்னணி

NFGG-LOGOrisadமக்களின் குரல்களாக ஒலிக்கும் ஊடகங்களை அச்சுறுத்தி அவர்களின் குரல் வளைகளை நசுக்க முயலும் அமைச்சர் றிசாட்டின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதாக நல்லாட்சிக்கான தேசியமுன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: Continue reading

அமைச்சர் றிஷாதின் தேர்தல் முறைகேடுகள் குறித்து கபே நிறுவனத்திடம் முறைப்பாடு

NFGG-LOGOஊவா மாகாணசபைத் தேர்தல் நாளை (20.09.2014) இடம்பெற இருக்கும் நிலையில், பதுளை மாவட்டத்தில் இடம்பெறுகின்ற தேர்தல் முறைகேடுகள் குறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கபே நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றது.

அத்தோடு குறித்த பிரதேசத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தேர்தல் முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகள் ஆதாரங்கள், மற்றும் சாட்சியங்களையும் உரிய அமைப்பில் தொடர்புடையவர்களுக்கு வழங்கும் செயன்முறை குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது. Continue reading

அமைச்சர் பஷீர் சேகு தாவூத் அவர்களின் அண்மைய உரைகளும் எமது அவதானங்களும்.

Dr.-ILM.-Rifas(Dr. ILM. றிபாஸ்)

காதுகளே இவன் கரங்களுக்கு

கட்டளை இடுவதால்

வார்த்தை ஜாலங்களுக்குள்

வாக்கை தொலைப்பவன்

மூளையை இவன்

மூடியே வைப்பதால்

மூடர்களால்கூட இவனுக்கு

தலைவனாயிருக்க முடிகிறது. – என்கிறது ஒரு கவிதை.

இது நமது சமகால அரசியல் நிலவரத்தில் நமது தேசத்திலே ஒரு வாக்காளனின் மனோ நிலையினை அப்பட்டமாக எடுத்துக் காட்டும் வரிகளாகும். Continue reading

‘வார உரைகல்’ பத்திரிகையை தபால் மூலம் பெற்றுக் கொள்வதற்கு நீங்கள் செய்ய வேண்டியது…

பத்தாவது ஆண்டில் கால் பதித்துள்ள ‘வார உரைகல்’ பத்திரிகையை வாரந்தோறும் உங்களின் இல்லங்களுக்கும், வர்த்தக நிலையங்களுக்கும் தபாலில் வரவழைத்துக் கொள்வதற்கு பிரதி வாரமும் புதன்கிழமைகளில் 50/= பெறுமதியான முத்திரையுடன் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்

VU-308-1

முகவரி:
ஆசிரியர்
‘வார உரைகல்’
இல: 43, அப்றார் நகர் வீதி,
புதிய காத்தான்குடி – 06 (30100)

VU-307--1

கி.மா. சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லியின் அதிசொகுசு வாகனம் விபத்துக்குள்ளானது

BMW-Car-1-netகிழக்கு மாகாண சபை உறுப்பினரான பொறியியலாளர் அப்துல் பாறூக் மொஹமட் ஷிப்லி (இவரது உண்மையான பெயர்: முஹம்மது பாறூக் மொஹமட் ஷிப்லி) என்பவருக்குச் சொந்தமான றுP முறு 6868 எனும் இலக்கமுடைய டீஆறு கறுப்பு நிற அதிசொகுசு கார், இன்று (06.09.2014) நண்பகல் காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பள்ளிவாசல் வீதியில் விபத்துக்குள்ளாகியதாக ‘வார உரைகல்’லுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
Continue reading