Archive for the ‘ கட்டுரைகள் ’ Category

காத்தான்குடி ஆசிரியையால் முஸ்லிம்களின் இளவயது திருமணங்கள், விவாகரத்துக்கள் NGOக்களுக்கு விற்கப்படுகின்றனவா?

burka5

-முஹம்மது நியாஸ்-

காத்தான்குடி பிரதேசத்தில் நடைபெற்றுவருகின்ற இளவயது திருமணங்கள் மற்றும் விவாகரத்துகளின் எண்ணிக்கைகள், விபரங்கள் அனைத்தும் ஒரு அரச சார்பற்ற மேலைத்தேய தனியார் தொண்டு நிறுவனம் (NGO) ஒன்றிற்கு விற்கப்படுவதாக நம்பகமான தகவல்கள் பல கிடைத்துள்ளன.

காத்தான்குடியைச் சேர்ந்த, அடிக்கடி மேலைத்தேய நாடுகள் பலவற்றிற்கு தனிப்பட்ட பயணங்களை “தனியாக” மேற்கொள்கின்ற “ஆங்கில மொழிப்புலமை” வாய்ந்த பெண் ஆசிரியை ஒருவர் குறித்த அந்த NGOவிடம் இதுவரைக்கும் சுமார் ஐம்பது இலட்சம் ரூபாய்களுக்கும் மேற்பட்ட பணத்தொகையை பெற்றுக்கொண்டு இந்த வேலைத்திட்டத்தில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. Continue reading

அரசையும் சிங்கள மக்களையும் திருப்திப்படுத்த கிழக்கு முஸ்லிம்களை காவு கொடுக்கும் ஹக்கீம்

625.167.560.350.160.300.053.800.300.160.90கடந்த வாரம் சம்பூரில் கடற்படை அதிகாரி ஒருவரை வசைபாடியதாக கூறப்படும் சம்பவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற வைபவமொன்றின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கிண்ணியாவில் நடைபெற்ற பொது நிகழ்வு ஒன்றில் ஹக்கீம் உரையாற்றும் போது முதலமைச்சர் எவ்விதமான முன் நிபந்தனையும் இன்றி குறித்த கடற்படை அதிகாரியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பகிரங்கமாக சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். Continue reading

உரைகல்லில் “வார உரைகல்”

-ஏ.எல். முஹம்மது நியாஸ் – பிரதம துணை ஆசிரியர், ‘வார உரைகல்’-

(காத்தான்குடி தாருல் அதர் அமைப்பின் முக்கிய செயற்குழு உறுப்பினரான சகோதரர் AB.. யாகூப் என்பவரும், அவரோடு இணைந்து இன்னும் சிலரும் ‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி றஹ்மதுழ்ழாஹ் மற்றும் பிரதம துணை ஆசிரியர் முஹம்மது நியாஸ் ஆகியோர் குறித்தும், இப்பத்திரிகையின் ஊடக செயற்பாடுகள் தொடர்பிலும் மின்னஞ்சல் வழியாக முன் வைத்த விமர்சனங்கள், குற்றச்சாட்டுகளுக்கு பிரதம துணை ஆசிரியர் முஹம்மது நியாஸ் அவர்கள் சகோதரர் AB. யாகூப் அவர்களுக்கு எழுதிய காத்திரமான பதில் அறிக்கை)

???????????????????????????????Mohamed Niyas Zajil nதாருல் அதர் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் யாக்கூப் அவர்களின் முதலாவது மின்னஞ்சல் கடிதம்:

அஸ்ஸலாமு அலைக்கும்

நியாஸ்! நீங்கள் அத்வைதம் சம்மந்தமாகவும் இறை நிராகரிப்பு தொடர்பாகவும் தொடர்ச்சியாக உங்கள் பணியைச் செய்து வருகின்றீர்கள். அல்ஹம்துலில்லாஹ். அது போல் ஊரில் யார் நல்லது செய்தாலும், கெட்டது செய்தாலும் பாரபட்சமின்றி உங்கள் கருத்தைச் சொல்கின்றீர்கள். எந்த ஊடகம் தவறு செய்தாலும் அதைத் தோலுரிப்பது உங்கள் வழமை. Continue reading

முஸ்லிம் காங்கிரசின் பேரம் பேசும் சக்தி இழப்பும் த.தே.கூட்டமைப்பு மீதான காழ்ப்புணர்ச்சியும்

sampanthan_hakeem_001ஆரம்பத்தில் இருந்தே ஜனாதிபதி மஹிந்தவுடன் கைகோர்த்து நிற்கின்ற அமைச்சர்களான றிஷாத் பதியூதீன், அதாவுல்லா ஆகியோர்களுக்கு ஜனாதிபதி தொட்டு இந்த ஆட்சியில் நல்ல மதிப்பும் மரியாதையும் உள்ளது. அந்தளவுக்கு ஹக்கீமால் இருக்க முடியவில்லை. காரணம் ஹக்கீம் மீது ஜனாதிபதியும் அரசும் நம்பிக்கை இழந்து விட்டது.

தற்போது முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்துள்ளது என்பது கூட ஹக்கீம் தானாக விரும்பி போகவில்லை. இழுத்து வந்துள்ளார்கள். Continue reading

சிவில் சட்டமும் ஷரீஆ சட்டமும்: ஓர் ஒப்பியல் நோக்கு (பாகம்:01)

-‘ஊடகச் சமராளி’ ஏ.எல். முஹம்மது நியாஸ்-

Holy Qurancriminal Lawஒரு நாட்டில் நிலைகொண்டுள்ள, அரசோச்சுகின்ற அரச நிருவாகத்தின் முதுகெலும்பாகக் கணிக்கப்படுவது அதன் சட்டத்துறை என்றால் அது மிகையாகாது. எந்தவொரு நாட்டில், அரச நிருவாகத்தில் இந்த சட்டத்துறை செயலிழந்து, நலிவுற்று, தனிநபர் கட்டுப்பாட்டில் காணப்படுகிறதோ அந்நாட்டில் பொதுமக்களுடைய சமாதான சகவாழ்வு மற்றும் நாட்டின் ஜனநாயகம், அரசின் இறைமை என்பன பாரியளவில் வீழ்ச்சியடைந்தே காட்சியளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
Continue reading

பூர்வீகக் கோட்பாட்டு சிந்தனையே இலங்கையின் அழிவுக்கும் இன முரண்பாடுகளுக்கும் அடிப்படையாக அமைந்திருக்கின்றது.

அளுத்கம பேருவளை பகுதிகளில் கடந்த யூன் மாதம் 15ம் திகதி தொடக்கAluthkama riotsம் 3 தினங்கள் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களில் சுமார் 4 பேர் உயிரிழந்து, 80ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன் பல பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டு பல கோடி சொத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளது. Continue reading

பௌத்த மதத்தினரைப் பீடித்துள்ள அநகாரிக மனோபாவம்: அன்றைய கம்பளை முதல் இன்றைய அளுத்கம வரை (ஒரு மீள்வாசிப்பு)

முஸ்லிம்களை மீண்டும் ‘ யூத சைலோக்களாக’க் காட்டும் முயற்சி ;

2015ல் இனக்கலவரம் வெடிக்கும் என்கிற அச்சத்தில் முஸ்லிம்கள்!

1915-1இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் கறைபடிந்த கறுப்பு வருடமொன்று இருக்குமென்றால்இ அது கசப்பான துன்பவியல் சம்பவங்கள் நாடளாவ நிகழ்ந்தேறிய 1915 தான் என்பதை எவராலும் என்றுமே மறுக்க முடியாது

இலங்கையில் இந்த 1915 மே மாதம் 28 ல்தான் மிலேச்சத்தனமான, முஸ்லிம்களுக்கு எதிரான முதல் இனக்கலவரம் வெடித்திருந்தது. Continue reading

பொது பல சேனாவும் அதன் மதவெறியும்

கடந்த வாரம் அழுத்கமவில் பற்றவைக்கப்பட்ட இனவாத நெருப்பு, தீவின்gnanasara1 மக்களைப்பற்றிய வெறுக்கத்தக்க அபிப்ராயத்தை உருவாக்கியுள்ளது.

அது இந்த நாட்டை மூன்று தசாப்தங்களுக்கு முன் நடந்த இரத்தக்களரி மற்றும் பொருளாதார இழப்புகளை நோக்கி இழுத்துச் சென்றுள்ளது.

சமூகத்தின் நுண்ணிய இழைகள் திரும்பவும் ஒன்றுசேர முடியாத அளவுக்கு அடையாளம் காணப்படாத சிதறல்களாக உடைந்து நொருங்கியுள்ளன.

இன்னும் சொல்லப்போனால் அந்தக் கடற்கரை நகரத்திலும் அதன் சுற்றாடலிலும் நடந்த சம்பவங்கள் நாட்டை கசப்பான மிருகத்தனமான வரலாற்றுக்கு தள்ளிவிடும் சாத்தியம் உள்ளது.

Continue reading

இஸ்லாமியர்கள் மீதான வன்முறை கிழக்கிற்கும் பரவப் போகின்றதா?

ltte Slmsகடந்த மாதம் பிரித்தானியாவிற்கு வருகை தந்திருந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டக் குழுவிடம் எச்சரிக்கையுடன் கூடிய ஒரு செய்தி தமிழர் தரப்பினால் வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 25.05.2014 அன்று லன்டனில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டக் குழுவுக்கும், தமிழர் தரப்பிற்கும் இடையில் நடைபெற்ற ஒரு முக்கிய சந்திப்பின் பொழுது; தமிழர் தரப்பினால் இந்தச் செய்தி முஸ்லிம் காங்கிரசிற்கு வழங்கப்பட்டது. தமக்கு இரகசியமாகக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தாம் இந்த எச்சரிக்கையை விடுப்பதாக தமிழர் தரப்பு தெரிவித்திருந்தது. Continue reading

காத்தான்குடியில் தாலிபான்களா? இன்டர்போலின் அறிக்கைக்கு வன்மையான கண்டனம்……

-ஊடகச் சமராளி’ மொஹமட் நியாஸ்-Niyas

Interpolஇலங்கையில் காத்தான்குடி மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் சர்வதேச பயங்கரவாத அமைப்பான தாலிபான்கள் செயற்பட்டு வருவதாக சர்வதேசக் காவல்துறையான இன்டர்போல் இலங்கை புலனாய்வுத்துறைக்கு விடுத்துள்ள எச்சரிக்கைக்கு Srilankanmuslim.com இணையத்தளம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இன்டர்போல் குறிப்பிடுவது போன்ற எந்தவொரு உள்நாட்டு, வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களும் காத்தான்குடிப் பிரதேசத்திற்குள் கிடையாது என்பதையும் சமூகப்பொறுப்புடன் கூறிக் கொள்கிறது.
Continue reading