ஏப்ரல், 2013 க்கான தொகுப்பு

ஓட்டமாவடி மாணவியைத் துஷ்பிரயோகித்த பாக்கீர் மாஸ்டருக்கு ஒரு வாரம் விளக்கமறியல்!

Bakir-Sirகடந்த ஒரு வார காலமாகத் தலைமறைவாகத் திரிந்த காத்தான்குடி நகர சபையின் ஆளுந்தரப்பு உறுப்பினரும், பிரத்தியேக டியூஷன் வகுப்பு மாஸ்டருமான எச்.எம்.எம் பாக்கீர் மாஸ்டர் இன்று 30.04.2013 பிற்பகல் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் எம். அப்துழ்ழாஹ் அவர்களின் முன் ஆஜர் செய்யப்பட்டபோது அவரை எதிர்வரும் 08.05.2013 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

ஓட்டமாவடியைச் சேர்ந்த மாணவி மீது கடந்த 22ம் திகதி இவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக அம்மாணவி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அன்றைய தினம் முறைப்பாடு செய்திருந்தார். Continue reading

கணக்கறிக்கையை முன்கூட்டிக் கையளிக்க சம்மேளனம் தயக்கம்! யாப்பைக் காட்டி பொதுச்சபை உறுப்பினர்களை மடக்க முயற்சி!! பொதுச்சபை உறுப்பினர்களே உஷார்.. உஷார்!!!

Sammelanam-(New)காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயற்பாடுகள் தொடராக முன்னெடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு அதன் நிர்வாக மற்றும் பொதுச் சபை உறுப்பினர்களினால் பரவலாக முன் வைக்கப்படுகின்றது.

சம்மேளன பொதுச்சபை உறுப்பினர்களுக்கு பொதுச்சபைக் கூட்டம் நடைபெறுவதற்கு 14 நாட்களுக்கு முன்னதாக அதன் வருடாந்தக் கணக்கறிக்கையைக் கைளிக்க வேண்டும் என்ற விடயம் கிடப்பில் போடப்பட்டு விட்டதாக கடந்த 21.04.2013ம் திகதி நடைபெற்ற சம்மேளனத்தின் வாராந்த நிர்வாக சபைக் கூட்டம் நடைபெற்று முடிந்த கையோடு நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் ‘வார உரைகல்’லுக்கு கவலையுடன் தகவல் தெரிவித்தார். Continue reading

அமீரலியின் நம்பிக்கையான நம்பிக்கையீனம்!

ameeraliகிழக்கு மாகாண சபையின் செயற்பாட்டில் நம்பிக்கை இழந்து விட்டதாக, அம்மாகாண சபைத் தேர்தலின்போது முதலமைச்சருக்கான வேட்பாளராகப் போட்டியிட்டு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி எம்.எஸ்.எஸ். அமீரலி பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் நம்பிக்கை இழந்திருப்பதால் கிழக்கு மாகாண அரசியலில் திடீர் மாற்றமொன்று ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் நிலவுவதாகவும் ஹேஸ்யம் கூறியுள்ளார். Continue reading

காத்தான்குடி தண்ணீர்த் தாங்கியில் நீர்க் கசிவு! பெரும் பணச் செலவில் ஓட்டைகள் அடைப்பு!!

Water Tank-1காத்தான்குடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தண்ணீர்த் தாங்கியில் தண்ணீர்க் கசிவு ஏற்பட்டிருப்பதாக ‘வார உரைகல்’லின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த ஓட்டைகளை பூசி மெழுகி அடைப்பதற்கான நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்பட்டதாக அப்பகுதிப் பொதுமக்கள் புகைப்படங்களுடன் சுட்டிக்காட்டுகின்றனர். Continue reading

‘வார உரைகல்’ விநியோகமும், பாக்கீர் மாஸ்டரின் விவகாரமும்

Vu--256வார உரைகல்’ பத்திரிகையின் 256வது பதிவு கடந்த 25ம் திகதி வியாழக்கிழமை மாலை காத்தான்குடியில் விநியோகிக்கப்பட்டது.
இவ்வாறு பத்திரிகையை விநியோகிக்கச் சென்றபோது பலரும் மிகவும் ஆர்வத்துடன் முதலில் கேட்ட கேள்வி: ‘இதில் பாக்கீர் மாஸ்டரின் செய்தி வந்துள்ளதா?’ என்பதேயாகும்.

அதற்கு வழமைபோல் பத்திரிகையை விநியோகிக்கச் சென்ற நான் அளித்த பதில்: ‘இது பாக்கீர் மாஸ்டரின் விடயத்திற்காக விஷேடமாக வெளியிடப்பட்ட பத்திரிகை அல்ல. வாரா  வாரம் வெளியிடப்படுவது போலவே இவ்வாரமும் பத்திரிகை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த வாரம் நமதூரில் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்த அவர் சம்பந்தப்பட்ட செய்தியும் இடம்பெற்றுள்ளது.’

மீண்டும் என்னிடம் அவர்கள் கேட்ட கேள்வி: ‘அவர் தான் தவறு எதுவும் செய்யவில்லை என்றும், மெத்தைப்பள்ளிவாசலில் அழிவுச் சத்தியம் செய்து நிரூபிக்கப் போவதாகவும் அறிவித்திருக்கின்றாராமே?’ Continue reading

வாழைச்சேனை பொலீஸாரிடம் பாக்கீர் ஆசிரியர் ஒப்படைக்கப்படவில்லை! ஓட்டமாவடி பரதேச சபத் தவிசாளரிடமே மக்கள் கையளித்தனராம்! – ஒரு திருத்தச் செய்தி

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம். பாக்கீர் மாஸ்டரை வாழைச்சேனையில் மடக்கிப் பிடித்த பொதுமக்கள் அவரை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு ஒப்படைத்ததாக சற்று முன்னர் வெளியிட்ட எமது இணையதளச் செய்தியில் தெரிவித்திருந்தோம்.

அவர் வாழைச்சேனையில் மடக்கிப் பிடிக்கப்பட்டதை உறுதிப்படுத்திய ஓட்டமாவடிப் பிரமுகர் ஒருவர், அவரை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க முயன்றபோது பொலீசார் அவரைப் பொறுப்பேற்க மறுத்ததையடுத்து ஓட்டமாவடி பிரதேச சபைத் தலைவர் ஹமீட் என்பவரிடம் பாக்கீர் மாஸ்டரைத் தாங்கள் கைளித்ததாகவும், அவர் இவரை பாதுகாப்பாக காத்தான்குடிக்கு அனுப்பி வைத்திருக்கலாம் என்றும் தற்போது தெரிவித்துள்ளார். Continue reading

பாக்கீர் ஆசிரியர் வாழைச்சேனையில் பிடிக்கப்பட்டு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் பொதுமக்களால் ஒப்படைப்பு! காத்தான்குடி பொலிசார் என்ன செய்கிறார்கள் என பொதுமக்கள் விசனத்துடன் கேள்வி!!

HMM.-Baakirகாத்தான்குடி நகர சபையின் ஆளுந்தரப்பு உறுப்பினரான ‘நவீன பொருளியல்’ பிரத்தியேக ஆசிரியர் எச்.எம்.எம். பாக்கீர், நேற்றிரவு வாழைச்சேனையால் கடந்த செல்ல முற்பட்ட சமயத்தில் அப்பகுதிப் பொதுமக்களால் சுற்றி வளைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

இவரை முறைப்பாடு தெரிவித்த மாணவியின் வீட்டுக்குக் கொண்டு செல்ல முயன்றபோது, அதனை விரும்பாத மாணவியின் தந்தை மஹ்றூப் அவரை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கூறினார். Continue reading

காத்தான்குடி தலைமைத்துவங்கள் ஆழ்ந்த உறக்கத்தில்! பொது பல சேனா என்ன சொல்கிறது?

Bodu-Bala-Sena-799977Bakir-Sirகாத்தான்குடி நகர சபை உறுப்பினரும், தனியார் வகுப்பு ஆசிரியருமான எச்.எம்.எம். பாக்கீர், நேற்றைய தினம் மாணவி ஒருவரை அவரது காரில் அழைத்துச் சென்று  பாலியல் துஷ்பிரயோகம் செய்யமுற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து காத்தான்குடி முஸ்லிம் சமூகத் தலைமைத்துவங்கள் அனைத்தும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து வருகின்றன.

சம்பவம் நடைபெற்று 24 மணித்தியாலம் நிறைவடையவுள்ள இவ்வேளையில் இச்சம்பவம் குறித்து காத்தான்குடியிலுள்ள அரசியல், சமய, சமூக நிறுவனங்களின் தலைமைத்துவங்கள் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் தொடர் மௌனமே காத்து வருகின்றன.

குற்ற்ஞ்சாட்டப்பட்ட நகர சபை உறுப்பினரையோ, அல்லது இத்துஷ்பிரயோகத்திற்குப் பயன்படத்தப்பட்ட வாகனத்தையோ காத்தான்குடி பொலிசார் இதுவரை கைது செய்யவில்லை. Continue reading

துஷ்பிரயோகக் குற்றச்சாட்டை முன்வைத்த மாணவி மட்டு. ஆஸ்பத்திரியில்! பாக்கீர் ஆசிரியர் பொலிசில் ஆஜாரகவில்லையாம்!! முன்னாள் மாகாண உறுப்பினரும் மறுப்பு தெரிவிப்பு!!!

Bakir-Sirஇன்று மதியம் காத்தான்குடி நகர சபையின் ஆளுந்தரப்பு உறுப்பினரான எச்.எம்.எம். பாக்கீர் ஆசிரியரால் அவரது காரில் வைத்து காத்தான்குடிக்கு அப்பாலுள்ள தமிழ்ப் பிரதேசமொன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயற்சிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் ஓட்டமாவடிப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மாணவியை காத்தான்குடி பொலிசார் வைத்திய பரிசோதனைக்காக சற்று முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 7ம் வார்டில் அனுமதித்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை எமது 2ம் பதிவேற்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தவாறு குற்றச்சாட்டுக்குள்ளான நகர சபை உறுப்பினர் பாக்கீர் ஆசிரியர் பொலீசாரால் அழைத்துச் செல்லப்படவில்லையென்றும், அவர் இச்செய்தி எழுதப்படும் இரவு 07:30 மணி வரை பொலிஸ் நிலையத்திற்குச் செல்லாமல் தலைமறைவாகி இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. Continue reading

ஒரு பூவும், பூவையும் பொலிஸ் விசாரணையில்..! பாக்கீர் ஆசிரியர் – பள்ளி மாணவி விவகாரம் (2ம் இணைப்பு)

HMM.-Baakirஓட்டமாவடியைச் சேர்ந்த மாணவியொருவர் காத்தான்குடி நகர சபையின் ஆளுந்தரப்பு உறுப்பினரான பாக்கீர் ஆசிரியரின் மதினியின் வீட்டில் பல மாதங்களாகவே தங்கியிருந்து கல்வி கற்று வருகின்றவராம்.

அவரை கல்முனையில் நடைபெறும் பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதாகக் கூறி பாக்கீர் ஆசிரியர் இன்று காலை அவரது காரில் ஏற்றிக் கொண்டு கல்முனை நோக்கிச் சென்றாராம்.

இம்மாணவியுடன் வித்தியாசமான முறையில் கதைத்துக் கொண்டு சென்ற அவர் இடையில் நுங்கு விற்கும் இடமொன்றில் காரை நிறுத்தியபோது மாணவி சப்தமிட்டவாறு காரின் கதவுகளைத் திறந்து கொண்டு வீதியில் இறங்கினாராம். Continue reading