ஒக்ரோபர், 2015 க்கான தொகுப்பு

‘வார உரைகல்’ பெயரில் போலியான முகப்புத்தகம்! வாசகர்கள் அவதானமாக இருக்குமாறு பிரதம ஆசிரியர் வேண்டுகோள்!!

12108809_123023458053683_7335399713151487696_n12115440_123006074722088_7947189012300358443_n‘வார உரைகல்’ எனும் பெயரில் இங்கு காணப்படும் என்னால் வெளியிடப்பட்ட 253 மற்றும் 300வது ‘வார உரைகல்’ பத்திரகைகளின் முன்பக்கப் புகைப்படங்களுடன் முகப்புத்தம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு வருவதாக வாசகர்கள் பலரும் எனது கவனத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

எனினும், அரசாங்கத் தகவல் திணைக்களம் மற்றும் தேசிய சுவடிகள் காப்பகத் திணைக்களம் என்பவற்றில் முறைப்படி என்னால் பதிவுசெய்யப்பட்டுள்ள ‘வார உரைகல்’ எனும் இந்த ஊடகத்தின் பெயரில் என்னால் இவ்வாறானதொரு முகப்புத்தகம் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்படுவதில்லை என்பதை அனைத்து வாசகர்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இத்தால் பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Continue reading

“முத்தான வியர்வை” எனும் தொனிப்பொருளில் சுயதொழில் உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும்

(நமது செய்தியாளர் லியோன்)

Divineguma--1மட்டக்களப்பு மாவட்ட செயலக,  வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தினால் “முத்தான வியர்வை” எனும் தொனிப்பொருளில் மாபெரும் கண்காட்சியும் விற்பனையும் கடந்த 24ம் திகதி சனிக்கிழமை கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது .

மட்டக்களப்பு  மாவட்ட  “திவிநெகும”   திணைக்கள பணிப்பாளர்  பி. குணரட்ணம்  தலைமையில்,  மட்டக்களப்பு  நாவற்குடா  விளையாட்டு மைதானத்தில்  அன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு   ஆரம்பித்து வைத்தார்.
Continue reading

ஹேடன் நேஷனல் வங்கியின் கிழக்கு பிராந்திய கிளைகளின் 2015ம் ஆண்டுக்கான விளையாட்டு விழா

(எமது செய்தியாளர் லியோனி)

DSC_1099ஹேடன் நேஷனல் வங்கியின்  கிழக்கு பிராந்திய கிளைகளின் 2015ம் ஆண்டுக்கான   விளையாட்டு விழா ஹேடன் நேஷனல் வங்கி பிரதி பொது முகாமையாளர் திமால் பெரேரா தலைமையில்  இன்று  மட்டக்களப்பு முகத்துவாரம் லைட் ஹவுஸ் விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்றது .

 இடம்பெற்ற  2015ம் ஆண்டுக்கான  விளையாட்டு விழாவில்  கிழக்கு பிராந்தியத்தில்  மூன்று மாவட்டத்தையும்  சேர்ந்த 24  கிளைகளின்  உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் . Continue reading

மட்டக்களப்பு வலய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான ஆங்கில மொழித்திறன் போட்டிகள்

(எமது செய்தியாளர் லியோனி)

DSC_0805-Aமட்டக்களப்பு மாவட்டத்தில்  கரித்தாஸ் எகெட்  நிறுவகம் நடைமுறைப்படுத்தும் ஒருங்கிணைந்த சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை அபிவிருத்தி செய்யும் நோக்கில்   மாணவர்களுக்கிடையிலான ஆங்கில மொழித்திறன் போட்டி நிகழ்ச்சிகளை செயல்படுத்தி வருகின்றது .  .

இதன் கீழ்  மட்டக்களப்பு  வலய பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை  மாணவர்களுக்கிடையிலான ஆங்கில மொழித்திறன் போட்டிகள் கரித்தாஸ் எகெட்  நிறுவக இயக்குனர் அருட்தந்தை ஜெரோம் டிலிமா தலைமையில்  இன்று மட்டக்களப்பு சார்ள்ஸ்  மண்டபத்தில் இடம்பெற்றது Continue reading

சுயதொழில் ஈடுபட்டுள்ள பெண்களை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் சேதனை பசளை முறையிலான பயிர்செய்கை தொடர்பாக ஒரு நாள் பயிற்சி

(எமது செய்தியாளர் லியோன் )  

B 2மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில்  “அகம்” நிறுவனம்  பெண்களுக்கான பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. .

இதன் கீழ்  சுயதொழில் ஈடுபட்டுள்ள பெண்களை மேம்படுத்தும்  வேலைத்திட்டத்தின்   சேதனை பசளை முறையிலான பயிர்செய்கை தொடர்பாக ஒரு நாள் பயிற்சி நெறி “அகம்” நிறுவனத்தின்  இணைப்பாளர் தங்கராசா திலீப்குமார்  தலைமையில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான்  விவசாய திணைக்களத்தில்  இடம்பெற்றது . Continue reading

பல்கலைக்கழக மாணவர்களில் தெரிவு செய்யப்பட மாணவர்களுக்கு கல்விக்கான ஊக்குவிப்பு தொகை வழங்கும் நிகழ்வு

(எமது செய்தியாளர் லியோன் )   

A 1மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட “அகம் “ நிறுவனத்தினால்   மட்டக்களப்பு மாவட்டத்தில்   பெண்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன .

இதன் கீழ்  “அகம் “ நிறுவனத்தினால்   கிழக்கு பல்கலைக்கழகத்தில்  கல்வி பயின்று வரும்  வவுணதீவு , வெல்லாவெளி ,பட்டிப்பளை , கிரான்  ஆகிய பகுதி  பல்கலைக்கழக மாணவர்களில் தெரிவு செய்யப்பட மாணவர்களுக்கு கல்விக்கான ஊக்குவிப்பு தொகை வழங்கும் நிகழ்வு  இன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  இடம்பெற்றது . Continue reading

விமர்சனங்களையும் குற்றசாட்டுக்களையும் முன் வைத்தவர்களிடமே பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. – கி.மா. கல்விப் பணிப்பாளர் நிஸாம்

(எமது செய்தியாளர் லியோன் ) 

L 1சுகாதார முன்னணி எனும் வேலைத்திட்டத்தின் கீழ்  கிழக்கு மாகாணத்தில்  தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான   மலசல கூடங்கள்  அமைப்பதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

இதன் கீழ்  இதற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம் .டி .எம். நிசாம்  தலைமையில் இன்று  மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது . Continue reading

மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் சட்டப் பணிப்பாளர் ஜேம்ஸ் றொஸ், ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர் புவி றஹ்மதுழ்ழாஹ்வைச் சந்தித்தார்

HRW & Puviஅமெரிக்காவிலுள்ள மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு(HUMAN RIGHTS WATCH)வின் Legal & Policy Director Mr. James Ross இன்று (21.10.2015) இரவு காத்தான்குடிக்கு விஜயம் செய்து, ‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

அவருடன் இலங்கை மற்றும் சர்வதேச மனித உரிமைகளைப் பேணும் கண்காணிப்பு ஆர்வலரான திரு. ருக்கி பெர்ணான்டோவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார். Continue reading

மஹிந்தவிற்கு மற்றுமொரு சிக்கல் : சனல் 4 ஆவணப்படம் உண்மையானது

Story-13-720x480இலங்கைக்கு மிகவும் தலையிடியையும், சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்ததுடன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த பிரித்தானியாவின் செனல்4 ஊடகவியலாளர் கலம் மக்ரேயின் இலங்கை குறித்த ஆவணப்படம் உண்மையானது என மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த ஆவணப்படம் தொடர்பில் பதிலளித்த மஹிந்த அரசாங்கம், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பொதுமக்கள் உயிரிழக்கவில்லை எனவும், செனல்4 ஊடகத்தின் ஆவணப்படம் பொய்யானது எனவும் திட்டவட்டமாக மறுத்து வந்திருந்தது. Continue reading

ரவிராஜ் கொலை: கைதான படைவீரர் அரச தரப்பு சாட்சியாக மாற தீர்மானம்!

Nadarajah-Raviraj1-720x480முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான கடற்படை வீரர் ஒருவர், அரச தரப்பு சாட்சியாளராக மாற இணக்கம் தெரிவித்துள்ளார்.

ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேக நபரை அரசாங்க சாட்சியாளராக மாற்ற சட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். Continue reading