Archive for the ‘ இஸ்லாமிய வரலாறுகள் ’ Category

கலாபூஷணம் ஸக்கியா ஸித்தீக் பரீதின் “இஸ்லாமிய தகவல் களஞ்சியம்” நூல் வெளியீட்டு விழா

invitation--0

invitation-1

Continue reading

இறைதூதரின் ஹதீஸ்களை ஒன்று திரட்டிய இறைநேசர் இமாம் புஹாரீ (ரஹ்) அவர்கள்

‘காத்தான்குடி 5ம் குறிச்சி பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசலில் கடந்த 30 தினங்களாக பாரயணம் செய்யப்பட்டு வந்த புஹாரீ மஸ்லிஸ் கடந்த 08ம் திகதி வியாழக்கிழமை தமாம் செய்யப்பட்டது.

காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் மற்றும் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல்களிலும், காங்கேயனோடை முஹ்யித்தீன் ஜும்ஆப் பள்ளிவாசலிலும் பாரயணம் செய்யப்பட்டு வரும் புஹாரீ மஜ்லிஸ் எதிர்வரும் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தமாம் செய்யப்படவுள்ளது. இந்நிகழ்வுகளை முன்னிட்டே இமாம் புஹாரீ (ரஹ்) அவர்களைப் பற்றிய இச்சிறப்புக் கட்டுரை பிரசுரமாகின்றது’

இறைத் தூதர்களில் இறுதியானவர்களான முஹம்மது முஸ்தபா (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம்  பொதிந்த ஹதீஸ் கலை வரலாற்றில் ‘அமீருல் முஃமினீன்’ என ஏகமனதாக அழைக்கப்படுபவர்கள்தான் இமாம் புஹாரீ (ரஹ்) அவர்களாகும்.

அவர்களின் முழுப்பெயர் அபூ அப்தில்லாஹ் முஹம்மதுப்னு இஸ்மாயீல் என்பதாகும். சோவியத் ரஷ்யாவிலுள்ள ‘புஹாரா’ என்னும் ஊரில் அவர்கள் பிறந்ததன் காரணமாக ‘புஹாரீ’ என அழைக்கப்பட்டார்கள். Continue reading

பைத்துல் முகத்தஸ் வரலாறு – முஸ்தபா மௌலானா –

பைத்துல் முகத்திஸ் (தூய்மையான வீடு) என்றழைக்கப்படும் மஸ்ஜிதுல் அக்ஸா இருக்குமிடத்தில், இற்றைக்கு சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஒரு நபியினால் ஓர் பள்ளிவாசல் கட்டப்பட்டது.

அதன் பின் ஆயிரம் ஆண்டுகள் வரை நபிமார்கள் தரிசிக்கும் புனித இடமாக அல் அக்ஸா இருந்தது.

நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்திய மன்னரான பிர்அவ்னின் துன்பத்திலிருந்து யூதர்களை மீட்டு நபி மூஸா (அலை) அவர்கள் அங்கு குடியேறினார்கள்.

அங்கே மூஸா (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைப்படி பழைய அத்திவாரத்தின்மீது ஓர் பள்ளிவாசலைக் கட்டினார்கள். அதிலே குர்ஆனில் கூறப்பட்ட ‘தாபூத்’ என்ற பெட்டியையும், அவர்களுக்கு அருளப்பட்ட கட்டளைகளையும் வைத்துப் பாதுகாத்தார்கள். மிகவும் புனிதமாகக் கருதப்பட்ட (குர்பான் கல்) பலிபீடமும் அங்கு இருந்தது. அதன் திசையிலேயே யூதர்களின் வணக்கம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. மூஸா (அலை) அவர்களுக்குப் பின் ஹாரூன் (அலை) அவர்கள் இப்பள்ளிவாசலைப் பொறுப்பேற்றுப் பாதுகாத்து வந்தார்கள்.

Continue reading