ஜூன், 2011 க்கான தொகுப்பு

காங்கேயனோடை பெரிய பள்ளிவாசல் காணி மோசடியாளர்களுடன் செயலாளர் ஹிழுர் அதிபரும் சோரமானார்!

-15 வீடுகளுக்கும் 15 இலட்சம் பணத்திற்குமாக நிலைப்பாட்டை விற்றுவிட்ட நிர்வாகம்-

இலங்கையிலுள்ள ஈரான் நாட்டின் தூதுவர் மஹ்மூத் றஹீமி கோர்ஜி அவர்களுக்கு காங்கேயனோடை பெரிய பள்ளிவாசலுக்குரிய வக்பு செய்யப்பட்ட காணியை சட்டவிரோதமாகவும், மோசடியான முறையிலும் தாரைவார்த்த விவகாரத்தில் கடந்த வியாழக்கிழமை வரை பள்ளிவாசல் நிர்வாக சபையினதும், ஜமாஅத்தினர்களினதும் மானம், மரியாதையைக் காப்பதில் உறுதியாக இருந்த மேற்படி பள்ளிவாசல் நிர்வாக சபையின் பிரதான நிர்வாகிகளான தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் தற்போது இம்மோசடிச் செயற்பாட்டாளர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிச் சோரம் போய் விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே 03ம் திகதி இப்பள்ளிவாசல் நிர்வாக சபை சார்பில் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுர அறிக்கையில், ஈரான் தூதுவரின் பெயருக்கு இப்பள்ளிவாசல் காணியை எழுதித் தாரை வார்த்த மோசடியான நடைமுறையை வன்மையாகக் கண்டித்திருந்த நிர்வாக சபையினர், தற்போது 15 இலட்சம் ரூபா பணத்திற்கும், 15 வீடுகளுக்குமாக இம்மோசடிக்காரர்களிடம் சோரம் போயுள்ளதாகக் கூறப்படுகின்றது.

சட்டத்தரணி எம்.ஐ.எம். நூர்தீன் அவர்களால் மோசடியான முறையில் உறுதி எழுதப்பட்ட இப்பள்ளிவாசல் காணியைத் திரும்பவும் பள்ளிவாசலுக்கே எழுதித் தரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் மௌலவி ஏ.எல். ஆதம் லெப்பை (பஹ்ஜி), செயலாளர் ஏ.எம். ஹிழுர் அதிபர், பொருளாளர் அஷ்ஷெய்க் அப்பாஸ் நளீமி ஆகியோர் தற்போது இவ்வீட்டுத் திட்டத்திலுள்ள 15 வீடுகளையும், 15 இலட்சம் ரூபாவினையும் பெற்றுக் கொள்வதற்கு இணங்கியுள்ளதாக அறியப்படுகின்றது. Continue reading

ஐ.நா. சபையின் விஷேட தொடர்பாடல் பிரதிநிதிக்கு சுதந்திரமான கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை தொடர்பாக ‘வார உரைகல்’ சட்டத்தரணி அனுப்பியுள்ள முறைப்பாடு

Complaint to UN Special Rapporteur on the Right to Freedom of Opinion and Expression Mr. M.I. Rahamathulla (Sri Lanka)
LST case ref: COL-FOE-2011-00 9th June 2011

Information Relating to the Victim

Mr. M.I. Rahamathulla is a 56 year old, Sri Lankan national, bearing National Identity Card No. 560014562V. He is the father of six children aged 30, 28, 22, 18, 16, and 14. His two oldest daughters are married, the other 4 children is live with Mr. Rahamathulla. He is also responsible for his 11 year old grandson.

Mr. Rahamathulla is the Chief Editor of the ‘Vaara Ureikal’ newspaper – the only provincial newspaper in the Eastern Region of Sri Lanka. Mr. Rahamathulla has over 30 years experience as a journalist. In 2005 he established the Vaara Ureikal weekly newspaper in Kattankudy. Throughout, Mr. Rahamathulla has campaigned against local governmental corruption and worked to expose malpractices in the Kattankudy and Batticaloa areas. Mr. Rahamathulla employs no staff and is solely responsible for financing and publishing each issue of Vaara Ureikal which operates from his residence at No. 43, Abrar Mosque Road, New Kattankudy.6

The Incident and its Background

Mr. Rahamathulla has been subjected to several threats and attacks since he began Vaara Ureikal in 2005. He believes that the attacks are directly linked to his fight against corruption and the misuse of state resources in Kattankudy and Batticaloa. Continue reading