Archive for the ‘ சமூக அரசியல் களம் ’ Category

ஐ.தே.கட்சியின் கௌரவ செயலாளர் அல்ஹாஜ் கபீர் ஹாஸீம் அவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

DEntபதவியிலுள்ள பிரதமர் ரணில் கட்சிக்கு ஆள் சேர்க்கிறார்! காலாவதியான அமைப்பாளர்(?) முஸ்தபா கட்சிக்காரர்களை நீக்குகிறார்!!

ஐ.தே.கட்சியின் கௌரவ செயலாளர் அல்ஹாஜ் கபீர் ஹாஸீம் அவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுழ்ழாஹி வபரகாதுஹூ. Continue reading

ஐ.தே.கட்சி தலைமை அங்கீகரித்த ஷாபியை ஏற்றுக் கொள்வதாக காத்தான்குடி மத்திய குழு ஏகமனதாகத் தீர்மானம்! பெரும் குழப்பத்தில் முடிந்த இறுதி நாள் இப்தார் நிகழ்வு!!

UNP Ifthar 05.07.2016ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் கபீர் எம். ஹாசீம் அவர்களால் வழங்கப்பட்ட கடிதம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கும் நிகழ்ச்சி நிரலையும் உள்ளடக்கியதாக நேற்று (05.07.2016) செவ்வாய்க்கிழமை மாலை ஐ.தே.கட்சியின் காத்தான்குடி மத்திய குழு ஏற்பாடு செய்திருந்த புனித றமழான் மாதத்தின் இறுதி நாள் இப்தார் நிகழ்வானது, பெரும் குழப்பத்தில் முடிவடைந்தது.

Shafi-&-Kabeer-Hasim-horz-1எனினும், கட்சியின் பொதுச் செயலாளரினால் அங்கத்தவராக அங்கீகரிக்கப்பட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அங்கீகாரமளிக்கப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சியின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரான அல்ஹாஜ் எம்.எஸ்.எம். ஷாபியையும் இணைந்துக் கொண்டு காத்தான்குடி கொத்தணிப் பிரிவில் ஐ.தே.கட்சியின் வளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவது என மத்திய குழு ஏகமனதாகத் தீர்மானித்தது.
Continue reading

NFGG தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களின் புனித நோன்புப்பெருநாள் வாழ்த்துச்செய்தி

IMG-20160706-WA0000

மலர்ந்திருக்கின்ற ஈதுல் பித்ர் நோன்புப்பெருநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது இதயங்கனிந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

சிறப்பு மிக்க இத்தினத்தில் நம் அனைவரின் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாக வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன். Continue reading

புதிய தேர்தல் முறை தொடர்பில் NFGG நடாத்திய விசேட செயலமர்வு

IMG-20160610-WA0010

உத்தேசிக்கப்படும் புதிய தேர்தல் முறையில் சிறுபான்மை மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பது தொடர்பான விஷேட செயலமர்வொன்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் ஏற்பாட்டில் கடந்த 8.6.2016  அன்று கொழும்பில் நடைபெற்றது.

கொழும்பு ஹார்ட்டி நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேர்தல் முறைகள் குறித்த சர்வதேச நிபுணரான கரே வோலன் அவர்கள் கலந்து கொண்டு விரிவான ஆலோசனைகளை முன்வைத்தார்.

Continue reading

கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் விளக்கம் கோரும் ரணில்! ஜனாதிபதி நாடு திரும்பியதும் தீர்வு!!

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

திருகோணமலை சம்பூர் மஹா வித்தியாலயத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின்போது கிழக்கு மாகாண முதலமச்சர் நசீர் அஹமட் கடற்படை உயர் அதிகாரி ஒருவரை திட்டிய சம்பவம் தொடர்பில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரட்னவிடம் மட்டுமன்றி கிழக்கு மாகாண முதலமைச்சர் தரப்பிடமிருந்தும் பிரதமர் விளக்கம் கோரியுள்ளார். Continue reading

பனாமா பட்டியல் இலங்கையர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்: அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

035-450x300

பனாமா ஆவணங்களுடன் தொடர்புடைய இலங்கையர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.

பத்தரமுல்லயில் அமைந்துள்ள ஜனநாயகக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்துரை வழங்கிய அவர் மேலும் கூறியதாவது: Continue reading

அமைச்சர் ரிசாத்தின் சகோதரர் றிப்கான் பதியுத்தீன் மேற்கொண்ட மோசடி குறித்து விசாரணை

அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரரும் வடமத்திய மாகாணசபை உறுப்பினருமான ரிப்கான் பதியுதீன் மோசடியில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

சுமார் 40 ஏக்கர் காணியை போலியான ஆவணங்களைத் தயாரித்J 240 லட்ச ரூபாவிற்கு விற்பனை செய்ததாக ரிப்கான் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. Continue reading

பஷில் ராஜபக்ஷ கைது

basil-policeமுன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி ஆணைக்குழுவினால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற காணி கொள்வனவு தொடர்பிலேயே இவரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டிருந்தது. Continue reading

கி.மா. உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

???????????????????????????????கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அப்துல் பாறூக் மொகமட் ஷிப்லி அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
கடந்த 13ம் திகதி காத்தான்குடியில் நடைபெற்ற ஐம்பெரும் எழுச்சி விழாவில் பங்கேற்று உரையாற்றிய உங்களின் அரசியல் குருநாதரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அவரது உரையின் இறுதியில் உங்களை ‘ஏமற்றுக்காரன்’ எனத் தாக்கிப் பேசியது பலருக்கும் மனவருத்தத்தை ஏற்படுத்திய போதிலும், மண்டபத்திலிருந்த அவரின் அடிவருடிகள் பலரும் அதற்கும் கரகோஷம் செய்து ‘ஹூ’ சப்தமெழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். Continue reading

ஹிஸ்புல்லாவின் விமர்சனத்திற்கு புவி றஹ்மதுழ்ழாஹ்வின் சாட்டையடி!

DSC03541உருவச் சிலைக்கும், உருவப்படத்திற்கும் இடையிலான வித்தியாசம் தெரியாமல் கலைமானிப் பட்டம் பெற்றுக் கொண்டதாகக்கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்..எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா எம்மைப்பற்றி விமர்சித்திருப்பது அவரது அறிவியல் சூனியத்தை அம்பலப்படுத்தியுள்ளது என ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல மத்திய குழுவின் பொதுச் செயலாளர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

காத்தான்குடியில் நேற்று (15.05.2015) வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஐம்பெரும் விழா நகழ்வில் பங்கேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, கடந்த 13ம் திகதி காத்தான்குடி நூதனசாலையிலுள்ள உருவச்சிலைகளை அகற்றுமாறு கோரி நகர சபைக்கு முன்னால் நடாத்தப்பட்ட மக்கள் அழுத்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்த ஜனநாயகக் கட்சியினர், அக்கட்சியின் தலைவர் ‘ஃபீல்ட் மார்ஷல்’ சரத் பொன்சேகா அவர்களின் உருவப்படத்துடன் கூடிய பதாதையை ஏந்தியிருந்தது பற்றி விமர்சனம் தெரிவித்திருந்தார். Continue reading