பிப்ரவரி, 2011 க்கான தொகுப்பு

உலமாக்களின் கேள்விக்கு விடையளிக்காத ஹிஸ்புல்லாஹ்வுக்கு உலமாக்களிடம் கேள்வி கேட்க என்ன யோக்கியதை உள்ளது?

“VAARAURAIKAL” Vol: 173 -25.02.2011- Page: 05

-PMGGயின் இரண்டாவது பிரச்சாரக் கூட்டத்தில் அஷ்ஷெய்க் பிர்தௌஸ் நளீமி காட்டமாகக் கேள்வி-

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் இறுதி நேரத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பக்கமிருந்த சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அரச தரப்புக்குத் தாவிய பின்னர் உலமாக்களின் ஆலோசனைப்படிதான் அவ்வாறு தான் தாவியதாக விளக்கம் கூறினார்.

அவ்வாறு அவருக்கு ஆலோசனை கூறிய உலமாக்கள் யார் என்பதைக் கூறுமாறு உலமாக்களால் வினவப்பட்ட கேள்விக்கு இன்று வரைக்கும் அவர் பதிலளிக்காமல் மௌனமாக இருந்துவரும் நிலையில், உலமாக்களின் சட்ட யாப்பைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அரசியல் மேடைகளில் நின்று உலமாக்களிடம் கேள்ளி கேட்பதற்கு அவருக்கு என்ன யோக்கியதை இருக்கின்றது? என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினரான அஷ் ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி கேள்வி எழுப்பினார்.

காத்தான்குடி நகர சபைக்கு தொப்பிச் சின்னத்தில் முதலாம் இலக்க சுயேட்சைக் குழுவாகப் போட்டியிடும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தன் 2வது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை கடந்த 19ம் திகதி சனிக்கிழமை மாலை காத்தான்குடி குட்வின் சந்தியில் நடாத்தியபோதே அஷ்ஷெய்க் பிர்தௌஸ் நளீமி மேற்கண்டவாறு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை நோக்கி பகிரங்கமாகக் கேள்விக்கணை தொடுத்தார்.

இப்பிரச்சாரக் கூட்டம் அவ்வியக்கத்தின் சூறா சபை உறுப்பினர் ‘வித்தியாகீர்த்தி’ எம். எஸ். அமீரலி ஆசியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அவர் தனது தலைமையுரையில் கூறியதாவது: Continue reading

உள்ளம் வெறுத்ததை ஊரும் வெறுத்திடவே.. அங்கம்: 03

“VAARAURAIKAL” Vol: 173 -25.02.2011- Page: 03

நடைபெறவுள்ள காத்தான்குடி நகர சபைக்கான தேர்தலில் 06ம் இலக்க சுயேட்சைக் குழுவாக ‘வாள்’ சின்னத்தில் போட்டியிடுகின்ற ஐக்கிய மக்கள் ஒன்றியத் தலைவர் சகோதரர் எம்.எஸ்.எம். நஸார் (அல்பா) அவர்களின் நேர்காணல் தொடர்

என் அன்புக்குரிய நண்பர்களே..!
இனிய வாக்காளப் பெருமக்களே…!

இந்த நேர்காணல் தொடரில் மூன்றாவது வாரமாகவும் உங்களைச் சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்தப் பேட்டித் தொடரின் மூலமாக நான் பிரபல்யமடைய முனைந்துள்ளதாகவும் ஒரு சிலர் கருத்துக் கொண்டுள்ளார்கள் என்பதை கடந்த வெள்ளிக்கிழமை (18.02.2011) நமது முஹ்யித்தீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற ஜும்ஆத் தொழுகைக்காகச் சென்றிருந்தபோது என்னால் அவதானிக்க முடிந்தது.

அன்றைய தினம் அங்கு ஜும்ஆப் பிரசங்கம் நிகழ்த்திய அப்பள்ளிவாசலின் இரண்டாவது பேஷ் இமாம் ஹாபிழ் எம்.ஏ. காலித் ஹஸன் பலாஹி அவர்கள் எனது அன்புக்குரிய நண்பர் களில் ஒருவராவார். அவர் அன்று ஓதிய குத்பா பிரசங்கமானது நான் இவ்வாறான பத்திரிகைப் பேட்டிகள் மூலமாகப் பிரசித்தம் பெற முயன்று வருவதான ஒரு தோற்றத்தை காத்தான்குடிச் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளதால் அதுபற்றியும் நான் இவ்வாரம் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. Continue reading

ஸ்ரீஸ்ரீ ஹிஸ் புஷ் ஷைத்தானின் வேண்டுகோள்படி ‘வார உரைகல்’ பத்திரிகை மீது தாக்குதல்!

-25.02.2011 இன்றைய விஷேட செய்தி-

காத்தான்குடியிலுள்ள ஷைத்தானின் கட்சி (ஸ்ரீஸ்ரீ ஹிஸ் புஷ் ஷைத்தான்)யைச் சேர்ந்த பெரிய ஷைத்தானின் வானொலி வேண்டுகோளுக்கமைய அக்கட்சியைச் சேர்ந்த சிறிய நொண்டிச் சைத்தான் ஒன்று இன்று ‘வார உரைகல்’ மீது தாக்குதலை நடாத்தியுள்ளது.

காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாசலில் இன்று நடைபெற்ற ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்தே இத்தாக்குதல் குறித்த நொண்டிச் சைத்தானால் நடாத்தப்பட்டுள்ளது.

வழமைபோன்று ஜும்ஆத் தொழுகை நடைபெறும் பள்ளிவாசல்களுக்கு இப்பத்திரிகையை விற்பனை செய்வதற்காக பாடசாலை மாணவர்கள் சிலர் பெற்றுச் செல்வது வழக்கமாகும். Continue reading

‘வார உரைகல்’ ஆசிரியரைத் தாக்குமாறு கூறுகிறது ஸ்ரீஸ்ரீ ஹிஸ்புஷ்ஷைத்தான்!

“VAARAURAIKAL” Vol: 173 -25.02.2011 – Page: 04

டந்த 19ம் திகதி சனிக்கிழமை காலையில் காத்தான்குடிப் பிரதேசத்தில் கள்ளத்தனமாக ஒலிபரப்பான ஒரு வானொலி அலை வரிசையில் ஸ்ரீஸ்ரீ ஹிஸ்புஷ்ஷைத்தான் நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தது.

அதன்போது ‘வார உரைகல் பத்திரிகையை உங்களின் அதிகாரத்தைக் கொண்டு தடை செய்ய முடியாதா?’ என ஒரு நேயர் கேட்ட கேள்விக்கு, ‘ஊடக சுதந்திரம் இந்நாட்டில் இருப்பதால் என்னால் அதைச் செய்ய முடியாது. பொதுமக்களான நீங்கள் அப்பத்திரிகையை காசு கொடுத்து வாங்கி அதனை விற்பனை செய்யும் அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியரின் முகத்தில்; கிழித்து எறிந்து விட்டு அவரை அடித்தால்தான் அப்பத்திரிகை வெளி வருவதைத் தடைசெய்ய முடியும்’ என்று அந்த ஸ்ரீஸ்ரீ ஹிஷ்புஷ்ஷைத்தான் பதிலளித்ததாம்.

இந்த ஊரில் (இஸ்லாத்திற்கு விரோதமான விடயங்கள் உட்பட) எல்லாவற்றையும் ‘நானே செய்தேன்.. நானே செய்தேன்’ என்று அகம்பாவத் தொனியில் திமிர் பிடித்துப் பேசி வரும் ஸ்ரீஸ்ரீ ஹிஸ்புஷ்ஷைத்தான், இந்த ஊடகத்துக்கு எதிரான நேரடி வன்முறை வேலைகளில் மாத்திரம் தனது தலையைப் பாதுகாப்பாக உள்ளே இழுத்துக்கொண்டு ஊர் மக்களை ஏன் ஊடகத்திற்கு எதிரான வன்முறை நடவடிக்கைக்குத் தூண்டிவிடும் சதி வேலையைச் செய்ய வேண்டும்? என ‘வார உரைகல்’ கேட்க விரும்புகின்றது. Continue reading

பகிரங்க விவாதத்திற்கான அழைப்பை திசை திருப்பாது உரிய கால எல்லைக்குள் பதில் தருக!

“VAARAURAIKAL” Vol: 173 – 25.02.2011 – Page: 02

-பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கடிதம்- காலக்கெடுவும் முடிவடைந்தது!

ர்கஸ் பள்ளிவாசல் மற்றும் அந்நாஸர் வித்தியாலய வீதியோர மதில்கள் உள்ளடங்களாக ஆளுந்தரப்பு அரசியல் அதிகாரம் கொண்டவர்களால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தால் முன் வைக்கப்பட்டுவரும் பல்வேறுபட்ட விமர்சனங்கள் தொடர்பாகவும், அதேபோல் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் தொடர்பாகவும் பகிரங்க கலந்துரையாடல் ஒன்றினையோ விவாதம் ஒன்றினையோ நடாத்துவதற்காக நாம் விடுத்துள்ள பகிரங்க அழைப்பினை தாங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா?  இல்லையா? என்பதனை எதிர்வரும் 25.02.2011ம் திகதிக்கு (இன்று) முன் எழுத்து மூலமாக அறியத்தருமாறு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது.

‘பகிரங்க கலந்துரையாடல் / விவாதத்திற்கான அழைப்பு’ என்னும் தலைப்பில் கடந்த 23ம் திகதி புதன்கிழமையன்று பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை அமீர் அல்ஹாஜ் ஏ.ஜீ.எம். ஹாறூன், செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். சபீல் நளீமி ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள அக்கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:

கடந்த 18.02.2011ம் திகதி நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது தங்களால் எமது இயக்கத்தின்மீதும், இயக்க உறுப்பினர்கள்மீதும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் தவறான விமர்சனங்கள் தொடர்பாகவும் அதனைத் தொடர்ந்து தங்களால் எமது சூறா சபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு 20.02.2011ம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பாகவும் இக்கடிதத்தினை  எழுதுகின்றோம். Continue reading

காத்தான்குடி நகரசபைத் தேர்தல் – 2011 கருத்துக் கணிப்பு வக்களிப்பு: முடிவு திகதி: 08.03.2011

அன்புள்ள இணையதள வாசகர்களே..!

அஸ்ஸலாமு அலைக்கும் (வறஹ்..)

எதிர்வரும் மார்ச் மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ள காத்தான்குடிக்கான நகரசபைத் தேர்தலில் எந்தக் கட்சியினர் அல்லது சுயேட்சைக் குழுவினர் வெற்றி பெற்று ஆட்சியதிகாரத்திற்கு வருவார்கள் என்பதை நீங்களும் எமது கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம்.

உங்களது வாக்கினை பின்வரும் விபரப்படி 0777 004774 என்ற எமது அலுவலக தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி SMS மூலம் தெரிவிக்கலாம்.

ஒரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து ஒரு வாக்கு மாத்திரம் செலுத்த முடியும்.

பெறுபேறுகள் தொலைபேசி இலக்கத்துடன் 11.03.2011ம் திகதி வெளிவரும் 175வது ‘வார உரைகல்’ பத்திரிகையில் அறிவிக்கப்படும். வாக்களிப்புக்கான ஆங்கிலக் குறியீடுகள் வருமாறு:

ஐ.ம.சு.முன்னணி – UPFA  

 ஐ.தே. கட்சி – UNP  

ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் – SLMC 

ம.வி.முன்னணி –  JVP  

சுயேட்சைக்குழு –  IPG – No:  

(சுயேட்சைக் குழுவின் இலக்கத்தைக் குறிப்பிடுக. உதாரணம்: சுயேட்சைக்குழு 8 க்கு நீங்கள் வாக்களிக்க விரும்பினால் IPG – No:8  என்று குறிப்பிடவும்)

60 கோடி ரூபாவுக்கான அபிவிருத்தி எங்கே?

“Vaarauraikal” Vol:172 -18.02.2011- Page: 06

-ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் அதிருப்தியாளர் குழுத் தலைவர் கபூர் கேள்வி-

டந்த நான்காண்டு காலத்திலும் நமது காத்தான்குடிப் பிரதேசத்தில் 60 கோடி ரூபா வரையான அபிவிருத்திப் பணிகள் நகரசபை நிர்வாகத்தினால் நடைபெற்றுள்ளதாக தெரிவிக் கப்படுகின்றன.

ஆனால் இந்த அபிவிருத்திப் பணிகளின் ஒரு சிறு அடையாளமாவது இந்த மண்ணில் நடைபெற்றுள்ளதாக நமது கண்களில் தெரிகின்றதா? என ஸ்ரீ.ல.மு.கா.வின் காத்தான்குடி பிரதேச அதிருப்தியாளர் குழுவின் தலைவர் ஜனாப். எஸ்.எச்.ஏ. கபூர் கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் அதிருப்தியாளர்களின் ஒன்று கூடல் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி கடற்கரை முன்றலில் நடைபெற்றபோது அங்கு சமூகமளித்திருந்த அதிருப்தியாளர்கள் மத்தியில் பேசும்போது அவ்வாறு கூறிய அவர் அங்கு மேலும் கூறியதாவது: Continue reading

நீங்கள் எமக்களிக்கும் ஆணையானது உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் உதவியாகும்

“Vaarauraikal” Vol: 172 -18.02.2011- Page: 07

-முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பொறியியலாளர் அப்துர் றஹ்மான்-

ல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் அமைத்திருக்கும் இந்த மேடை வித்தியாசமானது.

ஏனெனில், அரசியல் வியாபாரத்தில் சில சரக்குகளுக்குத் தட்டுப்பாடு இருக்கின்றது. அவை உண்மை, நேர்மை, நாகரீகம், சகோதரத்துவ உணர்வு, நம்பிக்கையைப் பாதுகாத்தல், வாக்குரிமையை மதித்தல் போன்றவையாகும்.

நாம் உங்களிடம் எதையெல்லாம் கடந்த காலத்தில் பேசினோமோ, எவற்றையெல்லாம் வாக்குறுதிகளாக உங்களுக்கு வழங்கினோமோ அவற்றையெல்லாம் எமக்கு கிடைத்த அதிகாரத்தினூடாக கடந்த நான்காண்டு காலத்திலும் செய்துவிட்டு அவற்றை மீண்டும் உங்களிடம் ஞாபகப்படுத்தியவர்களாகவே இன்று இந்த மேடைக்கு வந்துள்ளோம். எனவேதான் இந்த மேடை வித்தியாசமானது என்கிறோம்.’

‘ஆனால் வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் யாரும் கடந்த தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளைப்பற்றி இவ்வாறான அரசியல் மேடைகளில் மீண்டும் ஞாபகப்படுத்திக் கூறுவதில்லை.

அவர்கள் மக்களை மறதியில் வைத்திருக்கவே எப்போதும் விரும்புகின்றனர். அவர்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அவர்களே ஞாபகம் வைத்திருக்கின்றார்களா? என்பது ஒரு புறமிருக்க, கடந்த தேர்தலின்போது எந்தக் கட்சியில் நாம் இருந்தோம் என்பது கூட அவர்களின் ஞாபகத்தில் இப்போது இருக்கின்றதா என்பதும் சந்தேகமே’

இவ்வாறு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினரும் பொறியியலாளருமான அல்ஹாஜ் எம்.எம்.அப்துர் றஹ்மான் கூறினார்.

காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய முன்றலில் கடந்த 11ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். சபீல் நளீமி அவர்களின் தலைமையில் இடம் பெற்ற   அவ்வியக்கத்தின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே  பொறியியலாளர் றஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்ட இத்தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது:

கலைக்கப்பட்ட எமது முதலாவது நகரசபை அதன் பதவிக்காலத்தில் தனது நோக்கங்களை அடைந்துள்ளதா? என யாருமே கேள்வி கேட்க முடியாது.

ஏனெனில் அச்சபையில் அதிகாரத்தில் இருந்தவர்கள் இந்த மக்களுக்கான எந்த இலட்சியத்தோடும் அங்கு சென்றிருக்கவில்லை. உருப்படியான ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவதற்குக் கூட இயலாத பொறுப்பற்றவர்களாகவே அவர்கள் இருந்தனர். Continue reading

ஊர் மானம் காத்திடத் தீர்மானம் எடுத்தது சம்மேளனம்!

“Vaarauraikal” Vol: 172 -18.02.2011- Page: 08

-ஆதம்பாவா ஹாஜியாரின் அனுபவ ஆலோசனையும் தெரிவிப்பு-

செலிங்கோ முதலீட்டுப் பகிர்வு நிறுவனத்தில் இருந்து சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் மனைவி திருமதி றமீஸா சஹாப்தீன் பெற்றுக் கொண்ட 9 கோடி 30 இலட்சம் ரூபா சுத்தக் கடன் தொகை திருப்பிச் செலுத்தப்படாதுள்ள வியடம் விரைவில் நாடாளுமன்றத்திலும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பாக கடந்த மாதம் 29ம் திகதி வெளிவந்த டெய்லி மிரர் பத்திரிகையில் செய்தியாக்கம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அவர்களுக்கு இந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் சார்பில் செயற்பட்டுவரும் நடவடிக்கைக் குழுவினர் முறைப்பாடொன்றைச் செய்யவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Continue reading

மியாவ்.. மியாவ்…!

மியாவ் மியாவ் பூனையாம்
மிடுக்காய் ஆண்ட பூனையாம்
நாண மில்லா பூனையாம்
நாதி யில்லா பூனையாம்!

ஊழலைக் கண்டால் மோருமாம்
நல்லதைக் கண்டால்; சீறுமாம்
கொமிஷன் என்றால் சிரிக்குமாம்
கணக்குக் கேட்டால் பாயுமாம்!

சாக்கடை மண்ணில் விருப்பமாம்
சபையில் அது டம்மியாம்
அறிவு கொஞ்சம் கம்மியாம்
இன்னும் ஆளக் கேட்குதாம்!

காலைக் கையைப் பிடிக்குதாம்
கட்டித் தழுவி நடக்குதாம்
வாயைப் பல்லைக் காட்டியே
வாக்குக் கேட்டுத் திரியுதாம்!

தெருத் தெருவாய்ப் போகுதாம்
திருகு தாளம் பண்ணுதாம்
நாசம் செய்த பூனையது
நாளை தோற்கப் போகுதாம்!

  -கவிஞர் காத்துவாயன்-