Archive for the ‘ தொடர் கதைகள் ’ Category

‘விவசாயிகள் என்னும் சபிக்கப்பட்ட தெய்வங்களுக்கு’ சமர்ப்பணம் செய்யப்பட்ட டாக்டர் – கவிஞர் பொன்மணி வைரமுத்து அவர்களின் ‘மூன்றாம் உலகப் போர்’ அறிவுக் காவியத்தின் முன்னுரை:

3m. Ulakap Poar.-1மானுடம் வெல்வதற்கு…

மூன்றாம் உலகப் போர் ஒன்று மூளுமா? மூண்டால் அது ஆயுதங்களை முன்னிறுத்தி நிகழுமா? நிகழாது என்றே கருதப்படுகிறது. நிகழ்ந்தால் அது அறிவுடமை ஆகாது என்றே தோன்றுகிறது. ஏனெனில் அப்படி ஓர் அகில உலக ஆயுதப் போரில் வெற்றி கொண்டவன் முதலில் பலியாவான். தோல்வி கண்டவன் இரண்டாம் பலியாவான். அதனால் மூன்றாம் உலகப் போர் மூளாது என்றே அறிவுலகம் நம்புகிறது.

ஆனாலும் மனிதகுல நகர்வுக்குப் போர் அவசியம் என்றே மானிடவியல் கருதுகிறது. போர்களே தேசங்களை உண்டாக்கின. இனக்குழச் சமுதாயங்களை இணைத்தன. கலாசார உறழ்வுகளை நிகழ்த்தின. கத்திமுனையில் நாகரிகங்களைக் கற்பித்தன. உதிரிப்பூ மனிதர்களை மாலை கட்டின. அதனால்தான் மனிதன் போர்களை விரும்பா விட்டாலும் போர்கள் மனிதர்களை விரும்பி நிகழ்ந்திருக்கின்றன.

இப்போதும் ஒரு போர் தொடங்கி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது தன் வடிவத்தை மாற்றிக் கொண்டு. இது முகத்துக்கு முகம் பார்த்து மோதாத போர். ஆயுதங்களை ஒளித்துக் கொண்டு நிகழ்த்தும் போர். மண்ணுக்கும் விண்ணுக்குமான போர். மனிதனுக்கும் இயற்கைக்குமான போர். இது மனித குலம் சந்தித்திராத மோசமான முகமூடிப் போர். புவி வெப்பமாதல் – உலகமயமாதல் என்ற இரண்டு சக்திகளும் வேளாண்மைக்கு எதிராகத் தொடுத்திருக்கும் விஞ்ஞானப் போர். இந்தப் போரில் இயற்கையை எதிர்த்து மனிதன் வென்றாலும், மனிதனை எதிர்த்து இயற்கை வென்றாலும் தோற்கப் போவதென்னவோ மனிதன்தான். Continue reading