Archive for the ‘ நேர்காணல்கள் ’ Category

ராஜபக்‌ச வருகையை எதிர்த்தது தவறு! முன்னாள் இராணுவ அதிகாரி கேர்ணல் ஹரிஹரன்

Colonal Hariharanதமிழக அரசியல் கட்சிகள் ராஜபக்சவின் வருகையை இவ்வளவு கடுமையாக எதிர்த்தது, இங்குள்ள தமிழர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களின் ஒட்டுமொத்த நலன்களுக்கு விரோதமானது.

மோடியின் மேடைப் பேச்சுக்களை நாம் உற்றுக் கவனித்தால் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியும். இந்தியப் பாரம்பரியத்தின் வேர்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் ஊறிப்போய் இருப்பதை அதில் நாம் உணர முடியும். அந்த உணர்வுதான், சார்க் நாடுகளின் தலைவர்களை அவருடைய பதவியேற்புக்கு அழைக்க வைத்துள்ளது. Continue reading

சம்மேளன ஹஜ் வியாபாரத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள்! கொள்ளைப் பணத்தில் 27,000 ரூபா வீதம் 55 ஹாஜிகளுக்கு பணம் மீளளிப்பு!!

-“வார உரைகல்”லுக்கு துணிந்து தெரிவிக்கப்பட்ட ஹாஜிகளின் விரக்தி நிறைந்த அனுபவங்கள்-

இவ்வருடம் புனித ஹஜ் கடமையை நிறை வேற்றுவதற்காக காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஊடாக நமதூரிலிருந்து பயணமான ஹாஜிமார்கள் சவூதி அரேபியாவிலுள்ள புனித நகரங்களான மக்கா, மதினா, அறபா, மினா, முஸ்தலிஃபா அஸீஸிய்யா முதலான இடங்களில் ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்ததாக ‘வார உரைகல்‘லுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹஜ் பயணத்திற்கான இலங்கைக் குழு வின் தலைவராக சிரேஷ்ட அமைச்சர் அல் ஹாஜ் ஏ.எச்.எம். பௌஸி அவர்களை அரசாங் கம் நியமித்திருந்தது. அவர் முன்னதாக சவூதி அரேபியாவுக்குப் பயணமாகி அங்கு பல நாட் கள் தங்கியிருந்து இலங்கை ஹாஜிகள் தொடர் பிலான அனைத்து முன்னேற்பாட்டு நடவடிக்கை களையும் மேற்கொண்டிருந்தார். Continue reading

கட்டடங்களால் மாத்திரம் கல்வி தன்னிறைவு பெறாது! மீரா பாலிகா அதிபரின் முட்டாள்தனமான முடிவு நீண்டகாலப் பின்னடைவையே அக்கல்லூரிக்கு ஏற்படுத்தும்!!

-நகரசபை உறுப்பினர் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் ‘வார உரைகல்’லுக்கு அளித்த பேட்டி-

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளரால் 1000 நவீன பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டுமெனப் பரிந்துரைக்கப்பட்டிருந்த காத்தான்குடி மத்திய கல்லூரியானது பிரதியமைச்சர் ஹ’pஸ்புல்லாஹ்வின் முயற்சியின் காரணமாகவே அத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாகத் தகவல் அறிந்த ‘வார உரைகல்’, அதனை அம்பலப்படுத்தி இருந்ததுடன் சமூகப் பொறுப்பாளர்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டிருந்தது.

அதற்கமைய கடந்த 2011.04.27ம் திகதி புதன்கிழமை நடைபெற்ற காத்தான்குடி நகரசபைக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பிரேரித்திருந்த ‘1000 நவீன பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்’ என்கிற பிரேரணையுடன்,

 ‘நமதூரின் தனித்துவமான இஸ்லாமியக் கலாச்சாரத்திற் கமைவாக பெண் மாணவிகளின் பிரதான கல்வித் தளமாக உருவாகி வருகின்ற மீரா பாலிகா மகா வித்தியாலயத்தையும் இத்திட்டத்தில் உள் வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்ற ஆலோசனையையும் சமர்ப்பித்திருந்தது.

இப்பிரேரணையினதும், ஆலோசனையினதும் முக்கியத்துவத்தையும், பெறுமானத்தையும் புரிந்து கொண்டு அன்றைய நகரசபைக் அமர்வுக்குச் சமூகமளித்திருந்த தவிசாளர், உதவித் தவிசாளர் உள்ளிட்ட எட்டு மக்கள் பிரதிநிதிகளும் அப்பிரேரணையையும், ஆலோசனையையும் முற்று முழுதாக ஏற்றுக்கொண்டு இவ்விரு பாடசாலைகளையும் இத்திட்டத்தில் உள்வாங்க வேண்டுமென ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டதை கடந்த வாரம் ‘வார உரைகல்’ தெரிவித்திருந்தது.

காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலயம் ஆரம்பத்திலிருந்தே இத்திட்டத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கவில்லை. எனினும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் அக்கல்லூரியையும் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்திருந்த யோசனை குறித்து  அவ்வியக்கத்தின் சூறா சபை உறுப்பினரான பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் அவர்கள்  கடந்த 02ம் திகதி  திங்கட்கிழமையன்று  வெளிநாட்டிற்குப் புறப்பட்டுச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தபோது ‘வார உரைகல்’ பேட்டி கண்டது. அந்நேர்காணலின் விபரம் இவ்வாரம் வாசகர்கள் பார்வைக்காகப் பிரசுரிக்கப்படுகின்றது. (ஆ-ர்)

கே: காத்தான்குடியைப் பொறுத்தவரை எவருமே சிந்திக்காதிருந்த மீரா பாலிகா மகா வித்தியாலத்தையும் அரசாங்கத்தின் 1000 நவீன பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் இத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை எப்படி உங்களின் இயக்கத்திற்கு ஏற்பட்டது?

Continue reading

உள்ளம் வெறுத்ததை ஊரும் வெறுத்திடவே.. அங்கம்: 03

“VAARAURAIKAL” Vol: 173 -25.02.2011- Page: 03

நடைபெறவுள்ள காத்தான்குடி நகர சபைக்கான தேர்தலில் 06ம் இலக்க சுயேட்சைக் குழுவாக ‘வாள்’ சின்னத்தில் போட்டியிடுகின்ற ஐக்கிய மக்கள் ஒன்றியத் தலைவர் சகோதரர் எம்.எஸ்.எம். நஸார் (அல்பா) அவர்களின் நேர்காணல் தொடர்

என் அன்புக்குரிய நண்பர்களே..!
இனிய வாக்காளப் பெருமக்களே…!

இந்த நேர்காணல் தொடரில் மூன்றாவது வாரமாகவும் உங்களைச் சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்தப் பேட்டித் தொடரின் மூலமாக நான் பிரபல்யமடைய முனைந்துள்ளதாகவும் ஒரு சிலர் கருத்துக் கொண்டுள்ளார்கள் என்பதை கடந்த வெள்ளிக்கிழமை (18.02.2011) நமது முஹ்யித்தீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற ஜும்ஆத் தொழுகைக்காகச் சென்றிருந்தபோது என்னால் அவதானிக்க முடிந்தது.

அன்றைய தினம் அங்கு ஜும்ஆப் பிரசங்கம் நிகழ்த்திய அப்பள்ளிவாசலின் இரண்டாவது பேஷ் இமாம் ஹாபிழ் எம்.ஏ. காலித் ஹஸன் பலாஹி அவர்கள் எனது அன்புக்குரிய நண்பர் களில் ஒருவராவார். அவர் அன்று ஓதிய குத்பா பிரசங்கமானது நான் இவ்வாறான பத்திரிகைப் பேட்டிகள் மூலமாகப் பிரசித்தம் பெற முயன்று வருவதான ஒரு தோற்றத்தை காத்தான்குடிச் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளதால் அதுபற்றியும் நான் இவ்வாரம் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. Continue reading

உள்ளம் வெறுத்ததை ஊரும் வெறுத்திடவே… நேர்காணல் தொடர்: 02

“VAARAURAIKAL” Vol:172 -18.02.2011- Page: 03

ஐக்கிய மக்கள் ஒன்றியத் தலைவர் சகோதரர் எம்.எஸ்.எம். நஸார் (அல்பா) அவர்களின் நேர்காணல்

டந்த வாரம் பிரசுரமான எனது அரசியல் பிரவேசத்தின் நோக்கம் தொடர்பான முதலாவது பகுதியை வாசித்த பல நண்பர்களும், ஊர்ப் பிரமுகர்களும் தொலைபேசி மூலமாகவும், நேரடியாகவும் என்னுடன் தொடர்பு கொண்டு தங்களது பாராட்டுக்களையும், வரவேற்பினையும், நல்ல பல ஆரோக்கியமான ஆலோசனை களையும் தெரிவித்தனர்.

ஒரு சிலர் மாத்திரம் இவ்வாறு எனது நேர்காணல் தொடர் ஒன்று இத்தேர்தல் காலத்தில் வெளிவரும் என்பதை எதிர்பார்த்திருக்காததால் அவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

வேறு சில விஷமிகள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாங்கள் அரசியல் இலாபம் தேடுவதாகக் காழ்ப்புணர்வுடனான அவர்களது விமர்சனங்களை எம்மிடம் துணிவுடன் தெரிவிக்காமல் எங்கெங்கோ கூறித் திரிந்தனர்.

எது எவ்வாறாயினும் எமது ஐக்கிய மக்கள் ஒன்றியம் சார்பான எனது நேர்காணலை வாசித்தறிந்த அவர்கள் அனைவருக்கும், எனது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு உரிய முக்கியத்துவத்துடன் களம் அமைத்துத் தந்துள்ள ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டவனாக இவ்வாரமும் அத்தொடரில் உங்களோடு உரையாட விரும்புகின்றேன். Continue reading

உள்ளம் வெறுத்ததை ஊரும் வெறுத்திடவே… அங்கம்:01

“VAARAURAIKAL”  Vol: 171  -11.02.2011- Page:03

மார்ச் 17ம் திகதி நடைபெறவுள்ள காத்தான்குடி நகரசபைத் தேர்தலில் 06ம் இலக்க சுயேட்சைக்குழுவாகப் போட்டியிடும் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் தலைவர் சகோதரர் எம்.எஸ்.எம். நஸார் (அல்பா) அவர்களுடனான நேர்காணல்

காத்தான்குடி நகரசபைத் தேர்தலில் ஆறாம் இலக்க சுயேட்சைக்குழுவாக ‘வாள்’ சின்னத்தில் போட்டியிடுகின்ற ஐக்கிய மக்கள் ஒன்றியத் தலைவர் எம்.எஸ்.எம். நஸார் (அல்பா) அவர்களுடன் ‘வார உரைகல்’ நேர்காணல் ஒன்றை நடாத்தியது.

‘அல்பா நஸார்’ என இப்பிரதேச மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் எப்போதும் சமூகப் பணிகளில் தன்னை வரிந்து பிணைத்துக் கொண்டு வலியவே முன் வந்து நிற்பவர்.

பள்ளிவாசல்களில் இடம்பெற்ற படுகொலைக் களத்தின் போதும், சுனாமி அனர்த்தம் நிகழ்ந்த அவலக் காலத்தின் போதும், ஈமானியப் புரட்சி எமதூரில் வெடித்து ஆன்மீகப் போராட்டத்திற்கு நம் சமூகம் திரண்ட பொழுதுகளின் போதும், இதனிடையே ஏற்பட்ட படுவான்கரை இடம்பெயர்வின் போதும், இவ்வருடத் தொடக்கத்திலிருந்து எமது மக்களை இன்னமும்தான் ஆட்டி வாட்டி வரும் பெரு மழை வெள்ளத்தின்போதும்… என எல்லா இடர்துயர்க் காலங்களிலும் இந்த இனிய சகோதரர் தனது நண்பர்கள் குழாத்துடன் நடு வீதிக்கு இறங்கி சமூக நற்பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளது நமது பிரதேசம் அறிந்த வரலாறு.

அந்த வரிசையில் தற்போது நாமெல்லாம் எதிர்கொள்ளும் நகரசபைத் தேர்தலிலும் இவர் தமது இளைஞர் குழுவை ‘ஐக்கிய மக்கள் ஒன்றியம்’ என்ற கட்டமைப்புக்குள் கருவாக்கிக் கொண்டு 6ம் இலக்க சுயேட்சைக் குழுவாகக் களம் இறங்கியுள்ளார். Continue reading