செப்ரெம்பர், 2010 க்கான தொகுப்பு

மட்ஃஜாமியுஸ்ஸலாம் இப்தார் விவகாரம்: ஜமாஅத்தார் கண்டனத்திற்கு வாசகர் விளக்கம்

கடந்த 10.09.2010 அன்று வெளியான ‘வார உரைகல்’ லின் 154ம் பதிவில் களம் வழங்கப் பட்டிருந்த ‘பள்ளிவாயலின் புனிதம் கெடுத்த இரண்டாம் இப்தார் நிகழ்ச்சி’ எனும் கண்டன அறிக்கையினை வாசித்தபோது பேரதிர்ச்சி அடைந்தேன். குறித்த ஆட்சேபனையைத் தெரிவித்த ஜமாஅத்தார்களின் தூர நோக்கற்ற சிந்தனையினைப் படம் பிடித்துக் காட்டுவதாய் அது அமைந்திருந்தது.

குறித்த கண்டன அறிக்கையில், இப்தார் நிகழ்வுக்கு மாற்று மத சகோதரர்கள் அழைக்கப்பட்டு பள்ளிவாயலினுள் வரவேற்கப்பட்டார்கள் என்கிற விடயத்துக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்ததனைக் காணக்கூடியதாக இருந்தது.

ஓர் இப்தார் நிகழ்வில் தேவையற்ற ஆடம்பரங்கள் இடம்பெற்றது என்பதற்காக அதனைக் கண்டித்தால் அதனை ஏற்றுக் கொள்ளலாம். ‘பள்ளிவாயலில் நடைபெறும் ஒரு நிகழ்வு முறையாகக் கலந்தாலோசிக்கப்படாமல் நடத்தப்பட்டது’ என்ற ஆட்சேபனை எழுப்பப்பட்டால்கூட அதனையும் ஏற்கலாம். ஆனால் ‘மாற்று மதத்தவர் எவரும் பள்ளிவாய லுக்குள் கால் வைக்கக்கூடாது’ என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. Continue reading

டாக்டர் றிபாஸ் அவர்களுக்கு IFCEC கௌரவம்

மருத்துவ முகாமைத்துவப் பரீட்சையில் சித்தியடைந்துள்ள டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த வாரம் காத்தான்குடி IFCEC இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகத்தினரால் இக்ரஃ அலுவலக கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது.

அதன்போது நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய கழகத்தின் அமீர் சகோதரர் MSM. நுஸைர், விடிவெள்ளி ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த சகோதரர் MBM. பைரூஸ், ஜனாப்ALM. ஹஸீன், காத்தான்குடி நகரசபையின் எதிர்ககட்சித் தலைவரும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்க உறுப்பினருமான பொறியியலாளர் அல்ஹாஜ் MM. அப்துர் றஹ்மான் ஆகியோர் உரையாற்றுவதையும்,

பிஸ்மி குர்ஆன் பாடசாலையின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் MBM. பிர்தௌஸ் நளீமி அவர்களின் முன்னிலையில் வித்தியாகிர்த்தி MM. அமீர்அலி ஆசிரியர் அவர்கள் டாக்டர் ILM. றிபாஸ் அவர்களுக்கு கௌரவ நினைவுச் சின்னம் வழங்குவதையும் மேலேயுள்ள படங்களில் காணலாம்.

PMGG + பிரித்தானிய தொழிற்கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு

கடந்த மாத இறுதியில் தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரித்தானியா சென்றிருந்த PMGG நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சூறா சபை உறுப்பினரும், காத்தான்குடி நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான பொறியியலாளர் அல்ஹாஜ் எம்.எம். அப்துர் ரஹ்மான், அந்நாட்டின் பிரபல தேசியக் கட்சியான தொழில் கட்சியின் உள்ளுராட்சி நிர்வாகக் குழுவுக்குத் தலைமை தாங்கும் கலாநிதி ரொஜர் லோரன்ஸ் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். Continue reading

கரடியனாறில் பாதிக்கப்பட்ட பொலீஸாருக்கு காத்தான்குடி வர்த்தக சமூகத்தின் உதவி

கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான வெடி விபத்தையடுத்து அங்கு நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ள 38 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு காத்தான்குடி வர்த்தக சமூகம் அத்தியாவசிய உடுதுணிகளடங்கிய பொதிகளை கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு. விஜே குணவர்தன அவர்களிடம் நேரில் கையளித்தது.

அதன்போது வர்த்தகப் பிரமுகர்கள் உடுதுணிகள் கொண்ட பொதிகளை மாகாணப் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் கையளிப்பதையும், கையளிக்கப்பட்ட உடுதுணிகள் கொண்ட பொதிகளையும் மேலேயுள்ள படங்களில் காணலாம்.

காத்தான்குடிச் சமூக ஆசிரியர்கள் அனைவரும் பாடசாலைகளில் இளைப்பாறுகின்றார்களா?

எஸ்.எம். முகம்மது பஷீர் B.A – உதவி அதிபர், மட்/ அல்ஹிறா மகா வித்தியாலயம் – காத்தான்குடி

ஆசிரியர்கள் தொழில் சார் கடமையை விடுத்து சேவை மனப்பாங்குடனேயே செயற்பட்டு வருகின்றனர். இதனை வெளிப்படுத்தும் முகமாகவே சர்வதேச தேசிய ரீதியாக ‘ஆசிரியர் தினம்’ நினைவு கூறப்படுவதோடு ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டும் வருகின்றனர்.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அன்றைய தினம் ‘ஆசிரியர் கீதம்’ இசைக் கலப்பில்லாது ஆசிரியர்களாலேயே இசைக்கப்படுகிறது. ஆசிரியர் கீதத்தில் ஆசிரியர் பணி, செயற்பாடு, அர்ப்பணிப்பு, மகத்துவம், சேவை நலன் போன்றன தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்றன.

ஆனால் நமதூரில் குத்பாக்களில், பிரச்சாரங்களில், சஞ்சிகைகளில், பத்திரிகைகளில் பல்வேறு விதமாக ஆசிரியர்கள் கேவலப்படுத்தப் படுகின்றனர். பெற்றோருக்கு அடுத்ததாக மதிக்கப்படவேண்டிய இச்சேவையாளர்கள் பலரது கண்டனங்களுக்கும் உட்படுத்தப்படுகின்றனர். Continue reading

இளம் சாதனையாளருக்கு வாக்களிப்போம்!

காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவர் ஒருவர் இவ்வாண்டு நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் தேசிய ரீதியான சாதனையொன்றை நிலை நாட்டியுள்ளார்.

கல்லூரியின் உயர் தர கணிதப் பிரிவு மாணவர் செல்வன் எம்.எச்.எம் மஸி இவ்வருடம் நடைபெற்ற மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான முப்பாய்ச்சல் நிகழ்ச்சியில் 13.73 மீட்டர்கள் பாய்ந்து ஏற்கனவே நிலைநாட்டப்பட்டிருந்த தேசிய மட்ட சாதனையை முறியடித்து புதிய சாதனையை நிலை நாட்டியுள்ளார்.

இச்சாதனையைப் புரிந்ததன் காரணமாக கல்வியமைச்சு இவ்வாண்டுக்கான மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களுள் முதன்மையாளராக இம்மாணவரைத் தெரிவு செய்து கௌரவப்படுத்தியுள்ளதுடன் இவ்வருடத்தின் பிரபல்யமான விளையாட்டு வீரரைத் தெரிவு செய்யும் போட்டிப் பட்டியலிலும் அவரது பெயரை இடம்பெறச் செய்துள்ளது. Continue reading

சமூக அநீதிகளை எழுத்துருவில் தருவதும் இஸ்லாத்தின் பார்வையில் ஓர் அறப்பணியேயாகும்!

-மருதமைந்தனின் நூல் வெளியீட்டு விழாவில் பொறியியலாளர் அப்துர் றஹ்மான்-

‘எழுத்தாளர்கள் தங்களது பேனா முனையை காலத்தின் தேவை கருதி நம் சமூக மேம்பாட்டுக்காக பயன்படுத்த வேண்டும். கதைகளாக, கவிதைகளாக, பாடல்களாக, ஏன் நாடகங்களாகக் கூட இருக்கலாம். அவை எதுவாக இருந்தாலும் சமூக அநீதிகளை தொட்டுக்காட்டுவதாகவும், சுட்டிக்காட்டுவதாகவும் இருக்க வேண்டும்.’

இவ்வாறு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினரும், காத்தான்குடி நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான பொறியியலாளர் அல்ஹாஜ் எம்.எம். அப்துர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

கடந்த 12ம் திகதி காத்தான்குடி இஸ்லாமியக் கலாசார மண்டபத்தில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற எழுத்தாளர் மருதமைந்தனின் ‘வெட்டிய வேரில் ஒரு முளை’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் சிறப்புரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறியதாவது:

‘இன்று நம் சமூகத்தில் வாழுகின்ற அதிகமான எழுத்தாளர்கள் உண்மையை தைரியமாகச் சொல்வதற்கும், எழுதுவதற்கும் மிகவும் பயந்த நிலையிலேயே இருக்கின்றார்கள். தேர்தல்கள் வந்தால் அரசியல்வாதிகளின் மேடைகளில் அவர்களுக்கு புகழ்பாடுகின்ற கவிதைகளையும், பாடல்களையும் தருகின்றார்களே தவிர அந்த அரசியல் அதிகார மையங்களில் இடம்பெறுகின்ற அநீதிகளையும் அயோக்கியத்தனங்களையும் தைரியமாகச் சொல்வதற்கு எந்த எழுத்தாளர்களும் முன்வருவதில்லை.’ Continue reading

நோன்புப் பெருநாள் பஸார் களியாட்டத்தில்…

ஆண் -பெண் கலப்பு நடமாட்டம்!
பிரவேசச் சீட்டு விற்பனையில் கொள்ளை!!
12 வயது சிறுவன் மீது பாலியல் துஷ்பிரயோகம்!!!

கடந்த 10ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி பொது விளையாட்டு மைதானத்தில் புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினராலும், நகரசபை நிர்வாகத்தாலும் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்ற நோன்புப் பெருநாள் பஸார் களியாட்ட நிகழ்வில் ஆண்களும், பெண்களும் சன நெரிசலுக்கு மத்தியிலும் கலப்பாகவும், கலகலப்பாகவும் நடமாடியதை பரவலாக அவதானிக்க முடிந்தது.

பெருநாள் தினத்திற்கு முந்திய தினம் மாலையில் பெய்த மழை காரணமாக இம்மைதானத்திற்குச் செல்லும் பாதைகளிலும், மைதானத்திலும் மழை நீர் தேங்கியிருந்தது புத்தாடைகள், புதுச் செருப்புக்கள் சகிதம் வருகைதந்த பலருக்கும் பெரும் அசௌகரியமாக இருந்தது. Continue reading

வர்த்தக உயர் நீதிமன்ற விசாரணைகளுக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று ஆஜராவாரா?

செலிங்கோ பிராபிட் செயாரிங் நிதி நிறுவனத்திலிருந்து பெருந்தொகையான நிதித் தொகைகளை தமது வர்த்தக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகக் கடனாகப் பெற்றுக் கொண்டு அவற்றைத் திருப்பிச் செலுத்தத் தவறிய நான்கு கடனாளிகளுக்கு பிணை நின்ற விவகாரம் தொடர்பில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரப் பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம். எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று (24) வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள வர்த்தக உயர் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே இக்கடனாளிகள் தொடர்பான வழக்குகள் மேற்படி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு முதல் சுற்று விவரங்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அதன்போது நீதிமன்றத்திற்குச் சமூகமளிக்கவில்லையென்றும், 

எனினும் இன்று ஆரம்பமாகும் இரண்டாம் கட்ட விசாரணைகளின்போது அவர் மேற்படி நீதிமன்றில் ஆஜராகி தாம் பிணை நின்ற விடயங்கள் குறித்து விளக்கமளிக்க வேண்டுமென்றும், இதனடிப்படையிலேயே இன்று நீதிமன்றத்தில் அவர் அஜராகலாம் என்றும் ஊகிக்கப்படுகின்றது. Continue reading

பள்ளிவாயலின் புனிதம் கெடுத்த இரண்டாவது இப்தார்! -ஜமாஅத்தார் கண்டனம்-

மட்டக்களப்பு ஜாமிஉஸ்ஸலாம் நகர ஜூம்ஆப் பள்ளிவாசலில் கடந்த 02ம் திகதியன்று நடைபெற்ற ‘இஃப்தார்’ நோன்பு துறக்கும் நிகழ்ச்சி குறித்து அப்பள்ளிவாசல் ஜமாஅத்தார் தமது ஆட்சேபனையை ‘வார உரைகல்’ லுக்குத் தெரிவித்துள்ளார்கள்.

இதுதொடர்பாக அவர்களின் ஆட்சேபனையில் தெரிவித்திருப்பதாவது:

மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் நகர ஜூம்ஆப்பள்ளி கிழக்கு மாகாணத்தில் மிகவும் புகழ்பூத்ததொரு பள்ளிவாயலாகும். இந்திய வம்சாவளி ஆலீம்களால் முதன்முதலாக தராவீஹ் தொழுகையின்போது அல்குர்ஆனின் 30 பாகங்களையும் ஓதி தமாம் செய்யப்பட்டதன் காரணமாக இதன் புகழ் கிழக்கு மாகாணமெங்கும் பரவியது. Continue reading