செப்ரெம்பர், 2010 க்கான தொகுப்பு

மட்டக்களப்பு ஜாமிஉஸ்ஸலாமில் இப்தார் நிகழ்வு

மட்டக்களப்பு ஜாமிஉஸ்ஸலாம் நகரப் பள்ளிவாசல் நிருவாக சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வு கடந்த 02ம் திகதி வியாழக்கிழமை மேற்படி பள்ளிவாசலில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட நிருவாக சேவைகள் மற்றும் சிவில் இராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட ஜமாஅத்தார்கள் மத்தியில் பள்ளிவாயலின் பிரதம நம்பிக்கையாளரும் பிரபல சமூக சேவகருமான அலஹாஜ் கே.எம்.எம். கலீல் ஜே.பி அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றுவதையும், சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்ட நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி முதல்வர் கவிமணி அல்ஹாஜ் மௌலவி எம்.எச்.எம். புஹாரி (பலாஹி) அவர்கள் இஃப்தார் சிந்தனைச் சொற்பொழிவாற்றுவதையும், மேற்படி பள்ளிவாசலின் அழகிய தோற்றத்தையும் மேலேயுள்ள படங்களில் காணலாம்.

‘வார உரைகல்’ ஐந்தாண்டு நிறைவை முன்னிட்ட ஈத் பெருநாள் சிறப்பிதழ் வெளியீடு – 10.09.2010

அன்பினிய வாசகர்களே…! அஸ்ஸலாமு அலைக்கும்.

‘வார உரைகல்’ பத்திரிகை 03.09.2005ல் மிகச் சிறியதொரு முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டது.

ஒரு ஊடகத்தை ஸ்தாபிப்பதற்கான எந்தவொரு ஆரம்ப அத்திவாரக் கட்டுமான திட்டமிடல்களோ ஏற்பாடுகளோ இல்லாமல் ‘சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும்’ என்கிற ஒரேயொரு குறிக்கோளை இலட்சியமாகக் கொண்டு கையிருப்பிலிருந்த 350 ரூபா முதலீட்டுடன் போட்டோ பிரதி ஏடாக இவ்வூடகத்தின் பயணம் அன்று ஆரம்பித்தது.

அல்ஹம்துலில்லாஹ்! எத்தனையோ இன்னல்கள், எச்சரிப்புக்கள், உயிர் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கு மத்தியிலும் வாசகப் பெருமக்களும், விளம்பர அனுசரணையாளர்களும் சலியாது வழங்கிய பேராதரவினால் கடந்த ஐந்தாண்டு காலத்தில் இப்பயணத் தொடரானது அபரிமிதமாக வளர்ச்சியடைந்துள்ளதோடு அதன் இலட்சியத்திலும் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

இன்று சமூக அநீதிகளைச் செய்வோருக்கு மத்தியில் ‘வார உரைகல்’ என்ற நாமத்திற்கு இருக்கின்ற அச்சமானது இந்த இலட்சியப் பயணத்தின் ஒரு குறிப்பிட்ட மைல்கல் அடைவேயாகும். இவ்வூடகப் பயணத்தில் எதிர்காலத்தில் இன்னும் சாதிக்க வேண்டியவை அதிகமுள்ளன.

அந்த வகையில் இதன் ஐந்தாண்டு நிறைவை முன்னிட்ட ஈத் பெருநாள் சிறப்பு மலர் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் (நோன்புப் பெருநாள் தினம் என எதிர்பார்க்கப்படுகின்ற) 10.09.2010 வெள்ளிக்கிழமை வழமைபோல மிக எளிமையாக வெளியிடப்படவுள்ளது என்பதை எமது இணையதள அன்பர்களின் கவனத்திற்கு முன்கூட்டியே அறியத் தருவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

என்றும் நன்றியுடன்
உங்கள் பணியாளன் புவி றஹ்மதுல்லாஹ்
(பிரதம ஆசிரியன் – வார உரைகல்)

‘வார உரைகல்’ வளர்ச்சிக்கான புனித றமழான் மாத ஸகாத் மற்றும் ஸதகா வேண்டுகோள்

அன்பினிய வாசகப் பெருமக்களே..! வர்த்தகர்களே..!! சமூக ஆர்வலர்களே…!!!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

அல்ஹம்துலில்லாஹ்!

எண்ணற்ற இடர்பாடுகளுக்கு மத்தியிலும், இரத்தத்தைச் சிந்தி மரணத்தின் எல்லை வரை சென்றும் அல்லாஹ்வின் அருளாலும், உங்களின் பேராதரவினாலும் நமது மக்களின் குரலான ‘வார உரைகல்’ பத்திரிகையானது (03.09.2010)இன்றுடன் ஐந்தாண்டுகளைப் பூர்த்தி செய்து ஆறாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது. 

இந்நாளில் இப்பத்திரிகையின் எதிர்கால வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்குமாகப் பிரார்த்திக்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகின்றேன்.

மேலும், சமூக நீதி நியாயங்களுக்காகவும், நமது பொது நிறுவனங்களின் நேர்மையான செயற்பாடுகளுக்காகவும் வல்லோனாம் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எவருக்கும், எந்த சக்திகளுக்கும் அஞ்சாமல் குரல் எழுப்பிவரும் இச்சிறிய பிராந்திய ஊடகத்திற்கும்,  இந்த இணையதள மேம்பாட்டிற்குமாக அருள்மிக்க இந்த றமழான் மாதத்தில் அல்லாஹ்வின் பொருத்தத்தை மாத்திரம் நாடியவர்களாக உங்களது ஸகாத் மற்றும் ஸதகா நிதி ஒதுக்கீடுகளிலிருந்து உங்கள் மனம் விரும்புகின்ற தொகைகளை இதன் பிரதம ஆசிரியனான என்னிடம் நேரடியாகவோ அல்லது எனது வங்கிக் கணக்கின் மூலமாகவோ வழங்கி உதவுமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

அல்லாஹ் நமது நல்லெண்ணங்களுக்கு ஏற்ற நற்கூலியைத் தந்தருள்வானாக!

– உங்களின் பணியாளன் புவி. றஹ்மதுல்லாஹ்-
வங்கிக் கணக்கு இல: S/Ac. No: 800 39 32 , Bank of Ceylon – Kattankudy Branch (Sri Lanka)

Tel: 0777 00 47 74

கல்லடிப் பால வேலைகளை விட அல்அக்ஸா வடிவிலான பள்ளிவாசல் வேலைகளையே பிரதியமைச்சர் துரிதப்படுத்த வேண்டும்

-புதிய காத்தான்குடி பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள் பலரும் வலியுறுத்தல்-

தற்போது அசுர வேகத்தில் இடம்பெற்று வரும் கல்லடிப் பாலத்தின் நிர்மான வேலைகளைத் துரிதப்படுத்துமாறு பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் வலியுறுத்துவதை விட, சீரழிந்து காணப்படும் புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் கட்டிட நிர்மான வேலைகளை ‘மஸ்ஜிதுல் அக்ஸா’ வடிவில் கட்டியெழுப்பி முடித்திடத் துரிதப்படுத்த அவர் நடவடிக்கை எடுக்க வேண்டியதே அவசியமாகும் என அப்பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள் ‘வார உரைகல்’ லிடம் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் கல்லடிப்பால நிர்மான வேலைகளைப் பார்வையிட்ட பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அவ்வேலைகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்த செய்தி ஊடகங்கள் மூலமும், இணையதளங்கள் வாயிலாகவும் வெளியிடப்பட்டிருந்தன.

இதனைக் கண்ணுற்ற மேற்படி பள்ளிவாசல் ஜமாஅத்தார்களே ‘வார உரைகல்’ லிடம் இப்பள்ளிவாயல் வேலைகளைத் துரிதப்படுத்துவதற்கே பிரதியமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளைத் தெரிவித்தனர். Continue reading

பாகிஸ்தான் அகதிகள் குறித்தும் ஊரின் அபிவிருத்தி பற்றியும் அக்கறையில்லையா?

இவ்வருடம் புனித றமழான் மாதத் தலைப் பிறையன்று பாகிஸ்தானில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தினால் நமது முஸ்லிம் சகோதரர்கள் சொல்லொண்ணாத் துயரங்களை இந்த நிமிடம் வரையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

பாகிஸ்தானின் வரலாறு காணாத இவ்வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை கிட்டத்தட்ட நம் இலங்கை நாட்டில் வாழுகின்ற மொத்த சனத்தொகைக்குச் சமமானவர்கள் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த அனர்த்தத்தைப் பார்வையிட்ட ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் இதுபோன்றதொரு அனர்த்தத்தை தன் வாழ் நாளில் ஒரு போதும் காணவில்லை என்று கூறியிருப்பதிலிருந்து இதன் தாக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்நிலையில் கடந்த 19ம் திகதியன்று நடைபெற்ற நமது நகரசபை அமர்வில் Continue reading

சுஹதாக்களுக்கு நினைவுத் தூபி: இஸ்லாத்தில் இல்லாத செயற்பாடாகும்!

(‘முஸ்தபா பஹ்ஜீ’ – காத்தான்குடி -05)

கடந்த 20.08.2010ல் வெளிவந்த ‘வார உரைகல்’ லின் வேண்டுகோளுக்கிணங்க, அதன் வாசகர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் சுஹதாக்களுக்கு நினைவுத்தூபி அமைத்தல் தொடர்பாக எனது கருத்துக்கள் மூலமும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகின்றேன்.

நாங்கள் இஸ்லாத்துடன் பின்னிப் பிணைந்த இனத்தவர்கள். இஸ்லாமியக் கட்டமைப்புக்குள்ளேயே நாம் தொன்று தொட்டு வாழ்ந்து வருகின்றோம். இந்த நிலையில் இஸ்லாமிய சட்ட வரம்புகளை மீறும் செயற்பாட்டை எக்காரணம் கொண்டும் நாம் அனுமதிக்க முடியாது.

இஸ்லாமிய ஷரீஆ தெளிவாகயிருக்க அந்நியர்களின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவது எவ்வளவு அறியாமை? மரணித்தவர்களுக்காக நினைவுத் தூபி அமைக்கும் விடயம் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று. இது முஸ்லிம்களுடைய நடைமுறையே அல்ல. பிற சமயத்தவர்கள்தான் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். Continue reading

மஹிந்த அரசுக்கு மு.கா. ஆதரவு! முஸ்லிம்களுக்கு பிரச்சினை இல்லை..?!

கிழக்கு மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் போன்ற முக்கிய தேர்தல்கள் நடைபெற்ற அண்மைய காலங்களில் எல்லாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தை படுமோசமாக விமர்சித்து முஸ்லிம் சமூகத்தை தனது முஸ்லிம் சமூக தனித்துவ அரசியல் கோட்பாட்டால் கூறுபோட்டு அரசுக்கு எதிராக முஸ்லிம் மக்களை வாக்களிக்கத் தூண்டி உணர்ச்சிகரமான பீரங்கிப் பேச்சுக்களை மேடைகளில் முழக்கி தங்களது எம். பி. பதவிகளைத் தக்க வைத்துக்கொண்ட ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ், இப்போது அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவும், ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளைத் தந்தால் அவற்றைப் பெறுவது குறித்து (சும்மா பம்மாத்துக்குப்) பரிசீலிக்கவும் தயாராகியுள்ளது.

இந்நாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான குடும்ப சர்வாதிகார ஆட்சி நடைபெறுவதாகக் குற்றம் சுமத்தி எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ  ‘போடா.. போடா..’ என்று மேடைகளில் பேசும்போது தாங்களும் கைதட்டி ஆராவரித்து மக்களையும் ஆக்ரோஷிக்கச் செய்த ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ், இப்போது தமது சுயநல அரசியலுக்கு வேறு போக்கிடமின்றி அதே ‘போடா.. போடா..’ அரங்கத்துடன் போய்ச் சரணாகதி அடைந்து விட்டது. Continue reading

காலாவதியான கூட்டுறவுச் சங்கப் பொருட்களைக் கைப்பற்றிய விடயத்தில் ஊருக்கொரு சட்டம் அமுலாக்கமா?

காத்தான்குடியிலும், சித்தாண்டியிலுமுள்ள பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்குச் சொந்தமான இரண்டு மினி கோப் சிற்றி கடைகளில் காலாவதியான பாவனைக்கும் விற்பனைக்கும் உதவாத பெருந்தொகைப் பொருட்கள் கடந்த வியாழக்கிழமை காத்தான்குடியிலுள்ள வீடொன்றிலும், சனிக்கிழமை சித்தாண்டியிலுள்ள மினி கோப் சிற்றியிலுமாகக் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆனால், இந்த இரு ஊர்களிலும் இடம்பெற்ற இக்குற்றச் செயல்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொலீசார் வெவ்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது குறித்து பொதுமக்கள் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். Continue reading

காபட் வீதியமைப்பதிலும் மோசடியா? காத்தான்குடிக்கு மட்டும் துண்டுக் கற்களா??

காத்தான்குடி பிரதான வீதி அபிவிருத்தி வேலைகள் நோன்புப் பெருநாள் வியாபாரக் கொள்வனவிலும், விற்பனையிலும் இப்பிரதேச மக்களினதும், முக்கியஸ்தர்களினதும் கவனங்கள் திரும்பியுள்ள இந்நேரத்தில் அதி மும்முரமாக தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் காத்தான்குடி நகரசபைக்கும், மார்க்கட் வீதிச் சந்திக்கும் இடையிலான பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் துண்டுக் கற்களுடன் கூடிய கழிவு மண் பெருமளவில் கொட்டப்பட்டு விதியின் மட்டம் உயர்த்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் பலரும் ‘வார உரைகல்’ லிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். Continue reading