திசெம்பர், 2012 க்கான தொகுப்பு

ஸகாத் நிதி மோசடிக் குற்றச்சாட்டிலுள்ள எம்.எச். முகம்மது மாஸ்டரை ப.நோ.கூ. சங்கத்தின் புதிய தலைவராக்க தேசிய பாதுகாப்பு நிதி மோசடிக் குற்றஞ்சாட்டப்பட்ட மர்சூக் அகமதுலெப்பை முயற்சி!

A.L.M.-MarzookA.H.Mohamed-J.Pகாத்தான்குடி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தை மீண்டும் மர்சூக் அகமட்லெப்பையின் வழிகாட்டலில் நடாத்திச் செல்ல வழியேற்படுத்தி நாசப்படுத்த வேண்டாம் என அச்சங்கத்தின் தலைவர் ஏ.எச். முகம்மது, இச்சங்கத்தின் முன்னாள் தலைவரும், மெத்தைப்பள்ளி வித்தியாலய அதிபருமான எஸ்.எல் ஏ. கபூரிடம் நேற்று 30.12.2012 ஞாயிற்றுக்கிழமை இரவு நேரடியாகத் தெரிவித்தார்.

காத்தான்குடி ப.நோ.கூ. சங்கத்திற்கான புதிய இயக்குனர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுச் சபைக்கூட்டம் கடந்த 25ம் திகதி செவ்வாய்க்கிழமை சங்கத்தின் பிரதான காரியாலய மண்டபத்தில நடைபெற்றது.இக்கூட்டத்தில் பொதுச்சபை உறுப்பினர்களுடன் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ. உசனார் மற்றும்  கூட்டுறவுத் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர். Continue reading

ஒரு அக்கரமத்தின் அஸ்தமனம்! காதி நீதிபதி ஹிலுறு, 65,000 ரூபா நிதி மோசடியில் மாட்டு!!

Hilur-Jpகாதி நீதிபதியும், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் முதல் நிலை முக்கியஸ்தருமான காங்கேயனோடையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எம். ஹிலுறு  65,000 ரூபா ரொக்கப் பணத்தை விவாக விலக்குப் பெற்ற பெண்ணிடம் கையளிக்காமல் மோசடி செய்தததாக அப்பெண்ணின் தாயார் ‘வார உரைகல்’லிடம் முறையிட்டார்.

காதி நீதிபதியின் இந்தத் துணிகரமான நிதி மோசடி பற்றி தகவலறிந்த ‘வார உரைகல்’ கடந்த 09ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த பெண்ணின் இல்லத்திற்கு விவரம் அறிவதற்காகச் சென்றபோது அங்கு இக்காதி நீதிபதியின் ஜுரிகளான முகைதீன் மெத்தைப்பெரிய ஜும்ஆப்பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினரும், அப்பள்ளிவாசல் ஜமாஅத்தார் சங்கத்தின் செயலாளருமான கே.எம்.எம். அலியார், காத்தான்குடி அல்ஹஸனாத் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினரும், முன்னாள் ப.நோ.கூ.ச. இயக்குனர் சபை உறுப்பினருமான எம்.எச்.எம். இப்றாஹீம் ஆகியோரும் அங்கிருந்தனர். Continue reading

முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகள் தொடர்பாக 19ம் திகதி நடைபெறவுள்ள வக்பு சபை பிரதிநிதிகளின் கூட்டம் இறையச்சத்துடன் இடம்பெறுமா?

Meera-Jummah-Mosque-KKY-1காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாக சபையொன்றை நியமப்பது தொடர்பாக ஆராயும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்  திணைக்கள வக்பு சபைப் பிரதிநிதிகளின் கூட்டம் எதிர்வரும் 19ம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளதாக நம்பகமான வட்டாரங்களில் இருந்து அறியப்படுகிறது.

இப்பள்ளிவாசல் நிர்வாக சபைத் தெரிவு விவகாரத்தில் கடந்த ஓராண்டு காலமாக தொடர்ந்து அவதானம் செலுத்தி வருகின்ற ‘வார உரைகல்’ இதுபற்றி அப்பள்ளிவாசல் ஜமாஅத்தார் சங்கப் பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது.

இந்த அழ்ழாஹ்வின் இல்லத்திற்கு பொருத்தமானதும், தகுதி வாய்ந்ததுமான ஒரு நிர்வாக சபை அமைய வேண்டுமென்பதில் ஜமாஅத்தார் சங்கம் மிக்க அக்கறையுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். Continue reading

காத்தான்குடி காதி நீதிபதி 65 ஆயிரம் ரூபாவை மோசடி செய்தாரா? காத்தான்குடியில் பரபரப்பு! சம்மேளனம் விசாரணை..!!

Hilur-Jpகாத்தான்குடி காதிநீதிபதியும், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனப் பிரமுகருமான ஏ.எம். ஹிழுறு (ஓய்வு பெற்ற அதிபர்), 65 ஆயிரம் ரூபாவை விவாக விலக்குரிமை பெற்ற பெண்ணுக்கு உரிய நேரத்தில் கையளிக்காமல் மோசடி செய்துள்ளதாக குறிப்பிட்ட பெண்ணின் தாய் ‘வார உரைகல்’லிடம் தெரிவித்தார்.

சம்மேளன விசாரணையில் காதியார் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், இதனடிப்படையில் சம்மேளனத்தில் அவர் வகிக்கும் அனைத்து பதவிகளையும் இராஜினாமாச் செய்ய வேண்டுமென சம்மேளன நிர்வாகம் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தற்போது பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. Continue reading